PASSWORD

>> Tuesday, January 3, 201201.01.2062
அந்த மாபெரும் விபத்தின் பின் எனக்கு அடிக்கடி ஏன் மறதியாகிறது?மேக்னெட்டிக் பவரில் ஓடும் டிரெயின் விபத்துக் குள்ளானபோது நானூறு அடி தூக்கி வீசப்பட்டேன்,என் மூளையில் சிறு அடிபட்டதால்.என்னுடைய "பாஸ்வேர்டு" அடிக்கடி மறந்து  விடுகிறது,என் வீட்டின் கதவை திறக்க தவறான பாஸ்வேர்டை பயன்படுத்தி விட்டேன்..உடனே வந்த போலீஸ் என்னை கைது செய்து..பின் என் நண்பர்கள் உதவியால் தப்பித்தேன்.பிறகு என் டெபிட் கார்டை உபயோகிக்கும் போதும் இதே அவஸ்தைதான்.
01.02.2062
என்னை என் மனைவி பாஸ்வேர்டு அடிக்கடி மறப்பதால் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டு டைவர்ஸ் ஸ்லிப் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.தன்னிடம் இருக்கும் சிறிய கம்யூட்டர் மெஷினில் டைப் செய்து மெயில் அனுப்பினால் போதும் அரசாங்கத்திக்குரிப்ளே மெயில் வந்தால் போதும் நம்மிடம் இருந்து விடுதலை பெற்று விடலாம் மிக சுலபமான முறையாகிப்போனது.

01.03.2062
மருத்துவர்கள் தீவிர சோதனை செய்தபின் "பாஸ்வேர்டை" பதியும் மூளைப்பகுதி விபத்தில் சேதமடைந்ததால்..பாஸ்வேர்டு மறந்து விடுகிறது என்று ஒரு "மைக்ரோ டிஜிடல் டிஸ்பிளே" என் கண்ணில் பொருத்திவிட்டார்கள் இப்பொழுது நான் பார்க்கும் பார்வைக் காட்சியில் என் பெயர், பாஸ்வேர்டு எல்லாம் தெரிகிறது,இப்பொழுது பிரச்சனையில்லை.
01.05.2062
இப்பொழுது புதிதாக ஒரு மனைவி எனக்கு கிடைத்து விட்டாள்.அவள் பெயர் ABZ2032! ஆம் அவள் பெயர் அதுதான்அவளை விட இவள் பொருமைசாலி..அன்பாக இருக்கிறாள்.வாழ்க்கை இன்பமாக போய்க்கொண்டு இருந்த வேளையில் புதிய பிரச்சனை தோன்றியதுஎனக்குஎன்னால் கண்ணின் முன் உள்ள பாஸ்வேர்டு எண்கள் மறந்து விடுகிறது...ஒன்றா, இரண்டா என்று எண்களை புரிந்து கொள்ள முடியவில்லைஇவளும் என்னை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்...என்ன கொடுமை சார் இது...?

01.10.2062
மருத்துவர் என்னை பலவிதமாக சோதனை செய்தார்....மிஸ்டர் உங்க மூளையின் செயல் திறன் குறைந்து கொண்டே வருகிறது,இனி முழு நினைவும் உங்களுக்கு மறந்து விடும்...என்று கூறிவிட்டு என் ரிப்போர்டை அரசாங்கத்திக்கு மெயில் அனுப்பிவிட்டு..என்னை பரிதாபமாக பார்த்து விட்டு சென்று விட்டார்....கட்டிலில் பொருத்தப்பட்டிருந்த ரோபட் என் தோள் பட்டையில் ஒரு ஊசியை சொருகி மருந்தை ஏற்றியது...என் நினைவு தப்பியது.
01.08.2062
நான் கண்விழித்துப் பார்த்தபோது நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தேன்...வெள்ளை நிற உடையனிந்த ஒருவர் என் அருகில் வந்தார் மிஸ்டர் APZ 2035 உங்கள் நினைவுதிறன் முற்றிலும் அழிந்து போனால் உங்களால் உயிர் வாழமுடியாது.அதனால் அரசு உங்களை கருனை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளது.உங்களுடைய உறுப்புகள் பலருக்கு பயன்படும்மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.என் கண்ணில் நீர் வழிந்ததுநான் இப்படியே இருக்கிறேனே..என்னை விட்டுவிடுங்கள் என்றேன்...எப்படி வாழமுடியும்? உணவு உண்பதற்கு பாஸ்வெர்டு வேண்டும்,பெட்ரோல் அடிக்க,பொருள் வாங்க,வீட்டு கதவு திறக்க,அலுவலகத்தில் பணிபுரிய எல்லாவற்றிக்கும்உங்களை வைத்து வைத்தியம் செய்தாலும் அரசுக்கு வீன் செலவு ஒத்துழைப்புத் தாருங்கள்..என்றார் அவர்.
என்னால் எதுவும் கூற முடியவில்லை..ஆம் பாஸ்வேர்டு இல்லையென்றால் எதுவும் செய்யமுடியாது...பசியால் மரணமடைவதைவிட இறப்பதே மேல் என்று முடிவெடுத்து சரி என்றேன்.

01.01.2063
சரி உங்கள் கடைசி ஆசை என்ன? என்று கேட்டார் அவர்,
என் "பிளாக்கில்" ஒரு பதிவு இட்டு விடுகிறேன் அதுவே என் கடைசி ஆசை என்றேன்.
அப்படியா என்ற அவர் வாய்ஸ் டைப்பிங் கம்யூட்டரை கொடுத்தார், நான் சொன்னேன்
HAPPY NEW YEAR 2063
அதுவே டைப் செய்தது ..பப்ளிஸ் செய்து விட்டு கண்ணை மூடிக்கொண்டேன் ஒரு ரோபர்ட் கை என்னுள் விசஊசியை சொருகியது..மெல்லமெல்ல..நினைவு இழந்த கொண்டிருந்த போதும் ஞாபகம் வந்த்து அடடா திரட்டியில் இணைக்கவில்லையே என்று……....

15 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா 5:54:00 AM  

அருமையான கதை .. கலக்கிடிங்க

"என் ராஜபாட்டை"- ராஜா 5:55:00 AM  

/அனைவரும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவலில் நீங்கள் இடும் Link தவறு கிடையாது....ஆனால் என் பதிவினை படித்துவிட்டு..அதை பற்றி திட்டிவிட்டாவது link கொடுங்க....

//

திட்டவில்லை பாராட்டிவிட்டு லிங்க் குடுக்குறேன்

"என் ராஜபாட்டை"- ராஜா 5:55:00 AM  

மனோ அண்ணனுக்கு விருது வடிவமைத்து குடுத்தது அருமை

Anonymous,  6:14:00 AM  

சான்சே இல்லை என்ன கற்பனை. சொல்ல முடியாது அப்போ இந்த மாதிரி நடந்தாலும் நடக்கும்.. password இல்லேன்னா வாழ்கையை பாஸ் பண்ண முடியாதுபோல..

தமிழ்வாசி பிரகாஷ் 6:16:00 AM  

சார் உங்க பாஸ்வோர்ட் ப்ளீஸ்... நீங்க மறந்துடிங்கன்னா, நான் ஞாபகப்படுத்தறேன்......

Anonymous,  6:16:00 AM  

///நினைவு இழந்து கொண்டுருந்த போதும் ஞாபகம் வந்தது அடடா திரட்டியில் இணைக்கவில்லை என்று................///

சரியான நையாண்டி........

தமிழ்வாசி பிரகாஷ் 6:17:00 AM  

சூப்பர் கற்பனை பாஸ்.....
உங்க ப்ளாக் பாஸ்வோர்ட் சமீபத்தில் மறந்து போச்சா? அதன் விளைவா இந்த கதையா?

மதுமதி 6:53:00 AM  

அற்புதமான கற்பனை தோழர்..சுவையாக இருந்தது..கடைசி ஆசை பிளாக் எழுதுவது..அருமை..அதைவிட இறக்கும் தருவாயில் அடடா திரட்டியில் இணைக்கவில்லையே என்று வருத்தப்பட்டது சுவை..

கோகுல் 8:16:00 AM  

பின்'நவீனத்துவ கற்பனையோ?

மயிலன் 7:09:00 PM  

என்ன பாஸ் திடீர்னு ஃபிக்ஷன் ரேஞ்ச்க்கு கலக்குறேள்..புடிச்சுருக்கு...:))

விக்கியுலகம் 11:41:00 PM  

யோவ் மாப்ள அந்த திரட்டி மேட்டர்..சான்ஸே இல்ல..கொன்னுட்ட போ...!

suryajeeva 8:01:00 PM  

ha ha ha konnutteenga

வே.நடனசபாபதி 3:25:00 AM  

நீங்கள் எழுதியது போல் நடந்தாலும் நடக்கலாம். நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்!

கணேஷ் 11:21:00 PM  

அடாடா... என்ன கற்பனை வளம் உங்களுக்கு... பிச்சுட்டீங்க சுரேஷ். மிஸ் பண்ணிட்டனேன்னு தோணினாலும் மதுமதி மூலமா இப்ப படிச்சுட்டதுல மிகத் திருப்தி. வாழ்த்துக்கள்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP