புத்தாண்டே...புத்தாண்டே....

>> Friday, December 30, 2011


GIF animations generator gifup.comஓ....புத்தாண்டே...!
ஓ....புத்தாண்டே...!
புன்னகையுடன்
உன்னை வரவேற்கின்றேன்!

துன்பங்கள் எதுவும் சூழாமல்..,
இன்பங்கள் நிறைந்து..
வளமான வாழ்வை..எம்
வலையுக நண்பர்களுக்கும்
கலையுக நண்பர்களுக்கும்..
தந்து செம்மைப் படுத்துவாய் - என
உன்னை வரவேற்கிறேன்....

பாரிய உலகில்...பழம் பெரும்
இனமாம் "தமிழினம்"
"ஈழத்தில்" இன்னல் அனுபவித்து..
துன்பத்தை மட்டும் துனையாக
கொண்டு வாழும் எம் சகோதரன்,
வாழ்வு செழிக்க...வரம் தருவாயென...
உன்னை வரவேற்கிறேன்....

முல்லைப் பெரியாறு...
கிருஷ்ணா நதி நீர்...
காவிரியென, என் தமிழன்..
யாரிடமும் கையேந்தாமல்,
முறையான காலத்தில்
மாரி கொட்டிடவே...வருவாயென..'
உன்னை வரவேற்கிறேன்.....

சென்ற ஆண்டில்
கருத்து மோதல்கள்,
வேறுபாடுகள்...
கசப்புகள் நீங்கி...
"நண்பர்கள்" நாம் யாவும்..
ஓரணியில் திரளுவோம்
நண்பர்களே
வரும் 2012ம் ஆண்டை நோக்கி.

-------------------------------------------------------------------------
மேலே உள்ள படம் GIFUP.COM வலைதளத்தில் உருவாக்கியது மிக எளிதான முறைதான் பயன் படுத்திப் பாருங்கள்

18 comments:

தமிழ்வாசி பிரகாஷ் 11:14:00 PM  

முதல் வாழ்த்து....

தமிழ்வாசி பிரகாஷ் 11:15:00 PM  

புத்தாண்டு பாடல் நல்லா இருக்கு......

suryajeeva 12:01:00 AM  

நம்பிக்கை தானே வாழ்க்கை.... புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

விச்சு 12:24:00 AM  

அருமை...உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மயிலன் 1:12:00 AM  

"தானே" இப்போதானே தானே அடங்கிருக்கு..அதுக்குள்ள இன்னொரு மழையா? வேணாம் நண்பா:)))))

மயிலன் 1:13:00 AM  

நல்லா இருக்கு..நானே ஒரு மெட்டு போட்டு பாடி பாக்குறேன்..:) இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்...

sasikala 1:14:00 AM  

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! 4:09:00 AM  

கவிப்புயலே..அருமை.

நிரூபன் 6:29:00 PM  

இனிய காலை வணக்கம் நண்பா,

தனக்காக புத்தாண்டு இனியமையாகப் பிறக்காது தன் இனம், தான் வாழும் சமூகத்திற்கான விடியலைத் தாங்கிப் புத்தாண்டு பிறக்க வேண்டும் எனும் உனர்வுகளைக் தாங்கி வந்திருக்கிறது இக் கவிதை!

என்றோ ஓர் நாள் அகிலமெங்கும் வாழும் தமிழர்களின் நல் வாழ்வு சிறந்து இன்னல்கள் நீங்கும் எனும் நம்பிக்கையோடு நடை போடுவோம்!

veedu 7:47:00 PM  

@கோவிந்தராஜ்,மதுரை.
படிக்காமல் வாழ்த்திய நண்பருக்கு வணக்கம்....புத்தாண்டு வாழ்த்துகள்

M.R 3:13:00 AM  

தங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி நண்பரே , மற்றவர்களும் பயனடைய ஆவல் கொள்ளூம் தங்கள் நல்ல உள்ளம் வாழ்க

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

அன்புடன் மலிக்கா 1:00:00 AM  

பாடல் அருமை. தங்களோடு சேர்த்து அனைவருக்கும் வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் 10:43:00 AM  

என் வாழ்த்தை லேட்டா சொல்லிக்குறேன்,

சி.பி.செந்தில்குமார் 10:47:00 AM  

கடைசி பேராவில் எதவது உள்குத்து இருக்கா?

KANA VARO 5:15:00 AM  

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

cheena (சீனா) 1:04:00 AM  

அன்பின் சுரேஷ் குமார் - வாழ்த்துக் கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP