அபாயம்! இணையஇணைப்பு!! இங்கே உள்ளது!!!

>> Thursday, January 5, 2012


IN INTERNET

வணக்கம் நண்பர்களே!
உங்களுடைய குழந்தைகள் பருவவயதில் உள்ள குழந்தைகளா?

உங்கள் வீட்டில் இணைய இணைப்பு உள்ளதா?

உங்கள் குழந்தைகளுக்கு தனியாக மடிக்கணினி உள்ளதா? 

அதில் இணைய இணைப்பு உள்ளதா? ஆம் எனில் படியுங்கள்! மற்றவர்களும் வாருங்கள்!

நண்பர் ஒருவரின் செல்லமகள் வயது பதினான்கு, தோழிகளுடன் விளையாட்டாகவும் படிப்பு சம்மதமாகவும் பிரவுசிங் சென்டருக்கு சென்றவர்,தோழிகளின் உதவியால் மெயில் ஐடி உருவாக்கினாள் சரியான தொழில்நுட்பம் தெரியாததால் மெயிலினை Stay singned in டிக் செய்து விட்டார்,History  யும் நீக்கவில்லை,

பின்னால் வந்த ஒருவன் மெயிலை பார்த்து, அந்த பெண்ணின் ஐடியில் நுழைந்து Send Mail இருந்த உறவினருக்கு அனுப்பிய வாழ்த்து மெயிலில் போன் எண் இருந்தது வசதியாக போக, பலருக்கு தான் விபச்சார பெண் எனவும் ரேட் எல்லாம் போட்டு அனுப்பிவிட்டான்.

 போன் எண்னையும் கொடுத்து விட்டான், பிறகு ஒரே ஆபாச போனாக வர, பயந்து தன் தந்தையிடம் கூற, அவர் ஒவ்வருவனாய் திட்டிதிட்டி கடைசியில் போனை அனைத்து வைத்துவிட்டுகாவல் துறையில் இருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து விசயத்தைச் சொல்ல, காவல் துறை நண்பர் விபச்சார புரோக்கர் மாதிரி பேசியதில், போன் செய்தவன் தனக்கு மெயில் வந்ததாக கூறினான்.

இவ்வாறு மெயில் வந்த விசயத்தைக் கூறவும்,அந்த பெண்ணின் மெயில் ஐடியை திறந்து பார்த்ததில் உண்மை புரிந்தது! அந்த மெயில் ஐடியை நீக்கியதுடன் போன் செய்த அனைவரையும் எச்சரிக்கை செய்தார் காவல் துறை நண்பர்.

அதனால் பெற்றோர்களே
மகன்,மகள் மெயில் ஐடி பாஸ்வேர்டு உங்களுக்கு தெரியுமா?

மகன்,மகள் மெயிலில் என்ன வகையான மெயில் வருகிறது கண்காணிக்றீர்களா?

இந்த இரு கேள்விகளுக்கும் இல்லை என்று உங்களுடைய பதிலாக இருந்தால் அதை உடனே சரி செய்யுங்கள்.

பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் இருக்கும் சில கண்காணிப்பு சாப்ட்வேர்களை உங்கள் மகன்,மகள் கணினியில் நிறுவுங்கள்,அதை கணினியை வாங்கும் போதே நிறுவுங்கள்,அதன் மூலம் உங்கள் குழந்தைகளின் கணினியை நீங்கள் உங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம்.

வெளியே பிரவுசிங் சென்டரில் இணைய பயன்பாடுகளின் போது வேலை முடிந்த பிறகு History யை நீக்கவும். உங்கள் மெயில் ஐடி, பயோடேட்டா போன்றவற்றை வெளியிடத்தில் சேமித்து வைக்காதிர்கள்,போன்ற தகவல்களை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.

உங்கள் கணினியில் பாலியல் ரீதியான தளங்களை தடை செய்யும் முறைகளை நிறுவும்படி உங்கள் கணினி சர்வீஸ் நபர்களிடம் கூறுங்கள்.

அடுத்த்தாக சேட்டிங் இது மிக்கொடுமையான ஒரு விசயம்! இணையத்தில் சேட் மூலம் உரையாடுவது, சில நல்ல நண்பர்களை தரும், வேண்டத்தகாத உறவுகளைத்தரும், ஆண்கள் சிலர் பெண்களை சேட் மூலம் ஏமாற்றி சீரழித்த கதைகள் ஏராளம்! இப்பொழுது புதிதாக கிளம்பியிருக்கும் பிரச்சனை! ஒருபால் உறவின் பால் ஈர்ப்பு கொண்டவர்களால், ஒரு பூதம் கிளம்பியுள்ளது.இவர்கள் அரவானிகளும் கிடையாது! இரண்டுக்கு இடைப்பட்டவர்கள் (Homosexuality Activty) உள்ளவர்கள் இவர்கள் அன்பொழுக ஆண்களிடம் சேட்டில் பேசுகிறர்கள், பிறகு சந்திக்க விரும்புவார்கள், என் நண்பன் ஒருவரின் அனுபவம் மிகக் கொடுமையானது, சேட் மூலம் நட்பான நண்பர் ஒருவனை சந்திக்க சென்றான், நாள் முழுவதும் சினிமா,சரக்கு என ஜாலியாக ஊரைச் சுற்றிவிட்டு அவனுடைய அறையில் இருவரும் படுத்து உறங்கியிருக்கிறார்கள், நடுஇரவில் அவனுடை கை இவன் மேல் ஊர்ந்திருக்கிறது, திடுக்கிட்டு விழித்த நண்பனை, செக்ஸ் தொல்லை கொடுக்க... அவன் மூக்கினை பதம் பார்த்து விட்டு வந்தான் நண்பன்.அதிலிருந்து சேட் பக்கமே போவதில்லை பயபுள்ள.

அதனால் நண்பர்களே இணையத்தில் ஏற்படும் முகம் தெரியாத நட்பு வீணான பிரச்சனைகளை உண்டு பண்ணக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது மட்டமில்லாது உங்கள் குழந்தைகளை மனித குலத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத உறவுகளுக்கு அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது, அதை எந்த தொல்லையும் இல்லாமல் கடப்போம். நன்றி
கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள் :





9 comments:

சென்னை பித்தன் 6:01:00 AM  

நல்ல பகிர்வு!ஏற்கனவே பார்த்த குறும்படம்தான்.ஆயினும் ஒரு நல்ல பாடம்தானே!

நாய் நக்ஸ் 6:25:00 AM  

Enna solluvathu....?????
Ippadium.....manithargal
irukkiraargal.....

Vizhippunarvu pathivu....

Anonymous,  6:26:00 AM  

இதை பற்றி எவ்வளவோ விழிப்புணர்வு கதை கட்டுரை வந்தாலும் இன்னும் மக்கள் விழித்தமாதிரி தெரியவில்லை. நல்ல பயனுள்ள பதிவு

Admin 6:36:00 AM  

ஆமாம் தோழர்..இன்றைய காலத்தில் சமூக தளங்களினால்தான் அதிக பிரச்சனைகளை இளைய சமுதாயம் சந்தித்து வருகிறது..அதிலும் பாலியல் பிரச்சனைகள் அதிகம்..விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி..

சரணடைகிறேன்

Unknown 8:18:00 PM  

உண்மை தானுங்கோ...பார்த்து சூதானமா நடந்து கிட்டா கம்பியூட்டர் மற்றும் இனையம் பொக்கிஷம் இல்லன்னா நரகம்..அம்புட்டுதானுங்கோ..விஷிப்புணர்வு பதிவுக்கு நன்றி..!

சி.பி.செந்தில்குமார் 10:13:00 AM  

விழிப்பணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி

நிரூபன் 9:35:00 PM  

வணக்கம் நண்பா,
இணையம் பற்றிய விழிப்புணர்வினை எற்படுத்தும் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.

நானும் இதனை விளக்கி பல மாதங்களுக்கு முன்னர் ஓர் பதிவு எழுதியதாக ஞாபகம்,
இப்போது விதி எந்த ரூபத்தில் விளையாடும் என்று யாருக்கப்பா தெரியும்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் 9:37:00 PM  

தங்கையும், அண்ணனும் எப்படி மீட் பண்ணிக்கிறாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

விச்சு 9:53:00 PM  

வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP