பதிவுலகம் செல்லும் பாதை சரிதானா?விலகும் நல்ல பதிவர்கள்!

>> Tuesday, January 24, 2012நாம் போகும் பாதை சரிதானா? இங்கு பதிவிட வரும் அனைவரும் கற்களையும் முட்களையும் கடந்து வந்து இருப்போம், நட்பாய் பழகியிருப்போம்....பதிவுலகம் என்பது நம் கவலைகளை இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல்லாகவும், சிலருக்கு தினம் எழுதும் டைரியினைப் போலவும்...சிலருக்கு இதுதான் வாழ்வு போலவும்...இருக்கிறது, மதுபோதை,சீட்டாட்டம் போல் அல்லவா மாறிவிட்டது, ஹிட்ஸ் எனும் மாயைக்குள் மூழ்கி திளைத்து வெற்றி பெறலாம் என நினைக்கும் நீங்கள் தொலைப்பது உங்களுடைய சுயத்தை...உங்களிடம் இருக்கும் தனித்தன்மையை.....


இதுல விக்கி எங்களையும் தான் தாக்கியிருக்கிறார் நாங்க
இத ஜாலியா எடுத்துகிட்டோம்
கணினியின் உள்ளேயே உலகை கண்டு கணிப்பொறியில் எலியாய் மாட்டிக்கொள்ள விரும்புகிறீர்களா? நட்பாய் பழகியவர்களிடம் நயமாக சொல்லாம்...!நஞ்சாய் சொல்லக்கூடாது! அதனால் நீங்கள் இழப்பது நட்பை....!நீங்கள் எழுத முடிவெடுத்தது என்ன உங்களுக்கு தெரிந்ததை பிறரிடம் பகிர...,நகைச்சுவையாக சிரிக்க வைக்க, திண்டுக்கல் அண்ணனைப் போல் சிந்திக்க வைக்க...,அரசியலை தெளிவு படுத்த..., மருத்துவத்தை சொல்ல, மதங்களில் உள்ள நல்ல விசயங்களை கூற...,கவிதை வடிக்க கூகுள் ஆண்டவரால் தரப்பட்ட களம்...இது யாருக்கும் சொந்தமல்ல தலைவர் ஸ்டாப் என்று சொன்னால் பெட்டிய கட்டிட்டு போக வேண்டியதுதான்

முதலில் நாகரிகமான எழுத்துகளையும், மறுமொழியினையும் படைத்துவிட்டு, அதே கரங்களினால் சேறு பூசும் செயல்களில் ஈடுபடுவது எதனால்?,சக பதிவினை விமர்சிக்கலாம்,பதிவரை விமர்சிக்க கூடாது. இந்திய தமிழ் பதிவர்களில் யாரும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவது கிடையாது,ஒரு சிலரை தவிர...பிரபலங்கள் ஏன் புதிய பதிவரை அறிமுகப்படுத்துவதில்லை...?எங்க நம்ம குரூப் எல்லாம் அங்க போயிடுவாங்க என்கிற பயமா?நான் எழுத வந்த போது இருந்த நல்ல பதிவர்கள் யாரும் இப்பொழுது இல்லை...! பதிவுலகமே சூன்யமாகியது போல் உள்ளது,அவர்களை இப்பொழுது உள்ள பிரபலங்கள் அறிமுகப்படுத்தியிருந்தால் இன்று தமிழ் வலையுலகத்திக்கு நல்ல பதிவர்கள் கிடைத்து இருப்பார்கள்.... ஏன் அறிமுகப்படுத்தவில்லை? இப்பொழுது அய்யோ! பதிவுலகம் நாசமா போச்சு!! என்று புலம்பி என்ன பயன்? மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்க பிரபலங்களா.......!ஒரு பதிவரையாவது அறிமுப்படுத்தியுள்ளீர்களா?

நம்ம தமிழக பதிவர் சொல்லியிருக்கிறார் இதுக்கு என்ன சொல்றீங்க
அப்படியே தெரியாம புதிய பதிவர் கமெண்ட்ல கேள்வி கேட்டா பதிலே வராது! ஏன்னென்றால் நீங்க பிரபலங்கோ! ஒரு சம்பவத்தைப் பற்றி ஒரு பிரபலம் பதிவு போட்டாரு, அதை இரண்டு மாதம் முன்னாடியே புதிய பதிவர் பதிவிட்டாரு, ஈ..காக்கா கூட கமெண்ட் போடலை, ஓட்டும் போடலை!சரி நாம போட்ட மேட்டரை பிரபலம் போட்டிருக்காரு, அப்படின்னு நானும் இதே பதிவை போட்டிருக்கேன் படிச்சு பாருங்கன்னு கமெண்ட் போட்டார்... புதிய பதிவர். நம்ம பிரபல பதிவர் கமெண்டை தூக்கிட்டார் அட இந்த பய இரண்டு மாதம் முன்னாடியே போட்டதை நாம இப்ப போட்டம்ன்னு நம்ம அடிவருடிகளுக்கு தெரிஞ்சா மானம் போயிரும் போல...என்று நினைத்து விட்டார் பிரபலம், அந்த புதிய பதிவரும் பதிவுலகவிட்டே போயிட்டாரு... அவர் போட்ட பதிவ படிச்சு குறையாவது சொல்லியிருந்தா அவர் நிறைய நல்ல பதிவு கொடுத்திருப்பார்.

அப்புறம் உள்குத்து மேட்டர் இது என்ன கருமம் நேர்ல தைரியமா நெஞ்சநிமிர்த்தி தவறு என்றால் சொல்ல வேண்டியதுதானே? பெயரைப்போடாமல் உள்குத்து யாரும் போடாதிங்க....நீ பெரிய யோக்கியன் என்று கேட்கிறீங்களா? நிரூபனுக்கு எதிரா... மன்னிக்கவும் நிரூபனின் கருத்துக்கு எதிரா நான் போட்ட உள்குத்து அல்ல ஒத்த பதிவில்...பதிவை விமர்சனம் செய்தேன்.


சிபிக்கு எதிரா கமெண்ட் போட்டேன், விக்கி பதிவுல கேட்டேன், "தலை" பதில் சொல்லல... அது அவர் விருப்பம், ஆனால் நட்பு...தொடருது சிபி என்னும் நல்ல மனிதன் மேல் எனக்கு எந்த வருத்தம் கிடையாது,அவருடைய கருத்தை மட்டும் மறுத்தேன் அவ்வளவுதான், ஜால்ரா போடுபவனை விட முகத்துக்கு நேரா சொல்லுபவர்கள் சிறந்த நண்பர்கள். இவ்வளவு இருந்தும் ஒருத்தன் கேவலமா நீ சிபிக்கு ஜால்ராவா அப்படி இப்படி என்று கெட்ட வார்த்தை போட்டு கமெண்ட் போடுறா(ர்)ன் ஒரு அனானி, நான் அவர் மனம் வருத்தப்படும் என்று சொல்லவில்லை,என் நண்பர்களுக்கு தெரியும்.


அப்புறம் ராஜபாட்டை ராஜா நீங்க பண்ணுவது.... உங்களுக்கு புரியும் வகையில் கமெண்ட்டை அவசரமா போட்டிட்டு ஓடிவிடுறீங்க....ஒரு முறைக்கு இரண்டு முறை கமெண்ட்டை படிச்சு பார்த்துட்டு போடுங்க...கந்தசாமி அய்யா பதிவுல நீங்க போட்டது உண்மையில பன்னிக்குட்டி அண்ணனை தாக்குகிறமாதிரிதான் இருந்தது.. என் பதிவில் மொக்கை பதிவு போட்டால் அப்படின்னு ஒரு வார்ததை சேர்த்திருந்தால் யாரும் கேள்வி கேட்கமுடியாது புரிஞ்சுக்குங்க மற்றும் நிரூபனை பற்றிய என்னுடைய பதிவில் சினிமா விமர்சனத்தை எழுதுவது எப்படியென்னு நிரூபன் சொல்லுற மாதிரி போட்டிருப்பேன் "எங்கயோ இடிக்குதே..!" என்று கமெண்ட் போட்டிருக்கிங்க நான் யாரையும் தாக்கல ஒரு அனானி "நண்பன்" விமர்சனத்திக்கு போட்ட கமெண்ட் அது அவனுக்கு பதில் சொன்னேன் நீங்க தவறா நினைத்துவிட்டு கமெண்ட் போடுறீங்க... அது விக்கி உட்பட அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்.,நிரூபன் உங்களை துரத்தி துரத்தி தாக்கி கமெண்ட் போடுவது ஏன் என்று புரியவில்லை! அதற்கு பன்னிக்குட்டியண்ணன் எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்க....

இது நிரூபனுக்கு தேவையில்லாத வேலை பதிவு ஓனர் அனுமதித்து இருக்கும் போது
நீங்கள் ஏன் அவரை தூண்டுகிறீர்கள்
ராஜா போட்ட கமெண்ட் பிரச்னை எப்படி திசை திரும்புது பாருங்கஅவரின் பதில் இப்படி! அனைவரும் இப்படி இருந்தா.....?

நிரூபன் விக்கியும் பன்னிக்குட்டியண்ணனை தாக்கி உள்குத்து போட்டார்...ஏன் அவருக்கு திருப்பி பதிவு போடத்தெரியாதா? நீங்க மட்டும் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? இலங்கை பதிவர் ஒருவரும் கமெண்டல லின்க் தருகிறார் ஏன் அவரை கேள்வி கேட்கமாட்டிங்கிறீங்க,

நாம் எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற....நமக்கும் நாலு நபர்கள் கமெண்ட் போடுறாங்க என்கிற ஆர்வத்தில் ஒரு தனிப்பட்ட மனிதன், அனைவராலும் நேசிக்கபடும் ஒரு மனிதரின் குணத்தை கேலி செய்வது, தேவையில்லாமல் நாட்டாமை செய்வதெல்லாம் விட்டுவிட்டு...நமக்கு யார் எதிரியோ அவனை பற்றிய விளக்கத்தை தமிழ் மக்களிடம் விளக்க வேண்டிய கடமையை விட்டு விட்டு தமிழனை பிளவு படுத்தும் முயற்சியில் இறங்காதீர்கள், பாதை மாறி செல்லாதீர்கள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு நண்பர்களே!அந்த பாதையின் முடிவில் புதைகுழியும் இருக்கலாம், இதுக்கும் மேல் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவர்களை தாக்கினால் இந்தியதமிழ் பதிவர்கள் உங்களை புறங்கணிப்பதை யாராலும் தடுக்க முடியாது பிறகு இனம் இனத்தோடு சேரும் டவுட்டுதான்!

98 comments:

கும்மாச்சி 10:22:00 PM  

நல்ல அருமையான பதிவு சுரேஷ். பதிவுலக உண்மைகளை ஒரே அடியாக போட்டு உடைத்து இருக்கிறீர்கள்.

NAAI-NAKKS 10:26:00 PM  

NO COMMENTS...

NAAI-NAKKS 11:00:00 PM  

INGU YAARUM COMMENT PODAATHATHAAL...
MATRA COMMENT-I PARTHA PIRAKU..
NAN MEENDUM VARUKIREN

மௌனகுரு 11:13:00 PM  

This is not good.... Athu enna ilangai pathivar Tamil pathivar...... Naadu munnerunamaadhiri thaan

நிரூபன் 11:40:00 PM  

வணக்கம் நண்பா,
பதிவில் ஆரம்பப் பந்திகளை நடு நிலமையாக எழுதி விட்டு, இறுதிப் பந்தியினை மட்டும் ஒரு தலைப்பட்சமான குற்றச்சாட்டாக முன் வைத்து எழுதியிருக்கிறீங்க.
தாங்கள் பதிவுலகில் கடந்த வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற சில விடயங்களை அறியாதிருக்கலாம் எனும் ஐயத்தில் சில விடயங்களை நினைவுமீட்டலாக இங்கே பகிர்கிறேன்.

நிரூபன் 11:42:00 PM  

நட்பாய் பழகியவர்களிடம் நயமாக சொல்லாம்...!நஞ்சாய் சொல்லக்கூடாது! அதனால் நீங்கள் இழப்பது நட்பை....!நீங்கள் எழுத //

விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் இருகனுமே!
ஆனால் சில பதிவர்கள் விமர்சனங்களை முன் வைத்தால் அவற்றினை விஷம் போல நோக்குவது ஏன்?
அப்படீன்னா பதிவுலகில் மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கும் உரிமை எவருக்கும் இல்லையா?

உள்குத்து எழுதுவோருக்கு உள்குத்து பாணியில் பதில் சொல்லும் பக்குவம் யாருக்குமே இல்லையா?

எந்தவொரு சாமானியனுக்கும் தனது தனிப்பட்ட உணர்வுகளை சொல்ல உரிமை உள்ள போது,
உள்குத்து போட்டவருக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி அவருக்குப் புரியும் படி அவரது பெயருடன் ஒரு பதிவு போடுவது என்பது எனக்கு எளிதான செயல்.
ஆனாலும் அவரவர்க்கு அவரவர் வழியில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கிறது அல்லவா?

அப்படியாயின் சில தவறுகளை கண்டும் மௌனமாக இருப்பது தான் நல்ல நட்பிற்கு அழகா?

நிரூபன் 11:47:00 PM  

அப்புறம் உள்குத்து மேட்டர் இது என்ன கருமம் நேர்ல தைரியமா நெஞ்சநிமிர்த்தி தவறு என்றால் சொல்ல வேண்டியதுதானே? பெயரைப்போடாமல் உள்குத்து யாரும் போடாதிங்க....நீ பெரிய யோக்கியன் என்று கேட்கிறீங்களா?//

நண்பா எனக்கு பெயரைக் குறிப்பிட்டு போடுவது என்பது ஜுஜுப்பி மேட்டர்
நேரடியாக யாரிடமும் கருத்துக்களைச் சொல்வதற்கு நான் பயப்படுவதில்லை! என் நட்பு பறி போய்விடுமே என அஞ்சுவதுமில்லை!
ஆனால் உள்குத்து போடுவோர்க்கு உள்குத்தின் மூலம் தான் சில சூட்சுமங்களைப் புரிய வைக்க வேண்டிய நிலமை ஒன்று உள்ளது அல்லவா?
அதன் வெளிப்பாடு தான் மறுபடியும் உள்குத்து போடுவது!

இதனை விடுத்து, நேரடியாக தாக்க எனக்கு தில்லு இருக்குங்க தல! ஆனால் மறைமுகமாக தொடர்ச்சியாக பல பதிவுகளில் அடுத்தவர்களை வதைத்து தமது சந்தோசம் முக்கியம் என நினைத்து எழுதுவோருக்கு நான் என்ன வழியில் பதில் சொல்லலாம்?
நேர்க்குத்தா போடுவது?

உள்குத்து போட்டால் தானே அவரவர்க்கு தாம் இதே வலியினை பிறரைப் பற்றிய உணர்வின்றி, புரிதலின்றி எழுதும் போது அவரவர் மனங்களும் வேதனைக்கு உட்பட்டிருக்கும் என்று உணர்ந்து கொள்வார்!

நிரூபன் 11:48:00 PM  

ஜால்ரா போடுபவனை விட முகத்துக்கு நேரா சொல்லுபவர்கள் சிறந்த நண்பர்கள்...//

நான் இப்படிப் பல இடங்களில் முகத்திற்கு நேரே சொல்லி பல்பும் வாங்கியிருக்கேன்.

பல இடங்களில் திட்டும் வாங்கியிருக்கேன்.

பதிவுலகில் அதிகளவான பதிவர்களிடம் வாழ்த்துரைகளை உள்வாங்கும் அளவிற்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை நண்பா.

நிரூபன் 11:53:00 PM  

நிரூபன் உங்களை துரத்தி துரத்தி தாக்கி கமெண்ட் போடுவது ஏன் என்று புரியவில்லை! அதற்கு பன்னிக்குட்டியண்ணன் எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்க....//

நான் துரத்தி துரத்தி தாக்குவதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லை.
இவரையும், இவரைப் பற்றி பதிவெழுதிய பதிவில் ஒத்தை வரி கமெண்ட் போடும் ஓர் இலங்கைப் பெண் பதிவரையும் துரத்தி துரத்தி தாக்கினேன்.

ராஜாசார் பதிவுகளை முழுமையாக படிக்காது
பதிவின் நோக்கம் திசை திரும்புமாறு கமெண்ட் போட்டு விட்டு போயிடுவார்.

பதிவுலகில் இரு வேறுபட்ட பின்னூட்டப் பிரியர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் பதிவையும், பின்னூட்டத்தையும் முழுமையாகப் படித்து கமெண்ட் போடுவோர்,
இன்னும் சிலர் பதிவில் பாதியையும், பின்னூட்டத்தில் பாதியையும் படித்து கமெண்ட் போட்டு விட்டு போயிடுவார்கள்.

இப்படிப்பட்ட வகையில் நான் கூறுகின்ற இரண்டாம் வகைப் பதிவர்கள் என்னா பண்ணுவாங்க என்றால்?
ராஜா சார் மாதிரி யாராச்சும் போட்டிருக்கிற கமெண்டைப் படிச்சிட்டு கலகத்தை மூட்டுவாங்க,.
இல்லேன்னா பதிவினை திசைதிருப்புற மாதிரி கமெண்ட் போடுவாங்க.

இதனால் தான் ராஜா சார் பண்ணும் சில அணுகு முறைகள் பிடிக்காது துரத்தி துரத்தி தாக்க வேண்டியதாகிறது.

நிரூபன் 11:57:00 PM  

நிரூபன் உங்களை துரத்தி துரத்தி தாக்கி கமெண்ட் போடுவது ஏன் என்று புரியவில்லை!//

நண்பா, ராஜா சார் லிங் போடுவது தொடர்பாக உள்குத்து போட்ட பின்னரும்
அவர் திருந்துவது போல தெரியலை.
மீண்டும் வந்தும் பதிவிற்கு தொடர்பில்லாம கமெண்ட் போட்டு விட்டு போயிட்டார்.

தனிப்பட அவருடன் பேஸ்புக்கிற்கு அனுப்பி,
ராஜா சார்
லிங் போடுவதற்காக தானே கமெண்ட் போடுறீங்க.
உங்களுக்கு என்னா பிரச்சினை! உங்க பதிவு பல நண்பர்களிடம் போய்ச் சேர வேண்டும்! ஆகவே என் வலையின் சைட் பாரில் உங்கள் பதிவினை விளம்பரப்படுத்துகிறேன் என்று விளம்பரத்தில் அவர் பதிவினை மூன்று நாட்கள் வைத்திருந்தேன்.

அவர் பதில் ஏதும் அனுப்பலை!

நான் அவரிடம் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை எதிர்பார்த்தோ, இல்லே
என்னை ராஜா சார் துதி பாடனும் என்று நினைச்சோ என் வலையின் சைட் பாரில் ராஜாசாரின் ப்ளாக்கினை விளம்பரப்படுத்தலை!
ஆனால் ராஜா சார் என்ன பண்ணினார்?

மறுபடியும், மறுபடியும் வந்து
நான் சைட் பாரில் விளம்பரம் கொடுத்திருப்பதை கூட கண்டுக்காம தன்னோட பதிவினை பின்னூட்டம் ஊடாக பதிவிற்கு தொடர்ப்பில்லாத கமெண்ட் போட்டு விளம்பரம் செய்வதிலே குறியாக இருந்தார்

இப்படி ஓர் மனிதர் நடந்தா நீங்க என்ன பண்ணுவீங்க நண்பா?

நிரூபன் 11:59:00 PM  

நிரூபன் உங்களை துரத்தி துரத்தி தாக்கி கமெண்ட் போடுவது ஏன் என்று புரியவில்லை! //

அண்ணே..
இன்னைக்கு வலையுலகில இருக்கிற பிரபல பதிவருங்க யாராச்சும் ராஜா சார் வலையை தமது ப்ளாக்கில தொடர்ச்சியாக இணைச்சு லிங் கொடுக்க சம்பதிப்பாங்களா?
சொல்லுங்க..
இதோ...நான் அவருடன் பேசிய மெசேஜ் இருக்கு! பாருங்க

good night

10 JanuarySelvarajah Nirupan
வணக்கம் பொஸ்,
உங்களைப் பற்றி இன்று ஓர் சிறப்பு பதிவு போட்டிருக்கேன்,
எங்கே என்று கண்டு பிடியுங்க பார்ப்போம்.
http://www.thamilnattu.com/
அப்புறமா நீங்க நாற்று பேஸ்புக் குழுமத்திலையும் உங்க பதிவுகளைச் சேர் பண்ணிக்கலாம்.

நாற்று
www.thamilnattu.com
Share

10 JanuarySelvarajah Nirupan

நிரூபன் 12:00:00 AM  

Selvarajah Nirupan
வணக்கம் நண்பா நல்லா இருக்கிறீங்களா?
என் வலையில் உங்க ப்ளாக்கினை இணைத்திருக்கேன். பார்த்தீர்களா?
உங்க ப்ளாக் லிங் கொடுத்திருக்கேன்.

இதுவும் நான் ராஜா சாருக்கு அனுப்பிய மெசேஜ் நண்பா.

இப்படி மெசேஜ் அனுப்பி,
என் வலையின் சைட் பாரில் அவரோட பதிவு லிங் கொடுத்த பின்னரும்
மறுபடியும்
மறுபடியும் வந்து பின்னூட்டத்தில் லிங் கொடுத்திட்டு இருந்தா?
யாருக்கு பாஸ் கடுப்பு வராது?

நிரூபன் 12:02:00 AM  

இது நிரூபனுக்கு தேவையில்லாத வேலை பதிவு ஓனர் அனுமதித்து இருக்கும் போது
நீங்கள் ஏன் அவரை தூண்டுகிறீர்கள்//

நான் அவரைத் தூண்டவில்லை நண்பா,

பதிவு ஓனர் அனுமதித்து உள்ளார் என்பதற்காக சைட்டு வாக்கில பன்னி குட்டி அண்ணரை வாரிட்டு
இப்படி லிங் போட்டு விட்டு போவதை அனுமதிக்கலாமா எனும் கோபத்தில் தான் அப்படி தூண்ட வேண்டியதாகி விட்டது!

நிரூபன் 12:06:00 AM  

அவரின் பதில் இப்படி! அனைவரும் இப்படி இருந்தா.....?
//

அண்ணே,
பன்னிக்குட்டி அண்ணர் மாதிரித் தானே நானும் பொறுமையாக இருந்தேன்.

அப்புறம் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

ஒரு லாஜிக் கேள்வி பாஸ்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கு தானே
பிரபல பதிவருங்க சாதா பதிவர்களை வைத்து நையாண்டி பண்ணி கிண்டல் பண்ணி பதிவெழுதினா
நாம பொறுத்திட்டு போகனும்? அப்படீன்னு எங்கேயாச்சும் சட்டம் இருக்கா?

ஸோ....பிரபல பதிவருங்க உள்குத்து எழுதும் போது,
அவரோட கருத்து நேரடியாக என்னை தாக்கும் போது அவருக்கு அவர் பாணியில் ஒரு பதிவு போட்டால் என்ன குத்தம்?

பதிவுலகிலும் தமிழர்களை அடிமையாக வாழச் சொல்லுகிறீர்களா?
பிரபல பதிவர்கள் உள்குத்து போடுவார்கள்!
சாதா பதிவர்கள் பொறுத்திட்டு சகிச்சிட்டு போகனும் என்று சொல்லுறீங்களா?

நல்ல லாஜிக் பாஸ்..

நான் கூட பதிவரசியல், பதிவுலகம் அப்படீன்னு எழுதாம சிவனே என்று என்பாட்டிற்கு தானே எழுதிட்டு இருந்தேன்! அப்புறமா எதுக்கு சும்மா இருக்கிறவனை பிரபல பதிவர்கள் தமது பதிவில் வைத்து கபடி ஆடி மகிழனும்?

நிரூபன் 12:09:00 AM  

நீங்க மட்டும் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? இலங்கை பதிவர் ஒருவரும் கமெண்டல லின்க் தருகிறார் ஏன் அவரை கேள்வி கேட்கமாட்டிங்கிறீங்க,
//

நண்பா..இக் கருத்தில் ஓர் சிறிய தவறு!
இலங்கைப் பதிவர் ஒருவர் அல்ல!
இருவர்!
ஒன்று மதிசுதா
அடுத்தவர் யாழ்மஞ்சு என்பவர்.


நான் பதிவெழுத வந்து சில மாதங்களில் மதிசுதா சுடுசோறு என்று கமெண்ட் போட்டு விட்டு பதிவுகளில் லிங் கொடுப்பதனை கண்டித்து காமெடி பண்ணி பதிவு போட்டேன்! அவருக்கு நேரடியாகவும் சொல்லியிருக்கேன்!

இதோ அந்தப் பதிவு!
http://www.thamilnattu.com/2011/04/blog-post_7555.html

இரண்டு பதிவுகளை எழுதியிருக்கேன்.
படித்துப் பாருங்கள்.
http://www.thamilnattu.com/2011/10/blog-post.html

நிரூபன் 12:13:00 AM  

நீங்க மட்டும் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? இலங்கை பதிவர் ஒருவரும் கமெண்டல லின்க் தருகிறார் ஏன் அவரை கேள்வி கேட்கமாட்டிங்கிறீங்க,
//

நண்பா நல்லாத் தான் தீயை பத்தவைக்கிறீங்க.

பதிவுலகில் முதன் முதலாக இலங்கைப் பதிவர் ஒருவர் ஒத்தவரிப் பின்னூட்டம் போட்டு,லிங் கொடுத்து விட்டு போகும் போது

தமிழகப் பதிவர்களின் பதிவுகளை காப்பி பண்ணி தன் வலையில் பேஸ்ட் பண்ணி பதிவு போடும் போது முதன் முதலாக பதிவு போட்டு எதிர்ப்பு காட்டியவன் நான் தான்!

நான் கூட அப்போது பதிவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டுமானால் பிரித்துப் பார்த்திருக்கலாம்! என்னிடம் அப்படி ஓர் பழக்கம் இல்லை!

ஆனால் இங்கே நீங்கள் இலங்கைப் பதிவர்களை கண்டிக்கவில்லை என்று கூறுகிறீர்கள்! இது எவ்வகையில் நியாயம்?

சீனியர் பதிவர்கள் வந்தேமாதரம் சசி!
சிபி செந்தில்குமார் ஆகியோரிடம் பேசிவிட்டாவது இப்படி ஓர் கருத்தினை முன் வைத்திருக்கலாமே!

சசியின் பதிவுகள், சிபியின் பதிவுகள் சுடப்பட்டு காப்பி பேஸ்ட் பதிவுகளாக எழுதப்படும் போது நான் தான் தனிப் பதிவு போட்டு அந்த இலங்கைப் பதிவருடன் சண்டையிட்டேன்.

http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html

இதோ அந்தப் பதிவு,
இந்தப் பதிவில் இலங்கைப் பதிவருக்கு எதிராக தமிழகச் சொந்தங்களை முன்னிறுத்தி தான் பதிவிட்டிருக்கேன்! உங்களைப் போல பிரித்து பிரிவினை காண வேண்டுமானால் நான் என் இஷ்டத்திற்கு இப்படி ஓர் பதிவினை எழுதாமலே விட்டிருக்கலாம்!


பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா?
http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html

நிரூபன் 12:16:00 AM  

அனைவராலும் நேசிக்கபடும் ஒரு மனிதரின் குணத்தை கேலி செய்வது, தேவையில்லாமல் நாட்டாமை செய்வதெல்லாம் விட்டுவிட்டு...நமக்கு யார் எதிரியோ அவனை பற்றிய விளக்கத்தை தமிழ் மக்களிடம் விளக்க வேண்டிய கடமையை விட்டு விட்டு தமிழனை பிளவு படுத்தும் முயற்சியில் இறங்காதீர்கள், //

ஒரு தனிமனிதருக்கு எதிராக பதிவு எழுதுவதன் ஊடாக இனங்களுக்கு இடையில் பிரிவினை வரும் என்கிற உங்களின் கருத்தினை முற்றாக மறுக்கிறேன்.

இப்படிப் பதிவு எழுதியதால் பிரிவினையை தூண்டியது யார் தெரியுமா?
நாய் நக்ஸ் அவர்களும், ஆப்பிசர் சங்கரலிங்கம் அவர்களும் தான் பிரிவினையை தூண்டி ஓர் பதிவினை எழுதினார்கள்!

நிரூபன் 12:16:00 AM  

மேலே உள்ள கருத்தில் பதிவில் ஓர் கமெண்டை எழுதினார்கள் என்று வர வேண்டும்!

நிரூபன் 12:18:00 AM  

அனைவராலும் நேசிக்கபடும் ஒரு மனிதரின் குணத்தை கேலி செய்வது, தேவையில்லாமல் நாட்டாமை செய்வதெல்லாம் விட்டுவிட்டு...நமக்கு யார் எதிரியோ அவனை பற்றிய விளக்கத்தை தமிழ் மக்களிடம் விளக்க வேண்டிய கடமையை விட்டு விட்டு தமிழனை பிளவு படுத்தும் முயற்சியில் இறங்காதீர்கள், //

நண்பா, தனி மனிதனை தாக்குவதால் இனங்களுக்கு இடையில் பிரிவினை வரும் என நினைக்காதீர்கள்!
அடுத்த கருத்து,

நேற்றைய என் பதிவில் உள்ள பின்னூட்டங்களைப் பார்த்தாலே தங்களுக்கு புரியும்!

ஆப்பிசர் சங்கரலிங்கமும்,
நாய் நக்ஸ் அவர்களும் தான் பிரிவினையை தூண்டும் வகையில் கமெண்ட் போட்டார்கள்!

அவர்களை நீங்கள் கண்டித்திருக்கலாமே!

என் பதிவில் பிரிவினையை தூண்டும் வகையில் எங்கேயாவது ஓர் கமெண்ட் போட்டிருக்கேனா?

நிரூபன் 12:20:00 AM  

நீங்கள் சொல்வது போல பிரிவினையை விதைப்பது நான் அல்ல!
விக்கி உலகம் வெங்கட்குமார் என்கிற பதிவர் இன்று நேற்றல்ல, இன்றைக்குப் பல மாதங்களுக்கு முன்பதாக ஐடியாமணி தமிழ்மணத்தில் நம்பர் ஒன்னாக வந்திட்டாரே எனும் ரீதியில்

உனக்கு தில் இருந்தா சினிமா, ஈழம், தமிழக அரசியலை தவிர்த்து பதிவெழுது!
சிபி தான் எப்பவுமே நம்பர் ஒன்னாக இருக்கனும் என்று கமெண்ட் போட்டாரு!
ஈழப் பதிவருங்க! உங்க ஊரு மேட்டரை பார்த்திட்டு போங்க அப்படீன்னு கமெண்ட் போட்டாரு!

அப்புறம் நிறுத்தியிருந்தா பரவாயில்லை!

ஈழப் பதிவர் இந்தியப் பதிவர் என்ற பிரிவினைக்கு அடிப்படையாக அவரோட மனைவியின் புரோபைலில் ஓர் கமெண்ட் போட்டாரு!

அது மூலமா அவரே ஈழப் பதிவர், இந்தியப் பதிவர் பிரச்சினையை உருவாக்க நினைச்சாரு!

இதோ...அந்த கமெண்டை தேடி எடுத்து தருகிறேன்!

"என் ராஜபாட்டை"- ராஜா 12:28:00 AM  

முதலில் நண்பர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும் .. என்னிடம் இணையம் இல்லை .. கிடைக்கும் பத்து அல்லது இருபது நிமிடத்தில் பயன்படுத்தவேண்டும் .. அதனால் வரும் தவறு இது . விரிவாக பெசகுட நேரம் இல்லை .. மின்சாரம் துண்டிக்க பட இன்னும் இரண்டு நிமிடம் உள்ளது. இனி எப்போ கிடைக்கும்னு தெரியாது . எனது கஷ்டம் 24 நேரம் இணையத்தில் இருக்கும் நீருபனுக்கு புரியாது

நிரூபன் 12:30:00 AM  

"என் ராஜபாட்டை"- ராஜா said...
முதலில் நண்பர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும் .. என்னிடம் இணையம் இல்லை .. கிடைக்கும் பத்து அல்லது இருபது நிமிடத்தில் பயன்படுத்தவேண்டும் .. அதனால் வரும் தவறு இது . விரிவாக பெசகுட நேரம் இல்லை .. மின்சாரம் துண்டிக்க பட இன்னும் இரண்டு நிமிடம் உள்ளது. இனி எப்போ கிடைக்கும்னு தெரியாது . எனது கஷ்டம் 24 நேரம் இணையத்தில் இருக்கும் நீருபனுக்கு புரியாது.//

சார்...
முதல்ல இப்படி ஏற்றத் தாழ்வு கமெண்ட் போடுவதை விடுத்து
வாங்க! பேசுவோம்!

நான் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவன் அல்ல.

இணையம், மின்சாரம், மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத போர்ச் சூழலிருந்து தான் வந்தவன்! எனக்கும் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியும்!

"என் ராஜபாட்டை"- ராஜா 12:30:00 AM  

//நிரூபன்Jan 25, 2012 12:02 AM

இது நிரூபனுக்கு தேவையில்லாத வேலை பதிவு ஓனர் அனுமதித்து இருக்கும் போது
நீங்கள் ஏன் அவரை தூண்டுகிறீர்கள்//

நான் அவரைத் தூண்டவில்லை நண்பா,

பதிவு ஓனர் அனுமதித்து உள்ளார் என்பதற்காக சைட்டு வாக்கில பன்னி குட்டி அண்ணரை வாரிட்டு
இப்படி லிங் போட்டு விட்டு போவதை அனுமதிக்கலாமா எனும் கோபத்தில் தான் அப்படி தூண்ட வேண்டியதாகி விட்டது!
//

நீங்க திரும்ப திரும்ப பன்னிகுட்டி அண்ணனையும் என்னையும் பிரச்சனையில் மாட்ட வைக்க நினைகின்றிர்கள் ..

"என் ராஜபாட்டை"- ராஜா 12:31:00 AM  

ஹலோ .. நெட் இல்லாமல் எப்படி கமெண்ட் போடுவது ?

நிரூபன் 1:09:00 AM  

vinhvishali said... 27
இப்படித்தான் ஒரு பெரிய பிளவு ஏற்ப்பட்டு வருது பதிவுலகில்....அது என்னன்னா புதுசா வரும்போது அய்யா வாங்க அம்மா வாங்கன்னு கூப்பிடுறாங்க....அப்புறம் நாம போய் அவங்களுக்கு சீர் செனத்தி(!) செஞ்சாலும் அவங்க சனம் கிட்ட தான் சலம்புறாங்க....என்னத்த பண்றது மணி சார் கேட்டா நான் அதிகமா உண்மையா சொல்றேன்னு குத்துறாங்க முடியல ...இதுக்கு ஒரு ஐடியா கொடுங்க...இவங்கள மாத்த(திருத்த அல்ல!)...பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள!
//

இப்படி ஓர் பின்னூட்டத்தை போட்டு பிரிவினையை தொடக்கி வைச்சவர் யார் என்று தெரியுதுங்களா?

நான் ஒருபோதும் பிரிவினை பார்ப்பதும் இல்லை! ஏனையோரை இனத்தாலோ, மொழியாலோ பிரிப்பதும் இல்லை!

அப்படிப் பிரித்துப் பார்க்கனும் என்றால் பல பதிவருங்க வரும் போது அன்பாகப் பழக வேண்டிய அவசியம் இல்லையே நண்பா.

நிரூபன் 1:11:00 AM  

இதுக்கும் மேல் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவர்களை தாக்கினால் இந்தியதமிழ் பதிவர்கள் உங்களை புறங்கணிப்பதை யாராலும் தடுக்க முடியாது பிறகு இனம் இனத்தோடு சேரும் டவுட்டுதான்! //

இது பாசிசம் அல்லவா?

மத்தப் பதிவருங்க தாக்கும் போது, நீங்க மட்டும் மௌனமாக இருக்கலாம்! கண்டுக்க கூடாது!
ஆனால் பதிவர்கள் என்ற ரீதியில் தாக்கினால் அதற்குள் ஏன் ஓர் நாட்டை முன்னிறுத்தனும்?
எல்லோரும் பொதுவானவர்கள் என்று நோக்கலாம் அல்லவா?

அப்போ நடு நிலமை, நட்பு எல்லாம் ஓட்டுக்களிலும், பின்னூட்டங்களிலுமா தாங்கியிருக்கிறது!

சே...கறுமம்!

நிரூபன் 1:13:00 AM  

இதுக்கும் மேல் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவர்களை தாக்கினால் இந்தியதமிழ் பதிவர்கள் உங்களை புறங்கணிப்பதை யாராலும் தடுக்க முடியாது பிறகு இனம் இனத்தோடு சேரும் டவுட்டுதான்! //

ஏன்...இப்படி ஓர் வார்த்தைய உங்க பதிவிலை சேர்க்கனும் நண்பா?

இதன் உள் அர்த்தம் தெரியாமல் சேர்த்திருக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன்.

நேற்றைய பதிவில் நாய் நக்ஸ், ஆப்பிசர் சங்கரலிங்கம் ஆகியோர் போட்ட கமெண்டை பார்த்த பின்னருமா இப்படி ஓர் பிரிவினை கருத்தினை பல்டி அடித்து சும்மா இருக்கும் பதிவர்கள் மீது திருப்ப உங்களுக்கு மனசு வந்திச்சு?

யார் பிரிவினையை உருவாக்குற மாதிரி கமெண்ட் போடுறாங்களோ! அவங்க பத்தி எதுவுமே பேச மாட்டீங்க! இல்லே!

ஆனால் அப்பாவியா இருப்பவங்க மேல அப்படியே வசனத்தை திசை திருப்பி போட்டு, பாசிச கருத்து போல கருத்தினை திணிச்சிடுவீங்க!

நண்பா! நீங்க இங்கே குறித்திருக்கும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை!

ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

அந்த வரிகளை நீக்கவும்! அல்லது அது தொடர்பான தெளிவுபடுத்தலை முன் வைக்கவும்!

நிரூபன் 1:16:00 AM  

இதுக்கும் மேல் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவர்களை தாக்கினால் இந்தியதமிழ் பதிவர்கள் உங்களை புறங்கணிப்பதை யாராலும் தடுக்க முடியாது பிறகு இனம் இனத்தோடு சேரும் டவுட்டுதான்! //

அதெப்படிங்க பாஸ்...
பதிவர்களை தாக்கினால் இனம் இனத்தோடு சேரும்!
நாம எல்லாப் பதிவர்களையும் தாக்கி தான் எழுதுறோம் அப்படீன்னு வைச்சுக்குங்க.

என்னைப் பத்தி சிபி எத்தனை பதிவுகளில் கடிச்சிருப்பார்,.

நிரூபன் ஈழப் பதிவர்களுக்கு தான் சப்போர்ட் செய்யுறாரு என்று பேசியிருப்பாரு!
ஆனால் நான் இப்படி எச்சரிக்கை விட்டேனா?

மொதல்ல கருத்துக்களை ஊடகச் சுதந்திரத்துடன் எதிர் கொண்டு பேசப் பாருங்க!

இல்லேன்னா இப்படி கருத்து திசை திருப்பும் நோக்கில் எழுதி அடுத்தவனை பலிக்காடாவாக்கி ஒரு பிரச்சினையை உருவாக்கும் நோக்கினை விடுத்தி எழுதுங்க பாஸ்.

சி.பி.செந்தில்குமார் 1:48:00 AM  

my wish is

ALL MUST B LIKE FRIENDS AND RELAATIVES.NO BODIES ENEMY HERE.

மௌனகுரு 2:18:00 AM  

To rajapaattai raja


kovapadaramaadhiri comedy panna koodaathu aama :)

மௌனகுரு 2:20:00 AM  

Mr: house neenga enna IndiaTamil bloggers sanga thalaivaraa?

Anonymous,  3:12:00 AM  

எல்லாம் சரி தான், ஆனா அதென்ன இலங்கை பதிவர் இந்திய பதிவர்கள் என்று பிரிச்சு பார்க்கிறிங்க. இங்க சண்டை போடும்போது அப்படி பிரிச்சு பார்த்து ,பேசியா சண்டை பிடிக்கிறம்.. ஈழ பதிவருக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழ்நாட்டு பதிவர் தோள்கொடுக்கவில்லையா இல்லை தமிழ் நாட்டு பதிவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஈழத்து பதிவர் தோள் கொடுக்கவில்லையா? இதை நீங்கள் பார்த்தது இல்லையா? அப்புறம் எதுக்கு பிரிச்சு பேசுகிறீர்கள்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எதற்கு இந்த செயல்.

அது சரி ஒரு சின்ன பிரச்சனையையும் ஊதி பெருசாக்கி குளிர் காய உங்களை போன்ற ஒரு சிலரும் இருக்க தான் செய்கிறார்கள். இனியாவது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்துக்கு ஏற்ற போல பிரச்சனைகளை திசை மாற்றாதீர்கள். இதுவரை இந்த பிரிவினை எண்ணத்தில் இல்லாதவர்களுக்கு கூட உங்களை போன்றவர்களுது பதிவு அவர்கள் மனதிலும் நஞ்சை விதைத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

Anonymous,  3:15:00 AM  

தயவு செய்து விளக்கம் கொடுங்கள் சுரேஸ்குமார் !

மயிலன் 4:31:00 AM  

பதிவுலகம் ஆரோக்கியமான பாதையில் செல்கிறதா?
இல்லை..நிச்சயம் இல்லை..
மொழியால் நாம் இணைய நினைக்கும் இடம் இது..
பிரிவினை நோக்கம் உள்ள வரிகளை யாராயினும் தவிர்க்கவும்...

veedu 7:05:00 AM  

பதிவுலகம் உடையக்கூடாது என்கிற என்னத்தில் போட்டிருக்கிறேன்...வருகைக்கு நன்றி!

veedu 7:05:00 AM  

ஓகே...

veedu 7:08:00 AM  

இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கை பதிவர்கள்.. தமிழகத்தில் பிறந்தவர்கள் தமிழக பதிவர்கள் இருவரும் பேசுவது தமிழ்...இது மட்டும் தான் வேறுபாடு!

veedu 7:10:00 AM  

ஆரம்பத்தில நீங்களும் தான் நடுநிலையா இருந்தீங்க...இப்ப ஏன் இப்படி மாறிட்டிங்க

veedu 7:15:00 AM  

பதிவுலகில் நிறைய நபர்கள் யார் யாரையோ தாக்குகிறார்கள் அவர்களை பற்றி நான் எழுதவில்லையே உனக்கும் எனக்கும் நட்பு இருப்பதால்தான் நான் உன்னைப்பற்றி எழுதுகிறேன் உன் தவறை சுட்டிகாட்டுகிறேன் நாகரிகமான முறையில் எனக்கு உரிமையில்லையா?இல்லை என்று சொல்லிவிடுங்கள் நான் இனி எழுதமாட்டேன்!

veedu 7:19:00 AM  

நீங்கள் உள்குத்து வெளிகுத்து போடும் போது சம்மதப்பட்ட நபர் அவருடைய நண்பர்கள் என்ன மனநிலையில் இருந்தார்களோ!இப்பொழுது நான் போடும் போது நீங்களும் உங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள் நிரூபன்!

சாம் ஆண்டர்சன் 7:25:00 AM  

நீங்க ஏன்னா தான் பாஸ் சொல்ல வாறீங்க??? நீங்க ஒன்னும் தமிழ் பதிவுலக கடவுள் இல்ல...... உங்களுக்கு புடிக்காட்டி போங்க சார் சும்மா ஹிட்சுக்காக என்ன வேணாலும் எழுதுவிங்களா ?????????????

veedu 8:26:00 AM  

நீங்களும் அப்படித்தானா விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறீங்களா..?

veedu 8:38:00 AM  

அதற்கான கண்டனத்தை உங்கள் பதிவிலும் மெயிலில் அவரிடம் கூறினேன்...

veedu 8:39:00 AM  

இதை பற்றி போனில் விவாதித்து உள்ளோம்....

veedu 8:44:00 AM  

//தமிழர்களை அடிமையாக வாழச்//
நீங்களும் தமிழன் நானும் தமிழன் அடிமையா யார் வாழச்சொல்றாங்க...புரியலையே பிரபலங்கறது யாரு சாதா பதிவர்கள் யாரு நான் சாதா பதிவர்தான்.......

veedu 8:47:00 AM  

காமடி பண்ணியிருக்கிங்க...படித்ததுதான்..இப்ப ஏனோ கபடி விளையாடறீங்க...

NAAI-NAKKS 8:48:00 AM  

அதே கதை தான் நாங்களும் சொல்லுறோம்..நிரு...
நீங்கள்..புதிதாக..வந்தபோது எப்படி இருந்தீங்க...இப்ப எப்படி இருக்கீங்க..?????

veedu 8:50:00 AM  

பழைய பதிவை படித்து விட்டு பதிவு நான் போடலை நிரூபன்!இப்ப போட்ட பதிவுக்கு போட்டதுதான் இந்த பதிவு....உங்க பதிவ நான் புதுசா இன்றைக்கு மட்டும் படித்து விட்டு போடலை புரிஞ்சுக்கங்க

veedu 8:58:00 AM  

அந்த தனி மனிதர் நாங்கள் அனைவரும் நேசிக்கும்...நபராக இருந்தால்...மன்னிக்கவும் நீங்கள் அனைவரும் நேசிக்கும் ஒருவரை நான் தவறாக எழுதுகிறேன்...உங்கள் அனைவருக்கும் என்ன மனநிலை இருக்குமோ அதே மனநிலைதான் எனக்கும்

NAAI-NAKKS 9:01:00 AM  

நிரு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்....விக்கி எங்கள் தாய் மாமன்...
உங்கள் வேலையை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்...ப்ளீஸ்...

veedu 9:02:00 AM  

நிரூபன் இலங்கை பதிவர்கள் மற்றும் தமிழக பதிவர்கள் என்று இரண்டு தரப்பையும் பிரிவினையை தூண்டாதீர்கள் என்று கூறுகிறேன்....ஒரு தரப்பை மட்டும் அல்ல

NAAI-NAKKS 9:03:00 AM  

அதுக்காக...நான் என்ன என்று கேட்க்காதீங்க ....

NAAI-NAKKS 9:05:00 AM  

அது எல்லாம் வேற விஷயம்...

veedu 9:08:00 AM  

பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள! இத பார்த்தாலே அவர்தான்னு குழந்தை கூட சொல்லும்...இதுல மறைமுகமா என்ன இருக்கு...ஓகே இது அவருடைய கருத்து...நான் பதில் சொல்ல முடியாது அவர் விருப்பம் இருந்தால் சொல்லட்டும்

NAAI-NAKKS 9:11:00 AM  

இதே பதில் தான்..நிரு...
பதிலுக்கு பதில் என்பதை விட...ரசிப்பது என்று ஒன்று உள்ளது...
அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா...

veedu 9:16:00 AM  

நான் ஒரு செய்தியா சொல்லுகிறேன்..நிரூ!இதற்கு மேலும் பதிவர்களை தாக்கி பதிவு போடுங்க உங்க பிளாக் நீங்க போடுறீங்க....தொடர்ந்து தாக்கினா எல்லாருக்கும் என்ன எண்ணம் வரும்,சொல்லுங்க...நிரூபன் நம்ம நாட்டுகாரங்களை தாக்கி எழுதிகொண்டே இருக்கிறார்...அவருடைய பிளாக்குக்கு நாம போகக்கூடாது ஒரு நாளைக்கு நம்மளையும் இப்படி தாக்கி போட்டாலும் போடுவார் என்கிற எண்ணம் வரும் வருமா?வராதா? அப்புறம் எங்க இனம்இனத்தோடு சேரும்....இந்த வாசகத்தை எனக்கு கூறியது ஒரு ஈழ நண்பன் நிரூ புரிஞ்சுக்கங்க...!

veedu 9:21:00 AM  

ஒருத்தருடன் ஒருத்தர் நண்பர்களை கலாய்ப்பது ஒரு ஜாலிக்காக...!நீங்களும் ஜாலியா எழுதியிருந்தா நான் ஏன் எதிர்பதிவு போடுகிறேன்!

veedu 9:22:00 AM  

நன்றிங்க தல..!

veedu 9:24:00 AM  

நீங்க இலங்கை பதிவர் சங்க தலைவரா?

veedu 9:39:00 AM  

வணக்கம் கந்தசாமி அண்ணன் அவர்களுக்கு...உங்களுக்காக எங்கள் சகோதரன் தீக்குளித்துள்ளான்!கடலூர் புயல் பாதிப்பில் உதவ முன் வந்தவர் நிரூபன்...ரத்தமும் சதையுமான உறவு நம்முடையது...நான் நிரூபன் பதிவை வைத்து பிரச்சனையை பெரிதாக்க வேண்டிய அவசியம் அல்ல...இப்படி ஒரு பதிவிட்டு ஹிட்ஸ் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது...திசை மாற்றவில்லை நீ போகும் பாதை சரியில்லை..தவறுகளை காத்திரமாக கூற வேண்டியது எதிரிகளிடம் சொந்தங்களையும் அவ்வாறே அணுகினால்....ஏற்படும் விளைவுகளைத்தான் கூறியுள்ளேன்...இரண்டு நாட்களாய் தமிழக பதிவர்கள் ஏன் நிரூபன் பதிவின் பக்கம் போகவில்லை புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் இதற்கு நான் காரணமா? சொல்லுங்கள்....நான் ஒன்றும் நிரூபனை திட்டி போடவில்லையே!அதற்கான பதிவில் என் கண்டனத்தை தெரிவித்து உள்ளேன்

veedu 9:41:00 AM  

பதிவுலகின் பின்னால் பலவும் நடக்கின்றன.....அதை இருதரப்பும் புரியவேண்டும் என்பதே என் ஆசை மயிலன்...

veedu 9:42:00 AM  

ஹலோ....சும்மாயிருங்க ஏங்க?

நிரூபன் 9:43:00 AM  

நண்பா, நண்பன் என்றால் தவறுகளைச் சுட்டிக் காட்ட உரிமை இருக்கிறது.

நான் உங்களுக்கு அப்படி உரிமை இல்லை என்று சொல்லவில்லையே!

ஆனால் அதெப்படி விக்கி அண்ணரை மட்டும் நான் தாக்கி எழுதக் கூடாது என்று சொல்ல முடியும்?

எதற்காக எங்கள் மாமா! அவரை தாக்க உரிமை கிடையாது அப்படீன்னு பேசுவீங்க?

அப்படீன்னா அவர் மத்தவங்களை தாக்குவதும் தவறு தானே!

நிரூபன் 9:45:00 AM  

NAAI-NAKKS said...
அதே கதை தான் நாங்களும் சொல்லுறோம்..நிரு...
நீங்கள்..புதிதாக..வந்தபோது எப்படி இருந்தீங்க...இப்ப எப்படி இருக்கீங்க..?????
//


அண்ணே சும்மா காமெடி பண்ணாதீங்க.
நான் எப்பவும் ஒரே மாதிரித் தான் இருக்கேன்!

பதிவுலகில் நான் தொழில்நுட்ப அடிப்படையிலும் சரி,
இதர வழிகளிலும் சரி உதவி என்று செய்தது இலங்கை பதிவர்களுக்கு அல்ல!
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

என்னோட தாய் நாட்டுச் சொந்தங்களுக்குத் தான்!

ஸோ....இப்படிப் பேசுவதை மொதல்ல நிறுத்துங்க.

veedu 9:46:00 AM  

ஒரு பதிவ மட்டும் படிச்சிட்டு இப்படி கமெண்ட் போடக்கூடாது!எது புடிக்லைன்னா போறது...பதிவுலக கடவுளா? அய்யோ!அய்யோ!நாகரிகமா ஒரு கருத்த சொல்லக்கூடாதா?இது தவறா நீங்களே சொல்லுங்க!உங்க நண்பனுக்கு நீங்க அறிவுரை சொல்ல மாட்டிங்களா?

நிரூபன் 9:47:00 AM  

NAAI-NAKKS said...
நிரு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்....விக்கி எங்கள் தாய் மாமன்...
உங்கள் வேலையை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்...ப்ளீஸ்...//

அண்ணே இந்த கருத்தை குப்பையில் போடுங்க.
ஏன்னா ஒருத்தர் பதிவு எழுதுகிறார் என்றால்
கருத்துக்கள் அடிப்படையில் முரண்பாடு கண்டிப்பாக வரும்!
இங்கே கருத்துக்களால் தான் முரண்பட்டோம்!
ஆனால் நீங்களும் ஆப்பிசரும் தான் நேற்று தொடக்கம் இன்று வரை
பிரித்துப் பார்க்கிறீங்க!
ஸோ....முதல்ல அதை நிறுத்துங்க!

சொந்த பந்தங்களை ஒரு ஓரமா வைச்சிட்டு
இப்போ கருத்துக்களால் மோதிப் பிரச்சினையை முடிச்சுக்குவம் வாங்க!

நிரூபன் 9:50:00 AM  

NAAI-NAKKS said...
நிரு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்....விக்கி எங்கள் தாய் மாமன்...
உங்கள் வேலையை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்...ப்ளீஸ்...

9:01:00 AM//

அண்ணே...நீங்க பதிவுலகிற்கு வர முன்னாடியிருந்து
அவர் எனக்கும் மாமன் தான்!

ஸோ...நான் முதல் கண்ட மாமன் தான் அவரு!

அவர் கூட இன்னைக்கு சண்டை போடுவேன்!

நாளைக்கு ஒட்டிக்குவேன்! இது தான் எங்கள் வழக்கம்!

ஸோ....நீங்க கொஞ்ச நேரம் சும்மா ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க!

NAAI-NAKKS 9:52:00 AM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....
தூக்கம்....
நாளை பார்ப்போம்.....
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வீடு
கமெண்ட் காபி பண்ண முடியாம...
ரோம்ப தொல்லையா இருக்குயா...
இதுக்காகவே..இப்ப நான் போறேன்....
ஆனால் தொடருவேன்.....

நிரூபன் 9:55:00 AM  

நாய் நக்கி அண்ணே!
மொதல்ல நாட்டின் அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்க!

இது அன்பு வேண்டுகோள்!

தமிழ்மணப் பிரச்சினையின் போதும் நீங்க இப்படி ஓர் வீண் வாதப் பிரச்சினையை ஈழப் பதிவர்
தமிழகப் பதிவர் அப்படீன்னு கொண்டு வந்தீங்க!


இப்போ மேட்டரு!

விக்கி அண்ணர் போட்ட உள்குத்திற்கு நான் உள்குத்து போட்டது!

ஸோ...அதில அவரு இம்புட்டு நாளா போட்ட உள்குத்தினை சகிச்சிட்டு இருந்த நானு
எல்லா மேட்டரையும் ஒன்னா சேர்த்து தாக்கியிருக்கேன்!
ஸோ...நாம சாட்டிங்கில பேசி தீத்துக்கிட்டோம்!

இப்போ நமக்குள்ள open mind.

நமக்குள் எந்த பிரச்சினையுமே இல்லை!

அதே மாமன்! மாப்பிளை உறவு தானுங்க இருக்கு!

நீங்க கொஞ்ச நேரம் தீயை அணைய விடுங்க!
மேலும் மேலும் பெற்றோல் ஊத்தி பத்த வைக்க வேணாம்!

veedu 9:55:00 AM  

அவர் உங்களை மட்டும் தாக்கினாரா நிரூ!சிபி..ஏன் என்னைய தாக்கி எழுதியிருக்கிறாரு..நாய்நக்ஸ் அவர்களை தாக்கி எழுதியிருக்கிறார்..சிபியை தாக்கிய பதிவில நீங்க கூட கமெண்ட் போட்டிருந்தீங்க...சிபியும் விக்கிய தாக்கி போட்டிருக்கிறார் என்னுடைய கமெண்ட் காரணமாக சிபி அதை தூக்கியிருக்கிறார்...நீங்க ஜாலியா போட்டிருக்கலாம் நாரதர் அது இது என்று போடவேண்டிய அவசியம் இல்லையே!அது எல்லாருடைய மனதையும் குத்தியிருக்கு....

நிரூபன் 10:00:00 AM  

veedu said...
அவர் உங்களை மட்டும் தாக்கினாரா நிரூ!சிபி..ஏன் என்னைய தாக்கி எழுதியிருக்கிறாரு..நாய்நக்ஸ் அவர்களை தாக்கி எழுதியிருக்கிறார்..சிபியை தாக்கிய பதிவில நீங்க கூட கமெண்ட் போட்டிருந்தீங்க...சிபியும் விக்கிய தாக்கி போட்டிருக்கிறார் என்னுடைய கமெண்ட் காரணமாக சிபி அதை தூக்கியிருக்கிறார்...நீங்க ஜாலியா போட்டிருக்கலாம் நாரதர் அது இது என்று போடவேண்டிய அவசியம் இல்லையே!அது எல்லாருடைய மனதையும் குத்தியிருக்கு....//

நண்பா.
ஒருவருக்கு உள்குத்து போட தெம்பிருந்தா
அதே வேளை உள்குத்தை எதிர் கொள்ளவும் தெம்பிருக்கனும்!
நாம யாரு! ஊடகவியலாளர்கள்!

ஊடக கல்வி கற்கலைன்னாலும் நாம ஒரு ஊடகத்தை நடாத்துற ஆளுங்க தானே!

ஸோ...வாய்க்காலுக்கு வணக்கம் செலுத்தும் பதிவர் அப்படீன்னு சக பதிவர்களை அண்ணர் செல்லமா திட்டினாரு!

நானும் பதிவர்களால் அவரை செல்லமா நாரதர் என்று கூப்பிடுறாங்களே என்ற நினைப்பில அப்படி ஓர் தலைப்பை வைத்து
கதா பாத்திரத்தை உருவாக்கி பதிவை எழுதினேன்!
நமக்குள்ள எந்த பிரச்சினையுமே இல்லை!

இப்போ உள்குத்து ஊமக் குத்து எல்லாமே முடிஞ்சு போச்சு!

பஞ்சாயத்து போஸ்ட்டு மூலமா மேலும் பிரிச்சுப் பார்க்காமா ஜாலியா இப் பதிவை முடிச்சுக்குவோமா?

Saha, Chennai 10:01:00 AM  

அய்யயையையோ என்னயா ஒரே அக்கப்போரா இருக்கு, இன்னும் சின்னப்புள்ள மாறி டீச்சர் அவென் என்ன கிள்ளிட்டான், இல்ல டீச்சர், அவென் என்ன குட்டுனான், அதான் கிள்ளுநேண்டுகிட்டு. போயி வேல வெட்டிய பாருங்கய்யா. சும்மா வெட்டித்தனமா பேசிகிட்டு. அல்லாரும் ஒத்துமையா இருக்கோணும், தெரியுதா?

எங்க, அல்லாரும் பாடுங்க
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்,
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்.
காக்கா கூட்டத்த பாருங்க,
அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க? "

டொயின் டொயின் டொயின் டொயின் டொயின் டொயின் டொயின் டொயின..... டொயின்.... டொயின்....
மணியடிச்சாச்சு, வீட்டுக்கு போங்கப்பா.

நிரூபன் 10:02:00 AM  

மச்சி வீடு!
இப்போ என்ன பிரச்சினை!

இன்னையோட நான் உள்குத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கனும்!
அப்படித் தானே!

ஓக்கே மேட்டர் ஓவர்!

நான் இறங்கி வாரேன்!

இந்த பிரிவினை, பிரிச்சுப் பார்க்கிற புண்ணாக்கு கமெண்ட் போடுறவங்க எல்லோரும் இனிமே இந்த மாதிரியான கமெண்டுகளை நிறுத்திக்கனும்!

ஓக்கே !

என்னோட வாயை அண்ணர் வீடு அவர்களிற்காக என் எழுத்து மேல சத்தியமா மூடிக்கிறேன்!

அதே நேரம் எனக்கு எதிராக இனிமே யாராச்சும் ஊமக் குத்து உள்குத்து போட்டு வார நினைச்சா
அதற்கு என் அன்பு அண்ணர் வீடு பொறுப்பாக நின்னு அந்தப் பதிவிற்கு ஒரு வழி பண்ணுவார் என உறுதியளிப்பார் என்றால்

நான் மூடிக்கிட்டு போயிடுறேன்!

டீல் ஓக்கேவா

நிரூபன் 10:07:00 AM  

இத்தால் சகலருக்கும்!

அண்ணர் வீடு சாட்சியாக,
ஒரேயொரு உள்குத்து இம்புட்டு ரணகளத்தை ஏற்படுத்தியிருக்கு என்பதால் அதற்காக மன்னிப்பும் கோரி!

இந்த மேட்டரை இத்தோடு நிறுத்திக்கிறேன்!

இனிமே எனக்கு எதிராக யாரு உள்குத்து போட்டாலும் வீடு அண்ணர் அதனை தீர்த்து வைப்பாரு!
அதையும் மீறி உள்குத்து யாராச்சும் போட்டாங்க என்றால் என்னோட வாயிலை ஒட்டி வைச்சிருக்கிற ப்ளாஸ்டரை உரிச்சிட்டு தாறுமாறாக தாக்க வேண்டி ஏற்படும்!

ஸோ...இனிமே உள்குத்து பதிவை சாதகமாக்கி அவங்க வேற நாடு!
நீங்க வேற நாடு அப்படீன்னு பிரிவினை வளர்க்கிற அண்ணர் நாய் நக்கி மாதிரி ஆளுங்களுக்கு இடமே இல்லை!

ஸோ...
I just got relief from that.

veedu 10:20:00 AM  

யோவ்..நான் ஜாலியா கூலாத்தான்யா பதில் சொல்லிட்டு இருக்கிறேன்...

veedu 10:23:00 AM  

நான் என் வீட்டு ஆளுகளைதான்யா கண்ட்ரோல் பண்ணமுடியும் பக்கத்து வீட்டுக்காரங்களை என்னால கண்ட்ரோல் பண்ணமுடியாது...இருந்தாலும் சொல்லுங்க...

veedu 10:33:00 AM  

நன்றிங்க சார்!

NAAI-NAKKS 10:27:00 PM  

நன்றி..நிருபன்...
என் அன்பு தம்பி மற்றும் அனைவருக்கும்
எப்போதுமே..என் மனதில் இடம் உண்டு...
ஒருசிலருக்கு...நல்ல புரிதல்களை
ஏற்படுத்தி உள்ளதால்...அன்புடனும்..
பண்புடனும்...வரவேற்கிறேன்...
வரவேற்கிறோம்....
உங்களுக்காக அன்புடன் வாதம் புரிந்த..
அனைவருக்கும் என்..நன்றி கலந்த வணக்கங்கள்...
கீதையின் அணித்து வரிகளை...
நினைவு கூறுவோம்...

அன்புடன் பழகுவோம்...
பாசத்துடன் இருப்போம்...

என்றென்றும்...நன்றி,,,,அன்புடன்...

நக்கி என்கிற..நாய்-நக்ஸ் என்கிற,,,,
நக்கீரன்...

NAAI-NAKKS 10:52:00 PM  

பதிவுலக பீஷ்மர் சொன்னதால் என் பெயர்
இனி நாய் நக்கி என்று கொள்ளப்படும் ....

அன்புடன்..

நாய்-நக்கி....

NAAI-NAKKS 10:53:00 PM  
This comment has been removed by the author.
NAAI-NAKKS 10:54:00 PM  

:)))))))))))))))))))

:)))))))))))))))))))

:)))))))))))))))))))

மௌனகுரு 8:30:00 PM  

Jollya sonnengalaa edha ilangai padhivar India padhivar matter ah? Boss neenga unwanted pblms create pannittinga

மயிலன் 12:07:00 PM  

பேருக்கு எத்த மாதிரியே பேசுறாப்ல...

மயிலன் 12:09:00 PM  

யாரு சார் இவரு..?
இவரோட கீபோர்டுல வேற பட்டனே இல்லையா?

மயிலன் 12:16:00 PM  

பிரெச்சனை என்னன்னு முழுசா எனக்கு புரியலேன்னாலும் இந்த பதிவுக்கு இந்த இடம் நல்ல முடிவு..
தமிழால் இணைவோம்..

veedu 6:16:00 PM  

மயிலன் அவர் எங்க ஊர்க்காரர்தான் தான் வந்து படித்ததை எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்...நீங்க தவறா நினைக்காதிங்க...பிளீஸ்!

veedu 6:20:00 PM  

இவர் கேபிள் அண்ணனையும்..ஜாக்கியும் மொக்கையா கிண்டல் செய்து பதிவு போட்டுகொண்டு இருக்கிறார்....இவர் ஹிட்ஸ் பற்றி பேசுகிறார் கொடுமைங்க மயிலன்

♔ம.தி.சுதா♔ 9:46:00 PM  

இது நான் கருத்துக்கள் படிப்பதற்கு முன் இடும் கருத்தாகும்....

இப்பதிவையிட்ட சுரேஷ் அவர்களுக்கு வணக்கம்....

பதிவுலகத்தினுள் நான் அப்பப்போ தான் நுழைவதுண்டு... தற்செயலாக வந்த இடத்தில் இதைப் பார்க்க நேர்ந்ததையிட்டு வருத்தப்படுகிறேன்....

நான் பதிவுலகம் வந்து சொற்ப காலமெனினும் இப்படி பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.... நீங்கள் யாரை மிரட்டுகிறீர்கள் எதற்கு மிரட்டுகிறீர்கள் என்பது பற்றி எனக்கு சரியான அடி நுனி தெரியாது.... இருந்தாலும் ஒன்றை மறக்க வேண்டாம் சகோ நண்டுப் பெட்டிகளுக்கு மூடி தேவையில்லை என்பார்கள்... அதை சிறுவர்களுக்கு விளங்கப்படுத்த உதாரணம் தேடித் தேவையில்லை.

அத்துடன் இந்த வட்டங்கள் சதுரங்கள் குழுக்கள் எல்லாம் பார்ப்பவர்களால் உருவாக்கப்படுவதே தவிர அவர்களுக்குள் உருவாக்கப்படுவதில்லை.... இன்னும் ஒரு சில மாதத்தில் இந்தப் பதிவுலகத்தில் நான் இருக்கமாட்டேன்... அடுத்த ஒரு சில வருடத்தில் நீங்கள் இருக்கமாட்டீர்கள்.... நிரந்தரமல்லாத ஒன்றுக்காக இவ்வளவும்...

இன்னும் ஒன்றையும் கவனித்தேன் அதை நானாக சொல்வதை விட தாங்கள் இட்ட வரிகளையே மீள இடுகிறேன்...
ஃஃஃஃ நெஞ்சை நிமிர்த்தி தவறு என்றால் சொல்லவேண்டியது தானே? பெயரைப் போடாமல் யாரும் உள்க் குத்துப் போடாதிங்கஃஃஃஃ

/////இலங்கைப் பதிவர் ஒருவரும் பதிவில் லின்ங் தருகிறார் அவரை கண்டிக்கமாட்டேங்கிறிங்க////

இந்த இரு வரிகளையும் சொன்னது நீங்கள் தானே... யார் சொன்னது என்னைக் கண்டிக்கவில்லை என்று நிருபன் ஒரு பதிவிலேயே வெளிப்படையாக போட்டிருந்தான்... அது தெரியுமா உங்களுக்கு... இதுக்கு அக்கப் போரடிக்கிறிங்களே நல்ல நேரம் சதீஸ் அண்ணர் நான் லிங் இல்லாமல் அவருக்கு கருத்து போடுகையில் கருத்திலேயே கேட்பார் ஏன் போடவில்லை என்று...

மிகுதி அடுத்த கருத்தில்

♔ம.தி.சுதா♔ 10:26:00 PM  

ஒரு விடயம் சகோ இந்த ஒரு விடயத்திற்காக நீங்கள் இட்ட அந்தக் கடைசி வசனத்தை பார்த்து விட்டுப் போன ஒருவர் அதை பிரிவினையாகவே எடுத்துக் கொண்டு விடக் கூடும்... ஆனால் நாளை விக்கி அண்ணையும் நிருபனும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்... அது பார்த்துவிட்டுப் போன அந்த வாசகருக்கு தெரியாவிடில் இது பதிவுலகப் பிரிவினை வாதமாகுமல்லவா......

ஈழப் போர் வரலாற்றும் தமிழகம் என்றும் மறக்கப்பட முடியாத ஒன்று... ஈழத் தமிழன் ஒவ்வொருத்தனும் தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்றிக்கடன் பட்டவன்... இதை என்றும் நான் மறக்கமாட்டேன்... சில இடங்களில் பேச முடியாமல் எம் வாய்கள் கட்டப்பட்டுவிட்டதால் பேசமுடியவில்லை...

எனது 50 வது பதிவில் ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார் ”நீங்கள் சோத்துக்கே வழியில்லாதவர்கள்... அது தான் எங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளீர்கள் என்றார்” அந்த காங்கிரஸ் அடிவருடிக்காக நான் என் தமிழக உறவுகளை சுட்டி பதிவிட முடியுமா?

சகோ நான் நேரேயே சொல்கிறேன் நீங்கள் அந்த வரி பாவித்தது தப்பு...

♔ம.தி.சுதா♔ 10:37:00 PM  

லிங் போடுவது தொடர்பாக....

நீங்கள் எனக்கு இக்கேள்விக்கு கட்டாயம் பதில் தரணும் சகோ... லிங் போடுவது தப்பு என்று சிலரது தவறான செயற்பாட்டால் தான் விதந்துரைக்கப்படுகிறது... ஆரம்பத்தில் நானும் சாதாரணமாகத் தான் போட்டேன் அதன் பின் பதிவுலகம் வருவது குறைந்ததும் நான் பதிவெழுதியதை நான் கருத்திட்டிருந்தவர் அறியணும் என்பதற்காகத் தான் இட்டேன்...

இதே செயற்பாடு கேபிள் ஜீ, லோசண்ணா போன்றோர் கூட செய்திருக்கிறார்கள்... (தள முகவரி இடல்

தங்களிடம் நான் கேட்பது என்னவென்றார் ராஜா அண்ணருடன் என்னை எதை வைத்து ஒப்பிட்டீர்கள்.... யாராவது ஒருவருடைய பதிவை படிக்காமல் லிங் இட்டிருக்கிறேனா?

இது பற்றி தமிழ்மணம் ரமணீதரன் கூட ஒரு இடத்தில் கடுப்போடு கருத்திட்டதை கண்டிருக்கிறேன்... இது சரியா தப்பா என்பது பற்றி நான் இன்னும் முடிவு எடுக்கல...

♔ம.தி.சுதா♔ 10:42:00 PM  

ஏன் முடிவெடுக்கவில்லை என கேட்கிறீர்களா? இப்போது கூட தனிமடல் மூலமும் மெயில் மூலமும் பதிவுக்கு கருத்திடும் படி கேட்கும் பல பதிவர்கள் இருக்கிறார்கள்.... பதிவிட்டதும் எஸ்ம்எஸ் சில் குழு மடல் அனுப்பி வாக்குக் குத்தும் குழுப் பதிவர்கள் இருக்கிறார்கள்.... தமிழ் மணத்தில் பல பெயரில் கணக்குத் திறந்து வாக்கிடும் பதிவர்கள் இருக்கிறார்கள்.. புதிய பதிவர்கள் யாரையாவது கண்டால் விழுந்தடித்து போய் மிக மிக பிரபலமான பதிவர்கள் இருக்கிறார்கள் (மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் ஆதாரம் என்னிடம் இருக்கிறது...

இவற்றுடன் ஒப்பிடும் போது இது எனக்கு தப்பாக தெரியவில்லை..

மௌனகுரு 11:22:00 PM  

Pls remove comment reply option... Comments sariya follow panna mudiyala

நிரூபன் 2:12:00 AM  

ம.தி.சுதா♔ said...//இதுக்கு அக்கப் போரடிக்கிறிங்களே நல்ல நேரம் சதீஸ் அண்ணர் நான் லிங் இல்லாமல் அவருக்கு கருத்து போடுகையில் கருத்திலேயே கேட்பார் ஏன் போடவில்லை என்று...//

ஏன் மச்சி, நான் கூட என் பதிவில் பதிவினைப் படித்து பதிவோடு கமெண்ட் தொடர்புடைய கமெண்ட் போடும் போது லிங் போடுவது தப்பில்லை என்று தானே சொல்லியிருக்கேன்.

அதனை ஏன் நம்ம மச்சான் சுரேஷ் புரிஞ்சுக்காம இப்படி ஓர் கருத்தினை முன்வைத்தாரோ தெரியலை.

அப்புறம் உனக்கு தனிப்பட்ட முறையிலும் லிங் போடுவது தொடர்பில் சொல்லியிருக்கேனே,!

அதனை நீ இங்கே சொல்லாது ஓடிவிட்டாய்,
என் வன்மையான கண்டனங்கள்!

♔ம.தி.சுதா♔ 8:42:00 AM  

நிரு நான் இங்கே லிங் போடுவது பற்றி பெரிதாக எடுக்கலடா அதால தான் அதை அப்படியே விட்டு விட்டு போடுவது தப்பில்லை என விபரித்து வந்தேன்...

எனக்கு இலங்கை இந்தியப் பதிவர் என பிரித்துக்காட்டியது தான் இங்கே பிடிக்கவில்லை....

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP