ஆர்.கே.செல்வமணி சூப்பிப் போட்ட பனங்கொட்டை!-துப்பாக்கி

>> Thursday, November 15, 2012


ஹிஹி! பட்டாளத்தில் வந்த செல்லக்கிளி தீப்தி நம்பியார்...! விஜய் தங்கச்சி கேரக்டர்..!
ஆர்கே செல்வமணி, விஜய்காந்த் கூட்டணி நன்றாக சூப்பிப் போட்டுத் துப்பிய பனங்கொட்டையை கழுவி பதப்படுத்தி கண்ணு மூக்கு வெச்சு அழகான ஒரு பொம்மை செஞ்சிருக்கின்றார் முருகதாஸ், ஆனாலும் ஓவர் சென்டிமென்ட், பஞ்ச் டயலாக் போன்ற வழக்கமான விஜய் படத்தில் இருக்கும் வன்கொடுமைகள் இதில் இல்லை, அதற்காகவே முருகதாஸ் வீடு இருக்கிற திசை பக்கம் ஒரு கும்புடு போட்டுக்கலாம். ஆனாலும் பாருங்க அழகான திருஸ்டிப் பொட்டு நம்ம காஜல் அன்ட் ஜெயராம். வேகமாக போய்க்கொண்டிருக்கும் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர் மாதிரி இரண்டு கேரக்டர்கள்….வரும் போதெல்லாம் எரிச்சல் வருகின்றது. பீர் குடிக்காமையே அடிக்கடி யூரின் வருது.

கதைன்னு பார்த்தா ஏக் லைன் கூட இல்லை ராணுவத்தில் இருக்கும் கேப்டன் ஜெகதீஸ் ரிலேட்டிவ், பிரண்ட்ஸ், அம்மம்மா....அப்பப்பா  என யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு அமைப்பு "ரா" மாதிரி அதுல இருக்கிறாரு...! பன்னண்டு இடத்துல குண்டு வைக்கும் ஸ்லீப்பர்களை ட்டிஸ்யூம்…..ட்டிஸ்யூம்ன்னு ஒரே டைம்ல விஜய் அன்ட் கோ போட்டுத்தள்ளுது, இவர்களுடைய தல தீவிரவாதி வருகிறான், திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரி தீவிரவாதி மிலிட்ரி விளையாட்டு விளையாடி, கடைசியில புரட்சித்தலைவர் மாதிரி மூனு அடி வாங்கிய பிறகு, வாய் ஓரத்தில ரத்தத்தை துடைச்சிட்டு, கில்லி மாதிரி உடைஞ்ச கை, கால்களை "சிங்கிரிபாளையம்" மாவுக் கட்டு போடாமையே சரி பண்ணிட்டு சித்தவைத்தியர் விஜய் வில்லனை அடிச்சு நாட்டை காப்பாத்துறாரு.... பட் இந்த சாதாரண கதையை கடைசிவரை கொட்டாய்ல கொட்டாவி வர வைக்காமல் முருகதாஸ் நேர்த்தியாக தீபாவளி மிட்டாயா கொடுத்திருக்கின்றார்....!

இந்த படத்தில எனக்கு பிடிச்ச விசயம் விஜய் அன்ட் கோ 12 பேரைப் போட்டுத் தள்ளுவது, விஜய் நாயை வைத்து தங்கையை கண்டுபிடிப்பது, எனச் சின்ன…சின்ன….விசயங்களை நாம் கணிப்பதற்கு வேறு திசையில் காட்சியை நகர்த்தியிருப்பது முருகதாஸ் அன்ட் கோவின் உழைப்பு தெரிகின்றது.

மீசைய மட்டும் முறுக்கி விட்டுட்டு அம்மாஞ்சி மேஜர் ஜெயராம் (அடப் பாவமே….!) லீவுல வந்த ஆர்மி நண்பர்கள் எல்லாரும் டிஸ்யூம்….டிஸ்யூம்ன்னு தீவிரவாதிகளைச் சுடப் போக, உயர் அதிகாரி ஜெயராம் காஜலோட சப்பாத்தி சுடப் போயிட்டாரான்னு ஒரு கேள்வி வருது. விஜய பிடிக்கலைன்னு சொல்லுகின்ற மேட்டர் பொண்ணு ஜோக் பழசு...கண்ணா அதர பழசு! முடியல....! ஹாரிஸ் மாமா...! ஹாரிஸ் மாமா...! ரெக்கார்டை மாத்துங்க.....! திரும்ப...திரும்ப....பாடற நீன்னு நாங்க வடிவேல் ஜேக்குல வர்ற சங்கிலி முருகன் மாதிரி கதற வைக்காதிங்க மாமா..! பிளீ..............ஸ்! தமிழ்நாடு ரசிகன் பாவம்!
தாரவி சப்இன்ஸ்பெக்டர் சத்தியன் ஒரு சப்பைக் கேரக்டர் காமடியனாக போட்டது சினிமாவுக்கு வேனா ஓகே..! மும்பையில் டான்களின் அட்டகாசம் அதிகமாகும் போதெல்லாம் மும்பை வாலாக்கள் ஒரு தமிழனத்தான் கமிஷனராகவும், உயர் அதிகாரிகளாக நம்ம ஆளுகளைப் போடுவாங்க..., டான்கள் வாலைச்சுருட்டிட்டு ஓடுருவாங்க..., இல்ல அலுமினிய குண்ட நெஞ்சில வாங்கிட்டு மர்கையா ஆயிருவாங்க….காலரை தூக்கிவிட்டுக்கங்கப்பா……! டமில் நாட் போலீஸ்!

காஜல் அழகான டால் மாதிரி, ஊறுகாய் மாதிரி வந்தாலும் நடனத்தில் அதுவும் முக்கியமாக கூகுள் பாடலில் கலக்கியிருக்கு அம்மணி! அழகு தேவதையைக் கூட ரசிக்க விடாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதைக்கு காஜல் தேவையேயில்லை.......பல ஏராளமான லாஜிக் மீறல்கள்.....கிராபிக்ஸ் ஓட்டை, உடைசல் இருந்தாலும் நல்லா ஈயம் பூசியாதால் பளபளக்குது இரண்டரை மணி நேரம் டைம்பாஸ் துப்பாக்கி.


7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் 6:52:00 AM  

ஓ... இந்த படம் பார்த்து தான் போன் அட்டென்ட் பண்ணலையா! அப்பவே நெனச்சேன், பய புள்ள இன்னைக்கு பிளாக்குல வாந்தி எடுக்கப் போகுதுன்னு!!!

தமிழ்வாசி பிரகாஷ் 6:54:00 AM  

காஜல் அழகான டால் மாதிரி, ஊறுகாய் மாதிரி வந்தாலும் நடனத்தில் அதுவும் முக்கியமாக கூகுள் பாடலில் கலக்கியிருக்கு அம்மணி! அழகு தேவதையைக் கூட ரசிக்க விடாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதைக்கு காஜல் தேவையேயில்லை......//////

அழகு தேவதைன்னு வர்ணிச்சுட்டு, காஜல் தேவையில்லைன்னு சொல்றத பாத்தா, கெடச்ச கேப்புலயும் ஓவரா ஜொள் விட்ட மாதிரி தெரியுதே?

பட்டிகாட்டான் Jey 6:55:00 AM  

// "சிங்கிரிபாளையம்" மாவுக் கட்டு //

சென்னை சுத்துவட்டாரம்னா “புத்தூர் கட்டு”

தேனி வட்டாரம்னா “பூசமன்பட்டி கட்டு “


:-)))

பட்டிகாட்டான் Jey 6:57:00 AM  

ஆமா வீடு, நீ வழக்கமா ஆன்லைன்ல படம் பார்த்துதான் அவிமர்சனம் எழுதுவியாம்.

துப்பாக்கி ஆன்லைன்ல வந்துடுச்சா?!!!

லிங்க் பிள்ளீஸ்ஸ்ஸ் :)))

மகேந்திரன் 11:14:00 AM  

உங்க நடையில
விமர்சனம் மிக அழகு ....

கோவை நேரம் 6:45:00 PM  

கொட்டாய்ல கொட்டாவி வர வைக்காமல் முருகதாஸ் நேர்த்தியாக தீபாவளி மிட்டாயா கொடுத்திருக்கின்றார்....!////

என்ன மாம்ஸ், கொட்டாய்...மிட்டாய் என அடுக்கு மொழியா வருது...
சிம்புக்கு அப்பன்....வம்புக்கு அப்பன் பேரரசு மாதிரியே டயலாக்......

பன்னிக்குட்டி ராம்சாமி 12:50:00 AM  

யோவ் ரோஜாவ பத்திதான் என்னமோ எக்குத்தப்பா எழுதி இருக்கீருன்னு ஓடி வந்தா....... டுப்பாக்கி.....!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP