நாய்த் தொல்லை தாங்க முடியலைடா சாமி!

>> Wednesday, May 9, 2012


ட்டு வயசுல...எங்கயாவது கடைக்கு இல்லை பிரண்ட பார்க்க போகனும்னா' பைக் இல்லை கார்லதான் போவேன். என்னா சார் முழிக்கிறீங்க? அட கற்பனை குதிரை சார்...!கார் சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணுவேன்' டுஸ்டுஸ்டுஸ்ஸ்ஸ்......என ஸ்டார்ட் ஆக மறுக்கும், ஒரு ஹாரன் அடித்து விட்டு (வாயிலதான்) மறுபடியும் ஸ்டார்ட் செய்வேன் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இப்ப ஸ்டார்ட் ஆயிருச்சு, இடது கையில கியரை போட்டு வண்டிய கிளப்பி ஓட்ட வேண்டியதுதான், நம்ம கற்பனைக்கு தகுந்த மாதிரி காரோ, பைக்கோ பறக்கும்.


செம சிப்பு! நாய் நக்ஸ் போன் ரிப்பேராம்!

இந்த கற்பனை குதிரைக்கு பெரும் இடைஞ்சல் பைரவர்தான்! ஆமா சார் நாய்தான்! எங்க வீதியில ஒரு வீட்டுல இருக்கிற நாய்க்கு இந்த கற்பனை குதிரைய பிடிக்காது, அதனால அங்க பிரேக் போட்டு பம்பிகிட்டு நைசா நடக்கனும், ஒரு முறை கார் ஓட்டும் கவனத்தில் ஒளிந்திருந்து ஒருகளித்து படுத்திருந்த பைரவரை மறந்து விட்டேன், ஸ்டியரிங்கை திருப்பி...திருப்பி... வாயு புத்திரனாக வந்த என் காரை பாய்ந்து வந்த பைரவர், இன்டிகேட்டரை கடித்து விட்டார் அதாவது கெண்டைக்கால்ல ஒரு முத்தம்! நல்ல வேளை ஹெட்லைட் தப்பிச்சது.(ஆனா அவ்வளவு வலியிலும் நாய் வடை போச்சே! அப்படின்னு சொன்னது என் காதில விழுந்தது.)

எங்க ஊர்ல நாய்கடின்னா மருந்து குன்னூர் போய் வாங்கிட்டு வரனும், இப்ப இல்லை அப்ப! வாங்கிட்டு வந்து லோக்கல் டாக்டர் கிட்ட கொடுக்கனும், அவர் தினமும் நம்ம தொப்புள்ல கிரிகெட், புட்பால் எல்லாம் விளையாடுவார், அவரு கடிப்பாரு பாருங்க (அவருமா என கேட்காதிங்க கடி ஜோக்காம் நாய் கடியே மேல்) நாய ஏண்டா கடிச்ச? ராஸ்கல்ஸ்! அப்படிப்ம்பாரு நாய் சாகலையே என அக்கரையா விசாரிப்பாரு...அடங்கொன்னியா அந்த நாதாரி நாயி கடிச்சது என்னை, அத சாகலையான்னு விசாரிப்பாரு! இப்பதானே தெரியுது நம்மை கடிச்ச நாயி செத்தா நமக்கும் சங்குன்னு...

அடங்கோ! நாய்நக்ஸ் போனா நான் இல்லையின்னு
சொல்லுப்பா!

கடிக்கு தகுந்த மாதிரி 16 ஊசி 8 ஊசின்னு போடுவாங்க எங்க தொப்புளை சுத்திதான், நாலாவது ஊசியிலையே உளுந்து வடை மாதிரி ஆயிரும் நம்ம தொப்புள், ஜஸ் வாங்கி வந்து வைக்கனும், அதுமட்டும் இல்லை சார் ஒரு மாசத்திக்கு உப்பு,புளி,காரம் எதையும் தொடக்கூடாது கறி,கருவாடு,மீன் எல்லாம் நஹி! நமக்கு முன்னாடியே உக்காந்து வெளுத்து வாங்குவாங்க.....அதுமட்டும் இல்லாம இனி அங்க வெளையாட போவியா என்று கேட்டுட்டே எங்க அண்ணன் நல்லி எழும்பை கடிப்பான் கடக்குன்னு! அப்படியே அந்த நாய (அண்ணனை இல்லை) கொரல்வளைய கடிச்சு துப்பனும் போல இருக்கும்.

காயம் எல்லாம் ஆறிய பிறகு மறுபடியும் கற்பனை குதிரை பறக்கும், அந்த வீட்டுக்கு முன்னாடி மட்டும் நாய விட மோசமா பம்பிகிட்டு போவேன், பூனை மாதிரி! வெளிய படுத்திட்டு இருந்தா நக்கலா ஒரு பார்வை பார்த்து சிரிக்கும் அதாவது அது பாசையில கர்ர்ர் அப்படிங்கும், ஊர்ல எல்லாத்துக்கும் ஒரு சாவு வருது இதுக்கு வரமாட்டிங்குது என நினைக்கும் அளவு வெறியாகும் எனக்கு!

யம்மா! என்னா கொலை வெறி!

என் அழுகுரல் கடவுளுக்கு கேட்டிருச்சோ என்னவோ! ஒரு நல்ல நாள்ல நாய் வண்டிக்காரன் வந்து புடிச்சி ஒரு ஊசிய போட்டு கொன்னே போட்டான்! தூக்கி வண்டியில போட்டு அரசு பழத்தோட்டத்துக்கு உரமாக்க கொண்டு போயிட்டானுக... அன்னிக்கு பசங்களுக்கு கம்பர்கட் வாங்கி கொடுத்து பார்ட்டி வெச்சேன், 

ரொம்ம நேரம் பேசிட்டு தூங்க போயிட்டேன் படுத்ததும் தூங்கிட்டேன்... கனவுல அந்த நாய் தன் கோரமான பல்ல காட்டி உருமிகிட்டே என்னை துரத்துகின்றது நானும் ஓடுகிறேன்... ஓடுகிறேன்... பல கிலோ மீட்டர் ஓடுகிறேன், மூச்சு இறைக்குது... முடியலை ஓட முடியலை நின்னுட்டேன்! அது பக்கத்தல வருது! வந்திருச்சு வாய திறந்து கடிக்க வருது.....அம்மா...! என் அலறல் கேட்டு வீடே எழுந்து விட்டது, என்னடா எதாவது கனவு கண்டியா நாயே! கம்முன்னு தூங்கு என்றபடி பெரியவர்கள் தூங்கி விட்டார்கள் என்ன கொடுமை சார் இது?

இப்போதெல்லாம் பைக்ல போகும் போது, நடந்து போகும் போதெல்லாம் பைரவர் துரத்துவதில்லை, ஆனா கார்ல போகும் போது சில பைரவர்கள் பயந்து போய் காரை துரத்தும் மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன்.. உன்னால என்னை கடிக்க முடியாதே! என்று ஏளனம் வேறு வரும்...பாதுகாப்பா இருக்கிறமே!ஆனாலும் ஒன்னு சார் விடாது கருப்பு ச்சே.....நாய் சார் என்னை.....

நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்

52 comments:

Anonymous,  8:34:00 PM  

/// செம சிப்பு! நாய் நக்ஸ் போன் ரிப்பேராம்! ///

இந்த ஒரு வார்த்தை தான் காதுல தேனா வந்து பாயுது. இந்த ஒரு விஷயத்தை சொன்னதுக்காகவே உங்களுக்கு டிரீட் வைக்கலாம் போல சுரேஷ்.

சம்பத்குமார் 9:20:00 PM  

makka nakks phone repairaa..

very good very good..

Unknown 9:21:00 PM  

உள்குத்து பதிவுக்கு வாழ்த்துக்கள்!

சத்ரியன் 9:22:00 PM  

//நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்.//

சுரேஷ்,

நாய் பொண்ணுங்களை மட்டும் தான் கடிக்குமா?

CS. Mohan Kumar 9:28:00 PM  

நம்மளையும் சின்ன வயசில் நாய் கடிச்சு ஊசி போட்டுருக்கு ; இதுக்குன்னு கடைசியில் ஒரு படம் போட்டீங்க பாருங்க :))

Unknown 9:41:00 PM  

நல்லாருக்கு! ஆனா உள்குத்தா பாஸ்? நேற்றுக்கூட நான் அப்டித்தான் நினைச்சேன்!
என்னமோ போங்க பாஸ், ஒண்ணுமே புரியல!

Unknown 9:41:00 PM  

நல்லாருக்கு! ஆனா உள்குத்தா பாஸ்? நேற்றுக்கூட நான் அப்டித்தான் நினைச்சேன்!
என்னமோ போங்க பாஸ், ஒண்ணுமே புரியல!

கோவை நேரம் 9:43:00 PM  

(ஆனா அவ்வளவு வலியிலும் நாய் வடை போச்சே! அப்படின்னு சொன்னது என் காதில விழுந்தது.)/
பாஸ் ..நீங்க தெய்வம் பாஸ்,,நாய் பாஷை லாம் தெரியுது.
எதோ முன் ஜென்ம விரோதம் இருக்கு போல...கனவுல கூட பைரவர் வாராரு பாருங்க...

கூடல் பாலா 10:15:00 PM  

நாய் ரொம்பத்தான் தொல்லை கொடுத்திட்டது போலிருக்கு!

ராஜி 10:24:00 PM  

உங்களுக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம்ன்னு சொல்லுங்க.

முத்தரசு 10:50:00 PM  

நாயே ச்சே சீ நாய் கடிசிருக்கவும் வேண்டாம் இப்படி சட்டைய கட்டி இருக்கவும் வேண்டாம்

MARI The Great 11:14:00 PM  

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே

முடியல தல முடியல.., சிரிச்சுருவேன் ஆமாம் சொல்லிபுட்டேன் ..!

ஹி ஹி ஹி ..!

Gobinath 1:23:00 AM  

இதுக்காகத்தான் கற்பனைக்குதிரையை தட்டிவிடும்போது என்னைப்போல கல்லும் எடுத்து பாக்கெட்டுக்க ஸ்ரோர் பண்ணனும்.

(நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்

நல்லாவே தெரிஞ்சுது சாரி புரிஞ்சுது.)

Unknown 1:38:00 AM  

நாய் நக்ஸ் போன் ரிப்பேர் என்றதும் எத்தனை உள்ளங்கள் மகிழ்கின்றது.....

vignesh 2:19:00 AM  

kadaisi la oosi podrathuku epadi sattai podanum nu padathoda vilakam koduthinga parunga arumai arumai

பன்னிக்குட்டி ராம்சாமி 3:01:00 AM  

//// செம சிப்பு! நாய் நக்ஸ் போன் ரிப்பேராம்! /////

இதுல ஏதோ சதி இருக்குது போல?

பன்னிக்குட்டி ராம்சாமி 3:02:00 AM  

/////நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்///////

அங்க ஊசி போட்ட காலம்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு அண்ணே...........

பன்னிக்குட்டி ராம்சாமி 3:06:00 AM  

/////ஆனாலும் ஒன்னு சார் விடாது கருப்பு ச்சே.....நாய் சார் என்னை.....//////////

எல்லாம் போன ஜென்மத்து தொடர்பா இருக்கும்.........

சென்னை பித்தன் 3:56:00 AM  

என்ன உள்குத்தோ,வெளிக்குத்தோ,எனக்கு ஒண்ணும் புரியறதில்ல!

அருணா செல்வம் 5:22:00 AM  

பாவங்க நாய்...

aalunga 5:46:00 AM  

நாய்க்கடியால் அன்று பட்ட வேதனையை இன்று காமெடியாக எழுத முடிகிறது!!

ரொம்ப அருமை...

//உன்னால என்னை கடிக்க முடியாதே! //
பார்த்துங்க... காரை நிறுத்தி வெளியே வரும் போது கவ்விட போகுது!

நம்பள்கி 8:46:00 AM  

எங்கள மாதிரி டாக்டருங்க அங்கன தான் ஊசி போடுவோம்/ அதுக்கு என்னான்ரீங்க?

என் ஆண்கள் அங்க ஆம்லெட் மட்டும் தான் போடணுமா என்று சட்டம் எதாவது இருக்கா Mr. பன்னிக்குட்டி ராம்சாமி!

உங்க பேர் நல்லா இருக்கு Mr. பன்னிக்குட்டி ராம்சாமி! போன ஜெனமத்து தொடர்பான்னே?

Unknown 6:24:00 PM  

@ஆரூர் மூனா செந்தில்
/// செம சிப்பு! நாய் நக்ஸ் போன் ரிப்பேராம்! ///

இந்த ஒரு வார்த்தை தான் காதுல தேனா வந்து பாயுது. இந்த ஒரு விஷயத்தை சொன்னதுக்காகவே உங்களுக்கு டிரீட் வைக்கலாம் போல சுரேஷ்.
///////////////////////////////////////
ஓகே ட்ரீட் சைவம்தானே......ஆடு மாடு கோழி...இது மட்டும்ன்னா ஓகே!

Unknown 6:25:00 PM  

@சம்பத்குமார்
makka nakks phone repairaa..

very good very good..
////////////////
பயபுள்ளைக்கு சந்தேசத்தை பாரேன்...!

Unknown 6:26:00 PM  

@விக்கியுலகம்
உள்குத்து பதிவுக்கு வாழ்த்துக்கள்!
//////////////////////////
அது சரி.....! அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேயாம்.....!

Unknown 6:28:00 PM  

@சத்ரியன்
//நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்.//

சுரேஷ்,

நாய் பொண்ணுங்களை மட்டும் தான் கடிக்குமா?
//////////////////////////
ஆண்கள் போடுற பனியன் விளம்பரத்திக்கு பெண் மாடல் வருவதில்லையா அதுமாதிரி விளம்பரம்....ஹிஹி!

Unknown 6:29:00 PM  

@மோகன் குமார்
நம்மளையும் சின்ன வயசில் நாய் கடிச்சு ஊசி போட்டுருக்கு ; இதுக்குன்னு கடைசியில் ஒரு படம் போட்டீங்க பாருங்க :))
////////////////////
கடி வாங்காத ஆளு யாரும் இல்லை போல.....

Unknown 6:30:00 PM  

@ஜீ...
நல்லாருக்கு! ஆனா உள்குத்தா பாஸ்? நேற்றுக்கூட நான் அப்டித்தான் நினைச்சேன்!
என்னமோ போங்க பாஸ், ஒண்ணுமே புரியல!
/////////////////////////////////
அதெல்லாம் இல்லை சும்மா ஜாலிக்காக போட்டது...!நான் எந்த வம்புக்கும் போறது இல்லையின்னு முடிவு பண்ணிட்டேன் சார்!

Unknown 6:31:00 PM  

@கோவை நேரம்
(ஆனா அவ்வளவு வலியிலும் நாய் வடை போச்சே! அப்படின்னு சொன்னது என் காதில விழுந்தது.)/
பாஸ் ..நீங்க தெய்வம் பாஸ்,,நாய் பாஷை லாம் தெரியுது.
எதோ முன் ஜென்ம விரோதம் இருக்கு போல...கனவுல கூட பைரவர் வாராரு பாருங்க...
//////////////////
முன் ஜென்ம பந்தமா இருக்கும் சார்!

Unknown 6:32:00 PM  

@koodal bala
நாய் ரொம்பத்தான் தொல்லை கொடுத்திட்டது போலிருக்கு!
///////////////////////
ஆமாங்க......ஆமாங்க.......

Unknown 6:32:00 PM  

@ராஜி
உங்களுக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம்ன்னு சொல்லுங்க.
////////////////////////

ஆமாங்க ஏழரை பொருத்தம்....ஹிஹி!

Unknown 6:33:00 PM  

@மனசாட்சி™
நாயே ச்சே சீ நாய் கடிசிருக்கவும் வேண்டாம் இப்படி சட்டைய கட்டி இருக்கவும் வேண்டாம்
///////////////////////////////
ங்கொய்யால....ஏய்யா திட்டுற

Unknown 6:34:00 PM  

@வரலாற்று சுவடுகள்
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே

முடியல தல முடியல.., சிரிச்சுருவேன் ஆமாம் சொல்லிபுட்டேன் ..!

ஹி ஹி ஹி ..!
////////////////////////
சிரிக்கலை நாய் கடிச்சி வச்சிரும் ஆமா....!

Unknown 6:35:00 PM  

@Gobinath
இதுக்காகத்தான் கற்பனைக்குதிரையை தட்டிவிடும்போது என்னைப்போல கல்லும் எடுத்து பாக்கெட்டுக்க ஸ்ரோர் பண்ணனும்.

(நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்

நல்லாவே தெரிஞ்சுது சாரி புரிஞ்சுது.)
//////////////////////////
புரியுது...புரியுது....சார் அதை மறந்துட்டேன் பாருங்க...!

Unknown 6:36:00 PM  

@Vijayan K.R

நாய் நக்ஸ் போன் ரிப்பேர் என்றதும் எத்தனை உள்ளங்கள் மகிழ்கின்றது.....
//////////////////////
தாங்களின் மனமும் உவகை கொள்கிறதோ.....

Unknown 6:37:00 PM  

@vignesh
kadaisi la oosi podrathuku epadi sattai podanum nu padathoda vilakam koduthinga parunga arumai arumai
/////////////////
ஹிஹி! நன்றி சார்!

Unknown 6:38:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி
//// செம சிப்பு! நாய் நக்ஸ் போன் ரிப்பேராம்! /////

இதுல ஏதோ சதி இருக்குது போல?
//////////////
கன்னியர்களின் ச்சே! அன்னியர்களின் சதியா இருக்கும்ண்ணே!

Unknown 6:40:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி
/////நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்///////

அங்க ஊசி போட்ட காலம்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு அண்ணே...........
////////////////////////////
அண்ணே! பிளாஸ்பேக் முதல் வார்த்தைய படிக்கலையா....?

Unknown 6:41:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி
////ஆனாலும் ஒன்னு சார் விடாது கருப்பு ச்சே.....நாய் சார் என்னை.....//////////

எல்லாம் போன ஜென்மத்து தொடர்பா இருக்கும்.........
////////////////////////
அப்படித்தான் எலி ஜோசியமும் சொல்லுது....

Unknown 6:42:00 PM  

@சென்னை பித்தன்
என்ன உள்குத்தோ,வெளிக்குத்தோ,எனக்கு ஒண்ணும் புரியறதில்ல!
////////////////////
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ஐயா! புரளிய கிளப்பி விடுறாங்க.....

Unknown 6:43:00 PM  

@AROUNA SELVAME
பாவங்க நாய்...
////////////////////////
என் கெண்டக்காலை கடிச்சவன் பாவமா....

Unknown 6:44:00 PM  

@ARUN PALANIAPPAN
நாய்க்கடியால் அன்று பட்ட வேதனையை இன்று காமெடியாக எழுத முடிகிறது!!

ரொம்ப அருமை...

//உன்னால என்னை கடிக்க முடியாதே! //
பார்த்துங்க... காரை நிறுத்தி வெளியே வரும் போது கவ்விட போகுது!
/////////////////////////////////

ஆமால்ல...எதுக்கும் எச்சரிக்கையாவே இருடா சூனா பானா........

Unknown 6:45:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்
"நன்றி உள்ள ஜீவன்க!"
/////////////////////////
ஆமா சார்......உண்மைதான்

Unknown 6:51:00 PM  

@நம்பள்கி

எங்கள மாதிரி டாக்டருங்க அங்கன தான் ஊசி போடுவோம்/ அதுக்கு என்னான்ரீங்க?
//////////////////
ஒன்னுமில்லிங்கோ! நீங்க எங்க வேனாலும் போடுங்கோ!

என் ஆண்கள் அங்க ஆம்லெட் மட்டும் தான் போடணுமா என்று சட்டம் எதாவது இருக்கா
///////////////////////

நிம்மளும் சப்பாத்தி போடுங்க......பூரி போடுங்கோ!


Mr. பன்னிக்குட்டி ராம்சாமி!
உங்க பேர் நல்லா இருக்கு Mr. பன்னிக்குட்டி ராம்சாமி! போன ஜெனமத்து தொடர்பான்னே?

இந்த ஜென்மத்திலிலே நிறைய தொடர்பு இருக்கு......! அவர பார்த்து எழுத பழகினவங்க நாங்க ஹிஹி! பன்னிகுட்டி போடுற மாதிரி ரசிகர்களை வச்சிருக்காரு அவரு! ரசிகர்களை மட்டும்தான்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8:06:00 PM  

நன்றி கேட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

Anonymous,  12:04:00 AM  

//கனவுல அந்த நாய் தன் கோரமான பல்ல காட்டி உருமிகிட்டே என்னை துரத்துகின்றது நானும் ஓடுகிறேன்... ஓடுகிறேன்... பல கிலோ மீட்டர் ஓடுகிறேன்,//

நக்கி மாமாகிட்ட கடனை வாங்கிட்டு ஓடுனா சும்மா விடுவாரா??

Manimaran 8:19:00 AM  

இந்த அம்மணியே நாய் கடிச்சி வச்ச மாதிரிதான் நிக்குது.

Manimaran 8:23:00 AM  

\நாய்கடி ஊசி போடும் போது சட்டைய
இப்படி கட்டிக்கனும்\
ஏன் பாஸ் நம்மளுக்கு ஊசி போடுறதுக்கு இந்த அம்மணியோட சட்டைய ஏன் இப்படி கட்டனும்?

Manimaran 8:29:00 AM  

ஏன் பாஸ் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுங்களா? நம்மள ஒரு மாடு முட்ட ஒடிவருதுன்னு வச்சுக்குங்க..நீங்க ஓடினா அதுவும் துரத்தும்.எதுத்து நின்னிங்கனா அதுவும் நின்னுடும்.அதுவே ஒரு நாய் துரத்துதுன்னு வையுங்க..மவனே ஓடினாலும் சரி.. நின்னாலும் சரி..படுத்தாலும் சரி...ஒரு பிடி சதையை கவ்வாம விடாது.எல்லாம் அனுபவம்தான்...

Unknown 2:45:00 AM  

நல்லா கு்த்து குத்து என்று குத்திட்எங்களே

HOTLINKSIN.COM திரட்டி 5:14:00 AM  

ஓப்பனிங் பேராவே செம ரகளையாக இருக்கு பாஸ்... சூப்பர்...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP