Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

இயர் ஆப் ஸ்பெசல் மீல்ஸ் 2011 TO 2012

>> Tuesday, November 27, 2012


ஆடு திரும்பல் பேட்டிகுமார்


என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.

பலாசக்கை காப்பிபெவிக்கால்குமார்


இவர் தன் கையில் இருக்கும் பஸ் டிக்கட்டின் பின்புறம் கூட ஜோக் எழுதி பல பத்திரிக்கைக்கு அனுப்பி வெளியிடாமல் திருப்பி அனுப்பியது மட்டும் திருப்பதி மலையை விட உயரமாக இருக்கும். முன்னால் ஆல்ரவுண்ட் பிளாக்கர் இப்பொழுது டுவிட்டரில் மட்டும் கவனம் செலுத்துகின்றார். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார் அதுல 100க்கு 175 சதவீதம் காப்பி பேஸ்ட்…..இவர் போன்ல ஒன்லி மிஸ்டு கால் மட்டும் போகும். இவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட "சண்டைன்னாலும் சம்சாரம்ன்னாலும் கால்ல விழுந்திருவேன்..!"  அப்படின்னு உண்மைய சொல்லுற நல்ல மனுசன்.

'அநியாயத்துக்கு நல்லவன்' தமன்னாகுமார்


சென்னை பாஷையில் எழுதி படிப்பவர்களை அவ்வப்போது நாக்கு சுளுக்கவைக்கும் வித்தையில் வல்லவர். அநியாயத்துக்கு நல்லவர், போஸ்டர் ஒட்டும் முனுசாமி! ஷகிலா படத்தின் போஸ்டரை தெரியாத்தனமாக இவர் வீட்டுக்கு எதிரே ஒட்டியதால் அவரை திருத்துகின்றேன் பேர்வழி என்று பேசியே திருத்தி இப்பொழுது அவர் வேலையில்லாமல் இருக்கின்றார்…..! "என் கைல மாட்டுனா படவா பிச்சுவாவ.. வாயில வுட்டு ஆட்டப் போறேன்" என்று சொல்லிக் கொண்டு போஸ்டர் முனுசாமி காண்ட்ல கீரார் நைனா அந்தாண்டை போய்க்கினாத..ஆங்!, 

அப்ப..அப்ப…அரசியல் உள்குத்து எழுதி கிச்சுகிச்சு மூட்டுவார், ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார். பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடாஷாப் பீதாம்பரகரன்


அஜித் படம் மொக்கையாக இருந்தால் இயக்குனர் தவறென்றும், விஜய் படம் மொக்கையாக இருந்தால் விஜய் தவறென்றும் மாற்றி மாற்றி விமர்சனம் போடுவதில் வித்தகர். புல் டைட்ல படத்துக்கு போயிட்டு காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…

புனுகு பூனை கக்கா ஆராய்ச்சியில் நீண்ட நாட்கள் இருந்ததால் எப்படிப்பட்ட கப்பையும் எதிர் கொள்ளும் தீரம் மிக்கவர். சில கமெண்ட்ல எதிராளியின் டவுசரை முழுக்க கழட்டுவதால் நிறைய பிரபலங்கள் இவரிடம் ஜாக்கிரதையாகவே பழகுகின்றனர். கேப்டனின் அதிதீவிர கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!

பெட்டிக்கடைக்காரன் வால்மார்ட்டில் குஜய்குமார்


இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட், யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக் கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும் நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர். எல் கே ஜியில குழந்தைய சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக பேதி டாகுடர் அண்ணன் குஜய்குமார். இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாபூனை விம்ரின்


மதம் சார்ந்த விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று ஆகிவிட்டது. வரலாறு, சினிமா என கலந்து கட்டி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமி. மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், ஆனால் மூக்கு வளரவில்லை. அடிக்கடி தும்மல்தான் வருகின்றது வேறு நல்ல பிராண்டு மூர் மார்க்கெட்டில் தேடிக்கொண்டிருக்கின்றார், பல விவகாரமான விசயங்களை பலகாரமாக படைப்பதில் வித்தகர்…..

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே..! நீங்கள் நினைப்பவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனைத்தும் மொக்கை நகைச்சுவையே..!நோ....பீலிங்ஸ்....நோ....66A

அபாயகரமான அறிவிப்பு 
இது தொடரும்.........
:-)

Read more...

திருப்பூர் சாப்பாட்டுகடை டுவின்..டுவின்...

>> Wednesday, August 1, 2012


எச்சரிக்கை

இது ஒரு அருவருப்பான பதிவு தைரியம் உள்ளவர்கள் மட்டும் இந்த வரியை தாண்டவும் மீறி வந்தால் கம்பனி பொறுப்பில்லை......

வணக்கம் நண்பர்களே திருப்பூர் வரும் நண்பர்கள் இந்த பதிவை படித்துப் பார்த்து பயன் பெறுவதற்காக?! எழுதிய பதிவு. முக்கியமாக ஹோட்டல் காக்ரோச்! இது நவீன ஓட்டல்! பெயிண்டு அடிச்சு..!பாத்திரங்களைக் கழுவி பல மகாமமம் ஆச்சு!? தோசைக்கல்லை சொரண்டுனா ஒரு லாரி நிறைய அழுக்கு சேரும்! இட்லி பாத்திரத்தை பார்த்தா கல்யாணம் ஆகாத பொண்ணுக கூட வாந்தியெடுப்பாங்க...அவ்வளவு சுத்தம்! டம்ளர் எவர்சில்வர் டம்ளர் ஹோட்டல் முன்னாடி ஓடுற கால்வாயிலதான்  கழுவுவாங்க, அதனால பளிச்சுன்னு கருப்பா பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கும். இலையை இவங்க வேஸ்ட் செய்வதே இல்லை  கழுவி...கழுவி...போடுவாங்க வாரத்துக்கு ஒரு முறை கிழிஞ்ச இலையை மட்டும் மாற்றுவார்கள் அவ்வளவு நேர்த்தியான பராமரிப்பு.

இங்க ஸ்பெசல் ஐயிட்டமே காக்ரோச் சிக்கன்தான்..! சப்பாத்திக்கு நடுவில சிக்கன் வருவலை வைத்து அழகாக அதன் மேல் ஒரு காக்ரோச்சைப் பிடித்து அழகாக வைத்திருக்கிறார்கள்! நான் ஒரு முறை போனபோது கரப்பானை தூக்கி வீசினேன் பக்கத்து டேபிளில் இருந்தவர் தட்டில் விழுந்து விட்டது. அதை கவனித்த அவர் டேங்ஸ் என்றார்! நான் நோமென்சன் என்றேன்! இல்ல...இல்ல...போதும் நான் டயட்ல இருக்கிறேன் என்றார்! அந்த ஆளுக்கு இந்தி தெரியாது போல......


அடுத்தது எலிக்கறி & நாய்கறி பட்டர் டோஸ்ட்! அதுவும் எலிக்கறிக்கு தேவையான தூய....தெள்ளிய நீராக ஓடும் கூவத்தின் தம்பி நொய்யலாற்றுக் கரையில் பிடித்தது, நாய்கறி பல்லடம் ரோட்டில் வாகனங்களில் அடிபடும் நாய்களைக் கொண்டு வந்து சுத்தமான முறையில் தயார் செய்வது. அதனால் சுவை அதிகம் கூட்டம் அலை மோதும்! இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சாப்பிட்டு வாந்தி பேதியானவர்கள் வைத்தியம் பார்க்க பக்கத்தில் இந்த ஹோட்டல் நடத்துபவரின் தம்பியே மருத்துவமனை வைத்துள்ளார்.


இதுல பாருங்க இங்க ஸ்பெசலே பல்லிக்காப்தான்! ஒரு மாசத்துக்கு முன்னால் செத்த முழு கோழிய கிரில்ல வறுத்து அதுமேல ஒரு பல்லியை வைத்து அழகாக பரிமாறுவதுதான்! 1946ம் வருடம் ஒரு வெள்ளைக்காரன் இங்கு சாப்பிட வந்தான் இவர்கள் தயார் செய்து வைத்திருந்த கோழி மீது உத்தரத்திரத்தில் லவ்விக் கொண்டிருந்த ஒரு பல்லி கோழி மீது விழுந்து விட்டது, அதை சாப்பிட்ட வெள்ளைக்காரன்! டுவின்....டுவின்....என்றான் அதிலிருந்து இங்கு வியாபார விசயமாக வரும் அமெரிக்கர்கள் இதை விரும்பி சாப்பிட்டு பேதியாகி திருப்பூரே வரமாட்டார்கள்! அதனால்  மெயிலில் மட்டும் டிலீங் காட்டுவதால் சீக்கிரம் ஆர்டர் ஓகே ஆவதால் இந்த கடை ஓனர்க்கு பாராட்டு விழா கூட நடத்தினார்கள் சில தொழில்அதிபர்கள்.

அப்பவும் கொடைச்சல் கொடுக்கும் சில பையர்களை இந்த கடையில் சிக்கன் வாங்கி கொடுத்திருவேன் என்று மிரட்டியே காரியம் சாதிக்கின்றார்கள்,  இந்த கடை பெயரை கேட்டு நடுங்கி இவர்களுக்கு அடிபணிந்து போகிறான் வெள்ளைக்காரன்! இதனால் திருப்பூர் வரும் பதிவர்கள் இங்கு உணவு உண்டு குறைந்தது பத்து பதிவாவது போடலாம் நேரமிருந்தால் வாருங்கள்! அட வாங்க சார் ஏன் சார் ஓடறீங்க.....?????

Read more...

பதிவரின் பரபரப்பான செய்திதாள்...உடனே படியுங்கள்

>> Monday, December 5, 2011



மக்களே உங்களுக்கு ஒரு கதை 
ஒரு பையன் செய்தித்தாள் விற்றுக்கொண்டு இருந்தான் எப்படி தெரியுமா? பரபரப்பான செய்தி ஒரு சின்னப் பையன் 100 பேரை ஏமாத்திட்டான்...பரபரப்பான செய்தி ஒரு சின்னப் பையன் 100 பேரை ஏமாத்திட்டான்...என்று கூவி விற்றுக்கொண்டுக் இருந்தான் அந்தப்பக்கமா போன ஒருவர் என்னது!? சின்ன பையன் 100 பேரை ஏமாற்றிவிட்டானா...கொண்டா எனக்கு ஒரு பேப்பர் என்று பணம் கொடுத்து வாங்கினார்...அடுத்ததா அந்த பையன் எப்படி கூவினான் தெரியுமா?
பரபரப்பான செய்தி ஒரு சின்ன பையன் 101 பேரை ஏமாத்திட்டான்...பரபரப்பான செய்தி ஒரு சின்ன பையன் 101 பேரை ஏமாத்திட்டான்...

Read more...

நவராத்திரி கொலுபொம்மை...

>> Friday, October 21, 2011


Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP