இயர் ஆப் ஸ்பெசல் மீல்ஸ் 2011 TO 2012

>> Tuesday, November 27, 2012


ஆடு திரும்பல் பேட்டிகுமார்


என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.

பலாசக்கை காப்பிபெவிக்கால்குமார்


இவர் தன் கையில் இருக்கும் பஸ் டிக்கட்டின் பின்புறம் கூட ஜோக் எழுதி பல பத்திரிக்கைக்கு அனுப்பி வெளியிடாமல் திருப்பி அனுப்பியது மட்டும் திருப்பதி மலையை விட உயரமாக இருக்கும். முன்னால் ஆல்ரவுண்ட் பிளாக்கர் இப்பொழுது டுவிட்டரில் மட்டும் கவனம் செலுத்துகின்றார். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார் அதுல 100க்கு 175 சதவீதம் காப்பி பேஸ்ட்…..இவர் போன்ல ஒன்லி மிஸ்டு கால் மட்டும் போகும். இவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட "சண்டைன்னாலும் சம்சாரம்ன்னாலும் கால்ல விழுந்திருவேன்..!"  அப்படின்னு உண்மைய சொல்லுற நல்ல மனுசன்.

'அநியாயத்துக்கு நல்லவன்' தமன்னாகுமார்


சென்னை பாஷையில் எழுதி படிப்பவர்களை அவ்வப்போது நாக்கு சுளுக்கவைக்கும் வித்தையில் வல்லவர். அநியாயத்துக்கு நல்லவர், போஸ்டர் ஒட்டும் முனுசாமி! ஷகிலா படத்தின் போஸ்டரை தெரியாத்தனமாக இவர் வீட்டுக்கு எதிரே ஒட்டியதால் அவரை திருத்துகின்றேன் பேர்வழி என்று பேசியே திருத்தி இப்பொழுது அவர் வேலையில்லாமல் இருக்கின்றார்…..! "என் கைல மாட்டுனா படவா பிச்சுவாவ.. வாயில வுட்டு ஆட்டப் போறேன்" என்று சொல்லிக் கொண்டு போஸ்டர் முனுசாமி காண்ட்ல கீரார் நைனா அந்தாண்டை போய்க்கினாத..ஆங்!, 

அப்ப..அப்ப…அரசியல் உள்குத்து எழுதி கிச்சுகிச்சு மூட்டுவார், ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார். பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடாஷாப் பீதாம்பரகரன்


அஜித் படம் மொக்கையாக இருந்தால் இயக்குனர் தவறென்றும், விஜய் படம் மொக்கையாக இருந்தால் விஜய் தவறென்றும் மாற்றி மாற்றி விமர்சனம் போடுவதில் வித்தகர். புல் டைட்ல படத்துக்கு போயிட்டு காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…

புனுகு பூனை கக்கா ஆராய்ச்சியில் நீண்ட நாட்கள் இருந்ததால் எப்படிப்பட்ட கப்பையும் எதிர் கொள்ளும் தீரம் மிக்கவர். சில கமெண்ட்ல எதிராளியின் டவுசரை முழுக்க கழட்டுவதால் நிறைய பிரபலங்கள் இவரிடம் ஜாக்கிரதையாகவே பழகுகின்றனர். கேப்டனின் அதிதீவிர கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!

பெட்டிக்கடைக்காரன் வால்மார்ட்டில் குஜய்குமார்


இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட், யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக் கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும் நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர். எல் கே ஜியில குழந்தைய சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக பேதி டாகுடர் அண்ணன் குஜய்குமார். இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாபூனை விம்ரின்


மதம் சார்ந்த விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று ஆகிவிட்டது. வரலாறு, சினிமா என கலந்து கட்டி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமி. மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், ஆனால் மூக்கு வளரவில்லை. அடிக்கடி தும்மல்தான் வருகின்றது வேறு நல்ல பிராண்டு மூர் மார்க்கெட்டில் தேடிக்கொண்டிருக்கின்றார், பல விவகாரமான விசயங்களை பலகாரமாக படைப்பதில் வித்தகர்…..

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே..! நீங்கள் நினைப்பவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனைத்தும் மொக்கை நகைச்சுவையே..!நோ....பீலிங்ஸ்....நோ....66A

அபாயகரமான அறிவிப்பு 
இது தொடரும்.........
:-)

47 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி 12:52:00 AM  

//// ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார்////

அது போனமாசம், இப்போ 10-15....

J.P Josephine Baba 12:52:00 AM  

சாமி..... இது புரணி பதிவோ?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:54:00 AM  

///// வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..!//////

இவரு பழைய படங்களுக்கு வெமர்சனம் எழுதுவாரே...... அத சொல்லலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:55:00 AM  

////ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார்.////

இவர்தான் பதிவுலக அசீத்குமார்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாமே... உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:58:00 AM  

/////புல் டைட்ல படத்துக்கு போயிட்டு காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…//////

ஏதோ கண்ணுக்கு தெரிஞ்சத பாத்திருக்காப்ல......

பன்னிக்குட்டி ராம்சாமி 1:01:00 AM  

////கேப்டனின் அதிதீவிர கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!/////

ஒயின்ஷாப் வெச்சிட்டு அப்புறம் கேப்புட்டனை புடிக்காதுன்னு சொன்னா அப்புறம் பச்சக்கொழந்த கூட நம்பாதுங்கோ.....

Unknown 1:02:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார்////

அது போனமாசம், இப்போ 10-15....
////////////////////////
உண்மையான பன்னிகுட்டி இவர்தாம் போல....!

பன்னிக்குட்டி ராம்சாமி 1:02:00 AM  

///இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட், யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக் கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……////

இன்னும் ரெண்டு அக்கவுண்ட்டு மிஸ்ஸாகுதாம்யா....... பட்டிக்ஸ் சொல்ல சொன்னாப்புல.....!

Unknown 1:03:00 AM  

@J.P Josephine Baba said...
சாமி..... இது புரணி பதிவோ?
//////////////////////////
புரணியில்ங்கோ..!பரணி...!
பதிவுலகத்து பரணி!

நாய் நக்ஸ் 1:03:00 AM  

Ada suresu.....

Kumma mudiyaatha
time-la
post
pottuteere.....!!!!!!!

Sari...
Iravu
parppom.......

பன்னிக்குட்டி ராம்சாமி 1:03:00 AM  

/////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார்////

அது போனமாசம், இப்போ 10-15....
////////////////////////
உண்மையான பன்னிகுட்டி இவர்தாம் போல....!///////////

ஹிட்ஸ் குறைந்தால் பதிவு அதிகமாகும்....... இதுதான் அவர் பிலாசபி, கான்செப்ட்,ஐடியா, தியரி, ப்ராக்டிகல் எல்லாம்......

Unknown 1:04:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..!//////

இவரு பழைய படங்களுக்கு வெமர்சனம் எழுதுவாரே...... அத சொல்லலியா?
///////////////////////////////////////////////////////////
பாட்டு விமர்சனம் கூட பண்ணுவாரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி 1:05:00 AM  

/////அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும் நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர்.///////

தெளிய வெச்சி அடிச்சது போதும், இனி ஒயின்ல ஊற வெச்சி அடிங்கய்யா......

Unknown 1:05:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார்.////

இவர்தான் பதிவுலக அசீத்குமார்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாமே... உண்மையா?
//////////////////////////
பதிவுலக அசீத்குமார் பன்னிக்குட்டி நீர்தான் இவரு ஆம்பளை தமன்னா...!ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி 1:06:00 AM  

/////எல் கே ஜியில குழந்தைய சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக பேதி டாகுடர் ///////

இதே பதிவ அடுத்த அட்மிசன் டைம்லயும் போடுவார்னு பலபேரு ப்ளாகர் அக்கவுண்ட டெலிட் பண்ணீட்டு போய்ட்டாங்களாம்........

CS. Mohan Kumar 1:06:00 AM  

மே ஐ கம் இன்?

பன்னிக்குட்டி ராம்சாமி 1:07:00 AM  

////இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது./////

இது ராமராஜனுக்கு தெரியுமா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி 1:08:00 AM  

/////மதம் சார்ந்த விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று ஆகிவிட்டது.//////

அப்போ புளி போட்டு வெளக்கி இருந்தா புளிப்பாண்டி ஆகி இருப்பாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி 1:10:00 AM  

/////மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், //////

ஆப்பரேசனுக்கு முன்னாடி இருந்த மூக்கு மாதிரியா இல்ல ஆப்பரசனுக்கு பின்னாடி இருந்த மூக்கு மாதிரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி 1:11:00 AM  

////நாய் நக்ஸ் said...
Ada suresu.....

Kumma mudiyaatha
time-la
post
pottuteere.....!!!!!!!

Sari...
Iravu
parppom......./////

தங்களின் ஆங்கில கவிதை வழக்கம் போல மிக அருமை நாய் நக்ஸ் அவர்களே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி 1:13:00 AM  

/////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார்.////

இவர்தான் பதிவுலக அசீத்குமார்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாமே... உண்மையா?
//////////////////////////
பதிவுலக அசீத்குமார் பன்னிக்குட்டி நீர்தான் இவரு ஆம்பளை தமன்னா...!ஹிஹி!//////////

ஐயாம் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...............

CS. Mohan Kumar 1:15:00 AM  

ஆடுதிரும்பலை கொஞ்சமா தான் ஓட்டிருக்கீங்க. டேங்க்ஸ்.

ஜெய் மேட்டர் மிக ரசித்தேன்

தமன்னா குமார் பேர் பார்த்தா மனுஷன் ஹாப்பி ஆகிடுவார்

rajamelaiyur 1:56:00 AM  

என்னது தொடருமா ? மாமிக்கிட்ட சொல்லி உங்க ஏரியால இன்னும் 5 மணி நேரம் அதிகமா கரண்ட புடுங்க சொல்றேன்

அமுதா கிருஷ்ணா 2:40:00 AM  

மூன்று குமார்களை அடையாளம் தெரியுது.இரண்டு பேர்களை சுத்தமாய் தெரியவேயில்லை. நான் ப்ளாக்கில் கொஞ்சம் வீக்.ஆனால் சத்தமாய் சிரித்தேன். நாம மாட்டலைன்னா சிரித்து கொள்ள வேண்டியது தானே.

Admin 4:19:00 AM  

ஜெயக்குமாரை சொன்ன விதத்தை ரசித்தேன்.. எவரும் புண்படா வண்ணம் புனையப்பட்டிருப்பது சிறப்பு..

Admin 4:21:00 AM  

சிவக்குமாருக்கு தமனாகுமார் என்று ஒரு பெயர் இருப்பது இப்போதுதான் தெரிந்தது..

K.s.s.Rajh 5:22:00 AM  

சின்னவீடு நரேஸ்குமார்-பதிவர்கள் பற்றி மொக்கை போட்டு ஒரு தொடரை ஆரம்பித்துஇருக்கார்,இதை வைத்து பல பதிவுகள் தேத்திவிடுவார்

K.s.s.Rajh 5:24:00 AM  

அடுத்த பகுதிக்கு ஜ ஆம் வெயிட்டிங்

”தளிர் சுரேஷ்” 8:14:00 AM  

நல்ல காமெடி! சூப்பர்!

Philosophy Prabhakaran 11:45:00 AM  

அந்த ஆட்டை பார்த்தா பாவமா இருக்குய்யா... விட்ருவோம்...

காபி செந்தில் குமாரை இனி பதிவர் லிஸ்டில் சேர்க்கவே கூடாது... விளம்பரதாரர் இணையதளங்கள் மாதிரி தலைவர் அங்கன இங்கன இருந்து காப்பி பேஸ்ட் பண்ணி காசு சம்பாதிச்சிட்டு இருக்கார்... எவன் காறித்துப்பினாலும் தொடைக்க கூட நேரமில்லாமல் அல்லாடுறார்... பாவம்...

ஆனாலும் அந்த தமன்னா ரசிகரு ரொம்ப நல்லவருய்யா...

யோவ் இந்தமாதிரி அஜித் படம், விஜய் படமுன்னு பாகுபாடு பாக்காம தான்யா எழுதுறான் அந்தப்பையன்...

எந்தப்பக்கம் திரும்பினாலும் சிட்டிக்காட்டான் அதகளம் தான்... பல இடங்களில் வாண்டடா ஜீப்புல ஏறிக்குறார்... அடுத்த ஆடாக வாய்ப்புகள் பிரகாசம்...

Unknown 7:31:00 PM  

பேரு வச்ச பிரபல பதிவருக்கு டயப்பர்னு முதல்ல பேரு வச்சதே எங்க 'தலைவர் 'தான்!! அந்த அறிவாளி அதைக்கூட காப்பி அடிக்குது.

Unknown 7:32:00 PM  


//இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல //

:)))))))))))))))))))))))))

பட்டிகாட்டான் Jey 10:12:00 PM  

அடங்கொய்யாலே..... ஒரே நேரத்துல எத்தினி பேர் சட்டையை பிடிக்கிறாம்பாரு பன்னாடை பரதேசி பக்கிப்பயபுள்ளை..

என்னடா சொல்ரே நான் கேள்விப்படாத சைட் பெரெல்லாம் சிஒல்லிருக்கே...

அதனோட லிங்க் குடுடா அதில அக்கோண்ட் ஓப்பன் பண்ணி அங்கேயும் கருத்து சொல்லனும்னு என் மன்ஸு அடிச்சி தவிக்கி....:-)))))

ங்கொய்யாலே உங்ககிட்ட அடிவாங்கி சமாளிக்கிறவன் ஒலகத்தையே சமாளிக்கலாம்டா,,,:-))))))))))

எலேய் பசங்களா, கூகுள் பிளஸ்ல செட்டிலாயிட்டதால, பதிவெழுதுனா ஈகோ பார்க்காம தகவல் சொல்லுங்க பக்கிகலா, யாராவது சொன்னாதான் நீங்க பதிவெழுதுனதே தெரிய வருது... அவ்வ்வ்வ்வ் :-)))

பட்டிகாட்டான் Jey 10:15:00 PM  

// முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல //

எலேய் பக்கி, அண்ணன் ஒன்லி விளிம்பு நிலைமக்கள் பத்திதான எழுதுறாரு, சரவணபவன் அண்ணாச்சி ரேஞ்சுக்கு சொன்னதை நான் மிக கடுமையாகவும் அதே நேரத்தில் மென்மையாகவும் கண்டிக்கிறேன்

#நன்றி - தலிவர்

பட்டிகாட்டான் Jey 10:20:00 PM  

// ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார். //

சில நேரம் ஊசிப்போட வடைபடைத்து ரொம்ப டேஸ்டி என்று வெறுப்பேத்துவார் உவர் ஆனர்.

ஆ...ங்.... சேரில் உட்கார்தாலும், நட்ட நடு சென்டரில் உட்கார்ந்து கொண்டு எழுதுரவர் :-))

// பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற பட்டத்தைக் //

பிலபல ஒளிவட்டப் பதிவர் குடுத்த பட்டம் அது :-))))

உலகத்தில் இந்த பட்டம் பெற்ற ஒரே பதிவர்.....:-))))))

#இந்த கமெண்ட்டுக்காகவே ஒரு நாள் எஞ்சட்டையைப் பிடிச்சி உலுக்குவானோ.... அவ்வ்வ் :-))))

பட்டிகாட்டான் Jey 10:22:00 PM  

// மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், //

ஏய் டண்டனக்கா...ஏய் டனக்குனக்கா...

:-)))))))))))))))))))

பட்டிகாட்டான் Jey 10:24:00 PM  

ங்கொய்யா... புதுமாப்பிள்ளை ஒயின் ஷாப் ஓனர் பத்தி எழுதாததுக்கு என் கடும் கண்டனங்கள்.

அதை கமெண்ட் செக்சனிலாவது எழுதவும், இல்லையெனில் உன் கோமனம் கூட உருவப்படும்....

# இது வேண்டுகோள் அல்ல கட்டளை

Unknown 10:29:00 PM  

ஜெய் வந்தாச்சா? செத்தார் ப்ளாக் ஓனரு!!

பன்னிக்குட்டி ராம்சாமி 10:32:00 PM  

/////பட்டிகாட்டான் Jey said...
ங்கொய்யா... புதுமாப்பிள்ளை ஒயின் ஷாப் ஓனர் பத்தி எழுதாததுக்கு என் கடும் கண்டனங்கள்.//////

ங்கொய்யால அப்புறம் அந்த பீடாஷாப் மேட்டர் யாருக்கு? அத பாத்துட்டு பீடாஷாப் ஓனரும் வந்து பதில் சொல்லிட்டு போய்ட்டாரு..... அதையும் பார்க்காம பொங்கி இருக்காம்பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி 10:33:00 PM  

///! சிவகுமார் ! said...
ஜெய் வந்தாச்சா? செத்தார் ப்ளாக் ஓனரு!!////

ஆமா பெரிய டாட்டா கம்பேனி ஓனரு.....

பாலா 12:24:00 AM  

ஹா ஹா எல்லாருடைய அறிமுகங்களும் அருமை. கேப்டன் போஸ் மிக அருமை. :)

CS. Mohan Kumar 12:40:00 AM  

//என்னடா சொல்ரே நான் கேள்விப்படாத சைட் பெரெல்லாம் சிஒல்லிருக்கே...

அதனோட லிங்க் குடுடா அதில அக்கோண்ட் ஓப்பன் பண்ணி அங்கேயும் கருத்து சொல்லனும்னு என் மன்ஸு அடிச்சி தவிக்கி....:-)))))

*****

:))))
இதை படிச்சிட்டு ஆபிசில் வாய் விட்டு சிரிச்சுட்டேன் !

பட்டிகாட்டான் Jey 2:59:00 AM  

// காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி… //

இதக் கவனிக்காம விட்டுட்டேன் மச்சி....

ஒட்டடைக்குச்சி மேரி ஒல்லியா இருக்கிரதால, கூட்டத்துல பயபுள்ளையைக் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் செரமமா இருக்கும்,

அதுமேரி இங்கே குண்டான விஜய்காந்த் படம் பார்த்து இவன் நினைப்பு வராம போச்சி.... :-)))))

பட்டிகாட்டான் Jey 3:01:00 AM  

//
:))))
இதை படிச்சிட்டு ஆபிசில் வாய் விட்டு சிரிச்சுட்டேன் ! //

அண்ணே பார்த்துணே, பிறகு இந்த மேரி பட்டிக்காட்டான் கமெண்ட் போட்ருந்தான், அதப்படிச்சி ஆப்பீஸ்ல சிரிச்சதுக்கு மெமோ குடுத்திட்டாங்கனு வெளில சொன்னா, எம்மேலதான் பழிவிழும்...:-))

பட்டிகாட்டான் Jey 3:03:00 AM  

// Sari...
Iravu
parppom....... //

யோவ்வ்வ் நக்ஸ், சாயந்திரம் ஆனாலே மட்டையாகி மல்லாக்க சாயிர பார்ட்டி, நைட் எப்ப்டி வருவே....

படுவா...

கோவை நேரம் 11:28:00 AM  

செம...அப்படியே குடிசை குரேஸ் குமார் பத்தியும் எழுதவும்....

சீனு 9:57:00 PM  

அற்புதமான கருத்துகளை உள்ளடிக்கிய சுவையான பதிவு... எங்கள் தலைவர் பட்டிகட்டன் என்னும் சிட்டிகாட்டன் பணியில் சொல்வது என்றால் இதை நான் மனபாடம் செய்து கொண்டேன்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP