நண்பன் வெற்றிபெறுமா? ஒரு அலசல்!
>> Sunday, January 8, 2012
இந்திய இந்தி நடிகர்கள் விறைப்பாக வசனம் பேசி வந்த காலத்தில் யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர் அமீர்கான், இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதுக்கு சினிமாவை நேசிக்கும் நம் வலையுக நண்பர்களுக்கு விளக்க வேண்டியது இல்லை!..அவர் நடித்த திரீ இடியட் படம், இயல்பான நகைச்சுவையோடு, படித்த மேதாவிகளை லேசாக நையாண்டியும் செய்திருப்பார் இயக்குனர், அமீர்கானின் வயது கண்டிப்பாக படம் பார்க்கும் போது தெரியாது அவ்வளவு இளமையாக இருப்பார் அமீர்கான்.
ஆனால் அவர் அளவுக்கு விஜய் நடிப்பாரா? என்பது சந்தேகமே!ஆனார் சங்கர் என்னும் சிற்பி களிமண்ணையும் அழகான சிற்பமாக செதுக்கக்கூடியவர், நண்பனில் விஜய்யை மட்டும் அவர் செதுக்க முடியாது! ஜீவா,ஸ்ரீகாந்த் இருவரையும் செதுக்கவேண்டும் ஜீவா... ஓகே…ஆனால் ஸ்ரீகாந்த் வரமணல்! அதை சிற்பமாக செதுக்க முடியாது! மணல் சிற்பமாக வடிக்க கொஞ்சம் சிரமப்படக்கூடும்.
இந்தி 3இடியட்டைப் பார்த்தவர்களுக்கு நண்பன் சுணக்கமாக இருக்கும், அதை சில மேல் பூச்சுகளால் பூசி மெருகேற்றுவார் என்பதை பாடல்களில் காணமுடிகிறது, அஸ்க்கு....லஸ்க்கா பாடலில் அனைத்து மொழிகளில் புகுந்து விளையாடிய பாடகரை பாராட்டியே தீர வேண்டும்! என் பிரண்ட போல யாரு மச்சா...மற்றும் நல்ல நண்பன் பாடல் நம் பள்ளி,கல்லூரி காலத்தை நினைவுபடுததுகிறது எந்தன் கண் முன்னே.... பாடல் மெலோடி மயிலிறகால் தடவும் இசை.., நம்பிக்கையூட்டும் பாடல் ALL IS WELL ராக்ஸ், அடுத்தது இலியானாவை ரசித்து எழுதிய கவிஞர் இருக்கானா இடுப்பு இருக்காண்ணா....என்று இடுப்பை ரசித்திருக்கிறார், இந்த பாடலால் தியேட்டர் அதிரும் என்பது உறுதி, அதை காட்சி படுத்துவதில் சங்கருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்!
படத்தில் சிறந்த கண்டுபிடிப்பாளனாக இருக்கும் நண்பன் தன் போராசிரியரின் புறங்கணிப்பால் நத்தை போல் சுருண்டு விடுவார், அமீர் அவரை உற்சாகப்படுத்துவார்…,அவன் திறமையை உலகுக்கு கொண்டு வர ஐடியா கொடுப்பார்.
படத்தில் முக்கியமானது நகைச்சுவை, அதில் ஒன்று நண்பனின் வீட்டிக்கு சாப்பிட போவார்கள் மூவரும் வயதான பெருசு லொக்..லொக்கென்று இருமிக்கொண்டு படுத்த படுக்கையில் இருக்கும் பூரிக்கட்டையால் சப்பாத்தி உருட்டிக்கொண்டிருப்பாள் நண்பனின் அம்மா, அரிக்குது சொரிஞ்சு விடு என்பார் பெருசு, பூரிக்கட்டையால் நெஞ்சு பகுதியை சொரிவாள், நெஞ்சில் இருக்கும் முடி ஒட்டிய பூரிக்கட்டையில் அப்படியே சப்பாத்தி மீண்டும் உருட்டுவாள் அந்தம்மா, அமீர்கான் அருவருப்பாக அதை சிரமப்பட்டு சாப்பிடுவார், அந்த காட்சி நகைச்சுவையாக இருந்தாலும்.... பிற வீடுகளில் சாப்பிடுவர்களுக்கு பாடம் சொல்லும் காட்சிகள்.
அதே பெருசுவை சீரியஸ் கண்டிசனில் டூவீலரில் மூன்று பேர் போகும் காட்சி அருமையாக இருக்கும், அதே பெருசுதான் நண்பனிலும் இருக்கிறது அதனால் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியில் வரும் போராசிரியர் ரோல் செய்தவர் போமன் ஹிரானி, சான்ஸே இல்லை ஒரு கார்டூன் கேரக்டர் போன்று அவரின் பாடிலாங்வேஜ் இருக்கும், நகைச்சுவையான வில்லத்தனம் செய்திருப்பார் அவர் அளவுக்கு சத்தியராஜ் சரிப்படுவாரா? ஓவர் ஆக்சன் நடிகரான சத்தியராஜ் அந்த பாத்திரத்தை சிதைக்காமல் இருக்க வேண்டும்.
கரினாவின் நடிப்பும், அழகும், இறுதிக்காட்சியின் சுவாரஸ்யமும்...பனிமலைகள் சூழ்ந்த பகுதியில் காரில் அமீர்கானை தேடிச்செல்லும் காட்சியில் ஒளிப்பதிவு நமக்கு குளிரடிக்கும் வகையில் இருக்கும்.
மாதவன் நடித்திருந்தார், ஆனால் அவருக்கு மூன்றாம் தரமான பாத்திரம் என்றாலும் சிறப்பாக தனக்கான பாத்திரத்தை ஏற்று பெயர் பெற்றார், இதில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.... ஆனால் விஐய் பாத்திரத்தை கேட்டிருப்பாரோ?
35கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, 366கோடி ரூபாய் வருவாய் கொடுத்த இந்த படத்தை, முன்னா பாய் M.B.B.S (வசூல்ராஜா M.B.B.S),1942 A LOVE STORY போன்ற வெற்றிபடங்களை எடுத்த ராஜ்குமார் ஹிரானி ஒரு சிறந்த எடிட்டரும் கூட... சமூக அவலங்களை நகைச்சுவையாக நையாண்டி செய்வதில் தேர்ந்தவர், சங்கர் அவர் அளவுக்கு சிறந்த இயக்குனர் என்பதில் எள்ளவும் ஐயமில்லை…அதனால் தமிழில் வெற்றிபெறக்கூடிய வகையில் உழைத்திருப்பார்கள் என் நம்புவோம் பொங்கலுக்கு கண்டிப்பாக ஒரு ரசனையான பொழுதுபோக்கு சித்திரம் படைக்கப்பட உள்ளது, விஜய் ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டு சினிமா ரசிகனுக்கும்.....
நட்புடன் உங்கள் நண்பன்
K.S.Sureshkumar..
14 comments:
முகப்பு பேனர் செம கலக்கல்.....
Eenya...een.....
Intha vimarsana
thollai thaangalappa.....
இன்னும் எத்தன பேரு படம் வராமையே விமர்சனம் செயவிங்க?????
வணக்கம் நண்பா,
நண்பன் பார்க்க முன்பதாகவே படம் பற்றிய சஸ்பென்ஸை அமீர்கான் மூலமா உடைத்து விட்டீங்களே..
ஹிந்தியில் உள்ள காட்சிகள் எவ்வாறு தமிழில் ரீமேக் ஆகும் என்பதை ஒப்பிட்டு அலசியிருப்பது சூப்பர்.
ethu mukiyama shankar padam la kandipa poi parpanga
http://ambuli3d.blogspot.com/
@தமிழ்வாசி பிரகாஷ்
நன்றிங்கோ! இது விமரிசனம் இல்லைங்க ஒப்பீடு...3இடியட் எனக்கு ரொம்ம பிடிச்ச படம் அதான்....
@NAAI-NAKKS
பதிவர் சந்திப்பு போவங்க்கு முன் விமர்சனம் போட்டது நீங்களா..நானா...
@தமிழ்வாசி பிரகாஷ் தெரியலை சிவா லைட்டா போட்டிருக்கிறார்......
@நிரூபன் ஹஹ...நெட்ல சூப்பர் பிரிண்ட் இருக்கு 3இடியட் நேரம் இருந்தா பாருங்க....
@ambuli 3D சங்கர் படம்தான் கண்டிப்பாக பார்கனும்.....வேட்டைக்காரனுக்கு பிரீ டிக்கட் கொடுத்தாங்க...இதுக்கு கொடுப்பாங்களா தெரியலை....
நான் 3 இடியட்ஸ் படத்தை 100 முறைக்கு மேல் பார்த்தவன். படம் அங்குலம் அங்குலமாக ரசித்திருக்கிறேன். கண்டிப்பாக நண்பன் படம் அதன் அளவுக்கு இருக்காது என்பதே என் எதிர்ப்பார்ப்பு. ஓரு சிறு திருத்தம் அதில் சப்பாத்தி போடுபவர் ஷர்மான ஜோஷியின் அம்மா, சித்தி கிடையாது,
@ஆரூர் முனா செந்திலு அப்படியா நான் படம் பார்த்து ரொம்ம நாளாகிவிட்டது செந்தில் திருத்திவிடுகிறேன் நன்றி நண்பா!
நடிப்பு தமிழ் பதிப்பில் ஜீவா கலக்க சான்ஸ் அதிகம் இருந்தாலும் தலைவலி சாதிக்க விடுவாரா தெரியல...எனக்கென்னமோ பத்தோட பதினொன்னு ரகம்னு தோனுது ஹிஹி!
veri naise
Post a Comment