மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?

>> Thursday, May 3, 2012



நீ நடந்து செல்லும் போது
உன் தாவனி உரசிச் சென்ற காற்று
வேப்பமரத்தை உரசிய போது
உன்னை விட மகத்துவம்
அதிகம் என பகடி பேசியது...

மழைக்காலத்தில் தார்ச்சாலை
உருகுவதின் மர்மம் என்ன? - என
எனது ஊர் மாநகராட்சி கைபிசைய
எனக்கு மட்டும் தெரியும் ரகசியம்!
நீ வெறும் காலில் நடப்பதினால் என்று...

புல்லாங்குழல் வழியே செல்லும்
காற்று இசையாவது போல...
உன் நாசி வழியே செல்லும்
காற்று இதழ் வழியே
வார்த்தைகளாக
தமிழே இன்னும் அழகான
இசையாக வெளிவருகிறது...

உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை.....

நீ தினம் பூப் பறிக்கும்
பூச்செடியில் பூக்களுடன்
ஒட்டிக்கொண்டு செல்ல
இலைகள் சண்டையிட்டுக்
கொள்ளுகின்றன உன்னால்
நிராகரிக்கப்பட்ட இலைகள்
என்னைப் போலவே
தலை கவிழ்ந்து
சருகாய்....கீழே விழுந்து
கிடக்கின்றன....
மிதித்து விட்டாவது போ!

53 comments:

முத்தரசு 10:22:00 PM  

படத்துக்கு தோதுவா கவிதை

முத்தரசு 10:23:00 PM  

இத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்

Unknown 10:24:00 PM  

உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை..///

அப்படி என்னதான் பெயரென்று எங்களுக்கு சொல்லலாமே யாமும் இன்புறுவோமே......கவிதைகள் கதைப்போமே......தார் ரோட்டில் கார் ஓடுவது சகஜம்... செருப்பில்லாமல் நீ ஓடுவது....!!!!!11 எது நிஜம்..????

முத்தரசு 10:25:00 PM  

தார்சாலைகள் உருகுவதின் பின்னணி இது தானா, இது தெர்யாம போச்சே.........இம்புட்டு நாளா .

முத்தரசு 10:26:00 PM  

//உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை.....//

அம்ம்புட்டு அழாகா பய புள்ள பேரு

முத்தரசு 10:29:00 PM  

//உன் தாவனி உரசிச் சென்ற காற்று
வேப்பமரத்தை உரசிய போது//

கன்போர்ம் அப்ப அது முனியே தான்,

முனிய வர்ணித்து கவி பாடிய முதல் பதிவர் நீர் தான்

வாழ்க வாழ்த்துக்கள்

Unknown 10:29:00 PM  

@மனசாட்சி™
படத்துக்கு தோதுவா கவிதை
////////////////
வணக்கம் மச்சி!

Unknown 10:30:00 PM  

@மனசாட்சி™
இத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்
/////////////////////////////////
படத்தில அப்படி ஒன்னும் இல்லையே!

முத்தரசு 10:32:00 PM  

//இலைகள் சண்டையிட்டுக்
கொள்ளுகின்றன உன்னால்
நிராகரிக்கப்பட்ட இலைகள்//

யோவ் நல்லாதானே போய்கிட்டு இருக்கு அது என்ன இடையில் உள்குத்து????

Unknown 10:32:00 PM  

@Vijayan K.R
உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை..///

அப்படி என்னதான் பெயரென்று எங்களுக்கு சொல்லலாமே யாமும் இன்புறுவோமே......கவிதைகள் கதைப்போமே......தார் ரோட்டில் கார் ஓடுவது சகஜம்... செருப்பில்லாமல் நீ ஓடுவது....!!!!!11 எது நிஜம்..????
///////////////////////////
அபிதா குஜலாம்பாள்...

கார் மட்டும் அல்ல விஜயரே! காரிகை நடந்தாலும் உருகும்..எங்க மனசு மாதிரி!

முத்தரசு 10:33:00 PM  
This comment has been removed by the author.
Unknown 10:33:00 PM  

@மனசாட்சி™
தார்சாலைகள் உருகுவதின் பின்னணி இது தானா, இது தெர்யாம போச்சே.........இம்புட்டு நாளா .
/////////////////
தெரிவுக்கு நன்றி!

முத்தரசு 10:34:00 PM  

வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™
இத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்
/////////////////////////////////
படத்தில அப்படி ஒன்னும் இல்லையே!

வாசன் ஐ கேர் விசிட் பண்ணவும் ப்ளீஸ்

Unknown 10:35:00 PM  

@மனசாட்சி™
//உன் தாவனி உரசிச் சென்ற காற்று
வேப்பமரத்தை உரசிய போது//

கன்போர்ம் அப்ப அது முனியே தான்,

முனிய வர்ணித்து கவி பாடிய முதல் பதிவர் நீர் தான்

வாழ்க வாழ்த்துக்கள்
///////////////////
முனியம்மா அல்ல அபிதாகுஜலாம்பாள்......

Unknown 10:37:00 PM  

@மனசாட்சி™
//இலைகள் சண்டையிட்டுக்
கொள்ளுகின்றன உன்னால்
நிராகரிக்கப்பட்ட இலைகள்//

யோவ் நல்லாதானே போய்கிட்டு இருக்கு அது என்ன இடையில் உள்குத்து????
///////////////////////////
ஆட்டோ வரவெச்சிருவீரு போல.....!
யோவ்! மீ....பாவம்!

Unknown 10:39:00 PM  

@மனசாட்சி™
வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™
இத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்
/////////////////////////////////
படத்தில அப்படி ஒன்னும் இல்லையே!

வாசன் ஐ கேர் விசிட் பண்ணவும் ப்ளீஸ்
///////////////////////////
என் கண்ணை நொள்ளையாக்க சதி பண்றீயளா....?

Unknown 10:49:00 PM  

கா வி த ...ச்சே கவித கவித!

கூடல் பாலா 11:02:00 PM  

அடேங்கப்பா!

Sivakumar 11:35:00 PM  

"உபய குசலோபரி...தவணை முறைல பிரிட்ஜ் வாங்கி இருக்கேன். நித்தம் மூணு தரம் குளிக்கறேன் " இதையும் சேத்துக்கங்க...

மகேந்திரன் 12:00:00 AM  

அடடா..
உச்சி உஷ்ணம் உள்ளங்காலுக்கு
வந்துருச்சோ....
என்னமா யோசிக்கிறாங்கப்பா..

கவிதை நல்லா இருக்குது நண்பரே..

தமிழ்வாசி பிரகாஷ் 12:13:00 AM  

வெயில் காலத்துல சரண்யா ஸ்டில் பார்த்துட்டு மேல படிக்க போகாம இருகேன்யா

தமிழ்வாசி பிரகாஷ் 12:14:00 AM  

நீ வெறும் காலில் நடப்பதினால் என்று...///

வெயிலுக்கு சரண்யா கால் ரொம்ப வேர்த்து சாலை கூலிங் ஆகுதோ??????

தமிழ்வாசி பிரகாஷ் 12:17:00 AM  

கவிதை நல்லா இருக்குயா....

அனுஷ்யா 12:18:00 AM  

யோவ் அண்ணே... கவித நல்லா இருக்கான்னு பாரு ன்னு சொல்லி அனுப்ன கவிதைய உன்னோட ப்ளாக்ல போட்டுக்கிட்டியா? தப்புண்ணே....

அனுஷ்யா 12:19:00 AM  

moreover அது என்னோட அத்த பொண்ணு ... ஞாபகம் இருக்குல்ல...? hmmmmmmmm

சசிகலா 12:39:00 AM  

அக்னி வெயிலில் கூட இப்படி யோசிக்கிறிங்க . அப்போ மார்கழில ம் பார்ப்போம் அருமையான வரிகள் .

விச்சு 12:46:00 AM  

//உலக மொழிகளில் உன் பெயருக்கு இணையான அழகான வார்த்தை கிடைக்கவில்லை// செமத்தியான கற்பனை. காதலிக்க ஆரம்பித்தவனுக்கு காதலியைத்தவிர எதுவுமே அழகாய் தோன்றாது. ஆமா!!இந்தப் படத்தினை எங்க சுட்டீங்க... பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு.

சென்னை பித்தன் 1:10:00 AM  

//மிதித்து விட்டாவது போ!//
பல நேரங்களில் ஒரே மிதியாய் மிதித்து விட்டுப் போய் விடுகிறார்களே சுரேஸ்!
காதல் அனுபவமின்றிக் கவிதை பிறக்குமோ?!
ரசித்தேன்.

CS. Mohan Kumar 1:58:00 AM  

அடேங்கப்பா !

Anonymous,  2:21:00 AM  

அருமையான சொல்லாடல் நண்பரே. பாராட்டுகள்

\வெறும் காலில் நீ நடப்பதனால்.....\ மிகவும் ரசித்தேன்.

நாகு
www.tngovernmentjobs.in
www.nagaindian.blogspot.com

Gobinath 3:28:00 AM  

அட அட அட...!
என்னமா எழுதுறீங்க போல?

Unknown 5:20:00 AM  

@விக்கியுலகம்
கா வி த ...ச்சே கவித கவித!
////////////////
நொன்றி...ச்சே நன்றி!

Unknown 5:21:00 AM  

@koodal bala
அடேங்கப்பா!
//////////////
வணக்கம் நன்றிகள்.......

Unknown 5:22:00 AM  

@! சிவகுமார் !
"உபய குசலோபரி...தவணை முறைல பிரிட்ஜ் வாங்கி இருக்கேன். நித்தம் மூணு தரம் குளிக்கறேன் " இதையும் சேத்துக்கங்க...
//////////////////////////
ஓகே தலைவா! நீங்க சொன்னா செர்ரி!

Unknown 5:23:00 AM  

@மகேந்திரன்
அடடா..
உச்சி உஷ்ணம் உள்ளங்காலுக்கு
வந்துருச்சோ....
என்னமா யோசிக்கிறாங்கப்பா..

கவிதை நல்லா இருக்குது நண்பரே..
///////////////
மிக்க நன்றிகள் சார்!

Unknown 5:23:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
வெயில் காலத்துல சரண்யா ஸ்டில் பார்த்துட்டு மேல படிக்க போகாம இருகேன்யா
/////////////////
அது சரி பாரும்....!

Unknown 5:24:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
நீ வெறும் காலில் நடப்பதினால் என்று...///

வெயிலுக்கு சரண்யா கால் ரொம்ப வேர்த்து சாலை கூலிங் ஆகுதோ??????
////////////////////
பனி போல உருகுது.......

Unknown 5:25:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
கவிதை நல்லா இருக்குயா....
///////////////////
டேங்யூ சார்!

Unknown 5:26:00 AM  

@மயிலன்
யோவ் அண்ணே... கவித நல்லா இருக்கான்னு பாரு ன்னு சொல்லி அனுப்ன கவிதைய உன்னோட ப்ளாக்ல போட்டுக்கிட்டியா? தப்புண்ணே....
////////////////////////
விடுங்க தம்பி இதுக்கெல்லாம் கோவிச்சிகிட்டு......நீங்க தபூசங்கருக்கே கவித கொடுக்கறவரு!

Unknown 5:27:00 AM  

@மயிலன்
moreover அது என்னோட அத்த பொண்ணு ... ஞாபகம் இருக்குல்ல...? hmmmmmmmm
/////////////////////
உமக்கு எத்தனை அத்தை பொண்ணுதான் இருக்குது வோய்!

Unknown 5:28:00 AM  

@சசிகலா
அக்னி வெயிலில் கூட இப்படி யோசிக்கிறிங்க . அப்போ மார்கழில ம் பார்ப்போம் அருமையான வரிகள் .
//////////////////////////
கருத்துரைக்கு மிக்க நன்றிகள்....!மார்கழியில இப்பவே யோசிக்கனும் சகோ!

Unknown 5:30:00 AM  

@விச்சு
//உலக மொழிகளில் உன் பெயருக்கு இணையான அழகான வார்த்தை கிடைக்கவில்லை// செமத்தியான கற்பனை. காதலிக்க ஆரம்பித்தவனுக்கு காதலியைத்தவிர எதுவுமே அழகாய் தோன்றாது. ஆமா!!இந்தப் படத்தினை எங்க சுட்டீங்க... பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு.
//////////////////////
ஆமாங்க.....கன்னியர் கண் பட்டால் மாமலையும் கடுகன்றோ.........
படம் கூகுளாண்டவர் புண்ணியத்துல கிடைச்சதுங்கோ!

Unknown 5:31:00 AM  

@சென்னை பித்தன்
//மிதித்து விட்டாவது போ!//
பல நேரங்களில் ஒரே மிதியாய் மிதித்து விட்டுப் போய் விடுகிறார்களே சுரேஸ்!
காதல் அனுபவமின்றிக் கவிதை பிறக்குமோ?!
ரசித்தேன்.
//////////////////
அனுபவசாலி சொல்றீங்க....கேட்டுக்கிறோம்....ஹிஹி! மிக்க நன்றி ஐயா!

Unknown 5:32:00 AM  

@மோகன் குமார்
அடேங்கப்பா !
////////////////////
மிக்க நன்றிகள் மோகன்குமார்! சார்!

Unknown 5:33:00 AM  

@Anonymous
அருமையான சொல்லாடல் நண்பரே. பாராட்டுகள்

\வெறும் காலில் நீ நடப்பதனால்.....\ மிகவும் ரசித்தேன்.

நாகு
///////////////
மிக்க நன்றிகள் சார் வருகைக்கு நன்றிகள்!

”தளிர் சுரேஷ்” 6:21:00 AM  

மழைக்காலத்தில் தார்ச்சாலை
உருகுவதின் மர்மம் என்ன? - என
எனது ஊர் மாநகராட்சி கைபிசைய
எனக்கு மட்டும் தெரியும் ரகசியம்!
நீ வெறும் காலில் நடப்பதினால் என்று.

அருமையான கற்பனை!நல்ல கவிதை வாசித்த திருப்தி கிடைத்தது! வாழ்த்துக்கள்!

MARI The Great 7:44:00 AM  

///////மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?/////////

மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகாதே சரி ஏதோ விஞ்ஞான பதிவா இருக்கும்ன்னு நினைச்சு வேகமா ஒடி வந்தேன் பாஸ், நல்லா கூப்பிட்டு வச்சு கும்முநீங்க, ஹி ஹி ஹி இப்பிடியே கீப்-அப பண்ணுங்க ..

ஆனாலும் கவிதை நல்லாத்தான்யா இருந்துச்சு ..!

காட்டான் 8:09:00 AM  

வணக்கம் தம்பி.
அருமையா இருக்கையா கவிதை அதிலும் தார் சாலை உருகுவது..... ;-)

Yaathoramani.blogspot.com 8:17:00 AM  

கவிதையைப் படித்து நான் உருகிப்போனேன்
தார்ச் சாலையைப் போலவே
மனம் கொள்ளை கொள்ளும் பதிவு
(இப்படியெல்லாம் கவிதைஎழுதத் தெரிந்தால்
யார்தான் காதலிக்க மறுப்பார்கள் )

Unknown 9:22:00 PM  

@s suresh
@வரலாற்று சுவடுகள்
@காட்டான்
@ரமணி
@ஆபிசர்
வருகைக்கும் வாழ்த்திக்கும் மிக்க நன்றிகள்!

aalunga 12:36:00 AM  

ஏதோ அறிவியல் பூர்வமா சொல்லப்போறிங்க என்று நினைத்து வந்தால்.. கிர்ர்ர்ர்ர்ர்!!

என்ன ஆனாலும், கவிதை ரொம்ப அழகு. (படமும் தான்)

//புல்லாங்குழல் வழியே செல்லும்
காற்று இசையாவது போல...
உன் நாசி வழியே செல்லும்
காற்று இதழ் வழியே
வார்த்தைகளாக
தமிழே இன்னும் அழகான
இசையாக வெளிவருகிறது...//

அவள் வாய்வழி வந்த தமிழ் இசையாக இருக்கா?
நடத்துங்க!!
ரொம்ப நல்லா இருக்கு!

vimalanperali 5:59:00 AM  

நல்ல கற்பனை,அழகாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்,"இவ்வளவு ஆசைக்காரரா நீங்க?ஏயப்பா"

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP