நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்

>> Friday, October 19, 2012



தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் கற்பனைக் கூட்டி ஒரு சிறுகதையான வடிவோ, சுயசொறிதலாக கலந்து எழுதுவார்கள் இதுதான் எழுத்துலகின் எழுதப்படாத மரபு.


ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது. அதில் என் மனம் கவர்ந்தச் சில விடயங்களைப் பார்க்கலாம்….!

ஒற்றை மரத்தில் நாம் சிறு வயதில் தன் பெற்றோரை விட்டு வேறொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும் போது. அங்கு நமக்கு நடக்கும் அவமாணங்கள் ஆறாத வடுக்களாய் மறையும் வரை மனதின் மூலையில் துருத்திக் கொண்டிருக்கும்.நம் பெற்றோர் மீது இருக்கும் வன்மத்தைக் குழந்தைகளிடம் காட்டுவது வேதனையான விசயம், இன்று பல குடும்பங்களில் கணவன் மீதுள்ள வன்மத்தை மனைவி குழந்தைகளிடமும், மனைவி மீதுள்ள வன்மத்தைத் தன் குழந்தைகளிடமும் மாறி..மாறி…குற்றம் செய்யாக் குற்றவாளிகளாய்ப் பல குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றன. காரணமில்லாமல் தன் மீது காட்டும் கோபமும் சுடுச் சொற்களும் பிஞ்சு மனதில் எத்தகைய வேதனையை உண்டாக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை என்பதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போல “மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்ததை விட……அம்மா அடிச்சது முதன் முறையாக வலித்தது…” என்கின்ற வரிகளில் சொல்லலாம். 

பால்யக் காலத்தில் பிடித்த ஆசிரியர், உறவினர், தோழி, தோழன் ஒரு சிலர் மனதில் இருப்பார்கள்….அவர்களை ஒரு சிலரைத் தவிர யாரும் தேடிப் போய்ப் சந்தித்துவிட்டு வருவதில்லை அதுவும் பெண்கள் தன் வகுப்புத் தோழனைச் சந்திப்பது மிக அரிது! என் உயிர் தோழனில் தன் கணவனுடன் சென்று அவரின் கடைக்குச் சென்று சந்தித்துப் பால்யக் கதைகளை பேசி வர எத்தனை பேரால் இயலும்…. 

சூத்திரம் போன சுப்பனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றச் சுப்பனின் பிறப்புறுப்பை அறுத்தெரிகின்றாள் ஓர் அப்பாவிப் பெண். அந்த சுப்பன் மருத்துவ சிகிச்சை முடிந்துத் தேயிலைத் தோட்டதிற்கு பணிக்கு வருகிறான் ,அனைவரிடமும் அந்த இடத்தில் உயிர் இல்லை என்பதை கண்டுபிடிக்க மருத்துவ உலகிற்கு உதவியாக இருந்தேன் என கூறிக் கொண்டிருந்தானாம் வேடிக்கை மனிதர்கள். 

பெண்ணிற்கு மட்டும் பிறந்த வீடு என்பது விருந்துக்கு வந்த விருந்தாளி வீடு போல்தான் என்று வீட்டில் அங்கலாய்க்கின்றார்! அதே போல் சொந்த வீட்டில் வாடகை வீட்டில் படும் துன்பங்களே சொந்த வீடு கட்டத் தூண்டும் காரணியாகிப் போகின்றது என்று கூறுகின்றார். அவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வர்ணம் பூசப் பணப் பற்றாக்குறையேற்பட பிறந்த வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கின்றார், நாமும் கூடவே பயணிக்கின்றோம் ஏனெனில் நம்மில் பலர் சொந்த வீட்டின் ஆசையில்தான் இருக்கின்றோம். 

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள் பூச்செடி விற்பனை வீட்டில் தொடங்க ஒரு வழியாக அதை விற்கப் பட்டச் சிரமங்களை நுணுக்கமாக சொல்லியிருக்கின்றார். பச்சை தாழ்வாரம் என்கின்ற தன் பூந்தோட்டப் பெயர்ப் பலகையை ரிக்கி நாயின் வீட்டுக்குக் குட்டிக் கூரையாக்கிவிட்டு மந்திரப் பெட்டியில் பொழுதைப் போக்கிக் கொண்டு இன்று புத்தகம் போடுமளவுக்கு வந்து விட்டது. 

சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறதில் சேலத்துக் குடும்பத்தின் கத்திப் பேசும் பழக்கம் மொத்தத் தமிழர்களையே கத்திப் பேசுகின்றவர்கள் என்கின்ற எண்ணத்தை மலையாளிகளிடம் உண்டாக்கிவிட்டது, உண்மைதான் தமிழர்கள் கொஞ்சம் கத்திதான் பேசுகின்றார்கள்…..! அதேபோல் மூக்குடைந்த கல் சிலையை சிமண்டு வைத்து மூக்கு வைத்து ஒரு கலையை கற்பழிக்கும் கொலையை பல கோவில்களில் பார்க்கலாம்! இங்கும் அவ்வாறே...!அரண்மனையை நாமும் சுற்றிப் பார்க்கின்றோம்.

என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம் ஓர் உயரதிகாரிப் பெண் "தான்" என்கின்ற அகந்தையில் எப்படி அழிந்துப் போகின்றாள் என விவரிக்கின்றது…எனக்குத் தெரிந்து வட்டாச்சியராக இருந்த ஒரு பெண் இப்படித்தான் இருந்தார். அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் முகத்தில் அடித்தமாதிரிப் பேசியும், குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் ,உறவாடாமல் தனக்கு என்று வட்டம் போட்டு வாழ்ந்த அவரின் கணவருக்கு திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது யாரும் உதவிக்கு இல்லாமல் திண்டாடித் தன் கணவரை இழந்தார். அந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. 

நினைவுகளில் சக்தி ஒரு பழைய சைக்கிள் வாங்க வந்த ஏழைப் பெண்ணைப் பற்றியது, கடைசியில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் அது தெரிந்து தந்தையே மகளை கொன்று விட்டதாகவும் நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மனதைப் பாதித்தவள் சக்தி என்றே விளங்குகின்றது. 

நான் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கின்றேன் இதைப் போல் ஆங்காங்கே மனதை மெல்லிய மயிலிறகால் வருடியும், கீரியும் நம்மை அவர் உலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகின்றார் கன்னி முயற்சி என்றாலும் மிகச் சிறந்த ஒரு தொகுப்பு எனவே கூறலாம் அதைப் படைத்த அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் கூறுகின்றேன்.


புத்தக விலை 75 ரூபாய். 
J.P Josephine Mary, 
Indian Bank, M.S University Branch, 
A/C No : 854576367, IFSC code : IDIB000A107 என்ற விலாசத்தில் D/D எடுத்தும் அல்லது அவர் முகவரியில் M/O அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

J.P Josephine Baba,
18, Vijayakrishna Nagar,
N.G.O A Colony,
Tirunelveli.
Pin Code 627007 


14 comments:

ஜோதிஜி 6:40:00 PM  

சிறுகதை நாவல் படித்தே பல வருடங்கள் ஆகி விட்டது. வெற்றிகரமாக நீண்ட நாட்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுருந்த பொன்னியின் செல்வன் கதையை இப்போது தான் படிக்கவே தொடங்கி உள்ளேன். இப்போதுள்ள திருப்பூர் மழை(சூழ்நிலையில்) யில் நீங்கள் விவரித்துள்ள இந்த கதையை படிக்க வேண்டும் போல் உள்ளது.

rajamelaiyur 7:56:00 PM  

நல்ல விமர்சனம்.

rajamelaiyur 7:57:00 PM  

ஆபிசர் திருமணத்தில் பார்த்தோமே அவர்கள் தானே இந்த நூலின் ஆசிரியர்.?

Unknown 8:39:00 PM  

@ஜோதிஜி திருப்பூர் said...
//////////////////
நான் தருகிறேன்...!இன்னிக்கு பிரியா இருந்தா கே.ஆர்.பேக்கரி வாங்க...!

Unknown 8:39:00 PM  

@என் ராஜபாட்டை"- ராஜா said...
////////////////////////////
ஆமாங்க அவங்கதான்......!

Unknown 8:41:00 PM  

@முத்தரசு said...
//////////////////
ரைட்...ரைட்டு..!

Anonymous,  9:27:00 PM  

e- book ஆகக் கிடைக்குமா? ஸ்வாரஸ்யமான கதையாக இருக்கும் போல!

ezhil 12:10:00 AM  

விமர்ர்சனம் அந்தப் புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி

நாய் நக்ஸ் 12:34:00 AM  

Mmmm....
Book
vimarsanam
pannura
alavukku
nee
periya
aalaaya.....???????


Che...
Poya

enakku
veka
vekkamaaaaa
varuthu........!!!!!!!!!!!!!!

J.P Josephine Baba 8:02:00 AM  

தோழர் சுடர்விழி, எழில் தங்களுக்கும் என் புத்தகம் அனுப்ப ஆயத்தமாக உள்ளேன்.

J.P Josephine Baba 8:29:00 AM  

நண்பா தங்களுக்கு என் நன்றி மகிழ்ச்சிகள். அருமையான விமர்சனம் தந்துள்ளீர்கள். தங்கள் விமர்சனம் ஊடாக இன்னும் பல நண்பர்கள் கைகளில் என் புத்தகம் சென்றடைவதில் மகிழ்ச்சின்றேன்.

Mohamed Adam Peeroli 9:12:00 AM  

அருமையான விமர்சனம் மகிழ்ச்சி

அனைவருக்கும் அன்பு  9:50:00 PM  

நல்ல விமர்சனம் படைப்பாளியை உலகிற்கு அறிமுகம் செய்யும் சிறந்த பணியை செய்த நண்பர் வீடு சுரேஷ் வாழ்க

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP