என் பெயர் கல்யாணராமன்!

>> Saturday, September 1, 2012



இந்த பதிவுலகம் பல விசித்திரமான பதிவுகளை கண்டிருக்கின்றது..! புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கின்றது...! இந்த பதிவு விசித்திரமானதும் அல்ல...!எழுதிய நானோ..! கொஞ்சம் விசித்திரமானவன்.!   இங்கே பாருங்கள்..! என் தலையில் கொம்பு முளைத்துக் கொண்டிருக்கின்றது.

பல காலம் பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் சாதாரண ஜீவன்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் இணைத்துப் பார்த்தேன். இண்ட்லி,யுடான்ஸ் என்று இணைத்துப் பார்த்தேன் எலக்கியம் என்று பிதற்றினேன்...திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூட த.ம.4 எனக் கருத்திடவில்லை அய்யகோ..! என்ன கொடுமை.

வெறுத்துப் போய் கூகுள் பிளஸ் பக்கம் ஒதுங்கினேன்... ஏழுமலை, ஏழுகடல் தாண்டி ஒரு மரம்! மரத்தினில் ஒரு பொந்து, பொந்தினில் ஒரு மடல், ஏதோ பதிவர் சந்திப்பாம்...! எனக்கு ஏது? நேரம் தம்பி! அதைப் படிக்க... அதனால் விட்டுவிட்டேன்....ஆனாலும் வேகின்றது என் கும்பி!

எங்களால் முடியாததை யாரோ...?சாதிக்கின்றார்கள் அவர்களுக்கு யார் கொடுத்தது அத்தாரிட்டி! அவர்கள் எதையாவது அறிவுப்பூர்வமான செய்து வைக்க நாங்களும் அறிவாளிகள் என்று உலகம் நம்புமே...! அதை நாங்கள் விரும்பவில்லை...!

சந்திப்பு, சென்னை, பதிவர், நாய்நக்ஸ் இந்த பெயர்களை கேட்டாலே எனக்கு வாந்தி...வாந்தியாக வருகின்றது. பேதி நிற்காமல் போகின்றது....! மற்றும் இதில் கலந்து கொண்டவர்களில் இருவரை மட்டும் எனக்குத் தெரியும் ஒன்று உ.த, இரண்டு மண்டபத்தின் வாட்ச்மேன் தாத்தா?!

பதிவர் சந்திப்பிலே எப்படி போண்டா தரலாம்...? அதுவும் சட்னியோடு.... யார் இந்த அதிகாரம் கொடுத்தது...? சாம்பாரிலே முருங்கக்காய் எப்படிப் போடலாம்....? கில்மா பதிவர் சிபிய வைத்துக்கொண்டு.....! அடல்ட் கார்னர் கேபிளை வைத்துக் கொண்டு....! யார் இந்த அதிகாரம் கொடுத்தது...?

அட்லீஸ்ட் என்னை மூத்த பதிவர்கள், இளையபதிவர்கள், என்றில்லாமல் நட்டநடுசென்டர் பதிவர் லிஸ்டிலாவது சேர்த்திருக்கலாம் இந்த பதிவுலகம்..! செய்ததா...? செய்யவில்லை..!

கடைசிக்கு ஒரு குருவி காலிலாவது கட்டித் தூது அனுப்பியிருக்கலாம்.....! செய்ததா...? செய்யவில்லை..! கேட்டால் நான் வறுத்து தின்றதாக கூறுகின்றார்கள்.

என்னை அந்தியூர் வெற்றிலை, கும்பகோணம் கொட்டைப்பாக்கு, வைத்து அழைத்திருக்க வேண்டும்! என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்....செய்ததா இந்த பதிவுலகம்..? செய்யவில்லை.....!

அதனால் கடுப்பில் ஓடினேன்.....ஓடினேன்.......ஓடினேன்.......ஓடினேன்....... சென்னையின் எல்லை வரை ஓடினேன்..! கடல் வந்து விட்டது. கால் உவாய்க்கு சுண்டல் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டேன்...!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

27 comments:

அஞ்சா சிங்கம் 11:22:00 PM  

அம்மாம் இவரை கொட்டை பாக்கு வச்சு அழைத்தால்தான் வருவாராக்கும் ................
நோ டபுள் மீனிங் ஒன்லி சிங்கள் மீனிங் ..........

Prem S 11:29:00 PM  

திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூட த.ம.4 எனக் கருத்திடவில்லை//

ஹா ஹா நக்கல் தெறிக்கும் வரிகள்
முழுவதும் ரசித்தேன்

அனுஷ்யா 12:05:00 AM  

திருவாளர் "பேதி காமிரா" அவர்களே..... பதிவு அருமை.... :)

ராஜ் 12:07:00 AM  

ஐய்கோ..இந்த பாதிவு உலகம் மாபறும் தவறு செய்து விட்டாது... :):)
பாஸ்,
செம நக்கல், காமெடி உங்களுக்கு செமையா வருது..என்ன பதிவு ரொம்ப சின்ன்னதா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஒட்டி இருக்கலாம்..

காட்டான் 12:16:00 AM  

மாப்பிள உங்கள கொட்டைப்பாக்கு வைச்சு அழைக்கும் அளவுக்கு நீங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரா சொல்லவேயில்ல...!! ;-)

MARI The Great 12:28:00 AM  

இந்த பதிவை படிப்பவர்களுக்கு வாந்தி பேதி வராமல் இருந்தால் சரி! :D :D

கேரளாக்காரன் 12:38:00 AM  

உருக்கமான பதிவு

கலைங்கர் டேசோ மானாட மயிலாட முடிந்ததும் இதே மாதிரிதான் கடிதம் எழுதுவார்

கேரளாக்காரன் 12:40:00 AM  

த ம பட்டையை காணவில்லை ஆனாலும் த ம (2012)

திண்டுக்கல் தனபாலன் 12:41:00 AM  

ஹா.. ஹா... எல்லாம் என் குரு ரமணி சாரின் (tha. ma.) ஆசீர்வாதம்...

என்னங்க தமிழ் மணத்தை தூக்கிட்டீங்களா...?

கேரளாக்காரன் 12:42:00 AM  

சுவாரஸ்யமான அசத்தலான பதிவு...... உடான்ஸ்(3) முகபுத்தக லைக் (4) இண்ட்லி (2) தமிழ் 10(11)

கேரளாக்காரன் 12:59:00 AM  

என்னுடய கணித ஆர்வத்தை இன்றைய பதிவு சீடழித்து விட்ட்து... நேற்று ரிலீஸான சேட்டை திரைப்பட ட்ரைலர் சம்மந்தமாக ஏதேனும் எழுதி இருந்த பட்சத்தில் 68 ஐ தாண்டி எல்லாம் முயற்ச்சிக்கலாம் என இருந்தேன்... இப்போ பாருங்க பாதிலயே கெளம்பரமாதிரி வந்துருச்சு

சென்னை பித்தன் 1:31:00 AM  

என்னா குத்து!கும்மாங்குத்து!

முத்தரசு 1:36:00 AM  

சின்ன வீடு சிலிரிர்க்குது.....

முத்தரசு 1:38:00 AM  

//நட்டநடுசென்டர் பதிவர் //

பிரியல

எல் கே 1:39:00 AM  

இன் வெரி பேட் டெஸ்ட். அவர்கள்தான் அப்படி என்றால், நாமும் தரம் தாழ வேண்டுமா நண்பர்களே...

முத்தரசு 1:41:00 AM  

அடங கொக்கமக்கா..... அந்த மூதேவி மேட்டரா.....

நாய் நக்ஸ் 1:59:00 AM  

பாதி காமிரா மட்டும் தான???
அல்லக்கைகளை விட்டுடீங்களே...

சக்தி கல்வி மையம் 2:10:00 AM  

என்னா ஒரு வில்லத்தனம்?

கோவை நேரம் 5:08:00 AM  

செம ...அவ்ளோ தூரம் போயிட்டு ஏன் சுண்டல் மட்டும் வாங்கினீங்க...அப்படியே ஒரு முழுக்கு போட்டுட்டு வந்து இருக்கலாமே..

உலக சினிமா ரசிகன் 7:12:00 AM  

மொத்தத்துல யாரையோ மூத்திர சந்துல வச்சு அடிக்கிரதுக்கு இழுக்கிறீங்க...

நண்பரே...
வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7:52:00 AM  

பதிவர் சந்திப்பு எதுக்கு உதவிச்சோ இல்லையோ விதம் விதமா பதிவுகள் போட உதவிச்சு.இன்னும் பல ஷோக்கள் ஓடும்

நிரூபன் 8:45:00 AM  

வணக்கம் சகோ,
செம பதிவு
சீரியஸ் கருத்துக்களைச் சிரிப்பிற்குப் பஞ்சமின்றி பகிர்ந்திருக்கிறீங்க.
திருச்சிற்றம்பலத்தான் உங்களுக்கு அருள் புரியட்டும்.
நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி 9:03:00 AM  

திரு. வீடு சுரேஷ் அவர்களுக்கு,
தங்கள் பதிவை படித்து சித்தம் கலங்கி தெளிவுற்றேன். தங்களின் வார்த்தை விளையாட்டில் தெரித்து விழும் ஜாலத்தில் மானாட மயிலாடவை ஐம்பது முறை தொடர்ச்சியாக பார்த்த அனுபவத்தை அடைந்து மெய்சிலிர்த்தேன். தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி...!

இப்படிக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி

Unknown 9:05:00 AM  

ஹாஹா...கொளுத்திட்ட போல...எஞ்சாய்யா!

இந்திரா 3:48:00 AM  

//.திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூட த.ம.4 எனக் கருத்திடவில்லை //

ஹஹா..

Unknown 8:46:00 AM  

வலைதளத்தில் கொஞ்சம் பிரச்சனை ஏற்ப்பட்டதால் பதிலளிக்க முடியவில்லை நண்பர்களே மன்னிக்கவும்.....!இனி வழக்கம் போல் பதிலளிப்பேன் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP