காதல்கதைகள் 3 (1956)

>> Sunday, December 11, 2011


காதல்கதைகள் 3

1956


(முதன் முதலில் திமுகவின் அரசியல் பிரவேசம் நடந்த ஆண்டுதான் கதையின் தலைப்பு, திருச்சியில் மாநாடு நடத்தி ஓட்டெடுப்பு நடத்தி அரசியலில் இறங்கி தேர்தலை சந்தித்தார் அறிஞர் அண்ணா இதையே இந்த கதையின் தலைப்பாக வைப்பதின் காரணம்? மறைக்கப்பட்ட சில உண்மைகள் இந்த கதையில் உள்ளது மட்டுமின்றி திமுக வின் அஸ்திவாரமாக இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை,உயிருடன் இருந்த போது இப்போதைய எச்சிலைவாதிகள்
யாரும் சீந்தவும் இல்லை!இறந்த பிறகும் இறுதிமரியாதையும் தரவில்லை அப்படிப்பட்ட ஒருவரின் மரன வாக்குமூலம்தான் இந்தகதை, அப்போதைய காலகட்டத்தில் நடந்தவை சில சம்பவங்கள் தனிக்கை செய்யப்பட்டு)

இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போகும் படகு போல, நிலா வானத்தில சென்று கொன்டு இருந்தது,செல்வம் தன் சைக்கிளை மிதித்தான், பழக்க பட்ட
சாலை என்பதால் அந்த இருட்டிலும் குண்டும்,குழியும்,பார்த்து ஓட்டினான்,அரசமரத்தின் அடியில் சைக்கிளை நிறுத்தினான், ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தான், சுவர்கோழி கத்திகொண்டிருந்தது காதை என்னவோ செய்தது.

மாதுவை எங்கே காணவில்லை!! இன்றைக்கு வரமாட்டாளா? இல்லையே வருகிறேன்! என்றல்லவா கூறினாள்! மாதுவை நினைக்கும் போது ஏனோ மனம் புது மின்சாரம் பாய்வது போல் அல்லவா இருக்கிறது! அவளுடைய அழகும்,உடல் கவர்ச்சியும் என்னை ஏன்?இவ்வளவு பைத்தியமாக செய்துவிட்டது,அப்படியென்றும் அழகியில்லையென்று.' விட்டு விடமுடியாது!நல்ல சிகப்பு நிறம்,சிகப்பு நிறமுடையவர்களுக்கு உடல் கட்டமைப்பாக இருக்காது,கருப்பான பெண்களுக்கு இருக்கும் உடலின் கட்டமைப்பு சிறப்பான ஓவியத்தை போல் இருக்கும், இது ஆண்களுக்கும் பொருந்தும்,ஆனால்! மாதுவுக்கு நிறமும்சிகப்பு! உடலும் கட்டுடல்!! சிலருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்,அதற்கேற்ற ரோஸ் நிற உதடுகளும், பெரிய கண்களும்,அனைத்து ஆண்களையும் சுன்டிஇழுக்கும்.

சின்னவயதிலிருந்து மாதுவைத் தெரியும் செல்வத்தின் அப்பாதான் அன்ன போஸ்ட்டு பிரசிடன்ட்,அன்னபோஸ்ட் என்பது சாதாரணவிசயம் கிடையாது
அனைத்து சாதியினரும் வாழும் கிராமத்தில் ஒற்றுமையாய் அனைவரும் பேசி தீர்த்து இவர்தான் பிரசிடன்ட் என முடிவு செய்து போட்டி வேட்பாளர் இல்லாமல் ஜெயிப்பது,பாரம்பரியமாய் ஊர் தலைவராய் இருந்த குடும்பம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது கொடுத்த பூமிகளை ஆண்டு அனுபவித்து, ஊரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசு செல்வம்.

அறிஞர் அண்ணாவின் திமுக கட்சி மெதுவாக கிராமத்தில் எட்டி பார்தத நேரம்,பெரிய பண்ணைகளும்,நிலசுவான்களும்,காங்கிரஸில் இருந்தனர்,
அவர்களை பிடிக்காதவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் திமுகவை நம்பியிருந்தனர்,அண்ணாவின் பேச்சாற்றல் சமானியமக்களை சிந்திக்கவைத்துக்கொண்டு இருந்தது திமுகவில் இணைந்தவர்களுக்கு நீர்,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது,அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டது,பெரும்பான்மையோர் பெரும்புள்ளிகளான காங்கிரஸ்காரர்களை எதிர்க்க பயம் கொண்டு வாழ்ந்து வந்தனர்,செல்வத்தின் பாட்டனார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர், தன்னுடைய ஆயிரம் ஏக்கர் நிலத்தை வினோபாஜி அவர்களின் தலைமையில் நிலம் இல்லா ஏழைகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தினால் பிடுங்குவதற்கு முன்னரே வழங்கினார்,ஆனால் படிக்காத ஏழை மக்களிடம் தாம் ஒரு "தர்மபிரபு" மாதிரி காட்டிக்கொள்வார், தாழ்ந்த இனத்தைசேர்ந்த மக்கள் தங்கள் குலசாமி போல் வேண்டுவது வேடிக்கையானது! ஒன்றுதான்,அப்படிப்பட்ட பாட்டனாருக்கு பிறந்த மகன் பொன்னம்பலம்தான் செல்வத்தின் அப்பா,அவரும் தன் சாதி வெறியை கைவிடாமல் அந்த கிராமத்தை ஆட்சி செய்து வந்தார்.

ஆனால் செல்வமோ மாறுபட்ட குணத்தை கொண்டிருந்தான் காரணம் அவனுடைய சித்தப்பா துரை,திருமணம் ஆகாதவர் திமுகவின் தீவிர விசுவாசி கொஞ்சம் படித்தவர்,அண்ணாவின் பேச்சோ!கலைஞரின் பேச்சோ கோபி,சத்தி,எங்கு நடந்தாலும் தன்னுடைய ஒற்றை குதிரை வண்டியில்,சில சமயம் தனியாக குதிரையில் செல்வார் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகர்,எங்கு எம்.ஜி.ஆர் படம் போட்டாலும் செல்வத்தை அழைத்துக்கொண்டு பொய்விடுவார்,வீட்டிலுள்ள பணத்தை திருடி திமுக கொடி கட்டவும்,மது வாங்கி தரவும் தாராளமாய் செலவு செய்வார்,

அதனால் வீட்டினுள் விடமாட்டார்கள் தறுதலை என்று திட்டுவார்கள்,சின்னசின்னதாய் சண்டை பெரிதாக,வீட்டை விட்டு தோட்டத்தில் போய் தங்கி கொண்டார், மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தோட்டம் என்பதால் அப்பொழுது அனைவரும் துப்பாக்கி வைத்து இருந்தனர்,டபுள்பேரல் துப்பாக்கி இவரிடம் மட்டும் உண்டு,மான்,மந்தி,கேழையாடு,எதுவாக இருந்தாலும் ஒரே அடிதான்,கறியை தின்றது போக உப்புகண்டம் வேறு போட்டுவைப்பார்கள்.

எதுவும் கிடைக்காத பொழுதில் சாராயத்திக்கு தொட்டுக்க பயன்படுத்துவார்கள்,குதிரைவண்டி ஓட்டுவதில் கோவை ஜில்லாவில் இவரை விட்டா ஆள் கிடையாது,சேலம்,ஈரோடு,பொள்ளாச்சி,எங்கு போனாலும் இவர்தான் வெற்றிபெறுவார்,ஆனால் வெற்றிப் பணம் வீடுவந்து சேராது அங்கேயே முடிந்துவிடும்,சாராயம்,பொம்பளை,என எல்லா முடிச்சிட்டுத்தான் வீடு வந்து சேருவார்,
-------------------------------------------------------------------------------------------------------------
''தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம், என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்"
-------------------------------------------------------------------------------------------------------------

"வண்ணார்" சமுதாயத்தை சேர்ந்த தங்கவேலன்,இவருடைய சின்ன வயது நண்பர்,இவர் என்ன சொன்னாலும் கேட்பார்,இவர் திமுகவில் சேர்ந்தபோது அவரும் சேர்ந்தார் ஊர் கட்டுபாடு போட்டு,துணி யாரும் கொடுக்கவில்லை, இவரிடம் வந்து அழுதார்,டேய் தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம்! என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்,அதனால் ஊர்ல உள்ள "உயர்ஜாதி"யினர் இவரை மதிக்க மாட்டார்கள்,ஆனால் "கலைஞரே" அந்தப்பகுதி பிரச்சாரத்திக்கு வரும் போது துரை எங்கப்பா? என்பார் அந்த அளவு கட்சியில் செல்வாக்கு பெற்றவர் செல்வம் துரையோடு சுற்றுவதாக தெரிந்த பொன்னம்பலம் ஆரம்பத்தில் கண்டித்துப்பார்ததார் பிறகு ஒருத்தன்தான் நம்ப குடும்பத்துல தறுதலையின்னு நினைச்சேன் இப்ப இரண்டு ஆயிடுச்சு என்று விட்டுவிட்டார்,
எதைஎதையோ நினைத்து,மாதுவை மறந்து விட்டோமே......என செல்வம் மனதிலேயே தன்னை கடிந்து கொண்டான், எட்டாவது படிக்கும் போது என்று நினைக்கின்றேன்...



சாப்பிட்டுவிட்டு தூக்கிலிருந்த தண்ணீரை சன்னலில் ஊற்ற சரியாக அந்தப்பக்கம் வந்த மாதுவின் மீது சாப்பாடும் தண்ணீருமாய் ஊற்ற அவமானத்தில் கூசி போனாள் மாது, தாழ்ந்தகுலத்தில் பிறந்த அவள் பள்ளியில் ஏற்கனவே சக மாணவர்களின் ஏளனத்திலும்,புறங்கணிப்பிலும் இருந்தவள்,மேலும் அவமானப்படுத்த பட்டதாக உணர்ந்து அழுதாள்,செல்வத்திக்கு மனம் ஏனோ வேதனைப்பட்டது ஒரு மன்னிப்பு கூட கேட்கமுடியாத சூழ்நிலை அப்பொழுது ஆண் மாணவர்கள் பெண் மாணவியிடம் பேசக் கூடாது!அதுவும் தாழ்ந்தகுல பெண்ணிடம் பேசினான் என்றால் ஆசிரியர்கள் முதுகுதோலை உரித்துவிடுவார்கள்,ஆனாலும் எப்பாடு பட்டாவது மாதுவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என தீர்மானமிட்டான் செல்வம், மன்னிப்பு கேட்டானா செல்வம்? அடுத்தபதிவில் பார்க்கலாம்...........

9 comments:

Subramanian 3:35:00 AM  

நல்ல முயற்சி நண்பரே! தொடருங்கள்.

சி.பி.செந்தில்குமார் 6:22:00 AM  

மறக்கப்பட்ட உண்மைகளா?? குட்.

கோகுல் 7:52:00 AM  

,அண்ணாவின் பேச்சாற்றல் சமானியமக்களை சிந்திக்கவைத்துக்கொண்டு இருந்தது

//

இப்போது?

தொடருங்கள் நண்பரே!

Mathuran 6:31:00 PM  

தொடருங்கள்... அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்

Unknown 9:58:00 PM  

ஏன்யா மாப்ள பாதி அரசியல் உள்ளே காதலா நடக்கட்டும்...தொடருகிறேன்!

ராஜி 10:53:00 PM  

தொடருங்கள் சகோ

மாலதி 3:16:00 AM  

தொடருங்கள்... அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்நல்ல முயற்சி

திண்டுக்கல் தனபாலன் 4:30:00 AM  

எல்லாமே அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. என்னுடைய தளமும் இப்படித் தான் ஆனது. அதற்குக் காரணம் (Ulavu Vote Button) தற்சமயம் (மூன்று நாளாக) வேலை செய்யவில்லை. கவனிக்கவும்.

SURYAJEEVA 9:27:00 PM  

காதல் கதை என்று தலைப்பு இருந்ததால் உள்ளே வரவில்லை... இது அரசியல் காதலா? நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் வந்து முழுவதும் படிக்கிறேன்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP