நண்பனாயாணம்…

>> Thursday, January 12, 2012




இன்றைக்கு காலையில நம்ம ஆபிஸ் பையன் காலையிலையே பொங்கல் லீவுங்கறதால வேலையெல்லாம் முடிச்சிட்டு பிரியா இருப்பதால் பயபுள்ள நண்பன் படம் பார்த்துட்டு வந்தது, வந்ததில் இருந்து இருக்கானா இடுப்பு இருக்கானா பாட்டை முணுமுணுத்துட்டே இருந்தான், நல்லா பீப்பாய் மாதிரி இருக்கிற பெண் கஸ்டமர் வந்தது பயபுள்ள இந்த பாட்டையா பாடனும் குமட்டுல ஒன்னு விட்டதிலிருந்து அஸ்கு புஸ்க்குன்ட்டு இருக்கு..பாட்டு இல்லை வலியில கத்துது பயபுள்ள!


நான் 3இடியட்ஸ் பல தடவை பார்த்ததால போக விருப்பம் இல்லை, பயபுள்ள இன்னிக்கு புல்லா நண்பனாயாணந்தான் எப்படித்தான் இருக்கும் என்று பார்க்க போலாம்ன்னு சிங்காரவேலா டிக்கட் புக் பண்ணுடான்னு கிளம்பிட்டேன்.

இரண்டு டிக்கட் கிடைச்சது சாவகாசமா போனாலும்டைட்டில் ஓடும் போதே போய்ட்டோம்..இனி படத்தை பற்றி பேசுவோம்

படத்தில கதை உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு.அதனால அதைபற்றி வேண்டாம் சில விசயங்கள் மட்டும் சொல்லுகிறேன் கேட்டுக்கங்க

படத்தில ஒளிப்பதிவு பஸ்ட் கிளாஸ் ஊட்டி ரோடு கார் பயணத்தை அழகா எடுத்திருக்காங்க.. தனுஸ்கோடி பாம்பன் பாலம், கோவை கொடீஸ்யாவுக்கு முன்னாடி ஒரு பெரிய பில்டிங்! அது ஹோட்டல்ன்னு நினைக்கிறேன்! நான் கோவை போகும் போதெல்லாம் ரசிக்கிற பில்டிங் படத்தில வருது, தமிழ்நாடு ஒன்னும் ஏப்பை சேப்பையில்லங்கற மாதிரி, ஆனால் ஒன்று... நாலு தடவை கரண்டு கட்டு! இப்படியே போனா என்ன பண்ணுவதுகரண்டு அடிக்கடி கட் ஆகுது என்பதை விட, அம்மா ஆட்சியில கரண்டு அப்ப அப்ப வருது.,சரி அரசியல் வேண்டாம் படத்திக்கு வருவோம் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு ஒரு ஷொட்டு!

நடனம் சாராகான் பட்டைய கிளப்பியிருக்காங்க..! இருக்கானா பாட்டிக்கு பெல்லி டான்ஸ் செம கலக்கல்! விஜய் நடனத்தில் புலி என்பது எல்லாருக்கும் தெரியும் அதுவும் அஸ்க்கு பாட்டில் சினிமாவை நையாண்டி செய்யும் விதமாய் பாரின்பாட்டு, காதல்பாட்டு, ராஜாபாட்டு, குத்துபாட்டு, என்று கிளாப்ஸ்சிலைடு காட்டுவது வித்தியாசமான சிந்தனை! இதுல சங்கர் இரயிலுக்கு பெயிண்ட அடிச்சிட்டார்,எதாவது ஒன்னுக்கு பெயிண்ட் அடிக்கனும், சங்கர் சூட்டிங் நடக்கும் போது யாரும் போயிறாதிங்கப்பா நமக்கும் பெயிண்ட் அடிச்சிறப் போறார்....

இயக்கம் சங்கர் என்பதால் படம் போரடிக்காது என்பது அனைவருக்கும் தெரியும்!? முதன்முதலில் சங்கர் மொழிமாற்றம் செய்துள்ளார், 3இடியட்ஸ் படக் காட்சியினை சிதைக்காமல் அப்படியே மொழி மாற்றம் செய்துள்ளார் உண்மையில் தைரியம்தான், வேறு ஒருவர் என்றால் தமிழுக்கு தகுந்த மாதிரி மாற்றுகிறேன் என்று உண்மையான படைப்பாளியின் கருவை சிதைத்து விடுவார்கள் அந்த வகையில் சங்கரை பாராட்ட வேண்டும்..

விஜய்க்கு பிரண்ட்ஸ் படத்திக்கு பிறகு ஒரு அமைதியான நடிப்புக்கு வாய்ப்பளிக்கும் ஒரு படம், பில்டப், பன்ச்டயலாக், காட்டுகத்தல் காமடி எதுவும் இல்லாமல் ஒரு நல்லபொழுது போக்கு படம், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாது நடுநிலை மற்றும் அணிலைப் பிடிக்காத நண்பர்களுக்கும் பிடிக்கும், ஆனா பாருங்க பிடிக்லைம்பாங்க... இல்லையினா சங்கர் படம்பாங்க அதவிடுங்க....ALL IS WELL

ஜீவா இவர் நடிப்பை பல படங்களில் பார்த்தவர்களுக்கு இந்தப்படம் இவருக்கு சவால் இல்லை, ஒரு ஜாலியாக நடித்திருக்க கூடிய படம் என்பதை கணித்திருப்பார்கள், இயல்பான நடிப்பில் தாழ்வு மனப்பான்மையால் தான் சுருங்குவதை முகத்தில் காட்டுகிறார், நண்பனா, குடும்பமா என மனப்போராட்டதை வெகு அழகாக முகத்தில் காட்டுகிறார் சங்கர் இவருக்கு மட்டும் குளோஸ் அப் காட்சிகளை அடிக்கடி காட்டுவதின் சூட்சுமம் நன்றாக புரிகிறதுஜீவாவுக்கு ஒரு ஷொட்டு

ஸ்ரீகாந்த் முகத்தில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரசினில் கொல்லும் மனிதர் இதில் கலக்கியிருக்கிறார், இயக்குனர் சங்கர் பட்டரையில்... பட்டை தீட்டப்பட்டுள்ளார் என்பதை கடைசி காட்சியின் அப்பா மகன் உணர்ச்சி போராட்டத்தின் காட்சிகளில் அருமை..! அருமை...!நன்றாக நடித்துள்ளார்,ஸ்ரீகாந்த் இனி தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வருவார்..

சத்தியராஜ் எங்கே ஓவர் ஆக்சனில் அந்த கேரக்டரை சிதைத்து விடுவாரோ என்று பயந்தேன், முந்தைய பதிவில் கூடக் கூறியிருந்தேன் ஆனால்! மனிதர் தன் பானியில் கலக்கிவிட்டார்.. மீசையை வழித்து எடுத்த பின் போதையில் பேசும் காட்சிகள், அவரால் மட்டும் முடியும்! மறுபடியும் அடுத்த வில்லன் சுற்று வருவாரா?

சத்யன் சரியான வாய்ப்பு இல்லாத சிறந்த நடிகர், மேடையில் கற்பிக்கும் என்பதை கற்பழிக்கும் என்று பேசும் காட்சி ரசிக்கும் படியிருந்தாலும் கொங்கை என்பது சிறிது விரசமாக இருக்கிறது,இனி படங்களில் வாய்ப்பு வரும்...இவருக்கு கண்டிப்பாக ஷொட்டு!

இலியானா ரொம்ம பூஞ்சையா இருக்கிறார்! கரீனா அக்காவும் இப்படித்தான் இருக்காங்க,நம்மாளுகளுக்கு இப்படியிருந்தா புடிக்காதுத்தாநல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கலாமில்ல என கஞ்சா கருப்பு மாதிரி சொல்லனும் போல இருக்குதுநடிப்பு ஓகே நல்லா நடிச்சிருக்காங்கஆனா கவர்ச்சியில்லை பரிதாபமா இருக்குசரிசரிவிடுங்க இனி வருங்காலத்தில ஹன்சிகா மாதிரி ஆகாம எங்க தலைவி அஞ்சலி மாதிரி கொஞ்சம் பூசின மாதிரி வந்து தமிழனை சந்தோசப்படுத்துங்ககண்டிப்பா கோயில் கட்டுவோம்அதிமுக இல்ல திமுகாவில... இரண்டும் இல்லையினா பாமாகவில கொள்கை பரப்பு செயளாளரா சேர்த்து விடுகிறோம்! இந்த தேர்ந்தல்ல இருந்து பாவம் கட்சி களையிழந்து இருக்குது.ஆனா ஒரு கன்டிசன்! கொள்கைன்னா என்னன்னு கேட்க்க கூடாது.
மக்களே! படம் போரடிக்கலை பார்க்கலாம்!மனசு விட்டு சிரிக்கலாம்!தியேட்டர்ல போய் பாருங்க ஒளிப்பதிவுக்காக...


நட்புடன் உங்கள் நண்பன்
K.S.Sureshkumar 

48 comments:

நிரூபன் 6:57:00 PM  

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும்.

நண்பன் படம் பற்றிய சுவையான விமர்சனத்தை கொடுத்திருக்கிறீங்க,

ஒளிப்பதிவிற்காகவும், இடுப்பிற்காகவும் படம் பார்க்கனும் போல இருக்கே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாய் நக்ஸ் 7:25:00 PM  

Yoowwwwww
enna....
Arasiyal
nedi
adikkuthu ???

Naangalum
katchi aarambippom....
Athula nadigaigal
mattume
member.....
Sollipputten.....
Aama

தமிழ்வாசி பிரகாஷ் 7:53:00 PM  

இரண்டு டிக்கட் கிடைச்சது சாவகாசமா போனாலும்…///

இன்னொருத்தர் யாருய்யா??//

தமிழ்வாசி பிரகாஷ் 7:53:00 PM  

படத்தில கதை உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு….///

எங்கே?எங்கே.... நீங்க சொல்லலியே

தமிழ்வாசி பிரகாஷ் 7:54:00 PM  

படத்தில ஒளிப்பதிவு பஸ்ட் கிளாஸ் ஊட்டி ரோடு கார் பயணத்தை அழகா எடுத்திருக்காங்க.. ///

ஹி..ஹி... அண்ணன் மறைமுகமா ஊட்டின்னு இலியானாவை தானே சொல்றிங்க....

தமிழ்வாசி பிரகாஷ் 7:57:00 PM  

நாலு தடவை
கரண்டு கட்டு இப்படியே போனா என்ன பன்னுவது///

விடுங்க... பாஸ்.... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

தமிழ்வாசி பிரகாஷ் 7:58:00 PM  

சினிமாவை நையாண்டி செய்யும் விதமாய் பாரின்பாட்டு, காதல்பாட்டு,
ராஜாபாட்டு, குத்துபாட்டு, என்று கிளாப்ஸ்சிலைடு காட்டுவது வித்தியாசமான சிந்தனை! ///

இன்னும் இலியானாவை நீங்க எழுதவே இல்லையே.... ஏன்? ஏன்????

தமிழ்வாசி பிரகாஷ் 8:00:00 PM  

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாது நடுநிலை மற்றும்
அணிலைப் பிடிக்காத நண்பர்களுக்கும் பிடிக்கும்,ஆனா பாருங்க பிடிக்லைம்பாங்க
இல்லையினா சங்கர் படம்பாங்க அதவிடுங்க....//

ஹி..ஹி... எல்லா பதிவர்களின் விமர்சனமும் பாஸிடிவ் திங்கிங்.... ஸோ... all is well

தமிழ்வாசி பிரகாஷ் 8:01:00 PM  

சங்கர் இவருக்கு
மட்டும் குளோஸ் அப் காட்சிகளை அடிக்கடி காட்டுவதின் சூட்சுமம் நன்றாக
புரிகிறது…///

அண்ணே, நீங்க இன்னும் ஹீரோயினையை ரசிக்கல போல...

தமிழ்வாசி பிரகாஷ் 8:04:00 PM  

ஸ்ரீகாந்த் இனி தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வருவார்..//

தேர்ந்தெடுக்க எந்த ப்ரடுயுசர் வரிசையில நிக்கிறாருன்னு சொல்லுங்கப்பு...

தமிழ்வாசி பிரகாஷ் 8:10:00 PM  

சத்தியராஜ் எங்கே ஓவர் ஆக்சனில் அந்த கேரக்டரை சிதைத்து விடுவாரோ என்று பயந்தேன்,///

நல்லவேளை நாங்களும் தப்பிச்சோம்...

தமிழ்வாசி பிரகாஷ் 8:11:00 PM  

இலியானா ரொம்ம பூஞ்சையா இருக்கிறார்!///


பூஞ்சையா? என்னமோ உள்குத்து இருக்குதுங்கோ.....

தமிழ்வாசி பிரகாஷ் 8:15:00 PM  

நம்மாளுகளுக்கு இப்படியிருந்தா புடிக்காதுத்தா…நல்லா சாப்பிட்டு தெம்பா
இருக்கலாமில்ல///

அப்போ பாஸுக்கு ஹன்சிகாவை போல வேணுமாம்?

தமிழ்வாசி பிரகாஷ் 8:24:00 PM  

ஹன்சிகா மாதிரி ஆகாம எங்க தலைவி அஞ்சலி மாதிரி கொஞ்சம் பூசின மாதிரி
வந்து தமிழனை சந்தோசப்படுத்துங்க…///

அப்பு.... இப்பத்தாம்ல சரியா சொல்லி இருக்கீங்க...

தமிழ்வாசி பிரகாஷ் 8:29:00 PM  

அப்பு..... நண்பன் கதை சொல்லாமலே விமர்சனம் சூப்பரப்பூ....

Unknown 8:44:00 PM  

இன்னோருததர்தாங்க நானு...ஹஹஹ

Unknown 8:46:00 PM  

நன்றி பொங்கல் வாழத்துகள்...
அது சரி....எதையாவது பாருங்க....

Unknown 8:47:00 PM  

படவிமர்சனம் படமே பார்த்ததுபோல் உள்ளது நன்றி!

த ம ஓ 3

புலவர் சா இராமாநுசம்

Unknown 8:47:00 PM  

அண்ணே நல்லா குத்தாட்ட நடிகையா சேருங்க....

Unknown 8:48:00 PM  

பாருங்க...பாருங்க....

Unknown 8:49:00 PM  

நன்றிங்க தலை...

K.s.s.Rajh 8:50:00 PM  

வணக்கம் பாஸ் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் என்று நினைக்கின்றேன் இனி தொடர்ந்து வருவேன்

நீங்களும் அஞ்சலி ரசிகரா அப்ப நம்மாளுதான்
இலியான கொஞ்சம் பூஞ்சான் மாதிரி இருந்தாலும் அவங்களுக்கு அதுவும் ஒரு அழகுதான் அவ்வ்வ்வ்வ்வ்

Unknown 8:50:00 PM  

உங்க பதிவுல கழுதை கதை படிக்கலையா?அவ்வ்வ்வ்

Unknown 8:51:00 PM  

இரண்டும்தான்....ஹிஹி

Unknown 8:53:00 PM  

எது சாதாரணம்...அப்பஅப்ப கட்டானா பரவாயில்லை அப்பத்தான் கரண்டே வருது!

Unknown 8:56:00 PM  

இலியானா படம் போட தடை போட்டிட்டாரு கபில்சிபில் இந்தியா வருமையான நாடுன்னு தெரிஞ்சிருமாம்!

Unknown 8:59:00 PM  

அடடடா...ஹீரோயின் மட்டும்தாங்க படத்தில யங்! கேரக்டர் அப்புறம் எல்லாம் ஆண்ட்டிக....நீங்க வேற...நானே நெந்து போயிருக்கேன்...

Unknown 9:01:00 PM  

வருவாருங்க....பாருங்க பாவம் பயபுள்ள நல்லாயிருக்கட்டும்...நம்ம தமிழ் பையன் வேற....

Unknown 9:02:00 PM  

படத்துக்கு போங்க சார்......அப்புறம் எப்படி தயாரிப்பாளர் பிழைக்கறது?

Unknown 9:03:00 PM  

ஹேய் இன்னோரு அஞ்சலி ரசிகர் மாட்டிட்டார்....ஹஹ

Unknown 9:04:00 PM  

ஆஹா சைவ பிளாக்க அசைவம் ஆக்கிருவார் போல...

Unknown 9:05:00 PM  

ஹன்சிகாவப் போலவா!வேண்டாங்க...நம்மாள தாங்க முடியாது..ஹிஹி

Unknown 9:06:00 PM  

கதை சொல்லிட்டா படம் பார்த்தா நல்லாயிருக்காதுங்க..

Unknown 9:06:00 PM  

நன்றி அய்யா....

Unknown 9:08:00 PM  

வருகைக்கு..நன்றி!வாங்க..வாங்க...அஞ்சலி ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுருவோம்!ஹிஹி

பால கணேஷ் 11:19:00 PM  

சுரேஷ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நம்பறேன். படத்தப் பார்த்துடறேன். (விஜய் பல்லைக் கடிச்சுட்டு அடித் தொண்டையில வசனம் எதுவும் பேசி பயமுறுத்தலைங்கறதே ஆறுதல். இல்ல...)

Admin 11:55:00 PM  

நண்பனைப் பற்றி நன்றாக சொன்னீர்கள்..வசன பயமில்லாமல் படத்தை பார்க்கலாம்..அப்படித்தானே..

Unknown 4:04:00 AM  

எனக்கு பிடிச்சா கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்....நம்ம லைன் ஒன்னுங்கறதால..ஹிஹி

Unknown 4:05:00 AM  

ஆமாங்க...காட்டு கத்தல் இல்லாத ஒரு விசய் படம்...

அனுஷ்யா 2:53:00 PM  

இது நான் facebook-இல் நண்பன் பற்றி எழுதி இருந்தது...ஆச்சர்யம் என்னவெனில் உங்கள் பதிவின் பல வரிகள் (ஹன்சிகா வரை) என்னுடைய பார்வையிலும் இருந்தது..சுவாரஸ்யமான விமர்சனம்..:)

"சச்சினுக்கு பிறகு நீண்டநாள் கழித்து இரசிகர் வட்டத்தை கடந்தும், ஆமிர்கானை பிரதிபலிக்க முயற்சி செய்யாமலும் விஜயாகவே விஜய்...(அவரோடு ஆடும்போதுதான் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் இத்தனை நாளாய் ஒப்பேத்தியிருக்கிறார்கள் என்பது விளங்குகிறது..) தமிழ் இரசிகர்களுக்கு இந்த size zero எல்லாம் ஒத்து வராது என்றாலும் இலியானா நல்லாவே மனசுல ஒட்டிக்கிச்சு..( 'இருக்காண்ணா' பாடலில் ஹன்சிகாவை நினைத்தால்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா )..பாடல் காட்சியமைப்பிலும்,பாத்திரங்கள் தேர்விலும் மட்டும் ஷங்கர் டச்..குறிப்பாக சத்யனும் சத்யராஜும்..( விஜயைப்போல சத்யராஜும் அவருக்கே உரிய பாணியில் செய்திருந்தால் இன்னும் இரசித்திருக்கலாம்..) ஈரம்,vtv இரண்டையும் விட மேலும் மெருகுடன் மனோஜ் பரமஹம்சா (ஊட்டி மற்றும் தனுஷ்கோடியில் உச்சமான கேமரா தாண்டவம்)
கோயம்பத்தூரில் விருமாண்டி சந்தானம் வடக்கத்திய முறையில் திருமணம் நடத்துவது, ஹிந்தியில் இருந்த ஒரு சீரியஸ் மூட் இல்லாமல் போனது,மிக முக்கியாமாக ரஹ்மான் இல்லாதது போன்ற குறைவிற்கும் குறைவான குறைகளுடன் எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் கடந்து இந்த பொங்கலுக்கு-- 'நண்பன்' iz well...."

அனுஷ்யா 2:54:00 PM  

என்ன நண்பா கருத்து மட்டறப்பு?? அனானிகள் தொல்லையோ?

Unknown 6:49:00 PM  

சத்தியமா...நான் உங்க பேஸ்புக் விமர்சனத்தை படிக்கலை ஹிஹி..ஒரே அலைவரிசையா இருந்தா இப்படி நடக்குமா?கமெண்ட் கூட பாருங்க கணேஷ் சார்,மதுமதி சார்,அப்புறம் நீங்க...சில அனானியின் தனி மனித தாக்குதல் காரணமாக மட்டறுத்தப்பட்டுள்ளது நண்பா மன்னிக்கவும்...இதை நான் விமர்சனமாக எழுதவில்லை...சும்மா ஜாலியா எழுதிதையே பொறுத்துக்கொள்ளமுடியவில்லை...சிலரால்...மற்றும் இன்னும் ஒரு அனானியினால் சிபி செந்தில்குமார் 1000வது பதிவுக்கு வாழ்த்து கூறியது தவறா...? எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளால் இநாகரினமான தாக்குதல் நடத்த காரணம் என்ன? அவர்களுடைய பொறாமையா? ஒரு பதிவு கூட எழுதாத நாதாரிகளுக்கு....என்னை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?உன்னால முடியலை முடிந்த அளவு எழுதுகிறோம் நான் பெரிய அப்பாடக்கர் இல்லைப்பா சாதாரண மனிதன்....ஏன் கருத்துரைகள் மட்டறுக்கப்பட்டதின் காரணம் இதுதான் நண்பா...மன்னிக்கவும்.

சென்னை பித்தன் 2:54:00 AM  

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

கோகுல் 3:38:00 AM  

பொங்கலுக்கு ஊருக்கு போய் படம் பாக்க போறேன்.

நீங்க சொல்றத பாத்தா கொ.ப.செ ஆகறத்துக்கு கொஞ்சம் பூசுனாப்புல இருந்தா போதும்,அப்படித்தானே?

Admin 10:29:00 AM  

படம் பார்க்கணும் எனும் ஆசையை அதிகரித்திருக்கிங்க.. நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP