I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.

>> Monday, November 5, 2012

நண்பர்களே! நம்முடைய சுதந்திரமான கருத்துகளைக் கூறும் போது பத்திரிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுவது கூட நம்மை கைது செய்து மூன்றாண்டுகள் சிறை வைக்க முடியும் என்கின்ற வகையில் இருக்கின்றது. இச் சட்டத்தை திருத்தி ஊடகங்களுக்கு இணையான சுதந்திரத்தை இணையத்தை இந்தியாவில் பயன்படுத்தும் அனைவருக்கும் வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு ஐயா தருமி அவர்களின் முயற்சியால் பதிவிடப்பட்டு தத்தம் வலைத் தளங்களில் அனைத்து பதிவர்களும் பதிவிட்டு அரசுக்கு, மற்றும் ஊடகங்களுக்கும் கவனஈர்ப்பை கொண்டு வரக்கூடிய முயற்சியில் நானும் நமது பல நண்பர்களும் பங்கு கொண்டிருக்கின்றோம், நீங்களும் நாளை மாலைக்குள்  பதிவிட்டு நம் ஒற்றுமையை உலகிற்கு பறை சாற்றுவோம்...வெல்லட்டும் வலைப் பதிவர்கள் ஒற்றுமை


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

10 comments:

அஞ்சா சிங்கம் 1:27:00 AM  

ஒன்றிணைவோம் ......

முத்தரசு 1:49:00 AM  

ஓரணியில்.....ஓன்று படுவோம்

சிகரம் பாரதி 1:51:00 AM  

Iam srilankan. But i will support to this. My site: http://newsigaram.blogspot.com

காட்டான் 1:54:00 AM  

.ஓன்று படுவோம்..!

rajamelaiyur 2:41:00 AM  

கண்டிப்பா பதிவிட வேண்டிய விஷயம்

Anonymous,  4:34:00 AM  

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்...

முனைவர் இரா.குணசீலன் 2:51:00 AM  

அன்புநண்பா தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன்

நன்றி.

இணைப்பு

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html

Anonymous,  6:21:00 AM  

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

Avargal Unmaigal 7:20:00 AM  

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Anonymous,  9:20:00 AM  

அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP