ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி?
>> Monday, October 8, 2012
நான் கொஞ்ச நாள் பதிவுலகில் இருந்து
விலகியிருக்கலாம் என்று நினைத்திருந்தேன். தினம் மூன்று போன்! நான்கு சேட்! ஏழு
டுவிட்! என்று என் வாசகர்கள் கதறி அழுததால் சரி ஒரு பதிவு போடலாமே என்று.......கர்ர்ர்ர்ர்ர்ர்தூ.......இங்க பாரு
வயலன்ட் ஆகாது நீங்க காரித் துப்பியது என் வீட்டைத் தாண்டி, கடலைத் தாண்டி, மலையைத் தாண்டி உகாண்டாவுல ஒரு காலைத் தூக்கி?! இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த ஒரு சொரி
நாய் தலையில் விழுந்து நாய் சம்பவ இடத்திலேயே மரணம் அது அந்த ஊர் தினத்தந்தியில் கூட வந்து விட்டது. உகாண்டாவில் ஏது தினத்தந்தி? என்று நீங்கள் கேட்கலாம் அங்கியும் "லாரி டயர் டமார்! பத்தொன்பது உயிர்கள் பனால்!" என்று எழவு செய்தியையும் எகனை
மொகனையா எழுதுகின்ற பத்திரிக்கை இருக்கும் அதை விடுங்க….மேட்டருக்கு வருவோம்.
பிளீஸ் கவுச்சி பிடிக்காதவங்க ஆப்பாயில் என்று இருக்கும் இடத்தில் பாயாசம் போட்டுக்கங்க.பாயசம் பிடிக்காதவங்க....வேற நல்ல ஃபிளாக்கா போய் படிங்க....இந்த ஆப்பாயில் சாப்பிடறது ஒரு கலை…..!ஆயகலைகள்
அறுபத்திநான்கேமுக்கால் கலையை கத்தவனும் ஆப்பாயிலை லொபக்குன்னு முழுங்க முடியாது! அதுக்கும் தனி திறமை வேனும் இல்லை சட்டை நாறிடும். அது கூட பரவாயில்லை சார்....!வீட்டுக்காரம்மா பாஸ்டன் பிராண்டேடு ஆயிரத்து ஐநூறு ரூவா சட்டையா இருந்தாலும் ஆப்பாயில் விழுந்த சட்டைய துவைக்க கொண்டு போகையில் செத்த எலிய கொண்டு போற மாதிரியே குச்சி வெச்சு தூக்கிட்டுப் போறதை பார்த்தா கண்ணுல பீரு....பீரா வருது சார்!
கடைக்கு நண்பர்களுடன் போனால் பெரும்பாலும் நான்
புல்பாயில், இல்லை ஆம்லட்தான் சாப்பிடுவேன், ஆப்பாயிலை பொறுத்தவரை நமக்கு அலர்ஜி! "அந்தோணி" அப்படிங்கிற நண்பர் ஒருவருடன் சாப்பிடப் போனபோது எனக்கும் சேர்த்து
ஆப்பாயில் சொல்லிட்டார்! அழகா சின்னதா இலைய கட் செய்து ஒரு தட்டுல வெச்சு
பூப்போல ஆப்பாயில எடுத்து கொண்டு வந்து வச்சிட்டாங்க…நான் ஆப்பாயில் வந்திருச்சு
அந்தோணி எப்படிச் சாப்பிடறாருன்னு பார்ப்போம் அப்படியே சாப்பிட்டுக்கலாம்ன்னு
இருக்கேன் அவரும் வந்த ஐட்டங்களை எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு கடைசியா
ஆப்பாயிலுக்கு வந்தார்.
ஒரு நாட்டை சூழ்ந்து தாக்குற ஒரு படையோட லாவகத்தில
சுத்தியும் இருக்கின்ற வெள்ளை கலர் பாகத்தை கொஞ்சம்…..கொஞ்சம் பிச்சு வட்டத்தை
சின்னதாக்கி அப்படியே பூப்போல எடுத்து லபக்குன்னு உள்ள தள்ளிட்டாரு…..!அட்ரா சக்க….! இவ்வளவுதானா…?
நானும் முயற்சி செய்து சேதாரம் துளியும் இல்லாம சாப்பிட்டுவிட்டேன்! "ஆஹா நான் ஆப்பாயில் சாப்பிட்டுடேன்....." என்று கத்தியதைக் கேட்ட
பக்கத்தில் இருந்த குண்டு பெண்மணியின் வாயில் தினித்த பூரி அதிர்ச்சியில் வெளிய
வந்து விழுந்தது கடுப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்
கொண்டார்.
மறுபடியும் ஒரு ஆப்பாயில்….ஆர்டர்..! இப்படியாக
நான்கு, ஜந்து, பத்து என்று ஆப்பாயில் சாப்பிட்டுப் பழகினேன்! அந்தோணி கடுப்பாயிட்டார்
அவரால எட்டுத்தான் சாப்பிட முடிந்தது. இப்படியாக ஆப்பாயில் சாப்பிட்டதின் விளைவாக
அடுத்த நாள் வயிற்றைக் கெடுத்து நிற்காமல் போனதால் அலுவலகம் போகாமல் அறையிலேயே
கிடந்தேன் அது வேற விசயம்! ஆனாலும் ஆப்பாயில் சாப்பிட்டு நானும் ரௌடியாயிட்டேன்….!
நானும் ரௌடியாயிட்டேன்….!
ஆப்பாயில் : ஆப்பாயில் அப்படின்னு போட்டு கூகுள்ல தேடியதில் வந்த படங்கள் ஆகவே இதற்கும் எனக்கும் எந்த சம்மதமில்லீங்கோ.......!
39 comments:
ஹி ஹி ..............ஆப்பாயில் போடுவது எப்படின்னு பிலாசபிய விட்டு ஒரு பதிவு போட சொல்றேன் ....................
நாறீடும் .....................
ஏதோ தெரியாம ஆரூர் மூனா தெரியாம இடது கையால உங்க ஆப் பாயில எடுத்திட்டார். அதுக்காக கைய உடச்சு கட்டு போட்டது சரியில்லை. :-))
@அஞ்சா சிங்கம்
நல்லது அப்படியே இந்த லிஸ்டில் இரவு வானம்,கோவை நேரம் சேர்த்துக் கொள்ளவும்...எங்ககிட்டியும் ஆள் இருக்கு பீகேர்புல்!
DaddyAppa said...
ஏதோ தெரியாம ஆரூர் மூனா தெரியாம இடது கையால உங்க ஆப் பாயில எடுத்திட்டார். அதுக்காக கைய உடச்சு கட்டு போட்டது சரியில்லை. :-))
////////////////////////////////
நீங்க தப்பா நெனைச்சுட்டிங்க அந்த கட்டு ஆப்பாயில் குடை சாயாமா...இருக்க பேலன்ஸ்க்கு...உள்ள எடை கல்லு வச்சு கட்டியிருக்காப்டி....!
நல்லாத்தான் போட்டு இருக்கீங்க மாப்ள ஆப்பாயில் பதிவு
தலைப்பை பாத்துட்டு வேற என்னவோ நினச்சேன்
மாம்ஸ்..ஒரு படத்துல பிரபுதேவா நக்மா கிட்ட ஆபாயில் போடுவாரெ.அத காணோம்...
யோவ் மாம்ஸ்...எதுக்கு என்னை கோர்க்கரீர்..?
அதானே நக்மா ஆப்பாயில் போட்டா எங்கே??
//கோவை நேரம் said...
யோவ் மாம்ஸ்...எதுக்கு என்னை கோர்க்கரீர்..?//
மாப்ளே சும்மா சப்போர்ட்டுக்குதேன்
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்
தண்ணியடிச்சிட்டு சில பேரு போடுவானுங்களே ஆப்பாயிலு அத பத்தியோன்னு நெனச்சி ஒரு நிமிசம் பதறிட்டேன்.....
/////அஞ்சா சிங்கம் said...
ஹி ஹி ..............ஆப்பாயில் போடுவது எப்படின்னு பிலாசபிய விட்டு ஒரு பதிவு போட சொல்றேன் ....................
நாறீடும் .....................///////
ஏன் அவர் கூமுட்டைலதான் ஆப்பாயில் போடுவாரா?
//////இப்ப சாப்பாடே அதிகமா சாப்பிடறது கிடையாது அந்தோணி இதுல எங்க ஆப்பாயில் சாப்பிடறது" அப்படினேன் "அப்ப புல்லா சரக்குதானா…?" அப்படினார்//////
அப்பவே இப்படியா...? வெளங்கிரும்.....!
/////முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்////////
ஈமு கோழி கீமாவா? (அதான் எல்லா பக்கமும் சுத்திட்டு திரியுதாமே?)
@முத்தரசு (மனசாட்சி) said...
நல்லாத்தான் போட்டு இருக்கீங்க மாப்ள ஆப்பாயில் பதிவு
தலைப்பை பாத்துட்டு வேற என்னவோ நினச்சேன்
/////////////////
வேற...வேற...வேட்டைக்காரன்னு நெனைச்சீங்களா முததரச்சு..மாம்சூ...!
@கோவை நேரம் said...
மாம்ஸ்..ஒரு படத்துல பிரபுதேவா நக்மா கிட்ட ஆபாயில் போடுவாரெ.அத காணோம்...
///////////////
அந்த ஆப்பாயிலை நயன்தாராகிட்ட போட்டுக் காட்டிக்கிட்டு இருக்கினறார்...!மாப்பூ!
@கோவை நேரம் said...
யோவ் மாம்ஸ்...எதுக்கு என்னை கோர்க்கரீர்..?
////////////////////////
அதுக்கு ஏன்..மாப்பு திக்குறீர்...!
@முத்தரசு (மனசாட்சி) said...
அதானே நக்மா ஆப்பாயில் போட்டா எங்கே??
/////////////////////////
தி பேட் கொஸ்டீன்!
@முத்தரசு (மனசாட்சி) said...
//கோவை நேரம் said...
யோவ் மாம்ஸ்...எதுக்கு என்னை கோர்க்கரீர்..?//
மாப்ளே சும்மா சப்போர்ட்டுக்குதேன்
///////////////////
சியர்ஸ்....!மாம்ஸ்!
@முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்
////////////////////////
சார் இப்ப அணு விஞ்சாணி நாராயணசாமீகிட்ட அசிஸ்டென்ட் விஞ்சாணியா சேர்ந்திட்டாரு..,!சார் இப்ப பிசியா ஆணி புடிங்கிட்டு இருக்காப்டி...!சீக்கிரம் காப்படி பேரிச்சை பழத்துக்கு போட்டிட்டு வருவாப்டி!வெயிட்டிங்!
//வீடு சுரேஸ்குமார் said...
@முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்
////////////////////////
சார் இப்ப அணு விஞ்சாணி நாராயணசாமீகிட்ட அசிஸ்டென்ட் விஞ்சாணியா சேர்ந்திட்டாரு..,!சார் இப்ப பிசியா ஆணி புடிங்கிட்டு இருக்காப்டி...!சீக்கிரம் காப்படி பேரிச்சை பழத்துக்கு போட்டிட்டு வருவாப்டி!வெயிட்டிங்!//
தக்காளி அந்த லெவெலுக்கு போயிடுச்சா - அதான் வெளங்காம கிடக்கு - வெளங்கிடும்
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
தண்ணியடிச்சிட்டு சில பேரு போடுவானுங்களே ஆப்பாயிலு அத பத்தியோன்னு நெனச்சி ஒரு நிமிசம் பதறிட்டேன்.....
//////////////////////
அதை பற்றி தீவிர இலக்கியம் இருவரும் படைப்போம் பன்னிக்குட்டி!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
ஹி ஹி ..............ஆப்பாயில் போடுவது எப்படின்னு பிலாசபிய விட்டு ஒரு பதிவு போட சொல்றேன் ....................
நாறீடும் .....................///////
ஏன் அவர் கூமுட்டைலதான் ஆப்பாயில் போடுவாரா?
///////////////////////
சரக்கு கூரைய முட்டினா டபுள் ஆம்லட்டா போடுவார்...!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இப்ப சாப்பாடே அதிகமா சாப்பிடறது கிடையாது அந்தோணி இதுல எங்க ஆப்பாயில் சாப்பிடறது" அப்படினேன் "அப்ப புல்லா சரக்குதானா…?" அப்படினார்//////
அப்பவே இப்படியா...? வெளங்கிரும்.....!
//////////////////////
பீரின்றி அமையாது உலகு...!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்////////
ஈமு கோழி கீமாவா? (அதான் எல்லா பக்கமும் சுத்திட்டு திரியுதாமே?)
//////////////////////////
"ஈமு கோழி கிமா" ஆகச் சிறந்த சொல்லாடல் பன்னிக்குட்டி விரைவில் சேக்ஸ்பியரின் ஹாம்லட் போன்று ஆம்லெட் என்கின்ற காவியத்தைப் படைப்பார்..!
ஆப்பாயில் வென்ற வீரர் வாழ்க!
@குட்டன் said...
ஆப்பாயில் வென்ற வீரர் வாழ்க!
////////////////////////
அதுக்கெதுக்குங்க வீரம்...! சூரம்....! வாயிருந்தாப் போதும் குட்ஸ்!
ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி? என்பது தெரியாமல் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தேன்.
இந்த ஏழைத் தருமியின் மனக்(வயறு)குறையைத் தீர்த்து விட்டீர்கள்.
அடியேனுக்கு ஒரு சிறு ஐயப்பாடு!
குடி நீரை எப்படிக் குடிப்பது?
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
//////devadass snr said...
ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி? என்பது தெரியாமல் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தேன்.
இந்த ஏழைத் தருமியின் மனக்(வயறு)குறையைத் தீர்த்து விட்டீர்கள்.
அடியேனுக்கு ஒரு சிறு ஐயப்பாடு!
குடி நீரை எப்படிக் குடிப்பது?
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்////////
1. குடிநீரை எடுத்து ஒரு டம்ளரில்/சொம்பில் ஊற்றிக் கொள்ளவும்.
2. பின்பு டம்ளரை தூக்கி அண்ணாந்து கொண்டே வாயில் சொர்ர்ர் என்று கவிழ்க்கவும்.
3. வாயில் விழுகும் நீரை மடக் மடக்கென்று குடிக்கவும்.
4. நீர் முடிந்ததும் நிமிரவும்.
5. பின் டம்ளரை கீழே வைக்கவும்.
6. வாயில் நீர் வழிந்திருந்தால் துடைத்துக் கொள்ளவும்.
7. பிறகு போய் வேறு வேலையை பார்க்கவும்.
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்////////
ஈமு கோழி கீமாவா? (அதான் எல்லா பக்கமும் சுத்திட்டு திரியுதாமே?)
//////////////////////////
"ஈமு கோழி கிமா" ஆகச் சிறந்த சொல்லாடல் பன்னிக்குட்டி விரைவில் சேக்ஸ்பியரின் ஹாம்லட் போன்று ஆம்லெட் என்கின்ற காவியத்தைப் படைப்பார்..!////////
ஈமு கோழி முட்டை ஆப்பாயிலை ஒரே வாயில் சாப்பிடுவது எப்படி என்ற காவியத்தை படைப்பதற்காக டிஸ்கசன் ஆரம்பிக்கலாம் என்று நமீதாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைக்கவும்.....!
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
ஹி ஹி ..............ஆப்பாயில் போடுவது எப்படின்னு பிலாசபிய விட்டு ஒரு பதிவு போட சொல்றேன் ....................
நாறீடும் .....................///////
ஏன் அவர் கூமுட்டைலதான் ஆப்பாயில் போடுவாரா?
///////////////////////
சரக்கு கூரைய முட்டினா டபுள் ஆம்லட்டா போடுவார்...!////////
ரெண்டு பக்கமுமா....?
எங்க ஊர்ல எல்லாம் இன்னும் ஆப்பாயில் கலாச்சாரம் வரல.....
எதுனாலும் முழுசா வேக வுட்டு தான் அடிப்போம் :)
///// சாம் ஆண்டர்சன் said...
எங்க ஊர்ல எல்லாம் இன்னும் ஆப்பாயில் கலாச்சாரம் வரல.....
எதுனாலும் முழுசா வேக வுட்டு தான் அடிப்போம் :)////////
எதண்ணே அடிப்பீங்க?
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
1. குடிநீரை எடுத்து ஒரு டம்ளரில்/சொம்பில் ஊற்றிக் கொள்ளவும்.
2. பின்பு டம்ளரை தூக்கி அண்ணாந்து கொண்டே வாயில் சொர்ர்ர் என்று கவிழ்க்கவும்.
3. வாயில் விழுகும் நீரை மடக் மடக்கென்று குடிக்கவும்.
4. நீர் முடிந்ததும் நிமிரவும்.
5. பின் டம்ளரை கீழே வைக்கவும்.
6. வாயில் நீர் வழிந்திருந்தால் துடைத்துக் கொள்ளவும்.
7. பிறகு போய் வேறு வேலையை பார்க்கவும்.
/////////////////////////////
ஆஹா....!எளிதா இருக்கே..!நானும் முயற்ச்சி செய்கின்றேன்.
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு (மனசாட்சி) said...
சிறு வியம்பரம்
மாப்ளே
இந்த பக்கம் வெளங்காதவன் வந்த சொல்லுங்க - பய புள்ள சிக்க மாட்டேங்ககுது சிக்குனா கீமாதான்////////
ஈமு கோழி கீமாவா? (அதான் எல்லா பக்கமும் சுத்திட்டு திரியுதாமே?)
//////////////////////////
"ஈமு கோழி கிமா" ஆகச் சிறந்த சொல்லாடல் பன்னிக்குட்டி விரைவில் சேக்ஸ்பியரின் ஹாம்லட் போன்று ஆம்லெட் என்கின்ற காவியத்தைப் படைப்பார்..!////////
ஈமு கோழி முட்டை ஆப்பாயிலை ஒரே வாயில் சாப்பிடுவது எப்படி என்ற காவியத்தை படைப்பதற்காக டிஸ்கசன் ஆரம்பிக்கலாம் என்று நமீதாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைக்கவும்.....!
/////////////////////////////////////////
நமீதாவேதா வேணுமா...? பமீலா,சகீரா...வேண்டாமா...?
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
ஹி ஹி ..............ஆப்பாயில் போடுவது எப்படின்னு பிலாசபிய விட்டு ஒரு பதிவு போட சொல்றேன் ....................
நாறீடும் .....................///////
ஏன் அவர் கூமுட்டைலதான் ஆப்பாயில் போடுவாரா?
///////////////////////
சரக்கு கூரைய முட்டினா டபுள் ஆம்லட்டா போடுவார்...!////////
ரெண்டு பக்கமுமா....?
///////////////////////
மூணு பக்கமும் போடுவாப்டி....
@சாம் ஆண்டர்சன் said...
எங்க ஊர்ல எல்லாம் இன்னும் ஆப்பாயில் கலாச்சாரம் வரல.....
எதுனாலும் முழுசா வேக வுட்டு தான் அடிப்போம் :)
///////////////////////////
பீரைக் கூட காச்சி குடிப்பீங்களோ...?
@குட்டன் said...
ஆப்பாயில் வென்ற வீரர் வாழ்க!
////////////////////////
அதுக்கெதுக்குங்க வீரம்...! சூரம்....! வாயிருந்தாப் போதும் குட்ஸ்!
ஆமா, வாயில்லன்னா நாயி தூ...க்கிட்டு போயிரும்.
Post a Comment