அண்டர்வோல்டு 4 திரை விமர்சனம்
>> Friday, January 20, 2012
இந்திய ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் Underworld தனித்த இடம் பிடிக்கும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? என்றால் இல்லை! என்றே சொல்வீர்கள் என்று நம்புகிறேன்,மனித இனத்திக்கும் டிராகுலா இனத்திக்கும் பிறந்த ஒரு புதிய இனம் லைகன்ஸ் (ஓநாய்) முந்தைய படத்தில் லைகன்ஸ் எளிதில் வேட்டையாடக்கூடிய வகையில் வேட்டையர்களுக்கு இருந்தது பாகம் நான்கில் அ
வை பலம் பொருந்தியதாக இருக்கிறது, ஒரு ஹாலிவுட் படத்தை அதற்க்கு உரிய எப்பெக்ட்களை ஒரு சில திரையரங்களில் மட்டும் நாம் உணரமுடியும் நான் இந்த படத்தை பார்த்த திரையரங்கம் திருப்பூர் MPS அமெரிக்க தியேட்டர்களைப் போல் பல நவீன கருவிகளோடு இந்த 3D திரையரங்கை வடிவமைத்து உள்ளார்கள் 8000 வாட்ஸ் சவுண்ட் எபெக்ட்டு பயமுறுத்துகிறது, வெடித்து சிதறும் பாகங்கள் நம் கண்களை குத்துகின்றது பழைய 3D திரைப்படங்களை போல் இல்லாமல் நான்கு கட்ட அடுக்குகளாக தெரிவது நம் கண் முன்னே நடப்பதைப்போல்..உணர்த்துகிறது.....3D காட்சிகளின் மாயாஜாலத்தில் கைதட்டல்களை ரசிகர்கள் வழங்குவது திரையரங்கையே சாரும்.
வை பலம் பொருந்தியதாக இருக்கிறது, ஒரு ஹாலிவுட் படத்தை அதற்க்கு உரிய எப்பெக்ட்களை ஒரு சில திரையரங்களில் மட்டும் நாம் உணரமுடியும் நான் இந்த படத்தை பார்த்த திரையரங்கம் திருப்பூர் MPS அமெரிக்க தியேட்டர்களைப் போல் பல நவீன கருவிகளோடு இந்த 3D திரையரங்கை வடிவமைத்து உள்ளார்கள் 8000 வாட்ஸ் சவுண்ட் எபெக்ட்டு பயமுறுத்துகிறது, வெடித்து சிதறும் பாகங்கள் நம் கண்களை குத்துகின்றது பழைய 3D திரைப்படங்களை போல் இல்லாமல் நான்கு கட்ட அடுக்குகளாக தெரிவது நம் கண் முன்னே நடப்பதைப்போல்..உணர்த்துகிறது.....3D காட்சிகளின் மாயாஜாலத்தில் கைதட்டல்களை ரசிகர்கள் வழங்குவது திரையரங்கையே சாரும்.
படத்தின் கதை செலின் (Kate Beckinsale) முந்தைய படங்களில் கலக்கியவர் இதிலும் கலக்குகிறார் முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது ஆனாலும் கம்பீரம் குறையவில்லை படத்தின் கதை வழக்கம் போல் அவரைச் சுற்றியே நடக்கிறது,12 வருடங்கள் சிறையில் இருக்கும் செலின் தன் மகளை தேடி தப்பிஓடுகிறார், டிராகுலா இனத்தை சேர்நத செலினுக்கும் லைகன் காதலனுக்கும் பிறந்த (India Eisley) ஏவாள் அபூர்வ சக்தி கொண்டவளான இவளுடைய இரத்தம் பலம் பொருந்திய கொடூரமான லைகன்ஸ்களை உருவாக்கிறது,மகளை தேடி செல்லும் செலின் பின்னால் மனிதர்களும்,லைகன்ஸ்களும் ஏவாளை தேடி செல்கிறார்கள்.டிராகுலா இனத்தை சேர்ந்த டேவிட் அவருக்கு உதவுகிறார் கடுமையான சண்டைகள் நடக்கிறது மகளை மீட்கிறாளா? செலின் லைகன்களை வெல்கிறாளா?என்று திரையில் கண்டு மகிழுங்கள்.
Underworld 4 ஏனைய பாகங்களை விட இது சுவாரஸ்யமாக இல்லையென்றாலும் 3D தொழில் நுட்பத்தின் பலனால் கண்களை விரிய வைக்கின்றது சாதாரண திரையரங்குகளில் பார்க்க சலிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.
Kate Beckinsale ரசிகர்களுக்கு இந்த படம் சிறிது ஏமாற்றத்தை தந்தாலும்,அவரின் ஆக்சன் நடிப்பு ஏமாற்ற வில்லை லிப்டின் சங்கிலியை லைகன் அறுத்து விடும்போது தன் தலையை நோக்கி வரும் லிப்டை துப்பாக்கியால் துளைத்து தூள்தூளாக்கி தப்பிக்கும் காட்சி ஒன்று போதும்.
Mans Marlind, Bjorn Stein என்கிற இரட்டைய இயக்குனர்கள் படத்தின் கதையைப் பற்றி கவலைப்படவில்லை 3D காட்சிகளை வகைப்படுத்துவதில் கவனத்தில் கொண்ட அளவு கதையை சிந்திக்கவில்லை
ஹாலிவுட் ரசிகர்களுக்கான சரியான விருந்து இல்லையென்றாலும்...பின்னணி இசையும் 3Dமாயாஜாலமும் வித்தைபுரியும் சாகசத்தைக் காண பார்க்கலாம்.
MPS திரையரங்கு வலைதளம் http://www.mpscinemas.com/
படங்கள் அனைத்தும் கூகுல் மூலம் பெறப்பட்டது
10 comments:
புதிய ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு உடனுக்குடன் நல்ல விமர்சனம் போடுறீங்க. வாழ்த்துக்கள்.
இதுக்கு எல்லாம்...
கொடுப்பினை வேணும்...
ஹி...ஹி...
இனிய இரவு வணக்கம் நண்பா,
சுருக்கமாக அண்டர்வேல்ட் பட விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.
நம்மவரின் ரசனை தொடர்பிலும் லைட்டா ஒரு கடி கடிச்சிருக்கிறீங்க.
நான் இப் படத்தினை இன்னமும் பார்க்கவில்லை.
டைம் கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன்.
விமர்சனப் பகிர்விற்கு நன்றி!
லைட்டா எனக்கோர் டவுட்டு
இந்தப் படத்தை கோவாவில யோகா செய்தவங்க கூட பார்க்கலைட் தானே;-)))))
நல்ல தியேட்டர்ல(மட்டும்)பாக்கக்கூடிய படம் போல.
அன்பு நண்பர்களே....
தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு
எனக்காக திரு.சுரேஷ் குமார்-இடம்
விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி..நன்றி...நன்றி.....
நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி..... நன்றி..நன்றி...நன்றி.....
வணக்கம் பாஸ் நான் இந்தப்படம் பார்கவில்லை உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு
ஆங்கில படமும் பார்ப்பிங்களா?
படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்களா?
3 டி யில பார்க்கும் சந்தர்ப்பம் எமக்கு இல்லை சகோ... இருந்தாலும் முன்னைய பாகங்கள் பார்த்ததால் இதையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல இருக்கிறது...
புதுப்பட சூப்பரான விமர்சனம்..நன்றி.
Post a Comment