அம்பது ரூபாய்க்கு ஐநூறு பயம் காட்டுறாங்க-பீட்சா!

>> Wednesday, October 24, 2012


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர்ப் படம், 100வது நாள் திரைப்படத்துக்கு பிறகு இப்படியான ஒரு படம் வரவில்லை என்பது உண்மை! நூறாவது நாள் திரைப்படத்தில் நீங்கள் அடுத்த காட்சி இது எனக் கணிக்க முடியாது, அதைப் போன்ற ஒரு திரைப்படம்தான் "பீட்சா" தமிழில் பெரும்பாலான ஹாரர்ப் படங்கள் அதிபயங்கரமான ஒப்பனையுடன், கொடூரச் சத்தங்களுடனே பார்வையாளர்களை பயமுறுத்த முனைகின்றன, உதாரணமாக ராம்கோபால்வர்மாவின் சமீமப் படங்கள்..!ஆனால்...! அவை மை டியர் லிசா, யார், ஏழாம் நெம்பர் வீடு போன்ற ஏகப்பட்ட படங்களில் பே…..பே.....எனப் பயமுறுத்தி நமக்கு பயமில்லாமலும், ஒரு வகையான சலிப்பும் ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் பாராட்டுக்குறியவர்.


திகில் படங்களில் காதல் காட்சிகள் மொக்கையாக இருக்கும். ஆனால் மனுசன் பூந்து விளையாடியிருக்கின்றார். ரொமான்ஸ் பார்வையாளர்களிடமும் பற்றிக் கொள்கின்றது. இந்த படத்தின் டைட்டிலை யாரும் மிஸ் செய்து விடாதிர்கள்..! நேரத்திலேயே தியேட்டருக்குச் சென்று விடுங்கள்.

ஆரம்ப காட்சிகளில் காதலியுடன் ஒரே வீட்டில் இருக்கின்றார் அவர்களுக்குள் எல்லாம் நடக்கின்றது, "ஏன்? சட்டையை அயர்ன் பண்ணலை...!" என்று திட்டிவிட்டு சமாதானமாக "நான் எதிலாவது கேர்லெஸ்சா இருக்கிறனா...?" என்றுக் கேட்கிறார் விஜய் சேதுபதி! "நான் கர்ப்பமா இருக்கறேன்....!" என்று நம்பீசன் சொல்வது ஒரு மினிக் குறும்படம்.

குடித்து விட்டு நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்கும் போது ஒரு நண்பன் "காண்டம் கம்பனி மேலக் கேஸ் போடலாமா...?" என்றுக் கேட்பதும் "கடிதம் எழுதி வச்சாலே தூக்குலத் தொங்கறதுதானா...?" என கேட்குமிடம் மற்றும்  "நீ......! ரொம்பப் பயந்தவனாச்சே எப்படிடாச் சாமாளிச்சே...?" என்று நம்பீசன் கேட்பதும் "பயந்தவனாலதான் பேய்க்கதை சரியாச் சொல்ல முடியும்...!" என்பதும் "ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் பெண்,பணம், சிலருக்கு ஆவிபேய்..!" என்பதும் ஆங்காங்கே விஷவல் கவிதைகள் படம் நிறைய! கொட்டிக் கிடக்கின்றது.


விஜய் சேதுபதி மிகச்சிறந்த தேர்வு! விரிவாகக் கூற முடியாது…! ஆனால் மனிதன் தன் முகத்தில் பயத்தைக் காட்டி நம்மை நெளிய வைக்கின்றார் எப்படா…? இடைவேளை விடுவாங்க…! என்று கேட்க வைக்கின்ற நேரத்தில் படம் முடிஞ்சதும் பதினாறு ரீல்தானா என்று நம்பவும் முடியவில்லை…!

நம்பீசன் முகப்பரு நாயகி! கண்ணம், நெற்றி, கண் என முத்தமிடும் விஜய் சேதுபதியிடம் உதட்டைக் காட்டுகின்றார், தியேட்டரே வாய் குவிக்கின்றது.....

என் முன் சீட்டில் ஓர் இளம் ஜோடி உக்கார்ந்திருந்தது திகில் காட்சிகளில் கணவனை கட்டிக் கொண்டது அந்தப்புள்ள! சுப்புராஜ் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடிப் படம் எடுத்திருக்க கூடாது!

நிறைய சேட்ஜிஸ்! குடும்பம் சகிதமான படத்திற்கு வந்திருந்தார்கள், தமிழ்ப் படம் முடிந்துப் போகும் போது ஹிந்தியில் சாருகான் படத்தை சுட்டாக….அமீர்கான் படத்தை சுட்டாக என ரவுசு விட்டுப் போகும் மைதா மாவுக்கள் வெளிரிய முகத்துடன் அமைதியாக வெளியேறியதைப் பார்க்கமுடிந்தது.


மொத்தத்தில் ஒரு தமிழில் மிக அருமையான ஒரு திகில் படம். இயக்குனருக்குக் காதல் காட்சிகளும் நன்றாக வருகின்றது அடுத்த படம் திகில் எடுத்து போரடிக்கவிடாமல் ஒரு காதல் படம் கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

அய்யா ராசாக்களா….! படத்தை தியேட்டரில் பாருங்கள்.!சிடியில், இணையத்தில் பார்த்துச் சில விசயங்களை இழந்து விடாதிர்கள்!

12 comments:

Anonymous,  9:43:00 PM  


யோவ்..அது என்ன ஆளாளுக்கு ரம்யா முகப்பரு பத்தியே பேசறீங்க. கொன்டே புடுவேன்! நக்கீரன் மாமா இடுப்பு மச்சத்தை விடவா.....

Unknown 9:47:00 PM  

@! சிவகுமார் ! said...

யோவ்..அது என்ன ஆளாளுக்கு ரம்யா முகப்பரு பத்தியே பேசறீங்க. கொன்டே புடுவேன்! நக்கீரன் மாமா இடுப்பு மச்சத்தை விடவா.....
//////////////////////////////////
ரம்யா குட்டிக்கு முகப்பரு அழகா இருக்கு..! நக்கீரன் மாமாவுக்கு....?

Subramanian 9:56:00 PM  

//சுப்புராஜ் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடிப் படம் எடுத்திருக்க கூடாது!//

ரொம்ப பீல் பன்ற நிலைமைக்கு ஆயிடுச்சா?

மிக அழகான நேர்த்தியுடனான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

நாய் நக்ஸ் 11:05:00 PM  

Padam
parththuttiya.....!!!!!!

Good.....

Safe comment.....

கலாகுமரன் 11:46:00 PM  

படம் எப்படியோ ? உங்கள் விமர்சனம் நல்ல நகைசுவையுடன் இருக்கிறது.

//சுப்புராஜ் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடிப் படம் எடுத்திருக்க கூடாது!//

//மைதா மாவுக்கள் வெளிரிய முகத்துடன் அமைதியாக வெளியேறியதைப் பார்க்கமுடிந்தது.//

சென்னை பித்தன் 1:51:00 AM  

நான் விமரிசனம் படிப்பதோடு சரி!

காட்டான் 5:00:00 AM  

படத்தை இன்னும் பார்கல உங்கள் விமர்சனம் படத்தை பார்கும் ஆவலை தூண்டுகிறது. இங்கு இப்படியான படங்களை தியேட்டரில் போடமாட்டார்கள்.!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6:59:00 AM  

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படமாக இருக்கிறது.பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

arasan 7:41:00 AM  

சும்மா மிரட்டி இருக்காப்ல அண்ணே இயக்குனர் .. அம்மிணி ம்ம்ம்ம்.. என்னத்த சொல்ல ..

சுதா SJ 2:57:00 PM  

ஆளாளுக்கு படத்தை பற்றி சொல்லும் போது படம் பாரத்துடனும் போலவே இருக்கு :)))

நாங்கதான் தியேட்டரில் பார்க்க முடியாதே :( DVD க்காக வெயிட்டிங்

ezhil 11:55:00 PM  

படத்தை தியேட்டரில் பார்த்து விடுவோம். விமர்சகரின் வெற்றி.

முத்தரசு 3:05:00 AM  

//அய்யா ராசாக்களா….! படத்தை தியேட்டரில் பாருங்கள்.!சிடியில், இணையத்தில் பார்த்துச் சில விசயங்களை இழந்து விடாதிர்கள்//

சரிங்க

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP