சென்னை யூத் பதிவர் சந்திப்பும்! பின்னே நாங்களும்!
>> Tuesday, May 22, 2012
13ம்தேதி! இல்ல...இல்ல....20ம்தேதி! என சிவக்குமார் அதிமுக அமைச்சரை அம்மா மாத்துகின்ற மாதிரி தேதிய மாற்ற, வேறு வழியில்லாம பிளைட்ல போகவேண்டியதா போச்சு! என்னங்க ஙே! என்று முழிக்கிறீங்க? பிரபல நிறுவனத்தின் ஆம்னி பஸ்தான் பிளைட் மாதிரி ஓட்றாங்க தரையில டயர் படுவதேயில்லை,பறக்குதுய்யா...பறக்குது எங்கயாவது டச் ஆச்சு! மர்கையாதான்...! யப்பா சாமீ! புள்ள குட்டிகாரங்க...இதுல போகாதிங்க....!
6 மணிக்கு என்னையும் சம்பத்தையும் கொண்டு போய் கத்திபாராவுல இறக்கி விட்டுடார் மீசை டிரைவர்...அங்க ஒரு ஆட்டோ நண்பர் எங்களை ஏற்றிக்கொண்டார், எந்த ஊர் சார் நீங்க? எனக்கேட்டார்! கோவை என்றோம் மனுசன் பாசத்தை பொழிஞ்சுட்டார்...கோவையில கொஞ்ச நாள் இருந்தாராம்..! பேசிய பணத்தில் இருந்து குறைவாகவே பெற்றுக்கொண்டார்...!
முப்பரிகையில் இருந்து இராமனைச் சீதை பார்த்த மாதிரி ஒரு நீர்யானை எங்களை பார்த்து சவுண்ட் விட்டது! கண்ணை கசக்கிவிட்டு பார்த்தோம் தலையில் கட்டியிருந்த துண்டை வைத்து அது நாய்நக்ஸ் என்று அறிந்தோம்...ஓடி வந்து கட்டிகிட்டார் நாய் நக்ஸ்! நல்லா ஒரு குளியல் போட்டு விட்டு யோகநாதன் ஐயாவைப் பார்த்து அவரையும் அழைத்துக் கொண்டு முருகன் இட்லி கடைக்கு போனோம்.
அவ்வளவு பெரிய ஹோட்டலில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்துகிறார்கள். நக்கீரன் மேனேஜரை அழைத்து பிளாஸ்டிக் டம்ளரை வைக்காதிர்கள் அட்டை டம்ளர் வையுங்க என சண்டை போட்டார், கடை ஓனர் வந்து மாற்றிவிடுவதாக உறுதியளித்தார். ஆனா சாப்பிட்டு விட்டு எல்லோரும் போகும் போது என்னை மட்டும் அழைத்து சார் நீங்க எந்த ஊர் என்று கேட்டார் நான் கோவை என்றேன் எதுக்கு கேட்டார்ன்னு தெரியலை? சிவக்குமாருக்கு உதவிக்கு சம்பத்தை விட்டு விட்டு கழுகு சௌந்தரை பார்க்க கழுகு மாதிரி பறந்து போனோம்,நெரிசலான குறுகிய ரோடுகளின் வழியே பயணித்து.
சௌந்தர் வீட்டுக்கு போனோம்...அவரின் அண்ணன், அம்மா அனைவரும் அன்புடன் எங்களை வரவேற்றார்கள், சென்னை வந்தா யாரும் ரூம் எல்லாம் எடுக்கக்கூடாது எங்க வீட்லதான் தங்கவேண்டும் என சௌந்தர் ஆர்டர் போட்டார்...நோட் பண்ணுங்கப்பா....! நோட் பண்ணுங்க...!அங்கு சிறிது நேரம் சௌந்தரிடம் பேசிவிட்டு திரும்பி வந்தோம்...
ஒரே வெயிலா இருக்கு...!ஹீட்டா இருக்கு என் பல காரணங்களை சொல்லி நக்ஸ் என்னை பல இடங்களில் என்னை இழுத்தார் சோமபானக்கடைக்கு! முடியாது!முடியாது என்று வந்து விட்டேன் கடுப்பான அவருக்கு சுகர் இல்லாமல் சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்தினேன். ஹோட்டல்க்கு வந்தபிறகு சிவாவும் சம்பத்தும் கடைகளுக்கு சென்று விழாவிற்கு தேவையான பரிசு கேடயம் வாங்கிக் கொண்டு வர எல்லாரும் நன்றாக ஒரு தூக்கம் போட...!மதியம் கதவு தட்டப்பட்டது
திறந்த போது ஒரு சைனீஸ் பெண் நின்று கொண்டு இருந்தது நானும் சம்பத்தும் முழிக்க நக்ஸ் யோவ்! அது வெயிட்டர்ய்யா கீழ இருக்கிற சைனீஸ் ஹோட்டல்ல இருந்து ஆர்டர் எடுக்க வந்திருக்கு என்று சொன்னார். ஆருர் மூனாவும் வர ஆர்டர் கொடுக்கப்பட்டது, ஆளாளுக்கு ஆர்டர் செய்ய குழப்படியாக வந்து சேர்ந்த உணவுகளை புல் கட்டு கட்டியபிறகு மறுபடியும் குட்டி தூக்கம்.
எழுந்து ஒரு குளியல் போட்டு விட்டு விழா நடக்கும் இடத்திக்கு ஒரு ஆட்டோவை பிடிக்க ஆட்டோகாரரை லந்து பண்ணிய நக்ஸை கொலை வெறியோடு பார்த்து பார்த்து வண்டியோட்டினார். ஆட்டோ! சரியான இடத்திக்கு போனதும் அங்கு அனைவரிடமும் அறிமுகப்படலம் தொடங்கியது. சென்னை பித்தன் ஐய்யா வீடுசுரேஷ் எங்க ஊர் என்றார்...!மின்னல்வரிகள் கணேஷ் உங்க ஊர்காரங்கன்னா பாசம் பொத்துக்குமா? என்று கேட்டார்...நான் அங்கே வேலை செய்தேன் சில காலம் என்று கூறினார். அவரின் நண்பர்கள் சிலர் இருப்பதாகவும் கூறினார்...கணேஷ் சார் புரபைல் படத்திற்கும் நேரில் பார்ப்பதக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு....
பிலாசபி பிரபாகரன் ஈரோட்டில் பார்த்தமாதிரியில்லாமல் முடியை வெட்டியிருந்தார்...பயபுள்ள யாரையோ லவ்வுவதாக ஒரு புரளியோ...? உண்மையோ...? அரங்கம் எங்கும் புகைந்தது. பிறகு பக்கி லீக்ஸ் அவருடையது என்கிற மாதிரியும் மொபைலில் ஆதாரத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அத்தனைக்கும் விடை சொல்கிறமாதிரி மைக்கைப் பிடித்து பக்கிலீக்ஸ் என்னுடையதுதான் நானும் அதில் இணைத்துக் கொள்ளப்பட்டேன் என அறிவித்தார்....நக்கீரன் எடக்குமடக்கும் உன்னுடையதா? எனக் கேட்டு அதிர்ச்சியூட்டிக் கொண்டிருந்தார். யார்...!யார்...!எத்தனை தளத்தில இருக்கிறாங்களோ.....?ஆண்டவனுக்கே வெளிச்சம்!
கேபிள் மைக் பிடித்து விசாலினியைப் பற்றி கூறினார்..ஒரு மருத்தவர் கூறியபோதுதான் தங்களின் மகள் நுண்ணறிவுத்திறனுடன் இருப்பதை அறிந்து கொண்டார்களாம் விசாலினியின் பெற்றொர், பள்ளியில் தன்னை முந்திரிக்கொட்டை என அழைப்பதாகவும் கூறினார். ஆசிரியர் தவறு செய்வதை கண்டுபிடிப்பதால் ஆசிரியர்கள் கடுப்பாக இருப்பார்கள் எனவும் கூறினார். நுண்ணறிவு திறன் பில்கேட்ஸ்க்கே 150 அளவுதான் ஆனால் விசாலினிக்கு 225. இந்தியாவின் பெருமை விரைவில் உலகம் முழுவதும் பரவட்டும் என் வாழ்த்துகிறேன். விசாலினியை உலகறியச் செய்ததில் பிளாக்கரின் பங்கும் இருக்கிறது என்பது உண்மை! அந்த பிளாக்கர் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற உயர்திரு உணவுஉலகம் சங்கரலிங்கம் அவர்கள்...!
அடுத்ததாக யோகநாதன் உரையாற்றினார் அவரின் உரையில் சில பகுதிகள்
80ல் இருந்து 85க்குள் 115 தேயிலை தொழிற்சாலைகள் நிலகிரியில் இருந்தது, அத்தனை தேயிலை தொழிற்சாலைகளுக்கும் மேற்குதொடர்ச்சி மலைகளில் இருந்துதான் மரங்களை அறுத்துத்தான் தேயிலை வறுப்பார்கள், ராஜ்குமார் என்கிற நேர்மையான கலக்டர் அப்பொழுது இருந்தார் அவரிடம் நான் சென்று இந்தமாதிரி மரத்தை வெட்டுறாங்க...நீங்க தடுக்க மாட்டீங்களா? எனக்கேட்டேன்...
பிறகு கிளர்க் ஒருவரை அனுப்பி என்னை தனியாக சந்தித்தார் டீடெயிலாக என்னிடம் விவரங்களை க் கேட்டு மேட்டுபாளையத்தில் இருந்து கோத்தகிரி போகிற குஞ்சப்பணைங்கற செக்பொஸ்ட்டு அங்க அவர் பாரஸ்ட் ஆபிசர் மாதிரி இருக்க நாங்க எங்க நண்பர்களுடன் நெருப்பு போட்டு குளிர் காஞ்சுட்டு இருந்தோம்.அப்ப நான் பிளஸ்டூ படிச்சிட்டு இருக்கிறேன்...85ம் வருடம்.
ஒரு பைக்குல ஒருத்தர் அந்த வழியா வருகிறார் அவர் ஒரு மர வியாபாரி பெயர் உன்னி. அவரை பாரஸ்ட் ஆபிசர் வேடத்தில் இருந்த கலைக்டர் அவரை மறித்து எங்க இந்தபக்கம் போற மணி இரவு11ஆகுது என விசாரித்தார்..அவரு எங்கம்மா கோயமுத்தூர் ஆஸ்பத்திரியில இருக்கு பார்க்க போறேன் என்று சொன்னார்...சரி போ என அனுப்பி விட்டார் கலைக்டர்
நாங்க அவரிடம் அவன் மரவியாபாரி எதுக்கோ இந்தப்பக்கம் போறான் எனச் சொல்ல...சொல்ல....போன பைக் திரும்பி வருது ரெகுலரா இருக்கிற பாரஸ்ட் ஆபிசர் இல்லை அப்படிங்கறத சொல்ல திரும்பி போறான் என்பதை தெரிந்து கொண்ட கலக்டர், ஏண்டா திரும்பி வர்ர? எனக் கேட்க பணத்தை வெச்சுட்டு வந்துட்டேன் எனச் சொல்ல அவனை கட்டி பின்னால் உக்கார வைத்தோம்,அதன் பிறகு எட்டு லாரியில் மரம் வந்தது..அந்த எட்டு லாரியும் மடக்கி பிடிக்கப்பட்டது.அதில் ஒரு லாரியை கலக்டர் ஓட்டுகிறார் நான் கிளீனராக அதில் போகிறேன்...பெரிய மமதை எனக்குள்ள அடேயப்பா கலைக்டர் கூட போகிறொம் மரத்திருடர்களை பிடித்து விட்டோம் என...
அதற்கு பிறகு தொடர்ந்து 88ம் வருடம் பிளஸ்டூ முடிச்சிட்டு ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்ல உள்ள தேயிலை தோட்டத்தில வேலை செய்யறென் அப்ப எங்க வீட்டை தரமட்டம் பண்ணிட்டாங்க மரம் வெட்டுறவங்க...எங்க அம்மா வந்து என்னை வாழறதுக்கே லாயக்கில்லாதவன் நீ ஊரை விட்டே ஓடிப்போயிரு என சொல்லுறாங்க...அதனால நமக்கு இந்த வேலையே வேண்டாம் இந்த சூழல் பிரச்சனையே கையில எடுக்க வேண்டாம் என நினைத்திருக்கும் போது ஒரு நல்ல மனிதரின் ஆதரவு கிடைத்தது......
(உரை தொடரும்.....)
32 comments:
நக்ஸ்'சுக்கு இதே பொழப்பா போச்சு..!!!
எல்லாரும் கூடி சந்திக்கும் சுகமே தனிதான், யோகநாதனுக்கு வாழ்த்துகள்...!!!
vikki 'saambaraani' pottu screenplay eludha oru seydhi sollidunga....paavam manushan!!
மாமனிதன் திரு.யோகநாதன் அவர்கள்!
பெருசா இருக்கு..... பதிவ சொன்னேன் - என்னாது தொடருமா - சரியி படிச்சிட்டு வாரேன்
அவ்வப்போது இது மாதிரியான சந்திப்புகள் நடைபெறட்டும் ..!
பாசக்கார பயபுள்ள நக்ஸ் ( !!!!!!)
ஐயா சாமி முடியல..
ஆயினும் பசுமை மாறா நினைவுகள்.நமக்குள் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது நிஜம்.
யோகநாதன் !!!!
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அந்த ஆட்டோ drivar செத்தான் இல்ல...
அவனை பண்ண லந்துகளை
சொன்னா ஒரு மூணு பதிவு தேறாது....?????
ஆனா...அவர் சொல்லவும் முடியாம.....
நம்மள இறக்கியும் வாடா முடியாம.....
தவிச்ச தவிப்பு.....ஹா...ஹா...ஹா....
@ NAAI-NAKKS said...
////யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அந்த ஆட்டோ drivar செத்தான் இல்ல...
அவனை பண்ண லந்துகளை
சொன்னா ஒரு மூணு பதிவு தேறாது....?????
ஆனா...அவர் சொல்லவும் முடியாம.....
நம்மள இறக்கியும் வாடா முடியாம.....
தவிச்ச தவிப்பு.....ஹா...ஹா...ஹா....////
அந்த அண்ணன் கடைசியா உங்கள பத்தி விசாரிச்சாரு..ஹி ஹி ஹி உண்மைய பூராவும் சொல்லிட்டேன்.உங்களை நோட் ப்ண்ணி வச்சிட்டாரு.அவரோட கடசி டயலாக் “மவனே மறுபடியும் மெட்ராஸ் வரட்டும் காலி பண்ணிடறேன் அவன (உங்கள)”..
சுரேஷ் அது குஞ்சப்பணை செக்போஸ்ட்..மாற்றிக்கொள்ளவும்
இணைய உறவுகளை நேரில் சந்திப்பதும், கலகலப்பாக உறவாடுவதும் என்றும் மகிழ்ச்சியே! நல்ல கலகலப்பான போஸ்ட் சுரேஸ்!
சுரேஷ்.... வலையில் இளமையான படம் இமேஜ் மெயின்டனன்ஸ்யா... அதனால தான யூத் பதிவர் சந்திப்புக்கு கூப்ட்டீங்க. ஹா... ஹா... உங்களைப் போன்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க முடிஞ்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
சுவைபடச் செல்லும்,பதிவு , மேலும் தொடரத் தொடர்வேன்
இது போல் சந்திப்பு பல நிகழுமானால்
என் வாழ்நாள் மேலும் கூடும்
அனைவருக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
கூடி கும்மியடிச்சிருக்கீங்க. படிக்கும்பொதே சந்தோசமாக உள்ளது. தொடருங்கள்...
என்னது நீர்யானையா ..............
உவமானம் கூட தண்ணி இல்லாம அவரை சொல்லமுடியவில்லை பாருங்க ......
யோகநாதன் ஆச்சரிய மனிதர்!!!
சுவாரஸ்யமான பதிவு!
நாய் நக்கி பற்றிய எனது பார்வையை இந்த பதிவு மாற்றியுள்ளது..(ஹி ஹி அவரும் என்னை போலகுளிர்ச்சியான இடம் தேடுவார்போல;-)))
நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது கட்டாயம் உங்கள் அனைவரையும் சந்திக்கனும் என்று ஆசையாக இருக்கின்றது..!
கணேஷ் ப்ரோபைல் படம் வேற மாதிரி இருக்கா?
சொல்ற ஆள பாரு... ங்கொய்யால..
இத்தன நாளா பொண்ணு பாக்க கொடுத்த ஃபோட்டோவ போட்டு ஊற ஏமாத்திபுட்டு...இப்ப வசனம்... ஹ்ம்ம்..
பக்கி பிலாசபி பற்றி புரளிஎல்லாம் இல்லை.. கேட்டால் அவரே உண்மையை சொல்லுவார்,,,:)
யோகநாதனின் சமூக அக்கறைக்காக மீண்டும் தொடர்கிறேன்.
பதிவின் தலைப்பின் மலையாளப் படத்தின் தாக்கம் இருந்தாலும்
சுவையுற நீங்கள் பதிவர் சந்திப்பினை தொகுத்த விதம்
மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டது நண்பரே...
அறிமுகப் படலம் சூப்பர்.
பிலாசபியை வைச்சு ஒரு படத்தையே ஓட்டிப்புட்டீங்க.
யோகநாதன் சாரின் சமூகத் தொண்டிற்கு சிரம் தாழ்த்திய வணக்கம்!
சுவாரஸ்யமான பதிவு! தொடருங்கள் நண்பரே !
யோகனாதன் சாரின் பணி பாராட்டத்தக்கது, ரொம்பவே ஜாலியான லூட்டிகளை பார்க்க பொறாமையா இருக்கு :-)
கண்டிப்பா அடுத்த தடவை வந்து ரூம் போட்டா வெட்டு தான்... :)))
சீக்கிரம் எஸ்கேப் ஆனதுக்கே ரெண்டு போட்டு அனுப்பி இருக்கனும்...
நாங்களே கடைக்கு போய் ரெண்டு என்ன மூணு கட்டிங் போடுறேன் நக்ஸ் சொன்னதால விட்டேன் :)))
:(((
வர முடியலை
அலோ.. காம்பியரிங் நான் தான் பண்ணேன்.. பப்ளிக்குட்டி முக்கியம்ங்க.. :))
@சங்கர் நாராயண் @ Cable Sankar
தலைவா இன்னிக்கு பார்த்து உங்களுக்கு ரோலிங் ஆகுது பாருங்க அது பப்ளிக்குட்டி இல்லைங்க பப்ளிசிட்டி.
(ஹி ஹி ஹி.., எப்புடி நாங்களும் பண்ணுவோம்ல பப்ளிக்குட்டி ச்சே பப்ளிசிட்டி அவ்வ்வ்வ்வ்வ்)
இந்த மாநாட்டு விசயம் எனக்கு அன்று காலை தான் தெரிந்தது (தமிழ்வாசி வழியாக)..
எனினும், இணையத்தின் நேரலை மூலம் பார்த்தேன்..
இயற்கை மீது காதல் கொண்ட யோகநாதனின் உரையை பதிவு செய்தமைக்கு நன்றி. சமீபத்தில் அவரது புத்தகவெளியீடு நடந்ததாக கேள்விப்பட்டேன்.
Post a Comment