ஒத்த பதிவில் முக்காடு போடுவது எப்படி?

>> Wednesday, January 18, 2012

ஹிஹி...


வணக்கம்யா...நிரூபன்


வணக்கம்..! அய்யா!


நான்தான்யா...பாப்பையா...


ஹே...ஹே...சொல்லுங்கய்யா உங்களை தெரியாத தமிழரா அய்யா
நான் உங்கள் நாற்று பதிவை அடிக்கடி படிக்கிறேன் சிறப்பாக எழுதுகிறீர்கள்....


நன்றி அய்யா மிக்க நன்றி! நீங்கள் பாரட்டக்கூடிய வகையில் எழுதுகிறேன் என்பது கேட்பதுக்கு இனிமையாக இருக்கிறது


உங்கள் மூலம் ஒரு உதவிவேண்டும்


அய்யா சொல்லுங்கள் கண்டிப்பாக செய்கிறேன்


தம்பி.... நான் அனைத்து துறையிலும் கால் பதித்து விட்டேன்யா..... இந்த பதிவில் கால் வைக்கலாமா யோசிச்சதில உன்னைத் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன்ய்யா....


என்னது பதிவு எழுதுகிறீர்களா? அய்யா உங்களுக்கு தெரியாததா உங்களிடம் இல்லாத ஆட்களா நான் சிறு பையன்.....


சிறு கோடாரிதான்யா பெரிய மரத்தையே வீழ்த்துகிறதுய்யா......


உண்மைதான் அய்யா ஆனால் என்னிடம் கேட்க காரணம்


அது என்னமோய்யா உன்னிடம்தான் கேட்க வேண்டும் போல இருந்தது...நீ..வேறு "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?"என்று பதிவு போட்டு பதிவுலகை கலக்கி கொண்டு இருக்கிறாய் இது யாருக்கும் தெரிய கூடாது....! நான் புனை பெயரில் தான் எழுத போகிறேன்....என் படம் கூட வேண்டாம்ய்யா....அப்புறம் பிரபல பதிவர் ஆயிடுவே


அப்படியா அய்யா....உங்களுக்கு எதற்கு அய்யா இந்த வேண்டாத வேலை!


தம்பி நிரூபா..!மனிதனாக பிறந்தவன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டுமய்யா....


சரி..! அய்யா! நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?


ஒரு புதிய மெயில் முகவரி ஒன்றை தொடங்கி...,ஃபிளாக் ஆரம்பித்து கடவுச்சொல்லைத் தாருங்கள், எப்படி பதிவு இடுவது என்பதை சொல்லித் தாருங்கள்.


அய்யா அதற்கு முன் நீங்கள் பதிவுலகின் சில விசயங்களை அறிந்து கொள்ளவேண்டும்


சொல்லுங்கய்யா.....பட்டிமன்றதை விடவா சிரமம்...


பட்டிமன்றத்தை விட மிக சிரமம் அய்யா....முதலில் பதிவிட்டபின் திரட்டியில் இணைக்கவேண்டும்


சரி இணைச்சாச்சுய்யா பிறகு என்னய்யா சொல்லுய்யா...


சரி பதிவு எழுதிவிட்டோம் என்று சும்மா இருக்ககூடாது அப்படியே தமிழ்மணத்தையோ.....இன்ட்லியே திறந்து வைத்துக்கொண்டு அதிக ஹிட்ஸ் வாங்கும்பதிவர்களைப்பார்த்து கமெண்ட் இடவேண்டும் நன்று...சூப்பர்.....எதையாவது பாராட்டி கமெண்ட் இடவேண்டும்...


அவர்கள் தவறாக எழுதியிருந்தாலுமாய்யா....கமெண்ட் போடனுமாய்யா....


ஆம்....அய்யா! பதிவு பிடிக்கவில்லை என்றால் மைனஸ் ஓட்டு போடலாம் அய்யா...!


என்னய்யா...சொல்லுற மைனஸ் ஓட்டா நம்ம நாட்டு தேர்ந்தல்ல இந்த முறைய வைத்தா எல்லாருக்கும் டவுசர் கழன்டுரும்யா.....


ஆமாம்யா.....தமிழ் செய்திதாள் படித்திருக்கிறீர்களா அய்யா....


அதுக்கென்னய்யா தினமும் வீட்டிக்கே வருதுய்யா..


அதிலுள்ள தலைப்பை பார்த்திருக்கிறிர்களா?


பார்த்திருக்கிறேன்யா....கேஸ் வண்டியில மோதிய பஸ் டமார்! பதினெட்டு பேர் பனால்! இப்படியெல்லாம் தலைப்பு வெப்பாங்கய்யா...


அதேதான் அய்யா.....அழகான கவிதை எழுதுங்க.....அதுக்கு தலைப்பு பக்கத்துவீட்டுக்காரன் பொண்டாட்டி என்வீட்டுல! இப்படின்னு வெங்க


என்னய்யா சொல்லுர அநியாயமா இருக்கேய்யா....


அய்யா அப்பத்தான் ஹிட்ஸ் கிடைக்கும்


அப்புறம்....அப்புறம்..... சினிமா செய்தி நயன்தாராவின் நிர்வாணப்படம் 18+ அப்படின்னு போட்டு நயன்தாராவோட ஐந்து வயது படத்தை போடனும்...


யோவ் என்னய்யா இது மாவு இல்லாம பணியாரமா கொடுமைய்யா இருக்கைய்யா....


அப்புறம் உங்களுக்கு முக்கியமான விடயம், சினிமா விமர்சனம் 180 டிகிரி கோணத்தில.....ஹீரோவின் வேட்டி கிழிந்தது, டவுசர் தெரிந்தது, 53வது ரீல்ல ஹீரோயின் அழகாயில்லை,105வது ரீல்ல ஏன்? ஹீரோயின் அம்மா கர்பிணியானாங்க இயக்குனருக்கே வெளிச்சம்,வைட் ஆங்கில் லேத் ஒர்க் ஷாப்ல  வெல்டிங்  பண்ணாம விட்டிட்டாங்க, இந்தபடம் இந்த செவ்வாய் கிரக படத்தை தழுவியது அப்படி இப்படி என்று எழுதனும் கடைசியில படம் சூப்பர் 111 நாள் ஓடும் அப்படின்னு பிட்டை போடனும்.....


என்னய்யா....கொடுமை இது....?சினிமாவுக்கும் நமக்கும் என்னய்யா சம்மதம்!? அதோட டெக்கினிக்கல் நமக்கு எப்படி தெரியும்? ஒரு சாதாரண ரசிகனாதான்யா விமர்சனம்
செய்யமுடியும்...


அதெல்லாம் தெரியாது எதையாவது உளரி வைக்கனும் இல்லைன்னா கெட்டவார்த்தையில திட்டி கமெண்ட் போட ஒரு கூட்டம் இருக்கு...


என்னய்யா சொல்லுற.....நிசமாய்யா....?


அது மட்டும் இல்லைய்யா....நீங்க..கோவிச்சுக்காதிங்க...பேச்சுக்கு கதைக்கிறேன்! உங்க மனைவிகிட்ட அடி வாங்கியதை எழுதியிருப்பீங்க...(விக்கி மாமா மாதிரி)அதுக்கு அருமை நண்பா....சிறப்பான பதிவு.....இனி தொடர்ந்து அடி வாங்கவும் அப்படின்னு எழுதுவாங்க.....நீங்க இதையெல்லாம் பொறுத்துக்கனும்.....


என்னய்யா...இது ஒரு ஆறுதல் தரமாட்டிங்களாய்யா.....


படிச்சாத்தான்யா ஆறுதல் சொல்ல முடியும்


அதுவும்...சரிதான் படிக்காம கமெண்ட் போடுவது நல்ல உத்திதான்யா.....சரி....அடுத்தது..


திடீர்ன்னு யாராவது பதிவரை திட்டி பதிவு போடனும்


ஏய்யா....இந்த வேலை..? பிடிக்கலைன்னா அந்தபதிவு பக்கம் போகாம விட்டிர வேண்டியதுதானே?


இல்லை...அப்புறம் ஹிட்ஸ் கிடைக்காது...!என்னடா இவன் இவ்ளவ் பெரிய அப்பாடக்கரை திட்டிபுட்டான்ன்னு கூட்டம் அள்ளும் ஹிஹி


எதுக்கியா இந்த வேண்டாத வேலை.....எவனோ எதையே எழுதிட்டு போறான் நாம சரியா எழுகிறோமா என்று போகவேண்டியதுதானே


அப்ப நீங்க தொழில்நுட்பம்தான் எழுதனும்...


ஏன்யா இந்த கொலைவெறி? நானே இப்பத்தான் பதிவு எழுதாலாம் என்று உள்ளே வருகிறேன் நான் எப்படிய்யா தொழில்நுட்பம் எழுதறது.


அப்ப நீங்க...பட்டிமன்றம் போட்டது உங்க வாழ்க்கைய எழுதுங்க சுவாரஸ்யமா இருக்கும்


சரிய்யா....நான் என் வாழ்க்கைய எழுதுகிறேன் சுயசரிதை மாதிரி எழுதுகிறேன் நீ..சொல்லுறதை பார்த்தா பதிவுலம் எல்லா துறையைவிட மோசமானதா இருக்கு போல ஆமா தமிழ் பதிவர்கள்தான் இப்படியா?


இல்லைங்க... அய்யா மலையாளத்தில நியூஸ் போடறதுல போட்டி இருக்கும், அப்புறம் நிறைய ஜோக்,தொழில்நுட்பம் எழுதுவாங்க.....கன்னடத்தில ஒரளவுக்கு நம்ம மாதிரிதான், தெலுங்கு மக்கா சினிமாவை ரொம்ம நேசிப்பாங்க, வெறும் சினிமா செய்திதான் அதிகமா இருக்கும்....பதிவர்களுக்கு இடையில் பிரண்ட்ஷிப் இருக்கும்.

ஆனால் ஆங்கிலப் பதிவர்கள்தான் பிரண்ட்ஷிப் வெச்சுக்க மாட்டாங்க தன் படைப்புகளை செவ்வனே என்று எழுதிட்டு இருப்பாங்க..ஹிட்ஸ் அள்ளுவாங்க பணமும் அள்ளுவாங்க கடைசிக்கு நெட்பில்லுக்காவது ஆகும்...நமக்குத்தான் பத்து பைசா கிடைக்காது ஆனா கோடிகோடியா சம்பாரிக்கிறமாதிரி சண்டை போட்டிக்குவாங்க...


ஆமாய்யா...!எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில எழுதுகிற பதிவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது, என்னய்யா எப்படி இருக்குன்னேன்? ஏதோ போகுது என்றார் எத்தனை பாலேவர்ஸ்ன்னு கேட்டேன் தெரியலை நான் அதை கவனிப்பதில்லைன்னாரு.....ஓட்டு எவ்வளவு விழுது என்று கேட்டேன்....பேஸ்புக்....டுவிட்டர் கூகுல்பிளஸ் தவிர எதிலையும் நான் சேர் பன்னுவதில்லையென்றார்,எப்படி இவ்வளவு எழுதிறீங்க அப்படின்னு கேட்டேன் நான் ஆங்கில மேகசைன் அடோப் இல்லுஸ்ட்ரேட்டர் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் அவிங்க நிறைய வேண்டாம் என்று ஒதுக்குவதை அவங்க அனுமதியுடன் பிளாக்குல போடுகிறேன் என்றார் வருமாணம்ன்னு பார்த்தா கூகுல் விளம்பரம் மூலம் ஆயிரம் இரண்டாயிரம் வரைக்கும் வருகிறதுனாரு.....நெட் பில்லை அத வைச்சு கட்டிவிடுகிறேன் என்றாருய்யா...


அட...அப்படியா...ஆச்சர்யம்தான்ங்கய்யா...நீங்க நிறைய விசயம் தெரிஞ்சு வெச்சிருக்கிறீங்க!


அப்புறம்...பதிவு மூலமா யாராவது பிரண்ட்ஷிப் கிடைச்சிருக்கான்னு கேட்டேன் அதுக்கு அவரு நான் யார் கமெண்ட்டுக்கும் பதில் போடுவது இல்லை, மெயில் மூலம் தொடர்பு கொள்பவர்களிடம் எந்த தொடர்பும் வெத்துக்கொள்வதில்லை....,எனக்கு கமெண்ட் போடுபவர்களின் பதிவுக்கும் நான் போவதில்லைங்கிறார்....,ஆனால் ஒரு பதிவுக்கு தினமும் 5000 நபரிலிருந்து....பத்தாயிரம் வரைக்கும் வருகிறார்கள் என்று சொன்னாருய்யா....,கடந்த இரண்டு வருடமா எழுதுகிறார்ய்யா...,


ஆமாங்கய்யா...உண்மைதாங்கய்யா.....தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இது தெரியனும் அய்யா!


சரி நிரூபன்...நான் பதிவை டைப் செஞ்சுட்டு சொல்லுகிறேன்யா....


சரிங்கய்யா எதை பற்றி எழுதப்போறீங்க...என்ன தலைப்பு வைக்கப்போறீங்க....


தமிழனின் மனதை அள்ளுவது நயன்தாராவா?புல்புல்தாராவா? பட்டி மன்றம் மாதிரி விவாத மேடையா மாற்ற போகிறேன் எப்பூடி....


தொப்....என்று மயங்கி விழுந்து விட்டார் நிரூபன்.....ஹலோ யாராவது தண்ணி தெளிச்சு எழுப்புங்கய்யா........46 comments:

தமிழ்வாசி பிரகாஷ் 6:38:00 PM  

பதிவுல உள்குத்து பயங்கரமா இருக்கே.....

தமிழ்வாசி பிரகாஷ் 6:39:00 PM  

சிறந்த இடுகை...

இப்படியே தொடரவும்...

இப்படிஎல்லாம் கமென்ட் போடணும்னு சொல்லியிருக்கார்.... பதிவு ஓனர்.

தமிழ்வாசி பிரகாஷ் 6:41:00 PM  

ஐயா...ஐயா..... என வரிக்கு வரி நிரூபனை வயசானவரா காட்டியிருகிங்களே.....

விக்கியுலகம் 6:41:00 PM  

ஹஹா..அட்ரா அட்ரா அட்ரா அப்படிப்போடு ஹிஹி!

veedu 6:42:00 PM  

நமக்கு உள்குத்து பிடிக்காதுங்கோ...நேரடி தாக்குதல்தான்!

தமிழ்வாசி பிரகாஷ் 6:43:00 PM  

ஒத்த கமென்ட் மூலம் சர்ச்சையை உண்டாக்குவது எப்படி?ன்னு ஒரு பதிவு போடுங்கைய்யா...

veedu 6:43:00 PM  

வாங்க..வாங்க....நீங்க பதிவு போட்டாச்சா.....இதோ வந்துவிட்டேன்

veedu 6:44:00 PM  

பாப்பையா குழந்தையும் ஐயா என்றுதான் விளிப்பார்ங்க தமிழ்வாசி ஐயா!

தமிழ்வாசி பிரகாஷ் 6:45:00 PM  

நடத்துமைய்யா... நடத்தும்.....

ஹாலிவுட்ரசிகன் 7:08:00 PM  

நல்ல பதிவு. நன்றி.

// ஆனால் ஒரு பதிவுக்கு தினமும் 5000 நபரிலிருந்து....பத்தாயிரம் வரைக்கும் வருகிறார்கள் என்று சொன்னாருய்யா....,கடந்த இரண்டு வருடமா எழுதுகிறார்ய்யா..., //

நல்ல ஆங்கில பதிவுகளுக்கு எப்படியுமே கூட்டம் சுமாராக தினமும் 500க்கு மேல் வரும் நல்லா பப்ளிசைஸ் பண்ணினா. உலகம் முழுக்க வாசிப்பாங்க...கூகிள் ஆண்டவரும் தொடர்ந்து ஆட்களை சேர்ச் ரிசல்ட் மூலம் அனுப்புவாரு. ஆனா தமிழ் பதிவுகளை யாரும் கூகிளில் தேடுவதில்லை. இன்ட்லி, தமிழ்மணம் போன்றவற்றிலிருந்து தான் யாராச்சு வந்தா வரணும்.

veedu 7:18:00 PM  

அவருடைய வலை ஒரு டிசைனிங் சம்மதமான விக்டர் படங்களை தரக்கூடியது எங்க துறையில் உள்ளவங்க தினம் அவர் வலையில் இருந்துதான் நிறைய டவுன்லோடு செய்வோம்!நாங்க சுமார் 30000பேர் இருப்போம் திருப்பூர்ல மட்டும் உலகம் முழுவதும் என்றால் கணக்கு போட்டு பாருங்க....வருகைக்கு நன்றி சார்!

veedu 7:30:00 PM  

நன்றி மாம்....

சி.பி.செந்தில்குமார் 8:09:00 PM  

மனசுக்குள்ள சுரேஷ்க்கு விக்கி தக்காளின்னு நினப்பு. உள் குத்து பதிவா போடராரு

சி.பி.செந்தில்குமார் 8:12:00 PM  

உலவுலஇணைக்கலையா?

அடுத்து நிரூபன் உங்களை தாக்கி போஸ்டிங்க்? ஐ ஜாலி

veedu 8:21:00 PM  

இருக்கலாம்....அவரோட அதிகமா பழகுறதால...பாதிப்பு இருக்கலாம்..ஹிஹி

veedu 8:22:00 PM  

ஹிஹி..போடட்டும்....போடட்டும்..இதுல ஒரு சந்தோசமா..?

நிரூபன் 8:51:00 PM  

ஒத்த பதிவில் முக்காடு போடுவது எப்படி?
//

அவ்வ்வ்வ்வ்வ்

தலைப்பே ட்ரெரரா இருக்கே.
இருங்க உள்ளே இறங்கிப் படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் 8:52:00 PM  

தமிழ்வாசி பிரகாஷ்Jan 18, 2012 06:38 PM

பதிவுல உள்குத்து பயங்கரமா இருக்கே.....
//

அவ்வ்வ்வ்வ்வ்
ஆமா பதிவில ஒரு ஊமக் குத்தும் இல்லையே...
என்னா நடக்குது இங்கே?

நிரூபன் 8:53:00 PM  

தமிழ்வாசி பிரகாஷ் said...
ஐயா...ஐயா..... என வரிக்கு வரி நிரூபனை வயசானவரா காட்டியிருகிங்களே.....//

ஆகா..நல்லாத் தான் போட்டுக்குடுகிறாங்களோ

நிரூபன் 8:53:00 PM  

விக்கியுலகம் said...
ஹஹா..அட்ரா அட்ரா அட்ரா அப்படிப்போடு ஹிஹி!//

என்னமோ நடக்குது...
மர்மமா இருக்குது..
ஒன்னுமே புரியலை
ஒலகத்திலே

நிரூபன் 8:53:00 PM  

veedu said...
நமக்கு உள்குத்து பிடிக்காதுங்கோ...நேரடி தாக்குதல்தான்!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது வீரனுக்கு அழகு!

நிரூபன் 8:54:00 PM  

சி.பி.செந்தில்குமார் said...
உலவுலஇணைக்கலையா?

அடுத்து நிரூபன் உங்களை தாக்கி போஸ்டிங்க்? ஐ ஜாலி//

போங்க பாஸ்..

யாருமே நம்மளை தாக்கலையே....

நிரூபன் 8:55:00 PM  

நான் உங்கள் நாற்று பதிவை அடிக்கடி படிக்கிறேன் சிறப்பாக எழுதுகிறீர்கள்....


நன்றி அய்யா மிக்க நன்றி! நீங்கள் பாரட்டக்கூடிய வகையில் எழுதுகிறேன் என்பது கேட்பதுக்கு இனிமையாக இருக்கிறது
//

இப்படி ஒரு கருத்துப் போட்டதற்கு இனாமகா குருவி ரொட்டி பரிசளிக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் 8:58:00 PM  

என்னய்யா...சொல்லுற மைனஸ் ஓட்டா நம்ம நாட்டு தேர்ந்தல்ல இந்த முறைய வைத்தா எல்லாருக்கும் டவுசர் கழன்டுரும்யா.....
//

நம்ம ஐடியா ஆறுமுகத்தை
தேர்தல் ஆணையாளர் தேடிக்கிட்டு இருக்காரு!

இப்படித் தான் 1948 இல இருந்து இப்படி ஓர் சட்டமே இல்லைன்னு
எல்லோரும் ஏங்கிறாங்க
வெளங்கிரும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

veedu 8:58:00 PM  

பதிவு அதை விட மோசமா இருக்கும்

நிரூபன் 8:59:00 PM  

பார்த்திருக்கிறேன்யா....கேஸ் வண்டியில மோதிய பஸ் டமார்! பதினெட்டு பேர் பனால்! இப்படியெல்லாம் தலைப்பு வெப்பாங்கய்யா...
//

ஆமா...இந்த தலைப்பு காமெடி காலையில் பதிவு போடுவாரே.
இப்படியான தலைப்புக்களுடன்,
அவருக்கு எதிரா இல்லே தானே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

veedu 8:59:00 PM  

அதானே...?

நிரூபன் 9:00:00 PM  

அப்புறம்....அப்புறம்..... சினிமா செய்தி நயன்தாராவின் நிர்வாணப்படம் 18+ அப்படின்னு போட்டு நயன்தாராவோட ஐந்து வயது படத்தை போடனும்...
//

அவ்வ்வ்வ்
ஹே...ஹே...
நானும் இப்படி ஓர் பதிவு போட்டு பல்பு கொடுத்திருக்கேன்.

நிரூபன் 9:02:00 PM  

அப்புறம் உங்களுக்கு முக்கியமான விடயம், சினிமா விமர்சனம் 180 டிகிரி கோணத்தில.....ஹீரோவின் வேட்டி கிழிந்தது, டவுசர் தெரிந்தது, 53வது ரீல்ல ஹீரோயின் அழகாயில்லை,105வது ரீல்ல ஏன்? ஹீரோயின் அம்மா கர்பிணியானாங்க இயக்குனருக்கே வெளிச்சம்,வைட் ஆங்கில் லேத் ஒர்க் ஷாப்ல வெல்டிங் பண்ணாம விட்டிட்டாங்க, இந்தபடம் இந்த செவ்வாய் கிரக படத்தை தழுவியது அப்படி இப்படி என்று எழுதனும் கடைசியில படம் சூப்பர் 111 நாள் ஓடும் அப்படின்னு பிட்டை போடனும்.....
//


ஹே....ஹே...
இது அவருக்கா...

veedu 9:02:00 PM  

கமெண்ட் போட்டதுக்கு...கழுகு மார்க் பிஸ்கட் பிரீரீரீரீ.....

நிரூபன் 9:04:00 PM  

அப்புறம் உங்களுக்கு முக்கியமான விடயம், சினிமா விமர்சனம் 180 டிகிரி கோணத்தில.....ஹீரோவின் வேட்டி கிழிந்தது, டவுசர் தெரிந்தது, 53வது ரீல்ல ஹீரோயின் அழகாயில்லை,105வது ரீல்ல ஏன்? ஹீரோயின் அம்மா கர்பிணியானாங்க இயக்குனருக்கே வெளிச்சம்,வைட் ஆங்கில் லேத் ஒர்க் ஷாப்ல வெல்டிங் பண்ணாம விட்டிட்டாங்க, இந்தபடம் இந்த செவ்வாய் கிரக படத்தை தழுவியது அப்படி இப்படி என்று எழுதனும் கடைசியில படம் சூப்பர் 111 நாள் ஓடும் அப்படின்னு பிட்டை போடனும்.....
//


ஹையோ...ஹையோ...

என்னது 1850 இல இருந்து இப்படித் தான் எழுதுறாங்களோ.

veedu 9:04:00 PM  

வரட்டும்...தேர்ந்தல் ஆணையர்....உண்மையில் இப்படி ஒரு சட்டம் வந்தா என்ன ஆகும் அடுத்த பதிவுக்கு ரெடி...ஹிஹி

நிரூபன் 9:06:00 PM  

இறுதியில் தமிழ் வலைப் பதிவர்களாகிய நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதனை ஏனைய மொழிப் பதிவர்களோடு ஒப்பிட்டு சொல்லியிருப்பது இன்னும் ரசிக்க கூடியதாக இருக்கு!

மொத்தத்தில வெளிப்படையாக ஆரோக்கியமான பதிவு உலகம் எப்படி அமையனும் என்பதனைச் சொல்லியிருக்கிறீங்க
ரசித்தேன்.

பை பை/

"என் ராஜபாட்டை"- ராஜா 9:13:00 PM  

//அப்புறம் உங்களுக்கு முக்கியமான விடயம், சினிமா விமர்சனம் 180 டிகிரி கோணத்தில.....ஹீரோவின் வேட்டி கிழிந்தது, டவுசர் தெரிந்தது, 53வது ரீல்ல ஹீரோயின் அழகாயில்லை,105வது ரீல்ல ஏன்? ஹீரோயின் அம்மா கர்பிணியானாங்க இயக்குனருக்கே வெளிச்சம்,வைட் ஆங்கில் லேத் ஒர்க் ஷாப்ல வெல்டிங் பண்ணாம விட்டிட்டாங்க, இந்தபடம் இந்த செவ்வாய் கிரக படத்தை தழுவியது அப்படி இப்படி என்று எழுதனும் கடைசியில படம் சூப்பர் 111 நாள் ஓடும் அப்படின்னு பிட்டை போடனும்....
//

எங்கேயோ இடிக்குதே?

K.s.s.Rajh 9:52:00 PM  

வணக்கம் பாஸ் உங்கள் கற்பனை கலக்கள் மெச உள்குத்து பதிவு போல இருக்கு

kavithai (kovaikkavi) 11:48:00 PM  

வலை உலகம்!...ரெம்ப கஷ்டம்யா!... ஐய்யோ! தலையைப் பிய்ச்சுக்கலாம் போல இருக்கு...
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

veedu 12:14:00 AM  

ராசா சார் இடிச்சா தள்ளி நில்லுங்க....கனமான பொருளை தூக்கிட்டு வரும்போது தள்ளி நில்லுங்க..ஹிஹி!

veedu 12:15:00 AM  

ஆமாம் சார் நான் பதிவுக்கு கீழ போட மறந்திட்டேன் ஆம் இது அனைத்தும் கற்பனையே!ஹிஹி!

veedu 12:16:00 AM  

வணக்கம் மேடம் கஸ்டந்தான் என்ன செய்வது?

சென்னை பித்தன் 2:23:00 AM  

//தமிழனின் மனதை அள்ளுவது நயன்தாராவா?புல்புல்தாராவா? பட்டி மன்றம் மாதிரி விவாத மேடையா மாற்ற போகிறேன் எப்பூடி....//
நிரூ டிரெயினிங்கில் பாப்பையா உடனே தேறிட்டாரே!

dhanasekaran .S 3:04:00 AM  

ரெண்டுகாலையும் தூக்கி நிற்பது சாத்தியம்னு ஒரு பதிவு போடலாம்.

மரு.சுந்தர பாண்டியன் 3:12:00 AM  

மிகப் பெரிய தில்லாலங்கடி அப்பாடக்கர் வேலையா இருக்கும் போல...

NAAI-NAKKS 4:42:00 AM  

இதுக்குதான் விக்கி கூட பழககுஉடாதுன்னு
சொல்லுறது....


நல்ல இருக்கு ....
தொடரவும்....
:))))))))))))

புலவர் சா இராமாநுசம் 5:59:00 AM  

சகோ!
வீடு பொலிவோடு களை கட்டி கண்ணைக்
கவர்கிறது நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மயிலன் 10:03:00 AM  

இந்த பதிவிற்கும் சிலர் படிக்காம கமென்ட் போட்ட மாதிரி தெரியுது...ஹி ஹி..
அந்தாளு பாப்பையாவ ஏன் நண்பா கொடையிரிங்க? :)

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP