அழிந்து வரும் அழகான கலை தஞ்சை ஓவியம்
>> Saturday, January 21, 2012
தமிழகத்தில் நெற்களஞ்சியம் தஞ்சை...இந்த ஊர் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று கூறப்படுகிறது அழகான கட்டிட கலைகளை கொண்டுள்ள இந்த ஊர் தமிழகத்தின் கலைகளின் தேசம் எனக் குறிப்பிடலாம், இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது தஞ்சை ஓவியம்....மிக சிறப்பான நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டது, இந்த ஓவியங்கள்,வீடுகள்,அலுவலகங்களில் அழகுக்காக மாட்டப்படும்.
இந்த ஓவியங்களின் பிறப்பிடம் இராஜஸ்தானியம் என்றே நினைக்கிறேன்... ஏன் என்றால் இராஜதானிய ஓவியங்களை போல இருப்பதே,மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் கலை நுணுக்கமுடைய தஞ்சாவூர் தட்டுகள் மிக பிரசித்த பெற்றமையாகும், அப்படி பெருமையுடைய கலையை கற்று கொள்ளவும், அழகுக்காக வீட்டில் மாட்டிவைக்க விருப்ப படும் கலாரசிகர்களுகளும், தொடர்பு கொண்டு கலையை வளர்க்கலாம்.
ஓவியம் தேவைப்படுவர்களும்,இக் கலையை கற்றுக்கொள்ள விரும்புகின்ற நண்பர்களும் தொடர்பு கொள்ளவும்
ஓவியர் தர்மராஜ்
செல் : 9843072211
-----------------------------------------------------------------
நண்பன் ALL IS WELL பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது
எங்க வாரிசுவின் சேட்டைய பார்திங்களா?
விஜய் இந்த இரண்டு மாத குழந்தைய கவர்ந்திட்டாரே! மாஸ்..மாஸ்..தான்.
-------------------------------------------------------------------------
திருப்பூர் புத்தக கண்காட்சி 25-01-2012 தொடங்க உள்ளது, வரவிருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
----------------------------------------
14 comments:
தஞ்சை ஓவியங்கள் அழகுதான் ....
எங்க ஊரு மண்ண எடுத்து பதிவு எழுதியிருக்கீங்க...மிக்க நன்றி..
இன்றும் வெளியூரில் இருந்து வரும் விரிவுரையாளர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் தரும் அன்பளிப்பு இவ்வகை கலை பொருட்களே..
உங்க குழந்தையா?
என் அக்கா பையனும் டிவி பக்கத்துல தான் தொட்டில் கட்டியிருக்கும்..ஆனா சூப்பரா தூங்குவான்...
நல்லவேளை நீங்க பாடலை. குழந்தை நிம்மதியா தூங்குது.
வணக்கம் நண்பா,
எமது ஈழத்தின் தமிழ்ப் பாட நூலில் சித்தன்னவாசல்,
தஞ்சை பெருங்கோயில், எல்லோரா ஓவியங்கள் பற்றிப் படித்து, அவ் ஓவியங்களின் பெருமையினை அறிந்திருக்கிறோம்.
ஆனால் இன்று தஞ்சையின் சிறப்பு மருவிச் செல்வது வேதனையாக இருக்கிறது.
சமூக ஆர்வலர்கள் இந்த தொல்பொருட்களை அழியாது பாதுகாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
தங்களின் மழலையின் படம் அழகாக இருக்கிறது.
தஞ்சை ஓவியங்களை காப்பது ஒவ்வொரு தமிழர்களது கடமை .
குட்
பிளாக் உலகுக்கு அடுத்த வாரிசு?
ஓவியங்கள் அழகு - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
பாப்பா - தாலாட்டு பாட்டு
சகோ, குழந்தைங்க தூங்கும்போது படம் எடுக்ககூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. காரணம்லாம் ஆராயாதீங்க. ஆனால், பாப்பா தூங்கும்போது இனி படம் எடுக்காதீங்க ப்ளீஸ்.
உங்க வாரிசு ஆணா? பெண்ணா?
தஞசை ஓவியம் பற்றிய ஒரு நல்ல பகிர்வு தந்து,பின் ஒரு தஞ்சை ஓவியம் போன்ற குழந்தை படம்!
அழிந்து வரும் தமிழர் கலைகள் பற்றி பகிர்ந்தர்க்கு நன்றி
"குட்டி பாப்பா அழகு"
தேவையான பதிவு நண்பா..
Post a Comment