திரைவானில் ஒரு தாரகை

>> Friday, September 9, 2011


திரைவானில் ஒரு தாரகை





வறுமையின் கொடுமை தாளாமல்...
ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல்
மானத்தோடு இறப்பதை விட...
இருப்பவர்களை வாழவைக்க
நடிப்பது மேல்...என
வெளிச்சம் உமிழும் விளக்கொளியில்
மேலாடை ஏதுமின்றி
நூறு ஆண்கள்-முன்
பொது இடத்தில்
பெண்கள் காட்ட கூடாத பாகத்தை
திறந்து காட்டி நடனம் ஆடி
ஆண் ஒப்பனை கலைஞரின் கைகள்
தொடக்கூடாத இடமெல்லாம்
தொட்டு சாயம் பூசும் போது
கூச்சம் துளியும் இன்றி நடித்து.....நடித்து.....
பொன் பொருள் சோ்த்து
பல கோடி ஆண்களின்
இரவு உறக்கத்தை கெடுத்த-தேவதை
உற்றார் உறவினர்க்கெல்லாம்
எல்லாம் பசியாற்றிய
கலியுக மேகலை
உடல் பருமனாகக் கூடாது
என்று பட்டினி கிடந்தாள்
நம்பியிருந்த காதலனுக்கும்
தன் உடல் சலித்து போய் விட்டது
பொருளும் குறைந்து விட்டது
தனித்து விடப்பட்டாள் தாரகை
மனம் நொந்தவள் தன்னை கொலை
செய்து தானும்
ஒரு பெண் என்பதை ஊருக்கு
உரைத்தாள்...

6 comments:

சி.பி.செந்தில்குமார் 12:05:00 AM  

o ஒரு லைனுக்கு ஏன் ஒரு வார்த்தை மட்டும்?

Unknown 7:52:00 AM  

சில்க் உடையில் சிக்கனமாய் இருந்தார்
என் கவிதை வரிகளில் சிக்கனமாய்
(உண்மையில் கவனிக்கலை)

சி.பி.செந்தில்குமார் 12:14:00 AM  

சில்க்கை மட்டும் கவனிச்சிட்டு......

Unknown 3:31:00 AM  

சரி செய்துவிட்டேன்.....சிபி சார்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP