சான்ஸ் கிடைச்சா...? நீயும் ஷகிலா பட ஹீரோ!

>> Sunday, September 9, 2012

இன்னைக்கு இணையம்ங்கறது கைக்குள்ள உலகத்த கொண்டாந்து விட்டுடுது...ஆனா எங்க சின்ன வயசுல கார்குலேட்டரே அதிசயம், அப்ப நமக்கு பொழுது போக்கு புத்தகம்,சினிமா இதை விட்டா...? எதாவது குட்டிச்சுவத்துல உக்காந்து கதை பேசுவது, பதினாறு வயதுக்கு மேல் எல்லா ஆண்களுக்கும் புரியாத புதிராக இருப்பதில் ஒன்று பாலியல் சார்ந்த விசயங்கள். அதை நாம் அணுகிய சம்பவங்கள் பலருக்கு அனுபவமாக இன்று நினைத்தாலும் கேலியாகவும், நம்மை நாமே நினைத்து தலையிலடித்துக் கொள்ளும்படியும் இருக்கின்றது.

கவிதை வருது ஓடுங்க.....ஓடுங்க......!
எங்க பள்ளியில் ஒரு தமிழாசிரியர் இருந்தார் நல்லா பாடம் எடுப்பார். சிரிப்பு கதைகள் சொல்லி செய்யுளை, பாடங்களை மனதில் பதியவைப்பது அவருக்கு கைவந்த கலை...! அவர் வகுப்பு எடுக்கும் போது மகுடிக்கு மயங்கிய பாம்பாக மாணவர்கள் மெய்மறந்து அப்படியே உக்கார்ந்து விடுவார்கள்...! அவருக்கு வயசாகிப் போக ஓய்வு கொடுத்துட்டாங்க அவரும் வீட்டுக்கு போயிட்டாருங்க...!அவருக்கு பதிலா ரொம்ப சின்னபையனா ஆசிரியர் பயிற்சி முடிந்த ஒரு அண்ணனை எங்க வகுப்புக்கு போட்டாங்க....!

அவரு  நல்ல அண்ணன்தான் ஆனா பழைய தமிழாசிரியர் மாதிரியில்லாம அப்படியே ராத்திரியெல்லாம் உக்காந்து மனப்பாடம் பண்ணிட்டு காலையில வந்து வகுப்புல ஒப்பி்ப்பாரு..! அவரு வாத்தியாரா...? நாங்க வாத்தியாரான்னு...? சந்தேகம் வரும்! ஒரு மண்ணும் புரியாது...! கடுப்பா இருந்தது இந்த சூழ்நிலையிலதான் கோபி சாந்தி தியேட்டர்ல ஷகிலா படம் ரிலீஸ்! ஆச்சு! 
கண்மணிகளுக்கு என் ஆசிர்வாதம்...!
வழக்கம் போல என் நண்பன் கணேசன்! அடேய் போலாண்டா...?அப்படிங்கறான்! அதுவரைக்கும் பாலான புத்தகங்கள் மட்டுமே புரட்டிய பாலகன் எனக்கு...!? அதுவும் அந்த புத்தகம் வாங்க படும்பாடு தலிபான்கிட்ட தீவிரவாதியா சேர்வதை விட கஸ்டம்! கோபி மார்கெட்டுல ஒரு சின்ன பழைய புத்தகக் கடையிருக்கும் அங்கதான் விப்பாங்க.....அங்க போயி “அண்ணே....!ராஜேஸ்குமார் புக் இருக்காண்ணே...? ராஜேந்திரகுமார் புக் இருக்காண்ணேன்னு...” பிட்டப் போட்டுகிட்டே சைஸா மெதுவா “ஹி...ஹி....சரோஜாதேவி புக் இருக்காண்ணே...” அப்படின்னு ஈனஸ்வரத்துல கேட்போம்...!தனியா ஒளிச்சு வச்சிருப்பாங்க...கொடுக்கும் போது சொல்வாங்க “தம்பி படிச்சிட்டு கிழிச்சுடாதப்பா திருப்பி கொண்டு  வாப்பா பாதி விலைக்கு வெச்சுக்கிறேன்பாங்க...” திரும்ப இரண்டு புக் கொடுத்து ஒரு புக் வாங்கிட்டு வருவோம். 

இப்படியாக  சினிமாவும் காண கொள்ளை ஆசை ஆனால் வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா கொன்னே போடுவாங்க...! இருந்தாளும் இந்த தமிழ் வாத்தி கொடுமை தாங்கவும் முடியலை! மத்தியாணம் இடைவேளை முடிஞ்சதும் தமிழ் வகுப்பு, சாப்பிட்டதுக்கும் அதுக்கும் வாத்தியண்ணன் ஒப்பிக்கிறதை கேட்டா தூக்கம் சொக்கும்! அவன்....அவன்.... சாஞ்சு...சாஞ்சு... விழுவான்....! அவங்களை தொடை சிவந்து போகும் அளவு கிள்ளித் தூக்கத்தை கலைச்சு விடுவாரு தமிழ் வாத்தியண்ணன். மத்தியாணம் சாப்பிட்டு போலாமுடா...!என்று நான் கிரீன் சிக்கனல் காட்ட வகுப்பை கட் அடிச்சிட்டு ஸ்கூல் மதில் சுவரை தாண்டி குதிச்சுட்டு தியேட்டருக்கு போயிட்டோம்...!

இரண்டு மணிக்கு படம் போட்டா மூனு நாலுக்குள்ள படம் முடிஞ்சிரும் பிட்டு படங்களே அப்படித்தான்..சரியா ஸ்கூல் முடிஞ்ச மாதிரி வீட்டுக்கும் போயிறலாம் படம் போட்டவுடன் தான் உள்ள போவோம் அப்பத்தான் யாருக்கும் தெரியாது, படம் போட்டதும் தட்டு தடுமாறி பலர் காலை மிதித்து மன்னிப்பு கேட்டு நடுவில் இருந்த காலியிடத்தில் போய் உக்கார்ந்துட்டோம். பக்கத்துல ஒரு அண்ணன் தலையில முக்காடு போட்டுட்டு லுங்கி கட்டிட்டு மும்மரமா படம் பார்த்திட்டு இருந்தாரு....ஏண்ணே..?படம் இப்பத்தான் போட்டாங்களா...? அப்படின்னு கேட்க முக்காடு மண்டைய மேலும் கீழும் ஆட்டினாரு பெரும்பாலும் இந்த மாதிரி படங்களுக்கு இடைவேளை விடமாட்டாங்க அதிசயமா ஷகிலா படங்களில் பாட்டு டூயட் வரும்....?!இல்லை போரடிக்கிற மாதிரி பேசிக்கிட்டே இருப்பாங்க அந்த வேளையில் மிச்சர் முறுக்குன்னு ஒருத்தன் ஒரு தட்டுல போட்டு வியாபாரத்தை முடிச்சிடுவான்.
சக்சஸ்....! நாஞ்சில் மனோவுக்கு பிரண்டாயிட்டேன்!
நாங்க ஆளுக்கு ஒரு முறுக்கு வாங்கினோம்...சரி பக்கத்துல இருக்கிற அண்ணன் பொக்குன்னு போயிருவார்ன்னு இந்தாண்ணே...!முறுக்குன்னு கொடுத்தோம் மறுபடியும் முக்காடு மண்டை தலைய ஆட்டிக்கிட்டு குமிஞ்சிக்குச்சு...நாங்களும் விட்டுட்டோம்.

படத்துல ஒரு விசயமும் இல்லை வழக்கம் போல....!பக்கத்துல இருந்த அண்ணன் வேக...வேகமா வெளிய போகவும் நாங்களும் வேகமா வெளிய வந்து..யார்ராவன்னு மூஞ்சியப் பார்த்தா...ஆத்தாடி! எங்க தமிழ் வாத்தியண்ணன்! தலவலின்னு லீவு போட்டிட்டு படத்துக்கு வந்திருக்காப்டி...!அதுக்கப்பறம் அவர் வகுப்புல நாங்கதான் ராஜாங்கறது உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன...?

21 comments:

நாய் நக்ஸ் 1:51:00 AM  

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

நீயுமா....???????????

முத்தரசு 2:06:00 AM  

தலைப்பே திகிலா இருக்கே

rajamelaiyur 2:08:00 AM  

who is shaking. by. appaavi raja

முத்தரசு 2:11:00 AM  

மாப்ள, இது எப்ப சொல்லவே இல்லையே மக்கா.(மூணாவது பட சக்சஸ்)

Unknown 2:14:00 AM  

@நாய் நக்ஸ் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

நீயுமா....???????????
//////////////////
ஷகிலா படம் பார்க்காத தமிழன் இப் பாரினில் உண்டோ...!

Unknown 2:15:00 AM  

@மனசாட்சி™ said...
தலைப்பே திகிலா இருக்கே...
/////////////////
டிரங் பெட்டி...வெத்தலைப் பெட்டியில்லை அதனால நம்ம பதிவை யாரும் தடை செய்ய முடியாது..!மாமு!

Unknown 2:17:00 AM  

@என் ராஜபாட்டை"- ராஜா said...
who is shaking. by. appaavi raja
///////////////////
ஹ...ஹா...!அப்பாவி ராஜாவா முக்காடு ராஜாவான்னு மயிலனைக் கேட்டு யாம் அறியும்...!அவ்வ்வ்வ்

Unknown 2:19:00 AM  

@மனசாட்சி™ said...
மாப்ள, இது எப்ப சொல்லவே இல்லையே மக்கா.(மூணாவது பட சக்சஸ்)
/////////////////
அவருதான் ஜெனிபர் லேபஸ் பிரண்டாயிட்டாக......!காத்ரீனா கைப் பிரண்டாயிட்டாக அப்படின்னு ஸ்டேட்டஸ் போடுவாரு.....!ஷகீலாவுக்கும் ப்ரண்டாகாம இருப்பாரா...?

”தளிர் சுரேஷ்” 2:47:00 AM  

சுவையான பகிர்வு! சிறப்பாக சஸ்பென்ஸாக நகர்த்திய விதம் அருமை!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


அஞ்சா சிங்கம் 3:38:00 AM  

வீடு உங்களை நான் எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் இப்படி என் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்கள் ...........இப்படி ஷகீலா படத்திற்கு மறைந்து செல்லும் இழி நிலையிலா நீங்கள் இருந்தீர்கள் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது ............................நீ ஷக்கீலா வீட்டுக்கு போயிட்டு வந்து பதிவு எழுதி இருந்தால் உன்னை ஒரு மாவீரன் என்று மதித்து இருப்பேன் ...........

MARI The Great 3:50:00 AM  

நல்ல வாத்தியார்... நல்ல மாணவர்கள்... விளங்கிரும்! அவ்வ்வ்வ்வ்வ்வ் :D

உணவு உலகம் 6:07:00 AM  

//சக்சஸ்....! நாஞ்சில் மனோவுக்கு பிரண்டாயிட்டேன்!//
என்ன ஒரு வில்லத்தனம்!!!

உணவு உலகம் 6:08:00 AM  

நாய்நக்ஸ் இருக்கும்போது மனோவுடன் கோர்த்து விடுவது!!!

உணவு உலகம் 6:09:00 AM  

மேலே உள்ள இரண்டு கமெண்ட்ஸும் ஒருக்கா சேர்த்து புடிச்சிக்கோங்க சாரி படிச்சிக்கோங்க!

sakthi 6:27:00 AM  

தலைவி சகிலா வாழ்க !
ஞாபகபடுத்திய சுரேஷ் வாழ்க !

SNR.தேவதாஸ் 7:52:00 AM  

வாய்ப்புக் கிடைக்கும் வரை அல்லது கிடைக்காதவரை அனைவரும் உத்தமர்களே.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

Prem S 8:35:00 AM  

அப்படி என்ன இருக்கு பாஸ் சகிலா படத்துல

வவ்வால் 10:07:00 AM  

சகிலாக்கூட ஹீரோவா??!! நடிக்கிறதுக்கு ஒரு எருமை மாடே தேவலாம் :-))

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 6:10:00 PM  

எனக்கு இவங்கதான் சகிலா’ன்னு இப்பதான் தெரியும். தமிழ் படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக ஒரு குண்டு நடிகை நடிப்பாங்களே, சில படங்களில் வில்லியாகவும் நடித்திருக்கின்றார்.. ம்ம் ஆ, வீராச்சாமியில் மும்தாஜ் அம்மாவாகக் கூட நடித்திருக்கின்றார். அவர்தான் சகிலா என இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். அவர் வேறு, இவர் வேறு. நன்றி அறிமுகத்திற்கு. ஆனால், இன்னும் இவரின் (சகிலா) படம் ஒன்று கூட பார்த்ததில்லையே.

கோவை நேரம் 11:40:00 PM  

மாம்ஸ்...அப்பவே அப்படியா...அப்போ சொல்லவே வேணாம்..எப்படியோ ஷகிலா பேரை ஞாபக படுத்திடீங்க..
நானும் ஒருகாலத்தில் ஷகிலா ரசிகனாக இருந்து இருக்கிறேன்.டென்த் படிக்கும் போது ஜெயதேவன் என்கிற டைரக்டர் எடுத்த எல்லா படங்களும் பார்த்து இருக்கறேன்..அதுக்கப்புறம் கேரளாவில் இருந்த போது ஷகிலா நடிச்ச படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் மறுபடியும் அடுத்த ஷோக்கு முயற்சி பண்ணி பார்த்து வந்து இருக்கறேன்..

சுதா SJ 2:54:00 PM  

தலைப்பை பார்த்தே ஓடி வந்தேன் பாஸ்.. ஆவ்வ்வ்....

பாஸ் நீங்க அப்பவே அப்படியா.... ஹீ ஹீ..........

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP