மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?
>> Thursday, May 3, 2012
நீ நடந்து செல்லும் போது
உன் தாவனி உரசிச் சென்ற காற்று
வேப்பமரத்தை உரசிய போது
உன்னை விட மகத்துவம்
அதிகம் என பகடி பேசியது...
மழைக்காலத்தில் தார்ச்சாலை
உருகுவதின் மர்மம் என்ன? - என
எனது ஊர் மாநகராட்சி கைபிசைய
எனக்கு மட்டும் தெரியும் ரகசியம்!
நீ வெறும் காலில் நடப்பதினால் என்று...
புல்லாங்குழல் வழியே செல்லும்
காற்று இசையாவது போல...
உன் நாசி வழியே செல்லும்
காற்று இதழ் வழியே
வார்த்தைகளாக
தமிழே இன்னும் அழகான
இசையாக வெளிவருகிறது...
உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை.....
நீ தினம் பூப் பறிக்கும்
பூச்செடியில் பூக்களுடன்
ஒட்டிக்கொண்டு செல்ல
இலைகள் சண்டையிட்டுக்
கொள்ளுகின்றன உன்னால்
நிராகரிக்கப்பட்ட இலைகள்
என்னைப் போலவே
தலை கவிழ்ந்து
சருகாய்....கீழே விழுந்து
கிடக்கின்றன....
மிதித்து விட்டாவது போ!