மண்ணுக்கு மரம் பாரமா? மனிதனுக்கு மரம் பாரமா?
>> Monday, May 28, 2012
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
கோவையை பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றும் அந்த சம்பவம் சம்பத் எனும் நபர் வயது 52 ஆகுது, அவர் என்ன செய்தார் என்றால்..! ஒரு ஆறு மரத்தை வெட்டிவிட்டார், அவரைக் கைது செய்யறாங்க...அவரின் ஒரு ஜாதி அமைப்பு அவரைக் காக்கமுயற்சி செய்தது. எனக்கு கமிஷனர் சைலேந்திரபாபுவை ஒரு சில மேடையில் சந்தித்து இருக்கிறேன், அவரின் போன் எண்ணிற்கு நானும் என் நண்பர்களும் குறுந்தகவல் அனுப்பி விட்டு, நானும் அவரிடம் நீங்க இருக்கும் போது இப்படி நடந்தால் அசிங்கமா போயிரும் சார்! என்று கூறினேன்.
அவர் உடனே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு F.I.R.போடச் சொல்லிவிட்டார், ஒரு வாரத் சிறைத் தண்டனைக்குப் பிறகு அவருக்கு ஜாமின் கொடுக்கும் போது தீர்ப்பு என்ன தெரியுமா? ஐம்பது மரம் நட்டு ஒரு வருடத்திற்கு நன்கு பராமரித்து வளர்த்துக் காட்ட வேண்டும், தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என்பதாகும்.
அதன் பிறகு ஒரு சம்பவம்! ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு உயர்ஜாதி மனிதர்! பதினெட்டு மரத்தை துளையிட்டு அதில் ஆஸிட் ஊற்றி மரத்தை கொலை செய்து விட்டார். மரத்தை வெட்டுவது இயல்பு என்றாலும் கூட... கொடூரமாக மரத்தை கொலை செய்யும் முறையை உலகிற்கு எடுத்துக் காட்டிய இவனை என்ன செய்திருக்க வேண்டும்? ஆனால் மாநகராட்சி தன் ஜாதி பாசத்தை எப்படி காட்டியது தெரியுமா? வெறும் 72 ஆயிரம் அபராதம் போட்டது....இது நியாயாமா? 6மரத்தை வெட்டியவனுக்கு கிடைத்த தண்டனையோடு ஒப்பிட்டால் திஹார் ஜெயில்ல இல்லை போடனும் அவனை! மாநகராட்சிக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? அவர் மேல் வழக்கு போட்டிருக்கிறேன், சுந்தரராஜன் என்பவர் வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார். எனக்கு வழக்கு போடனும் என்றால் செலவு எல்லாம் கிடையாது...! சுப்ரீம் கோர்ட் வரைக்கும் உங்க மாதிரி நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நான் டீடெயில் கொடுத்துட்டா அவுங்க பார்த்துக்குவாங்க...!
எவ்வளவு அவார்டு வாங்கினாலும் எனக்கு பலன் இல்லை! ஏன்னா.. நான் வாடகை வீட்டுல இருக்கிறேன், ஆனியடிச்சு மாட்டினா வீட்டு சுவர் புல்லா அடிக்கனும் வீட்டுக்காரன் காலி பண்ணச் சொல்லிருவான், அதனால முடிந்த அளவு மரக்கன்று கொடுங்கள் நான் அதை அழகா வளர்த்துக் காட்டுகிறேன், பத்து வருடத்திற்கு முன் நான் கோவை வந்தால் குறைந்த பட்சம் இரண்டாயிரத்திற்காவது புத்தகம் வாங்குவேன், இப்ப மரக்கன்று வாங்குவதால் புத்தகம் வாங்க முடிவதில்லை, உங்க மாதிரி நண்பர்கள் கூட மரக்கன்று வாங்க உதவுகிறார்கள். ஆனால் இந்த லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் இருக்கிறார்களே மேடையில் அழகா சொல்லுவாங்க...! கைதட்டல் வாங்குவாங்க...அவுங்க மாதிரி உலகத்தில எவனும் பேச மாட்டாங்க...ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள்!
(உணவு உலகம் ஆபிசர் மகள் திருமணத்தில் மரக்கன்று கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நமது கோகுல்மனதில் கோகுல் தன் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மரக்கன்று வழங்குவதாக அறிவித்திருக்கிறார்..! இதை பிளாக்கர் நாம் முடிந்த அளவு இதைப் பின் பற்றுவோம்)
மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து 23ஆயிரம் லோன் போட்டு ஒரு எல்.சி.டி ஸ்லைடு புரஜக்டர் வாங்கியிருக்கிறேன். ஆனா இன்னும் ஸ்கிரீன் வாங்கல எப்படியும் முயற்சி செய்து வாங்கியிருவேன்.
என்னை வெளியுலகத்திற்கு தெரிய 26 வருடம் ஆகி விட்டது..! ஆனால் நடிகர் விவேக் மரம் நட்டிருக்கிறார்...எப்படி ஒன்றரை வாரத்தில் இரண்டு லட்சத்தை தாண்டி விட்டார்..!ஒரு நாளைக்கு ஆறாயிரம் மரம் நட்டால், இரண்டு மாதத்தில் இரண்டு லட்சம் மரம்தான் நடமுடியும்..இது எப்படி? ஒரு நாளைக்கு ஆறாயிரம் மரத்துக்கு மேல் நட்டால்தான் ஒன்றரை மாசத்துல இரண்டு லட்சம் மரம் நடமுடியும்! ஒரு நாளைக்கு அம்பது மரம் நடுவதே பெரிய விசயம் அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. இரண்டு லட்சம் மரம் நட்டியதுக்கு விழா வேறு எடுத்தாங்க நான் போகல...அப்துல்கலாமின் 65வது பிறந்த நாள் விழாவிற்கு போஸ்டர் எல்லாம் அடிச்சு 65ஆயிரம் மரம் நட்டியதாக...இப்படியெல்லாம் நட்டிருந்தா கோவை பூத்து குழுங்கியிருக்குமே! அதனால நிறைய நான் நட்ட மரத்தையும் கணக்கில எடுத்துகிட்டாங்க
NGO மீது எனக்கு துளி கூட உடன்பாடு கிடையாது ஐந்து லட்சம் தருகிறேன் நல்ல வீடா போக்கியத்துக்கு புடிச்சு நிம்மதியாக வாழலாம் தானே என பேரம் பேசப்பட்டது..நான் மறுத்து விட்டேன் ஏன்?! என்றால் இயற்கையை அடகு வைக்க விருப்பமில்லை இயற்கை என் தாய் மாதிரி தாய அடகு வைக்க முடியுமா?
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒரு கப்பல் மூலம் பழைய கழிவுகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவிற்கு வந்தது. கழிவ எல்லாம் எங்க கொட்ட தெரியுமா? பவானி ஆற்று கரையில் கொட்ட...! நான் வழக்கு தொடர்ந்தேன் அதனால் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுப்பதாக என் மீது இருபது பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதலோடு வந்தது...
((( இன்னும் முகத்திரை கிழியும்....)))
19 comments:
எத்தனை கஷ்டங்களோடு போராடுகிறார், அவரை போன்ற மனத்துணிவு நமக்கெல்லாம் இருக்குமா? என்பதே சந்தேகம்தான், ஓரளவிற்கு மேல் பிரச்சனையை சந்திக்க முடியாமல் விட்டுவிடுபவர்களுக்கு மத்தியில் யோகனாதன் நிச்சயம் ஒரு வழிகாட்டிதான் !!!!
நம்ம வீட்டு காம்பவுண்ட் உள்ளே வளரும் மரங்களையும் சுடு தண்ணி ஊத்தி பக்கத்து வீட்டுகாரனே கொலை பண்ணும் அநியாயம் என் வீட்டில் நடந்த கொடுமையை என்னான்னு சொல்ல...?
இந்த முறை ஊர் போனோப்போ மூன்று செடிகள் வாங்கி நட்டு வந்தேன், கொய்யா, மா, சப்போட்டா கன்றுகள்.
//இந்த லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் இருக்கிறார்களே மேடையில் அழகா சொல்லுவாங்க...! கைதட்டல் வாங்குவாங்க...அவுங்க மாதிரி உலகத்தில எவனும் பேச மாட்டாங்க...ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள்!
//
முழுவதும் உண்மை .. அவர்கள் சும்மா மேடை பேச்சு வீரர்கள்
பிளாக்கற்கள இனி அனைத்து விழாவிலும் மரத்தை பரிசளிப்போம்
இன்று
நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி
பவர் மற்றும் பணம் உள்ளவர்களால் சட்டம் தாறுமாறாக கற்பளிக்கப்படுகிறது :(
ஆசிட் ஊற்றி மரத்தை கொன்றவனுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது கடுங்காவல் தண்டனை அளித்திருக்க வேண்டும் ..!
மனிதன்தான் மரத்துக்கும்பாரம்
மண்ணுக்கும் பாரம்....
வணக்கம் நண்பா,
இப்போது தான் இரண்டாம் பாகத்தினைப் படித்தேன். உண்மையிலே ஆச்சரியப்பட வைக்கும் வண்ணம் மரங்கள், இயற்கை மீதான உங்களின் ஆதங்கம், எண்ணக் கருத்துக்கள் இங்கே பதிவாக வந்து விழுந்திருக்கிறது.
பதிவர்களின் முயற்சிக்கும், கோகுலின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை எம்மைப் பாதுகாக்கும் என்பதனை அப்பழுக்கற்ற உண்மையாக இப் பதிவு சொல்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஈழத்தில் அனுமதியின்றி மரம் வெட்ட முடியாது. அவ்வாறு மரம் வெட்டின் தண்டனை வழங்கப்பட்டது. மரம் வெட்டினால் மரம் நட வேண்டும் எனும் கடுமையான சட்டமும் இருந்தது.
ஆனால் இன்று சிங்கள அரசோ மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்து மகிழ்கிறது.
நம் மக்களின் பல பேர் குறுகிய கண்ணோட்டத்தில் வாழ்வதால் தான் பிரச்சனையே..
வேலைவாய்ப்பைக் கெடுப்பதாகச் சொல்லி இவர் மீது பாய்கிறார்கள்.. பின்னால், சுற்றுச்சூழல் அழியும் போது 'குய்யொ முய்யொ' என்று கூப்பாடு போடுவார்கள்..
கூடங்குளத்திலும் இது தானே நடந்தது?
தன்னம்பிக்கை பதிவாகவும் உள்ளது சுரேஷ்...
சுரேஷ்!யாரோ ஒருவரின் தளத்தில் பின்னுட்டத்தில் சி.பிக்கு ஆதரவாக நீங்கள் இட்ட பின்னூட்டத்தையடுத்து அதே நிலைப்பாட்டில் நானு பின்னூட்டமிட்ட பின்பே உங்கள் பெயரைக் கவனிக்கத் துவங்கினேன்.
யோகநாதனின் முதல் பகுதி உங்களை இன்னும் அருகில் கொண்டு வந்தது.
சில மனிதர்கள் நமக்கு மிக அருகிலேயே வலம் வருவார்கள்.ஆனால் நாம் ஊன்றிக்கவனிக்க தவறி விடுவோம்.பலரும் உணர்வு பூர்வமாக பின்னூட்டமிட்டிருந்தாலும் கூட சகோ.ஆஷிக் முகம்மது (சிட்டிசன்) பின்னூட்டம் எனனை அதிகம் கவர்ந்தது.
நண்பர் யோகநாதனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
முந்தைய பின்னூட்டம் முதல் பாகத்திற்குகுரியது.தொடர் வாசிப்பில் இங்கு இணைத்து விட்டேன்.
சகோ.சகோ.சுரேஸ்குமார்,
சகோ.யோகனாதனின் போராட்டங்கள் தொடர் முயற்சிகள் நமக்கு நல்ல உத்வேகம் தருகின்றன..!
//நீங்க இருக்கும் போது இப்படி நடந்தால் அசிங்கமாயிரும் சார்!//---நல்ல புத்திசாலித்தனமான அப்ரோச்..! நோடட்..!
//அதனால நிறைய நான் நட்ட மரத்தையும் கணக்கில் எடுத்துக்கிட்டாங்க//---ஹும்... இப்படியுமா நடக்கிறது..!
விரிவான பகிர்வுக்கு நன்றி சகோ..! தொடருங்கள்..!
நல்ல தன்னம்பிக்கை கட்டுரை சார் ! வாழ்த்துக்கள் !
அடப்பாவிகளா... மரத்துல துளை போட்டு ஆஸிட் ஊத்திக் கொல்றதுங்கறது கேக்கவே எவ்வளவு கொடூரமா இருக்கு? இரக்கம் இல்லாத இந்த மனிதர்களை கடுமையா தண்டிக்கணும். யோகநாதன் அசாதாரண மனிதர்தான். (இப்ப என் இமெயில் ஐடிலருந்தே கமெண்ட் போடறேன், பதிவும் எழுதறேன். My Heartful Thanks to you Suresh Sir!)
Sir. இப்ப கூகிள் ப்ளஸ்ல ஷேர் பண்ணிட்டேன். இனியும் தவறாம பண்றேன். என்மேல எடுத்துக்கிட்ட அக்கறைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
யோகனாதனின் முயற்சிகள் பற்றிப் பதிவர் அனைவரும் அறியும் வண்ணம் அவர் பேச்சைத் தொகுத்து வழங்கும் சிறப்பான பணி!
பாவம் எவ்வளோ கஷ்டப்படுறாரு..விவேக்கை விடுங்க.. அவரு இப்ப தான் ஒரு வாட்டி..இந்த ஈஷா யோகா மற்றும் அரசியல்வாதிகள் இரண்டு லட்சம் நட்டோம் மூன்று லட்சம் நட்டோம் என்று கதை விடுவார்கள். இவர்கள் செய்ததற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்கணும்.
மரம் நடுவதை விளம்பரமாக செய்யாமல் தன் கடமையாக செய்யும் யோகநாதன் போன்றவர்கள் உள்ளதால்தான் மழை இன்னும் பெய்கிறது.
அவரது உரையை பகிர்ந்தமைக்கு நன்றி.
Post a Comment