கால ஓட்டத்தில் காணாமல் போன காதல் வாகனம்!

>> Tuesday, September 18, 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை! ஆனால் தொன்னூறுக்கு முன்னால் சைக்கிள் பலருடைய விருப்ப வாகனமாக இருந்தது, என்னுடைய முதல் சைக்கிள் எங்க தாத்தாவின் அட்லஸ் சைக்கிள்தான் !யாரோ ஒரு வழிப்போக்கன் சாராயத்திற்கு காசு இல்லையென அம்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்று விட்டான், நல்ல எடை இருக்கும். பின்னாடி மக்கார்டில் கிரேக்க கடவுள் பெரிய ஒரு கல்லை சுமந்து கொண்டு இருப்பதைப் போல் ஒரு லோகோ இருக்கும்.

அந்த சைக்கிள்லதான் முதலில் ஓட்டிப் பழகினேன், முக்கோணத்தில் கால் விட்டு குரங்குபெடல் போட்டுப் பழகி, அப்புறம் பார்ல ஏறி... மெதுவா சீட்டுல உக்காந்து... நல்லா ஓட்டிப் பழகுவதற்குள், பல சிராய்ப்பையும், ஒரு பல்லையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது, அப்புறம் எங்க அப்பா எடை குறைந்த ஹீரோ சைக்கிள் பச்சைக்கலர்ல பளபளப்பா புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், புதுசுக்கு கொஞ்சம் டைட்டா இருந்தது, ஆறுமாதத்தில் பூ மாதிரி போக ஆரம்பிச்சது அப்புறம் சைக்கிள் ரேஸ்ல கலந்துக்கற அளவுக்கு தயார் ஆனது.

அதுல சினிமாவுக்கு இரண்டு பேர் பெடல் போட்டுப் போவதும், சைட் அடிக்கப் போவதும், ஆற்றுக்கு மீன் பிடிக்க  போவதும், கூடவே நண்பன் போலவே வரும் சைக்கிள். தினம் அதை துடைத்து சக்கரங்களுக்கு எண்ணை விடுவதும் ஒரு ஆத்மார்தமாக செய்வோம்!

அன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் ராசி இருக்கு, சில சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆயிரும், செயின் கழண்டுக்கும் ஆனால் நம்ம ராசிக்கு ஒர்க்கவுட் ஆன சைக்கிள் சரியா பஞ்சர் கடைகிட்டதான் பஞ்சர் ஆகும், ரிப்பேர் ஆகும். ,நடுகாட்டுல தவிக்க விடாது சிலது படுத்திவிடும்! தள்ள வைத்துவிடும், நம்ம ஹீரோ சைக்கிள் நல்ல ராசி! பழி வாங்காது. சைக்கிள்ல பெட்டி மாட்டுவது, டைனமோ லைட், ஹேண்டில்ல பழைய பாட்டு கேஸட் டேப்பை அழகா வெட்டி மாட்டி விடுறது என்பது பேஷன்! சிலர் ரேடியோ வைச்சுக்குவாங்க பாட்டு கேட்டுட்டே சைக்கிள் ஓட்டிப் போறதுல அலாதி மகிழ்ச்சி! மற்றும் பெருமிதம் அவர்களுக்கு, வீல் போஸ் கம்பியில டிசைன் டிசைனா ஒளிரும் பட்டைகளை மாட்டுவது, பாட்டரியில் இயங்கும் ஹாரன் வைப்பது என்று சைக்கிளை அழகு படுத்துவது என்று ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருக்கும், இந்த மாதிரி அழகு படுத்தலை பள்ளிக்குச் செல்லும் சைக்கிளில் வைக்க முடியாது! மாலை சைக்கிளை எடுக்க வரும்போது  ஒரு பொருளும் இருக்காது.

அதே மாதிரி பஞ்சர் ஒட்டுவதும் ஒரு தனிக்கலை. இன்று ரெடிமேடாக இருக்கின்றது, அன்று பழைய டியூப்பிலேயே அழகாக வட்டமாக வெட்டி ஒட்டுவார்கள், ஓவர் வெயில் உடம்புக்கு ஆகுதோ இல்லையே..! இந்த பஞ்சருக்கு ஆகாது! இளம் வயதில் நம்மை ஓர கண்ணால் பார்க்கும் பிகர்களிடம் படம் காட்டும் போது பஞ்சர் புடிங்கிக்கும்! கூடவே பிகரும் பார்ப்பதை நிறுத்திவிடும், இப்படி சைக்கிள் காலை வாரிவிட்டு பல்பு வாங்கியதில் தேவதாஸ் ஆனவர்கள் நிறைய நபர்கள். எனவே சைக்கிள் ஒரு காதல் வாகனமாகவும் இருந்தது.

அப்புறம் நார்மல் சைக்கிள்களை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நுழைந்தது BSA SLR சைக்கிள். தக்கை மாதிரி லைட் வெயிட் விலையும் அப்பவே இரண்டாயிரம்ன்னு நினைக்கிறேன்! லேடிஸ் வண்டி, ஜென்ஸ் வண்டி என்று வந்தது, யமஹா 100க்கு சமம் அந்த வண்டி! அந்த வண்டியில போனால் கண்டிப்பா ஒரு பத்து பிகராவது லுக்கு விடும், சிலது அந்த வண்டியில போக ஆசைப்பட்டு லிப்ட் கேட்பதும் உண்டு, அந்த வண்டி வேணும்ன்னு வீட்டுல கேட்டதுக்கு நீ வாங்குற மார்க்குக்கு BSA சைக்கிள் கேட்குதா? என தூக்கிப் போட்டு குமுறினார்கள், இதற்காகவே படித்து அரையாண்டில் படித்து மார்க் வாங்கி சைக்கிள் கேட்க...இவ்வளவு விலையில் சைக்கிளா...? யாராவது திருடிட்டு போயிருவாங்க என வாங்கித்தரவில்லை...! ஆனாலும் சைக்கிள் ஆசை என்னை விடவில்லை...!

படித்து முடித்து வேலைக்கு(ஆமா பெரிய கலைக்டர் வேலை) போன போது சிறுக சிறுக சேர்த்து சைக்கிள் வாங்கப் போகும் நேரத்தில் கம்பனியில் TVS50 கொடுத்து விட்டார்கள். அதனால் அடுத்த ஆசை சைக்கிளை விட்டு விட்டு மொபட்டுக்கு தாவியது, அதன் பிறகு கியர் பைக் ஓட்டிப்பழக யமஹா வாங்கினேன், அப்புறம் சைக்கிள் ஆசை காணமல் போனது.

ஒருமுறை பவானியில் ஒரு நண்பரை பார்க்க போனபோது வீட்டின் பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தோம், காம்பவுண்ட் சுவர் ஓரமாக சின்ன வயசுல வாங்க ஆசைப்பட்ட BSA SLR சைக்கிள் பயன்படுத்தாமல் மழை வெயில் என துருப்பிடித்து நின்று கொண்டிருந்தது டயர்கள் எல்லாம் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.....நான் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர் சொன்னார் நான் ஸ்கூல் படிக்கும் போது வாங்கியது தினம் இரண்டு தடவை தேங்காய் எண்ணை போட்டு துடைச்சு பளபளப்பா வெச்சுக்குவேன் அப்படியே மூனாவது வீதியில் மல்லிகா மாலை நேரம் வீதியில் குழந்தைகளோடு உக்காந்து கதை பேசிட்டு இருப்பா ஒரு ரவுண்டு போய் அவளை பார்த்துட்டு வருவேன். அவள் ஞாபகமா வெச்சிருக்கேன், ஆனால் பயன்படுத்துவதில்லைன்னு சொன்னார்.அந்த சைக்கிளைப் பார்த்தேன்  பல கதைகளை அது தனக்குள்ளே வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக நிற்பதைப் போல் தெரிந்தது அந்த சைக்கிள்!

69 comments:

Manimaran 8:59:00 PM  

சைக்கிளைப் பற்றி இப்ப நெனைச்சுப் பார்த்தா.. நம்மோடு வாழ்ந்து மறைந்த ஒரு உயிருள்ள ஜீவனைப்போலத்தான் தெரிகிறது.... ரொம்ப நெகிழ்வான பதிவு...

Anonymous,  9:02:00 PM  

எனக்கு கூட ஒரு அனுபவம் உண்டு. எங்க தெரு பியூட்டி எதிரில் வரும் போது வேகமாக ஏறி மிதிக்க முயன்றேன். படக்கென்று செயின் அறுந்து கீழே விழுந்தேன். அவள் கொல்லென்று சிரிக்க மானம் போனது தான் மிச்சம்.

பட்டிகாட்டான் Jey 9:02:00 PM  

மச்சி பழையபடி.. பழையபடி சைக்கிள் வாங்கி ஓட்டமுடிவு பண்ணிட்டேன். தூரமா போகமட்டும் மோட்டார் சைக்கிள். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும் :-)))

anubavi raja anubavi 9:03:00 PM  

Nyabagam varudhe nyabagam varudhe

நாய் நக்ஸ் 9:09:00 PM  

Engaya...
Ooththa
masuru.....

Ivai
illaamal
pathivaaaa...?????

Shem....shem....

கார்த்திக் சரவணன் 9:19:00 PM  

நான் சைக்கிளுக்காக எங்கப்பாவிடம் சண்டை போட்டு, அடி வாங்கி, ஹூம்....

ராஜ் 9:25:00 PM  

என்னுடைய பாலிய நண்பனான Atlas சைக்கிளை ஞாபக படுத்தி விட்டது இந்த பதிவு... :)

நம்பள்கி 9:36:00 PM  

///கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை! ///

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! நான் சென்னைக்கு வந்தபோது சைக்கிளை உபயயோகப்படுத்தினேனே! 2010 - ல்!

இங்கு, எங்கள் வீட்டில் நாலு பேர்; ஐந்து சைக்கிள்கள் உண்டு!

மறுத்துவர்கள், மற்றும் ஒரு மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு சம்பாதிக்கும் பல்கலை டாகடர் பேராசிரியர்கள் இங்கு சைக்கிளில் தான் வருவார்கள்; கோடையில் அரை டிராயரிலும் வருவார்கள்! இதில் நோபெல் பரிசு வாங்கினவரும் உண்டு!!!

நம்ம ஊர் தட்பவெட்பம் வருடம் முழுவதும் இருந்தால்...எல்லோரும் சைக்கிள் தான்; மூன்று மாதம் இங்கு மழை; அதனால் தான் அப்போது சிலர் காரில்; அடாது மழை பெய்தாலும், மழைக் கோட்டு போட்டும் வருவார்கள் வேலைக்கு!

Unknown 9:51:00 PM  

ஓல்டு சைக்கிள் எனக்கு வந்து சேரும்போது...பள்ளி 5 கிமீ தூரம்...அதன் பின் ரெம்ப காலம் என்னுடன் இருந்தது காலேஜ் முடிக்கும் வரை...இன்று மாமாவின் வீட்டில் அவருக்கு ஒத்தாசையா இருக்கு...அதுல போற ஸ்டைலே தனிதான்...என்னதான் பைக் வந்தாலும்...அப்போ வெயிட் எங்கயா இருந்துச்சி...மனசும் எப்பவும் பச்சைப்பசேல்னு இல்ல இருந்திச்சி...!

K.s.s.Rajh 10:07:00 PM  

எங்கள் நாட்டில் எங்கள் ஊர்களில் இன்னும் வாழ்கின்றது சைக்கிள்

சசிமோஹன்.. 10:41:00 PM  

பெட்ரோல் விலை ஏற்றத்தில் நாம் மீண்டும் சைக்கிளுக்கு திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை .....
சைக்கிள் காதலன் ##

செய்தாலி 10:48:00 PM  

சைக்கிள் பற்றிய மலரும் நினைவுகள்
ம்ம்ம் ..அருமை தோழரே

MARI The Great 10:50:00 PM  

இந்த BSA சைக்கிள் வந்தப்போ அந்த சைக்கிள் வச்சிருந்தவர்களுக்கு இருந்த மதிப்பு.. இப்போ கார் வச்சிருக்குரவனுக்கு கூட இல்லைன்னு சொன்னா மிகையில்லை! :)

ஒரு காலத்தில் கிராமங்களில் புதுசா யாராவது சைக்கிள் வாங்கினா.. கிராமத்தில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்க்க வருவார்கள் என்று சொல்வார் என் தந்தை!

இப்போ ஒருத்தன் கார் வாங்குனாகூட எவனும் கண்டுக்கிரதில்லைங்றது வேற விஷயம்! :)

Yaathoramani.blogspot.com 11:23:00 PM  

நான் எனது முதல் சம்பளத்தில் வாங்கிய
அட்லஸ் சைக்கிள் கொடுத்த சந்தோசத்தை
இப்போது வாங்கிய எந்த வாகனமும் தரவில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous,  11:38:00 PM  

/// FOOD NELLAI said...

//ஆரூர் மூனா செந்தில்
நேற்றுப் பிறந்த புள்ளைக்கு, அதுக்குள்ள சைக்கிளில் சென்று சைட் கேக்குதோ! :)) ///

அய்யோ அண்ணே, இப்படி போட்டு வாரிப்புட்டிங்களே.

Anonymous,  11:41:00 PM  

யோவ் சுரேசு. பின்னூட்டம் போட்டவங்களுக்கு பதிலச் சொல்லுய்யா. பெரிய பிரபல பதிவர்னு நினைப்போ.

Unknown 11:46:00 PM  

@Manimaran said...
சைக்கிளைப் பற்றி இப்ப நெனைச்சுப் பார்த்தா.. நம்மோடு வாழ்ந்து மறைந்த ஒரு உயிருள்ள ஜீவனைப்போலத்தான் தெரிகிறது.... ரொம்ப நெகிழ்வான பதிவு...
//////////////////////
உண்மைதான் சில பொருள்கள் நம்மோடு வாழ்ந்து...நாம் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும்.

Unknown 11:47:00 PM  

@ஆரூர் மூனா செந்தில் said...
எனக்கு கூட ஒரு அனுபவம் உண்டு. எங்க தெரு பியூட்டி எதிரில் வரும் போது வேகமாக ஏறி மிதிக்க முயன்றேன். படக்கென்று செயின் அறுந்து கீழே விழுந்தேன். அவள் கொல்லென்று சிரிக்க மானம் போனது தான் மிச்சம்.
///////////////////////////
பல்புக்கு சேதாரம் இல்லையே..மச்சி! அவ்வ்வ்வ்!

Unknown 11:49:00 PM  

@பட்டிகாட்டான் Jey said...
மச்சி பழையபடி.. பழையபடி சைக்கிள் வாங்கி ஓட்டமுடிவு பண்ணிட்டேன். தூரமா போகமட்டும் மோட்டார் சைக்கிள். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும் :-)))
///////////////////////////
நானும் சைக்கிள் ஓட்டனும் என்று நினைக்கிறேன் குறுகிய ரோட்டுல மெதுவா ஓட்ட பயமா இருக்கு!பின்னாடி கொண்டு வந்து சாத்திருவாங்களோன்னு!

Unknown 11:50:00 PM  

@anubavi raja anubavi said...
Nyabagam varudhe nyabagam varudhe
///////////////////////
அப்படியே ஞாபகத்திலேயே சைக்கிள்ல ஒரு ரவுண்டு போயிட்டு வாங்கண்ணே!

Unknown 11:53:00 PM  

@FOOD NELLAI said...
மலரும் நினைவுகள், மகிழ்ச்சியில் சிறகுகள் விரித்து பறந்துள்ளது.
////////////////////
ஆமா..சார் மறக்க முடியாத வாகனம்

சைக்கிள் கத்துகிட்ட எல்லாரும் வீரத்த்ழும்புகள் வாங்குவது இயற்கைதானே. :)
///////////////////////
எனக்கு அதிகமா முட்டியும் ஒரு பல்லும்..பேந்திருக்கு

நேற்றுப் பிறந்த புள்ளைக்கு, அதுக்குள்ள சைக்கிளில் சென்று சைட் கேக்குதோ! :))
//////////////////////////////
நல்லா கேளுங்க சார்!

Unknown 11:54:00 PM  

@நாய் நக்ஸ் said...
Engaya...
Ooththa
masuru.....

Ivai
illaamal
pathivaaaa...?????

Shem....shem....
///////////////////
நக்ஸ் உன் கவிதையை நான் படிக்கலை...!
நான் ஏழை பதிவர் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன்!

Unknown 11:55:00 PM  

@ஸ்கூல் பையன் said...
நான் சைக்கிளுக்காக எங்கப்பாவிடம் சண்டை போட்டு, அடி வாங்கி, ஹூம்....
//////////////////////
நீங்களும் நம்ம இனம் போல......!

Unknown 11:57:00 PM  

@ராஜ் said...
என்னுடைய பாலிய நண்பனான Atlas சைக்கிளை ஞாபக படுத்தி விட்டது இந்த பதிவு... :)
////////////////////////
ஆமாம் ராஜ்! அட்லஸ்,ஹெர்குலஸ் சைக்கிள்கள் ரொம்ம வெயிட் உயரமும் அதிகம் ஆனால் ஓட்டுவதுக்கு சூப்பரா இருக்கும்!

Unknown 12:02:00 AM  

நம்பள்கி said...
///கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை! ///

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! நான் சென்னைக்கு வந்தபோது சைக்கிளை உபயயோகப்படுத்தினேனே! 2010 - ல்!

இங்கு, எங்கள் வீட்டில் நாலு பேர்; ஐந்து சைக்கிள்கள் உண்டு!

மறுத்துவர்கள், மற்றும் ஒரு மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு சம்பாதிக்கும் பல்கலை டாகடர் பேராசிரியர்கள் இங்கு சைக்கிளில் தான் வருவார்கள்; கோடையில் அரை டிராயரிலும் வருவார்கள்! இதில் நோபெல் பரிசு வாங்கினவரும் உண்டு!!!

நம்ம ஊர் தட்பவெட்பம் வருடம் முழுவதும் இருந்தால்...எல்லோரும் சைக்கிள் தான்; மூன்று மாதம் இங்கு மழை; அதனால் தான் அப்போது சிலர் காரில்; அடாது மழை பெய்தாலும், மழைக் கோட்டு போட்டும் வருவார்கள் வேலைக்கு!
///////////////////////////////////////
இன்னும் சைக்கிள் பயன்படுத்துவபவர்கள் இருக்கின்றார்கள்...வீட்டில் ஆளுக்கு ஒரு சைக்கிள் வைத்திருந்த காலம் போய் இப்பொழுது அதனிடத்தை மோட்டார் சைக்கிளும் கார்களும் பிடித்து விட்டன..சென்னை ரோடு அகலமாக சைக்கிள் ஓட்ட ஏதுவாக இருக்கின்றது இங்க திருப்பூர்,ஈரோடு, கோவையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டுவது அபாயகரமானதாகவே இருக்கின்றது சீனாவைப் போல் ரோட்டில் சைக்கிளுக்கென்று தனி ட்ரேக் இருக்கும் பட்சத்தில் இந்தியர்கள் மனதில் சைக்கிள் மீண்டும் வரும்.

Unknown 12:04:00 AM  

@விக்கியுலகம் said...
ஓல்டு சைக்கிள் எனக்கு வந்து சேரும்போது...பள்ளி 5 கிமீ தூரம்...அதன் பின் ரெம்ப காலம் என்னுடன் இருந்தது காலேஜ் முடிக்கும் வரை...இன்று மாமாவின் வீட்டில் அவருக்கு ஒத்தாசையா இருக்கு...அதுல போற ஸ்டைலே தனிதான்...என்னதான் பைக் வந்தாலும்...அப்போ வெயிட் எங்கயா இருந்துச்சி...மனசும் எப்பவும் பச்சைப்பசேல்னு இல்ல இருந்திச்சி...!
/////////////////////////////
நான் ஆறாவதிலிருந்து சைக்கிளில் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு சென்றேன். ஆனால் இன்று அடுத்த வீதியில் இருக்கும் பள்ளிக்கு பைக் அல்லது காரில்தான் குழந்தைகள் போகின்றார்கள்.

Unknown 12:07:00 AM  

@K.s.s.Rajh said...
எங்கள் நாட்டில் எங்கள் ஊர்களில் இன்னும் வாழ்கின்றது சைக்கிள்
///////////////////////
உங்கள் ஊர் சைக்கிள் மறக்க முடியாதது. இதுல பல விசயம் இருக்கு!

Unknown 12:08:00 AM  

@sasemkumar said...
பெட்ரோல் விலை ஏற்றத்தில் நாம் மீண்டும் சைக்கிளுக்கு திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை .....
சைக்கிள் காதலன் ##
/////////////////////
அப்பவாவது தொப்பை குறையட்டும் பிரபல புதிய பதிவரே!

Unknown 12:09:00 AM  

@செய்தாலி said...
சைக்கிள் பற்றிய மலரும் நினைவுகள்
ம்ம்ம் ..அருமை தோழரே
/////////////////////
நன்றி தோழரே! என்றும் மலரும் நினைவுகள் சைக்கிள்!

Unknown 12:10:00 AM  

@வரலாற்று சுவடுகள் said...
இந்த BSA சைக்கிள் வந்தப்போ அந்த சைக்கிள் வச்சிருந்தவர்களுக்கு இருந்த மதிப்பு.. இப்போ கார் வச்சிருக்குரவனுக்கு கூட இல்லைன்னு சொன்னா மிகையில்லை! :)

ஒரு காலத்தில் கிராமங்களில் புதுசா யாராவது சைக்கிள் வாங்கினா.. கிராமத்தில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்க்க வருவார்கள் என்று சொல்வார் என் தந்தை!

இப்போ ஒருத்தன் கார் வாங்குனாகூட எவனும் கண்டுக்கிரதில்லைங்றது வேற விஷயம்! :)
////////////////////////////////
ஆண்,பெண் இருபாலாரையும் கவந்த சைக்கிள் அது அதற்காக ஏங்கிய காலங்கள் மறக்க முடியாதது!

Unknown 12:12:00 AM  

@Ramani said...
நான் எனது முதல் சம்பளத்தில் வாங்கிய
அட்லஸ் சைக்கிள் கொடுத்த சந்தோசத்தை
இப்போது வாங்கிய எந்த வாகனமும் தரவில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
/////////////////////////
உண்மைதான் சார்...!அப்ப அட்லஸ்க்கு பின்னாடி நிறைய கதைகளும் கவிதைகளும் இருக்கும்ன்னு நினைக்கின்றேன்!

முத்தரசு 12:13:00 AM  

//அப்புறம் பார்ல ஏறி//

அப்பவேவா

Unknown 12:14:00 AM  

@ஆரூர் மூனா செந்தில் said...
யோவ் சுரேசு. பின்னூட்டம் போட்டவங்களுக்கு பதிலச் சொல்லுய்யா. பெரிய பிரபல பதிவர்னு நினைப்போ.
//////////////////////////
ஐயா....பிரபல பதிவர் ஆருர்மூனா ஐயா..!கொஞ்சம் வெளிய போயிட்டேன் இப்ப எல்லாருக்கும் பதில் சொல்லிட்டேன்! டேங்ஸ்!

Unknown 12:18:00 AM  

@மனசாட்சி™ said...
//அப்புறம் பார்ல ஏறி//

அப்பவேவா
///////////////////
மாமர் அவர்களே...! பார் என்பது குரங்கு பெடலுக்கு அடுத்த செமஸ்டர்...! குடிக்கும் இடம் அல்ல...!

அந்த பேரைக்கேட்டாலே எனக்கு அலர்ஜி!குடிக்கறவங்களை கண்டாலே எனக்கு பிடிக்காது!

முத்தரசு 12:18:00 AM  

மாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே

Unknown 12:20:00 AM  

@மனசாட்சி™ said...
மாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே
///////////////////
அப்ப மாம்ஸ் கிட்டயும் ஒரு ஜொள்ளு லொல்லு இருக்கு.....!

Anonymous,  12:20:00 AM  

பள்ளிக்காலத்தில் நண்பனின் ஓசி சைக்கிளில்தான் ஏரியாவை சுற்றினேன். சிகப்பு மற்றும் நீலக்கலரில் இருக்கும் பி.எஸ்.ஏ. தான் அப்போது சூப்பர் ஸ்டார்.

முத்தரசு 12:21:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
//அப்புறம் பார்ல ஏறி//

அப்பவேவா
///////////////////
மாமர் அவர்களே...! பார் என்பது குரங்கு பெடலுக்கு அடுத்த செமஸ்டர்...! குடிக்கும் இடம் அல்ல...!

அந்த பேரைக்கேட்டாலே எனக்கு அலர்ஜி!குடிக்கறவங்களை கண்டாலே எனக்கு பிடிக்காது!

பார்ரா.....சேம் ப்ளட். எனக்கு கூட அப்படித்தான் - எப்படித்தான் குடிக்கிறாங்களோ - அவுக கிட்ட எல்லாம் சகவாசமே வச்சுக்கமாட்டேனாக்கும்

Unknown 12:23:00 AM  

! சிவகுமார் ! said...
பள்ளிக்காலத்தில் நண்பனின் ஓசி சைக்கிளில்தான் ஏரியாவை சுற்றினேன். சிகப்பு மற்றும் நீலக்கலரில் இருக்கும் பி.எஸ்.ஏ. தான் அப்போது சூப்பர் ஸ்டார்.
/////////////////////////
அதே..!அதே...!அப்ப டபுள்ஸ்ல போயிருக்கிறீங்க...?

முத்தரசு 12:23:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
மாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே
///////////////////
அப்ப மாம்ஸ் கிட்டயும் ஒரு ஜொள்ளு லொல்லு இருக்கு.....!//\

மாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்

Unknown 12:25:00 AM  

@மனசாட்சி™ said...

பார்ரா.....சேம் ப்ளட். எனக்கு கூட அப்படித்தான் - எப்படித்தான் குடிக்கிறாங்களோ - அவுக கிட்ட எல்லாம் சகவாசமே வச்சுக்கமாட்டேனாக்கும்
//////////////////////
ஆமாம் மாம்ஸ்! எப்படித்தான் குடிக்கிறாங்களோ....!உவ்வே!

Unknown 12:26:00 AM  

@மனசாட்சி™ said...

மாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்
//////////////////////

கண்டிப்பா உக்காந்து பேசுவோம் அதே பார்ல....!அவ்வ்வ்வ்!

முத்தரசு 12:28:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...

மாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்
//////////////////////

கண்டிப்பா உக்காந்து பேசுவோம் அதே பார்ல....!அவ்வ்வ்வ்!
//

வனிதாமணி அவள் மோகினி (விக்ரம் படம்) இந்த பாட்டும் அவுக பேரும் அட அட அது ஒரு கானா காலம்

முத்தரசு 12:29:00 AM  

மாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல

Unknown 12:32:00 AM  

@மனசாட்சி™ said...

வனிதாமணி அவள் மோகினி (விக்ரம் படம்) இந்த பாட்டும் அவுக பேரும் அட அட அது ஒரு கானா காலம்
///////////////////////
அடேயப்பா....!ஒரு படமே ஓடியிருக்கு...!

Unknown 12:33:00 AM  

@மனசாட்சி™ said...
மாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல
///////////////////
பார்ல மட்டும் தானே...?

முத்தரசு 12:36:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
மாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல
///////////////////
பார்ல மட்டும் தானே...? //

பார்ல மட்டும் தான்......தெய்வீக உணர்வு மாப்ள தெய்வீக உணர்வு அது உங்களுக்கெல்லாம் புரியாது இன்னும் வளரனும்

Unknown 12:39:00 AM  

மனசாட்சி™ said...
//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
மாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல
///////////////////
பார்ல மட்டும் தானே...? //

பார்ல மட்டும் தான்......தெய்வீக உணர்வு மாப்ள தெய்வீக உணர்வு அது உங்களுக்கெல்லாம் புரியாது இன்னும் வளரனும்
/////////////////////////////////////
அக்காவுக்கு தெரிஞ்சா பூரிகட்டை பறக்கும்..!தெய்வீக உணர்வாம்..!டெய்வீக உணர்வு!

சித்திரவீதிக்காரன் 12:42:00 AM  

இன்னும் சைக்கிளில்தான் பயணிக்கிறேன். சைக்கிள் அருமையான நண்பன். நம் மனநிலைக்கு ஏற்ப உடன் வருவதில் சைக்கிளுக்கு ஈடுஇணையாகாது. எந்த நகர நெரிசலிலும் சந்துபொந்தில் செல்வதற்கு சைக்கிள் போல வேறு எதிவும் வராது. 'சைக்கிள் கேப்புல' என்று பேச்சு வழக்கில் சொல்வது இதைத்தான் போல.
நல்ல பதிவு. அருமையான படங்கள்.

sathishsangkavi.blogspot.com 12:46:00 AM  

சைக்கிள் ஓட்டுவது அற்புதமான உடற்பயிற்சியும் கூட...

கேரளாக்காரன் 6:56:00 AM  

அன்ஃபார்ச்சுனேட்லி

எனக்கு இன்னிக்கு வர சைக்கிளும் ஓட்ட வராது

ஃபிக..ம் ஓட்ட வராது

குட்டன்ஜி 8:05:00 AM  

சரிதான் சகோ!சைக்கிள் பல நினைவுகளைக் கிளறித்தான் விடுகிறது,அருமை
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

சுதா SJ 2:28:00 PM  

பழைய நினைவுகளை கிளறி விட்டீங்க பாஸ் :))

சைக்கிள் மறக்கவா முடியும்.. என்னுடைய அந்த சிகப்பு நிற அரைச்சாக்கில் இப்பவும் நினைவில் :((

ezhil 11:23:00 PM  

அருமையான மலரும் நினைவுகள். பெட்ரோல் விலை ராக்கெட் மாதிரி ஏறுவதைப் பார்த்தால் எல்லோருமே சைக்கிளுக்கு மாறிடலாம். உடலுக்கும் மனசுக்கும் முக்கியமா ப்ர்சுக்கும் நல்லது. என்ன பாகன் பார்த்த எஃபெக்டா?

Unknown 1:50:00 AM  

வூடு சுரேஷ்குமார் அண்ணே... சும்மா சைக்கிள்ளேயே வூடு கட்டிட்டீங்களே..சும்மா சொல்லக் கூடாது.. எல்லாருடைய அந்த பழைய கால நினைவுகளையும் மறுபடி ரிகர்சல் பாக்க வச்சுட்டீங்க... ஆனா தலைவா , இந்த தலைமுறைக்கு அந்தப் பொற்காலங்கள் புரிந்திருக்காது...என்னவோ நம்மள மாதிரி சிவாஜி எம்ஜியார் படங்களை ஓடி ஓடி ரசிச்ச ஆளுங்களுக்கு வேணும்னா இதொரு விருந்தா அமையும்... என்னாங்கறீங்க..?

Unknown 4:21:00 AM  

@சித்திரவீதிக்காரன் said...
இன்னும் சைக்கிளில்தான் பயணிக்கிறேன். சைக்கிள் அருமையான நண்பன். நம் மனநிலைக்கு ஏற்ப உடன் வருவதில் சைக்கிளுக்கு ஈடுஇணையாகாது. எந்த நகர நெரிசலிலும் சந்துபொந்தில் செல்வதற்கு சைக்கிள் போல வேறு எதிவும் வராது. 'சைக்கிள் கேப்புல' என்று பேச்சு வழக்கில் சொல்வது இதைத்தான் போல.
நல்ல பதிவு. அருமையான படங்கள்.
////////////////////////////
உண்மைதான் சைக்கிள் நம் மனநிலைக்கு ஏற்ப உடன்வரும் நண்பனும் கூட...!

Unknown 4:22:00 AM  

@சங்கவி said...
சைக்கிள் ஓட்டுவது அற்புதமான உடற்பயிற்சியும் கூட...
//////////////////////////////
டிரட்மில்ல விட இது சுகமானதுதான்...!சங்கவி!

Unknown 4:23:00 AM  

@கேரளாக்காரன் said...
அன்ஃபார்ச்சுனேட்லி

எனக்கு இன்னிக்கு வர சைக்கிளும் ஓட்ட வராது

ஃபிக..ம் ஓட்ட வராது
////////////////////
கொடைக்கானல்,ஊட்டி பசங்களும் அதிகமா சைக்கிள் ஓட்டமாட்டாங்க...அதுபோலன்னு நினைக்கிறேன்...!

Unknown 4:24:00 AM  

@குட்டன் said...
சரிதான் சகோ!சைக்கிள் பல நினைவுகளைக் கிளறித்தான் விடுகிறது,அருமை
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
///////////////////
கருத்துக்கு நன்றி படிக்கின்றேன்..சகோ!

Unknown 4:26:00 AM  

@துஷ்யந்தன் said...
பழைய நினைவுகளை கிளறி விட்டீங்க பாஸ் :))

சைக்கிள் மறக்கவா முடியும்.. என்னுடைய அந்த சிகப்பு நிற அரைச்சாக்கில் இப்பவும் நினைவில் :((
////////////////////////////
சிகப்பு நிற சைக்கிள் முன் பாரில் அமந்து டபுள்ஸ் சென்ற ஞாபகம் வருதோ...?துஷி!

Unknown 4:27:00 AM  

@ezhil said...
அருமையான மலரும் நினைவுகள். பெட்ரோல் விலை ராக்கெட் மாதிரி ஏறுவதைப் பார்த்தால் எல்லோருமே சைக்கிளுக்கு மாறிடலாம். உடலுக்கும் மனசுக்கும் முக்கியமா ப்ர்சுக்கும் நல்லது. என்ன பாகன் பார்த்த எஃபெக்டா?
/////////////////
சைக்கிளை மறுபடியும் எண்ணை விட்டு ரெடி பண்ணியாச்சு...! பாகன் இன்னும் பார்க்கவில்லைங்க....!

Unknown 4:29:00 AM  

@சுந்தரவடிவேலு said...
வூடு சுரேஷ்குமார் அண்ணே... சும்மா சைக்கிள்ளேயே வூடு கட்டிட்டீங்களே..சும்மா சொல்லக் கூடாது.. எல்லாருடைய அந்த பழைய கால நினைவுகளையும் மறுபடி ரிகர்சல் பாக்க வச்சுட்டீங்க... ஆனா தலைவா , இந்த தலைமுறைக்கு அந்தப் பொற்காலங்கள் புரிந்திருக்காது...என்னவோ நம்மள மாதிரி சிவாஜி எம்ஜியார் படங்களை ஓடி ஓடி ரசிச்ச ஆளுங்களுக்கு வேணும்னா இதொரு விருந்தா அமையும்... என்னாங்கறீங்க..?
////////////////////////////////
உண்மைதான் எங்க ஊர் டுரிங்டாக்கிஸ்க்கு சைக்கிள்ல போகின்ற சுகம் இன்னிக்கு எந்த மல்டி பிளஸ்லும் வராதுங்க சுந்தரவடிவேல் சார்!

Unknown 9:37:00 AM  

ஒவ்வொரு சைக்கிளிற்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அவை இன்றைய வாகனங்களுக்குத் தெரியாது!

கோவை நேரம் 12:00:00 AM  

மாம்ஸ்...பழைய நினைவுகளை கிளறி விட்டு மனச புண்ணாக்கி விட்டீர்.
நானும் கிட்ட தட்ட 6 வயசிலிருந்தே காலேஜ் படிக்கிற வரை என்னோட நண்பனாக இருந்தது.

அ. வேல்முருகன் 2:50:00 AM  

நான் கூட சைக்கிள்ல பின் சீட்டை கழற்றி வைத்து ஓட்டியவன். நினைவுகளை கிளறிய பதிவு

K 11:05:00 PM  

சைக்கிள்களின் படங்களைப் பார்க்க மனசு கனக்கிறது சுரேஷ்! ஒரு காலத்தில் எங்களீன் கனவு தேவதை சைக்கிள்தானே? நாம் சிறியவர்களாக இருக்கும் போது, எம் பெற்றோர் எமக்கென்று ஒரு சைக்கிளை வாங்கித் தரும் அந்த நாளை, பெரிய திருவிழா போலவே கொண்டாடுவோம்!

அருமையான நினைவுகளை மீட்டிய நல்ல பதிவு.

mubarak kuwait 11:49:00 PM  

நல்ல பதிவு, மலரும் நினைவுகள், பத்து கிலோமீட்டர் தினம் சைக்கிள் ஒட்டியவன் நான், உண்மையில் சைக்கிள் ஒரு நல்ல நண்பன்னே, நான் கொஞ்சம் உயரம் அதிகம், ஒரு முறை புதுவையில் நோ பார்கிங் (வாகனம் நிருத்தா இடம்) அவசரம் காரணமாக நிறுத்து விட்டேன். காவலர் (traffic police) எடுத்துக்கொண்டு காவல் நிலையம் செல்ல என் சய்களில் ஏறி உட்கார்ந்து உடனே குதித்து விட்டு இந்தா இத எடுத்துட்டு ஓடு என்று கொடுத்து விட்டார் இருக்கை அவ்ளோ உயரமாக வைத்திருப்பேன். இல்லை என்றால் அன்னிக்கி ஏன் பக்கெட் காலி

முனைவர் இரா.குணசீலன் 9:29:00 AM  

மலரும் நினைவுகள் மறக்கமுடியாதவை நண்பா..

நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பக்கம் வருகிறேன்.

வலை வடிவமைப்பு அருமையாகவுள்ளது.

Ravichandran M 1:28:00 AM  

malarum ninaivugal!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP