Showing posts with label ஏமாற்றம். Show all posts
Showing posts with label ஏமாற்றம். Show all posts

பழனி முருகனுக்கு....அரோகரா..! பக்தர்களுக்கு வேதனைதானா...?

>> Friday, April 5, 2013


பழனி என்றாலே எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் உலகத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலத்தில் மிக அதிகமான பிராடுகளை கொண்ட தலம் இத்தலம்தான். கையில் சந்தனத்தை வைத்துக் கொண்டு ஒளிந்து கொள்வார்கள் திடீரென்று ஓடி வந்து  பொட்டு வைத்து காசு பிடுங்கும் பெண்கள் கூட்டம், பிற மாநிலத்தவர்கள் வந்தால் கீழே அடிவாரத்திலேயே டோக்கன் வாங்க வேண்டும் என்று ஸ்பெசல் தரிசனம் என்று ஆயிரம் ஜநூறு என்று இரக்கமேயில்லாமல் பிடிங்கிவிடுவார்கள். மேலே சென்றால் அந்த டோக்கனை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் வரிசையில் கூட போகமுடியாது  நிறைய சேட்டன்கள் குடும்பத்துடன் பரிதாபமாக நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். 

அர்ச்சகர்கள் அதற்கு மேல் தனிவழியில் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவார்கள். செருப்பு, நம் உடமைகளை இங்கே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறும் கடைக்காரர்கள் உடமைகளை திருடிக் கொள்வதும். ஏமாந்தால் மொட்டையடிக்கும் கூட்டம் இந்த தலத்தில்தான் ஏராளம். ஆனால் இப்பொழுது காவலர்களை வைத்து பொட்டு வைக்கும் பெண்களை அறவே இல்லாமல் செய்து விட்டார்கள். மற்ற ஏமாற்றச் செயல்கள் ஓரளவு குறைந்திருக்கின்றது.

பழனி சென்று மகனுக்கு இரண்டாவது மொட்டையடிக்க வேண்டும் என்பது மனைவியின் வேண்டுதல், வெயில் காலத்தில் குழந்தைகளின் அதிகப்படியான முடி இருப்பது அவர்களுக்கு எரிச்சலையும், வியர்த்து எந்த நேரமும் வியர்வை ஈரத்துடன் இருந்தால் சளி பிடித்துக் கொண்டு நம்முடைய பாக்கெட்டில் இருந்து சில ஜநூறு ரூபாய்களை மருந்து மாத்திரைகளுக்கு அழவேண்டியிருக்கும் என்பதால் இந்த வாரம்... அடுத்த வாரம் என காலம் தாழ்த்தி போன ஞாயிறு குடும்பத்துடன் காலை 5.00மணிக்கு எழுந்து அதிகாலை தூக்கத்தை தொலைத்து காலை 7.00மணிக்கு திருப்பூரில் அதிக கூட்டத்தை சுமந்து கொண்டு விழிபிதுங்கியபடி மெதுவாக அரசு பேருந்தில் பழனி போனோம்.

பழனி சென்று அடிவாரத்தில் மொட்டையடித்து படியில் மெதுவாக ஏறினால் முருகனை தரிசிக்க பங்குனி கொடுமுடி தீர்த்தம், காவடி எடுக்கும் பக்தர்கள், சேரநாட்டவர்கள் (சேச்சிகள் அதிகப்படியாகவே தமிழ்அழகனை தரிசிக்க நின்றிருந்தார்கள்). பத்து ரூபாய் கட்டணம், இலவச தரிசனம், நூறுரூபாய் கட்டணம் என ஒரு லட்சத்தைத் தாண்டும் கூட்டம். காலை பதினொன்று மணிக்கு வரிசையில் நின்று மாலை நான்கு மணிக்கு இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசித்தோம், ரோப் கார் என்று அழைக்கப்படும் ஒரு கழுதை வண்டியில் ஏற மூணு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம்!  மறுபடியும் படியில் இறங்கலாம் என்று முடிவு செய்து யானைத்தடத்தில் இறங்கினோம். நாங்க படியில் இறங்கி பல மணி நேரம் கழித்து ரோப் காரில் வந்தவர்கள் வந்தார்கள் இந்த ரோப் கார் கழுதையை எதாவது பேரிச்சம் பழத்துக்கு போடுவது நல்லது. அப்புறம் பழனியில் கிடைக்கும் குளிர்ப்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் அத்தனையும் ஒரிஜினல் மாதிரியே இருக்கும் ஆனா இருக்காது அத்தனையும் டூப்ளிகெட்டுகள். பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் பகிரங்கமாக விற்பனை செய்கின்றார்கள்.

மேலே ஏறிக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் மயக்கம் போட்டு கீழே விழ ஒரே கூச்சல், குழப்பம், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் தோளில் தூக்கிப் போட்டு வேகமாக இறங்கினார்கள். எந்த மருத்துவ வசதியும் படியில் ஏறுபவர்களுக்கு கிடையாது. ஒரு ஸ்டெச்சர் கூட இல்லை. அதை விட கொடுமை பாதுகாப்புக்கு என குறைவான காவல் துறையினரே உள்ளனர். ஒரு பெண் காவலர் ஒருவரே வரிசையில் நிற்பவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் அடிக்கின்ற பங்குனி மாத உக்கிரமான வெயிலுக்கு மிகவும் களைத்துப் போனார் அவரும் பாவம். கோயிலில் வரும் வருமாணத்தைப் பெறுவதில் காட்டும் அக்கரையை பக்தர்கள் மேல் துளியும் காட்டாத தமிழக அரசு கொஞ்சம் திருப்பதி நிர்வாகத்தைப் பார்த்தாவது திருந்தினால் நல்லது. சுகாதாரம் மருந்தளவு கிடையாது வரிசையில் நிற்கும் கூண்டு மாதிரியான இடங்களில் அதிக்கப்படியான குரங்குகள், அதன் எச்சங்கள், மக்கள் நெருக்கடியை தாங்காத சில பெண்கள் எடுத்த வாந்திகள், என கடும் துர்நாற்றம் கோவிலா கவர்மெண்ட் கக்கூஸா என ஜயம் ஏற்படுகின்றது. இலவச செருப்பு விடும் இடத்தில் வற்புறுத்தி காசு கேட்பது என்று பழனிக்கே உரித்தான பக்தர்களை மொட்டையடிக்கும் கும்பல் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முருகன் பாவம் என்ன செய்வாரு அவரு முதுகையே சுரண்டி பாதி திருடி வித்துட்டானுக..! முருகா கோமணத்துக்கு உருவாஞ்சுருக்கு மட்டும் போட்டுறாதே...!படிமுடிச்சு போட்டுக்கோ சொல்லிட்டேன் ஆமா..!

Read more...

வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...

>> Tuesday, November 29, 2011




நான் செல்வியை பார்த்தது எப்போது நினைவுபடுத்திபார்த்தேன் திரும்பி பார்க்கின்றது, என் மனம் என் தங்கையின் திருமணத்தின் பொருட்டு மாப்பிள்ளை பார்க்க போன போது மாப்பிளையின் தங்கையாக அறிமுகமானவள் மாநிறம்தான்...!என்றாலும் அழகாக இருந்தாள்!  அவள் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது, அவளைப்பற்றி யாரிடம் கேட்பது திருமணம் ஆகாதவள் என்றாள் யாரிடமாவது கேட்கலாம்! திருமணம் ஆனவள் போல் இருக்கிறாளே...எப்படி கேட்பது...தயக்கம்...

ஆனால்..! புரோக்கர் தானே அவளைப்பற்றி கூறியதும் அவள் மேல் பரிதாபம் வந்தது, சந்தோசமாகவும் இருந்தது,காரணம்! அவளுடைய கணவன் பெங்களூருவில் பைனான்ஸ் வைத்திருந்த போது அளவுக்கு அதிகமாக குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டான், சிறிய வயதிலேயே விதவையானாள் செல்வி, அவளுக்கு மூன்று வயதில் குழந்தையொன்றும் உள்ளது, என் மேல் எனக்கே கோபம் வந்தது மைத்துனரின் தங்கை நாம் ஏதாவது தவறாக நடக்க தன் தங்கையின் வாழ்வே பாதிக்குமே....

ஆனாலும் மனம் ஒரு குரங்கு எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கின்றோமோ..! அது நம் முன் நிழலாடுவது மனித இயல்பு, செல்வியின் நினைவு வந்து பலநாள் தூக்கத்தை கெடுத்தது.... திருமணத்தின் போது நிறைய பேச சந்தர்ப்பம் கிடைத்தது பல விசயங்களைப்பேசினோம் எங்களை யாரும் தவறாக நினைக்கவில்லை...

இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் செல்வியுடன் உரையாடியதில் அவள் தனிமையை வெறுக்கிறாள் உறவை நாடுகிறாள் என அறிந்தது கொண்டேன் என் ஆண் என்கின்ற மிருகம் விழித்துக்கொண்டது நான் ஆசையை என் தங்கையின் திருமணம் முடிவதற்க்குள் கூறிவிட்டேன் சுருக்கமாக... உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று. 

அவளும் எதிர் பார்த்திருப்பாள் போல் எதுவும் சொல்லவில்லை சிரித்துக்கொண்டே அதற்க்கென்ன செய்துட்டா போச்சு என்று சாதாரணமாக கூறிவிட்டாள்.. என்றாலும் பிடிகொடுக்கவில்லை.... ஒரு மாதம் ஓடியது தெரியவில்லை நான் அவ்வப்போது என் தங்கையைப் பார்க்க போகும் போது அவளைக் கேட்பேன் நான் சொன்னது என்ன ஆச்சு? என்று சிரித்துக்கொண்டே போய்விடுவாள்...

ஒரு நாள் வெளியூரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்வீட்டார் அவள்வீட்டார் அனைவரும் சென்று விட்டனர், அவளை மட்டும் விட்டுவிட்டு ஏனெனில் மாடு,கறவை நிறைய இருப்பதால் தண்ணீர் கொடுக்கவேண்டும், கடலை செடி நல்லா புடுங்கற நிலையில இருக்கு மாடு,கன்னு நுளைந்தால் உழைப்பெல்லாம் வீணாகிவிடும் நானும் இதே காரணத்திற்காக இருந்து விட்டேன்...

செல்வி என் செல்பேசியில் அழைத்தாள், பையனுக்கு உடம்பு சுடுது மருத்துவமனைக்கு போகனும் வருகிறீர்களா? என்றாள் நானும் போனேன்... நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம், குழந்தைக்கு ஒரு ஊசியைப்போட்டு விட்டு ஒன்றும் பயப்படவேண்டாம் குளிர்ஜுரம்தான்... உங்கவீட்டுக்காரரைப்போய் மருந்து எழுதி தரேன் வாங்கிட்டு வரச்சொல்லுங்க என்றார் என்னைக் கைகாட்டி அந்த நேரத்திலும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்....

மருந்து,மாத்திரை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம்... சரி! நான் கிளம்புகிறேன் என்றேன், இரவாயிருச்சு... இருந்துட்டு காலையில போங்க... என்றாள் பரவாயில்லை நான் போகின்றேன் என்றேன் இருங்க நிறைய பேசனும் உங்ககிட்ட... என்றாள் செல்வி

இரவு தோசை சுட்டுப்போட்டாள், ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக செய்யும் தொட்டுக்க தக்காளியும் கத்திரிக்காயை நன்றாக சுட்டு கடைந்து செய்வார்கள், அதைத்தான் அவளும் செய்திருந்தாள், தேங்காய் சட்னியும் அதுவும் தேவார்தமாய் இருக்கும் விரும்பி உண்ணும் நான் அன்று என்ன பேசப்போறாளோ என்றைய சிந்தனையில் உணவில் மனம் ஒட்டவில்லை.

நான் சாப்பிட்டு விட்டு கைகழுவி விட்டு கையை துடைத்துக் கொண்டு சமையறைக்குள் நுழைந்தேன், தோசை சுட்டுக்கொண்டு இருந்தாள், அவள் முதுகில் திட்டுதிட்டான வியர்வை படிந்திருந்தது அவளின் அழகு என்னை என்னவோ செய்தது, என்னையறியாமல் பின்னால் கட்டிபிடித்து விட்டேன், அவள் அதிர்ந்து போனாள் அப்படியே அவள் உதட்டில் முத்தமிட்டேன் சிறிது திமிரிய அவள் என் உறுதியான விவசாயம் செய்யும் உடலின் அனைப்பை விடுவிக்கமுடியவில்லை...

விடுவிடு இங்க வேண்டாம் என்றாள், நான் பிடியை விட்டேன் கருகிய தோசையை எடுத்து குப்பையில் போட்டாள், அடுப்பை அனைத்தாள் அவளின் படுக்கை அறைக்கு சென்றாள் அவள் உடையனைத்தும் களைந்தாள் சிற்பி செதுக்கிய நிர்வாண சிலையாக படுக்கையில் விழுந்தாள் வா....என்றாள் வானத்தில் உலவி வந்த சந்திரன் மேகங்களுக்கிடையில் மறைந்து கொண்டான்.. இரு உயிர்களின் சங்கமத்தினைப்பார்த்து வெக்கப்பட்டுக் கொண்டு,  தூரத்தில் நரி ஊளையிட்டது, கிணற்றின் ஓரம்...இரண்டு பாம்புகள் புனர்ந்து கொண்டுருந்தது கணவன் இறந்து இரண்டு வருடம் பொத்திவைத்திருந்த காமம் தலைவிரித்து சாமியாடியது இரவு முழுவதும்....

அதற்க்கு பின் என்னால் செல்வியை மறக்கமுடியவில்லை... ஊரே எதிர்த்து நின்றாலும் அவளைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், செல்வியின் மகன் என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டான், அப்பா! என்று கூட அழைக்க ஆரம்பித்து விட்டான் மெதுவாக என் பெற்றோரிடம் நான் செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பிறகு ஒரே மகன் ஆசைப்படுகிறான் நம்ம பொண்ணு அங்க வாழ்ந்திட்டு இருக்கு என சமாதானமாகினர்... என் பெற்றோர் உறவினர் ஒருவரை அழைத்து விசயத்தைக்கூறி, பொண்ணு கேட்க கூறினார்கள் அவரும் போனார்... 

செல்வியின் குடும்பம் இதைக் கேட்டதும் வானுக்கும்...பூமிக்கும்... குதித்தனர், என் தங்கையை அடித்து உதைத்து என் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள், எத்தனையோ பேர் எடுத்துக்கூறினார்கள்.. செல்வியின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அவ.....அப்படி அவனை கல்யாணம் பண்றதா...இருந்தா பையனை விட்டுட்டு போகட்டும்.. என்றார் என்னடா இவன் முட்டாளா இருக்கிறானே பொண்ணின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவதை தடுக்கிறானே என்று குழம்பினார்கள், அதற்க்கான விடையை செல்வியின் உறவினர் கொண்டுவந்தார் இறந்து போன கணவன் வீட்டுக்கு ஒரே மகன், அவர்களுடைய ஏராளமான சொத்து செல்வி மணமுடித்தால் கிடைக்காது, கணவன் இறந்தபிறகு கணவன் வீட்டிலேயே இருந்த செல்வியை அவளுடைய அறுபது வயது மாமனார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார், அதனாலதான் செல்வி இங்கே வந்து இருக்கிறாள்...எங்கள் காதல் விவகாரம் அறிந்த, செல்வியின் மாமனார் செல்வியின் தந்தையிடம்.. உம் பொண்ணு வேற எவனாயாவது கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் எங்க சொந்தக்காரங்க யாருக்காவது எழுதிவைச்சிருவோம் என்று மிரட்டியிருக்கார்.. அதனால சொத்துக்கு ஆசை ப்பட்டு திருமணத்திற்கு மறுக்கிறார் என்று கூறிவிட்டு செல்வி ஒரு கடிதம் கொடுத்தாள் என்று கடிதத்தைக் கொடுத்தார்... அதை பிரித்து படித்தேன்...

அன்புள்ள
      ஜெ.....நான் இப்ப எங்க மாமனார் வீட்டுல இருக்கின்றேன், செத்துபோகலாம் என்று நினைக்கின்றேன், என்னால் அதுகூட  முடியவில்லை...,என் மகன் அனாதையாகிருவானே....என் புருசன் உயிரோடு இருந்தபோதும் நான் மகிழ்ச்சியா இருந்ததில்லை தினமும் குடிச்சிட்டு வந்து என் மேலேயே.... வாந்தி எடுப்பான், மது நாத்தம் குடலை புரட்டும் அவனோடு உறவை வைச்சிருக்கின்ற நிமிடம் நரகம், அவன் கூட உறவுக்கு மறுத்தா இரத்தம் வருகின்ற அளவுக்கு அடிப்பான்....செக்ஸ்ங்கரது நரகம்ன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உன் மழைச்சாரல் போன்ற தழுவல் என்னை மெய்மறக்க செய்தது வாழ்க்கையில் நான் சந்தேசமா இருந்தது நாம் உறவு கொண்ட நேரங்கள்தான் ஜெ...

அதைவிட கொடுமை ஒரு பெண்ணான நான் சொல்லக்கூடாது...சொல்லுகின்றேன் எங்க அப்பா என் மாமனாரிடம் கொண்டு வந்து விடும் போது, என் கிட்ட என்ன சொன்னார்.. தெரியுமா? உனக்கு உடம்பு சுகம் வேணுன்னா... உன் மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்துட்டு போங்கறான், அதுக்கு என்னை பஸ்ஸ்டேண்டுல நிறுத்தி விபச்சாரம் செய்யலாம்...

அப்பனே...எம் புள்ளைய அனுபவிச்சுக்கோன்னு சொன்னா...கிழவன் சும்மாயிருப்பானா.....வழுக்கட்டாயமா இரண்டுமுறை.....என்கொடுமை எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது நீ...நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சிட்டு நல்லாயிரு சீக்கிரம் என்னை மறந்திரு அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது...

கடிதத்தைப் படித்தவுடன் எனக்கு ஆத்திரம் தலைக்கேற என் பைக்கை வேகமாக எடுத்து செல்வியின் வீட்டுக்கு போனேன் பதற்றத்திலும்,ஆத்திரத்திலும்... வேகமாக சென்ற எனக்கு வளைவு ஒன்றில் வந்த டிரேக்டரை கவனிக்க மறந்துவிட்டேன்...உறுதியான பம்பர் என தலையில் பட்டு தூக்கிஎறிந்தது என்னை நினைவு என்னை விட்டு மெல்ல மெல்ல மறந்தது.... 

நினைவு திரும்பியபோது, டெட்டால் வாசனையுடன் மருத்துவமனையில் இருந்தேன் தலைமேல் ஏதோ பாரத்தை வைத்தமாதிரி இருந்தது... சிகரெட் குடிக்கனும் போல இருக்குது, யாரும் தரமாட்டிங்கறாங்க... எங்க அம்மாகிட்ட கேட்டேன் அழுவுது எல்லா ஏன்? அழுவுறாங்க... நான் ஏன் அடிக்கடி ஜிங்கிடிஜிங்கான்னு... சொல்றேன் செல்வி நல்லாருக்கா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜிங்கிடிஜிங்கா....அண்ணே ஒரு பீடி இருந்தா கொடுங்கண்ணே....ஜிங்கிடுஜிங்கா.....வாத்தியார் பையன் சுரேசு எனக்கு பீடி வாங்கிக்கொடுத்தது... நாலு இட்லி சாப்பிட வாங்கிக் கொடுத்தது இரண்டுதான் சாப்பிட்டேன் இரண்டு செல்விக்கு வேணும்மல்ல செல்வி மகன்..இல்லை...இல்லை...என் மகன்.....சாக்லெட் வாங்கி கொடுக்கனும், இப்போதெல்லாம் இரண்டு பேரையும் பார்க்கவே முடியலை ஏன்? ஜிங்கிடிஜிங்கா....

..........................
என்னது என் கதையா? சொல்லறதா...கேட்டுக்க.... ஆனா..
சாயந்திரம் கோட்டர் வாங்கி கொடுப்பியா? 

...........................

வாங்கி கொடுக்கிறியா சரி அப்ப சொல்லுகிறேன் கேட்டுக்க....

அந்த சந்திரன்,கெட்டதும் பெண்ணால.....அந்த இந்திரன் கெட்டதும்....பெண்ணால......



(தலையில் அடிபட்டு காதில் இரத்தம் வந்ததால் மனநோயாளியாகப் போனார் ஜெ....அவரே சொன்ன கதை அவர் பார்வையில்... வாத்தியார் பையன் சுரேசு நான்தான்)


கதைகள் தொடரும்.....



Read more...

தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

>> Saturday, November 26, 2011


காதல் கதைகள்....





அன்புள்ள.. என் இனிய நண்பர்களே! இதில் வரும் கதைகள் கற்பனையல்ல நிஜம்!! நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கலாம்! செய்திதாள்களில் படித்துஇருக்கலாம்! யாரோ கூறியதை கேட்டு இருக்கலாம்! இப்ப நாம பார்க்க போகின்ற கதை..' ஒரு சின்னபெண் உற்றார்,உறவினரை மட்டும் ஏமாற்றாமல்
மணமகனான தாய்மாமனை ஏமாற்றியது அவர் என் நண்பர்.

ராம் மிகவும் சிரமப்பட்டு சுயதொழில் மூலம் உழைத்து, வீட்டைகட்டி தங்கை திருமணத்தினை தனியொருவராக சிறப்பாக நடத்திமுடித்த பொறுப்பான எந்த கெட்டபழக்கம்இல்லாத ஒரு நல்ல பையன், அவருக்கு திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் ஏறாத கோவில் இல்லை, ஜோசியர் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, எங்கேயும் பெண் அமையவில்லை, அதனால் அவர்கள் நெருங்கிய உறவினர், ராமின் அத்தையின் மகள் வினிதாவின் ஜாதகத்தினை பார்த்தபோது பொருந்திவர திருமண ஏற்பாடு நடந்தது.

வினிதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார் திருமணம் உடனே வேண்டாம்! நான் கல்லூரியை முடித்துவிடுகிறேன் பிறகு வைத்துக்கொள்ளலாம் எனக்கூறவும், வீட்டாரும் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள்.

ராம் வினிதாவுக்கு மொபைல் ஒன்றைவாங்கிக்கொடுத்தார், இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினார்கள் போன் பில் ராம் வினிதாவுக்கு மட்டும் மூவாயிரம், நாலாயிரம், கட்டினார், சுடிதார் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேல்தான் வாங்கி கொடுத்தார், திருமணத்திற்க்காக மண்டபம் பார்த்தாகிவிட்டது பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்தாகிவிட்டது பட்டுபுடவை மட்டும் பதினைந்தாயிரத்திற்கு பொண்ணுக்காக ராம் தேடி தேடி ஒவ்வொன்றாய் காதலுடன் செய்தார்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா பற்றிக்கொள்ளுமே அதுபோல எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சினிமா பார்த்துக்கொண்டு வருகையில் வண்டி பஞ்சராக ஒரு இரவு உறவினர் வீட்டில் தங்கியபோது உணர்ச்சி வசத்தில் இருவரும் உறவும்வைத்துக்கொண்டார்கள், இத்தனைக்கும் வலிய கட்டாயப்படுத்தி உறவுகொண்டது வினிதாதான், காதலுடன்,காமமும் கைகோர்த்துக்கொள்ள எப்படா திருமணம் நடக்கும் என ஏங்கினார் ராம்.

திருமணத்திற்கு ஆறு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில்... ராமின் செல்லுக்கு வினிதாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.. "ஸாரி ராம்" என்று எதற்க்காக இது என குழம்பிய ராம் வினிதாவின் செல்போனுக்கு போன் செய்தான் வினிதாவோ போனை எடுக்கவேயில்லை, என்ன பிரச்சனையோ? என்று வினிதாவின் வீட்டுக்கு சென்றான் அங்கு அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.

என்னாகியது? என்று தன்மாமாவிடம் வினவினான்

நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு போயிட்டாளுப்பா சண்டாளி என அழுதார்...
என்ன ஆச்சு விவரமா சொல்லுங்க....

மாப்பிளை அவ கல்லூரியில் ஒருவனை காதலித்து இருக்கிறாள், மூன்றாம் ஆண்டு முடிந்தவுடன் திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்திருக்கின்றார்கள் அதற்க்குள் நிறைய வரன் தேடி வர எங்கே திருமணம்
முடித்துவிடுவார்கள்... என பயந்து உன்னை திருமணம் செய்வதாக சம்மதித்து படிப்பை முடித்து விடடாள், காவல் நிலையத்தில் இருந்து திருமணம் முடித்துக்கொண்டு எனக்கு போன் செய்கிறாள், நாங்க இப்பத்தான் சென்று தலைமுழுகிவிட்டு வருகிறொம் என்று அழுதார்.

ராம் நொந்து போனார் நம்மை ஒரு பெண் பகடைகாயாக பயன்படுத்திவிட்டாளே என அழுதார், அழுது என்ன பயன்? கவுரமான அந்தஸ்த்திலிருக்கும் ராம் ஒரு தொழிலதிபர், திருமணம் நின்று போனால் யாரும் மதிக்க மாட்டார்கள், கேவலமாக எதிரிகள் பேசுவார்களே என புலம்பினார்.... கவலை வேண்டாம் அதே தேதியில் பத்திரிக்கை கொடுத்ததுகொடுத்ததாக இருக்கட்டும் வேறுபெண்ணைப்பார்த்து திருமணம் முடித்து விடலாம் என நண்பர்கள் கூறினார்கள், அதன்படியே ஒரு புரோக்கரை பார்த்து நிலைமையை கூறி பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து கூடவே ஒரு காரும் அனுப்பி தேடகூறினோம், புரோக்கரும் ஒரு மணிநேரத்தில் நல்ல தகவலோடு வந்தார் 

ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு வலிப்பு நோயிருப்பதையும், மறைத்து அதுவிமில்லாமல் உடல்உறவும் கொள்ளக் கூடாது என்கின்ற மருத்துவர் கூறியதையும் மறைத்து, பிறகு அந்த பெண்ணின் உறவினர் கூறியதால் திருமணம் நின்று போயிருந்த சுதா என்கின்ற பெண்ணை புரோக்கர் கூறினார், அதேதேதியில் திருமணம் நடந்தது வினிதாவைவிட சுதா படிப்பில்லை என்றாலும் குடும்பத்தை நிர்வாகிப்பதில் திறமை மிக்கவராகும் அன்பான ஒரு மனைவியாகவும் இருக்கின்றார் அவர்கள் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம்

இந்த கதையில் வினிதாவின் நிலைப்பாடு என்ன? காதலனுடன் கை கோர்த்து இந்த கபடநாடகம் ஏன் நடத்தவேண்டும்? தன்னுடைய படிப்பும் முடியவேண்டும்! காதலனையும் கைப்பிடிக்கவேண்டும்! ராமுடன் கொண்ட உடல்உறவு அவளின் ஆசைக்கு தன்னையறியாமல் உதவியதுக்கு பரிசா?இதற்க்கு பெயர் காதலா வேறுபெயர் அதை செல்லவிரும்பவில்லை... மொத்தத்தில் "கற்பு" என்பது சிலருக்கு சும்மா...! சும்மாவுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது, அதுபோலவே....நேர்மையாக ராமிடம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினால் அவனே திருமணம் முடித்துக்கொடுப்பானே
அது மாதிரியான கேரக்டர்தான் ராம், ஆனால் ஜாலியாக ராம் பணத்தில் காதலனுடன் போன் பேசமுடியாது வேண்டியஉடை கிடைக்காது உயர்தர உணவகங்களில் உண்ணமுடியாது இதற்க்கு உலகின் பழமையான தொழில்
செய்பவர்கள் மேல்.... 



டிஸ்கி : விதி யாரை எங்கு சேர்க்கவேண்டுமோ! அங்கு சேர்க்கும்!!

கதைகள் தொடரும்.....


Read more...

முதல் காதல்

>> Friday, November 11, 2011


பதினெட்டு வயது இளமீசை துளிரும்
இனிய வசந்த கால வயது
இதில் இடம் மாறினால்
இருண்ட பள்ளத்தாக்கில்
இடரும் அபாயம் அதிகம்
இருந்தும் இடம் மாறினேன்
அது இனிமையான விபத்து
அதுதான் காதல்...

காதல்... என்கிற வார்த்தையை
உச்சரித்துப்பாருங்கள்
இந்தவயதில் தேனாய் இனிக்கும்
தவறு என சொல்லும்
மற்றவரை எரிச்சலோடு எரிக்கும்..!

எனக்கு வயது இருபது!
அவளுக்கு வயது பதினாறு!
எனக்கு பக்கத்து வீடு
என் வாலிபவயதில்
காதல் விதை தூவிய
"தேவலோக தேவதை"

முதன்முதலாய் "பாலகுமாரனின்"
தண்ணீர்துறையுள்ளதா? என்றாள்
என்னிடம் இருந்தது எடுத்துக்கொடுத்தேன்
மிகவும் நன்றி இதைத்தான்
தேடினேன் கிடைத்து விட்டது
இனி அடிக்கடி புத்தகம்
வாங்க வருவேன் என்றாள்
என் பெயரைக்கேட்டாள்
பற்றி எரியும் "பாஸ்பரஸாய்"
இருந்த என் மனதை
அவள் உரசிய வார்த்தையில்
பற்றி எரிந்தது நிசம்

பிரபஞ்சனையும், வைரமுத்துவையும்,
மு.மேத்தாவையும் அலசினோம்
நான் எழுதிய கவிதை
கவிதையாய்! இல்லையென்றாலும்
பொய்யாய் நிறைகூறி
ஊக்கப்படுத்தினாள்
அந்த தேவதை
என் படுக்கையில்
"நெருஞ்சி" முட்களாய்
அவள் நினைவுகள் 
குத்திக்கெண்டிருந்தன
அவளை சிந்திப்பதிலே
பொழுதும் போயிற்று....

காதல் அர்த்தம் என்ன?-நான்
அது நான்காவது வேதம்-அவள்
அதன் பலன் என்ன?-நான்
இரு மனங்களின் வேள்வி-அவள்
கேள்வியை நிறுத்திவிட்டு
அவள் கண்களைப்பார்த்தேன்
என்க்குள்ளே ஒரு வேள்வி எரிகிறது
உனக்கு தெரியுமா?
எரிகிறது சுட்டெறிக்கின்றது
அதை அறியாதவளா நான்...
அந்த சந்தன சிலை
என் மார்பில் சாய்ந்தது
இருவர் மனம் காற்றில்
லேசாகி மிதந்தது

நாங்கள் சுற்றாத இடமில்லை
பேசாத வார்த்தைகளில்லை
என்னை கடைசிவரை
காப்பாற்றுவாயா என்றாள்
இறந்தும் உன் பின்னே
வருவேன் என்றேன்

பச்சமலை அடிவாரத்தில்
அவள் வச்சதிருநீர் என்
கண்ணில் விழ துடைத்து விட
வந்தவளின் பெண் வாசம்
என்னை மயக்க இருக
அனைத்து கொடுத்த
முத்தம் முன்னூறு ஜென்மம்
எடுத்தாலும் மறக்காது

உடல் நலம் சீர்கெட்டு
படுக்கையில் நானிருந்தபோது
என்னருகிலமர்ந்து கண்ணீர்
விட்டாள் என் கண்மணி
அதன் சக்தியால்தான்
மீண்டுவந்தேன்

எங்களூர் ஆற்றங்கரையின்
ஈரக்காற்றில் அவள் மடியில்
நான் அவள் முகமோ என்னருகில்
முத்தங்கள் பறிமாறிக் கொண்டாலும்
காமத்துக்கு மட்டும் கடிவாளம் 
போட்டுக் கொண்டோம்

என் திறமை 
மத்தாப்பை பற்றவைத்த 
தீக்குச்சி என் காதலி
அவள் கால் கொலுசு
சங்கீதம் கேட்காமல்
எனக்கு பொழுது
விடியாது...

என் காதல் ராணி
படிக்கவேண்டும்
என்பதற்க்காக பல
"பாக்கெட் நாவல்களை"
வாங்கி "பாக்கெட் மணி"
காலியானது
அவளுக்கு கவிதை
பிடிக்கின்றது என்பதக்காகவே..!
கவிதை எழுத கற்றுக்கோண்டேன்

எங்கள் காதல் விவகாரம்
கிசுகிசுவாய் கசிந்து
ஊர் வாய் மெல்ல
அவலாகி அரைத்து
அவள்வீட்டாரின் காதுக்கு
அவசரமாய் சென்றது

உறவினர் வீட்டுக்கு
அழைத்து செல்வது போல்
அவளை அழைத்துச்சென்றது
அன்போடு அல்ல
வெட்டகொண்டுசெல்லப்பட்ட
ஆடென அறிந்தாள்
அதிர்ந்தாள் அதிர்ந்துஎன்ன
செய்ய புலிகூட்டத்க்கு முன்
மான்னென்ன செய்யமுடியும்
மஞ்சள் பூசிய புதுத்தாலியுடன்
திரும்பி வந்தாள் 
அவள் நினைவாக என்னிடம்
இருப்பது சில கவிதைகளும்
அவளின் முத்தங்களும்தான்



Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP