நாய்த் தொல்லை தாங்க முடியலைடா சாமி!
>> Wednesday, May 9, 2012
எட்டு வயசுல...எங்கயாவது கடைக்கு இல்லை பிரண்ட பார்க்க போகனும்னா' பைக் இல்லை கார்லதான் போவேன். என்னா சார் முழிக்கிறீங்க? அட கற்பனை குதிரை சார்...!கார் சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணுவேன்' டுஸ்டுஸ்டுஸ்ஸ்ஸ்......என ஸ்டார்ட் ஆக மறுக்கும், ஒரு ஹாரன் அடித்து விட்டு (வாயிலதான்) மறுபடியும் ஸ்டார்ட் செய்வேன் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இப்ப ஸ்டார்ட் ஆயிருச்சு, இடது கையில கியரை போட்டு வண்டிய கிளப்பி ஓட்ட வேண்டியதுதான், நம்ம கற்பனைக்கு தகுந்த மாதிரி காரோ, பைக்கோ பறக்கும்.