அலோவ் நாங்க வோடாப்போனுல இருந்து பேசறோம்.....

>> Tuesday, October 22, 2013

டீ டைமுக்கு கடைக்கு வந்தான் வாசு வரும் போதே புலம்பிக் கொண்டு வந்தான்..... "மச்சான் இந்த கொளத்தூரானோட பெரிய்ய ரவுசா இருக்கு...ஒரு சைனா போன வச்சுட்டு எப்பப்பாரு ஒரே பாட்ட திரும்ப..திரும்ப போட்டுக்கிட்டு கொல்றான்...மச்சான். தூக்கிப் போட்டு ஒடைச்சுப் போடட்டுமா..?" வாசு கேட்கவும்... 

மச்சான் விடுரா "அவன் ஒரு வௌங்காத பய" என்றார்.

"இல்ல மச்சா எதாவது ஒண்ணு பண்டனும்... நிம்மதியா கம்பனியில வேல பாக்க முடியல மச்சான்" என்றான் வாசு!

மச்சான் கொஞ்சம் கிருகதலம் புடிச்ச ஆளு நரை மீசைய நீவிட்டே யோசித்தார் அவன் நெம்பர் குட்ரா என்றபடி அவருடைய போனை எடுத்தார்....
9864........அதான் மச்சான் அவன் நெம்பரு...

ரிங்காகுது...ரிங்காகுது....

"ஹலோ ஆருங்க..?" 

"அலோ சார் நாங்க வோடாப் போனுல இருந்து பேசுறோம்....!"

"அப்படியா நான் ஸ்பைஸ் போனுல இருந்து பேசுறனுங்க...வெலை ஆயிரத்து ஐநூறு உவாய்ங்க...."

"என்னய்யா நக்கலா....? நாங்க நீ ஊஸ் பண்ற சிம்மு கம்பேனியில இருந்து பேசுறோம்....உங்க மேல ஒரு கம்ளைண்ட் வந்திருக்கு..!"

"சொல்லுங் சார்......என்ன கம்ளைண்ட்டுங்க சார்"

"நீங்க அடிக்கடி போனுல சத்தமா பாட்டுப் போடுறீங்களாமா...? என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க மனசுல....."

"அலோ....அலோ.....நான் பாட்டுப் போட்டா உங்களுக்கென்னங்க...?"

"இங்க பாருங்க மிஸ்டர் கொளத்தூர் கணேசன்! நீங்க அடிக்கடி இப்படிப் பாட்டுப் போடறது எங்க நெட்வொர்க்க பாதிக்குது!"

"ஏங்கோ.....எம்பேரு எப்படித் தெரியும்ங்கோ...!"

"பேரு மட்டுமில்ல கணேசன் நீங்க வேல செய்யற கம்பேனி கே.வி.ஆர் நகர்ல, கே.டி.சி ஸ்கூல் பக்கத்துல... வந்தனா பேக்கரிக்கு எதித்தாப்ல இருக்கு!கம்பனிக்கு முன்னாடி ஒரு வேப்ப மரம் கூட இருக்கு ஓகேவா...?"

"நீங்க சொல்றது செரீதான் சார்....! நான் எம்பட போனுல பாட்டுக் கூடப் போடக் கூடாதா சார்?"

"ஆமாங்க.... கணேசன் உங்க கம்பனியில எங்க வோடா போன்தான் நிறைய பேரு ஊஸ் பண்றாங்க...நீங்க சத்தமா பாட்டுப் போடறதால அவிங்க நெட் ஒர்க் பாதிக்குதுன்னு கே.வி.ஆர்.நகர் ஸ்டேசன்ல கம்ளைண்ட் பண்ணியிருக்காங்க...தொடர்ந்து இனி பாட்டுப் போட்டா இன்ஸ்பெக்டரை விட்டு போனை புடிங்கிட்டு வரச் சொல்லலாமுன்னு இருந்தோம் செரி ஒரு தடவை வார்ன் பண்டி வுடுவோம்ன்னு கூப்பிட்டோம் இனி போனுல பாட்டு வக்காதிங்க கணேசன்."

"என்னங்க சார் இது அநியாயமா இருக்குங்க சார்...! நான் சிம்ம மாத்திக்கப் போறேன் உங்க வோடாப் போனும் வேண்டாம்....#%$^% வேண்டாம்...."

"அது முடியாது கணேசன்....நீங்க பழனிச்சாமி ரேசன் கார்டுலதான் சிம்மு வாங்கியிருக்கீங்க....உங்க போட்டாவை நாங்க எல்லா போனு கம்பனிக்காரங்களுக்கும் கொடுத்துட்டோம் உங்க மேல கம்ளைண்ட் இருக்கறதால யாரும் சிம்மு தரமாட்டாங்க.....!"

"அய்யோ...இது என்ன அநியாயமா இருக்கு...ஒரு பாட்டுக்கூட போடக்கூடாதா...? என்ற மெமரி கார்டுல இருந்துதானே போடுறேன்..?"

"என்ன கணேசன் நீங்க புரியாதவரா இருக்கீங்க...? சரி நீங்க ரொம்ப பாவமா கேட்கறதால தெனம் ஒரு பத்துப் பாட்டு மட்டும் போட்டுக்கங்க....!"

"சரீங் சார் நொம்ப டேங்ஸ் சார்...!"

"சரி இன்னோரு விசயம் போன்ல நீங்க கெட்ட..கெட்ட வார்த்தையா பேசுறீங்க.....இப்பக் கூட  #%$^% அப்படிங்கிறீங்க,அப்படிப் பேசாதிங்க...வோடபோனு ஆபிஸ்ல நிறைய லேடிஸ் இருக்காங்க நாகரீகமா பேசுங்க அவங்க சங்கடப்படறாங்க....அவங்களும் உங்க மேல கம்ளைண்ட் கொடுக்க சொன்னாங்க....நாங்கதான் சரி ஒரு டைம் வார்ன் பண்டி வுடுவோம்ன்னு அவங்களை சமாதானப் படுத்தி வச்சிருக்கோம் இது உங்களுக்கே நல்லாயிருக்கா..? கணேசன்!"

"நா... பேசறது முச்சூடும் உங்களுக்கு கேக்கும்ங்களா........?"

"நீங்க என்ன பண்டினாலும் எங்களுக்கு தெரியும்! இப்ப பாருங்க பெர்ரிய ஆபிசர் நான் பேசுறேன் பீடி குடிச்சுட்டே பேசுறீங்க....! இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச மரியாதையா...?"

"அய்யோ சாமீ...இதோ கீழ போட்டுட்டேன் இனி சத்தீயமா குடிக்க மாட்டேன் சார்."

வாசு சன்னலில் எட்டிப் பார்த்துட்டு "மச்சான் கொளத்தூரான் பீடிய கீழ போட்டுட்டான் வேட்டிய கீழ வேற எறக்கி வுட்டுட்டான்...."என்றான்

மச்சான் வாசுவை சும்மாயிருக்குமாரு சைகை காட்டினார் 

"மிஸ்டர் கணேசன் இனி நீங்க பாட்டுப் போடக்கூடாது ஓகேவா....! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் வோடாப் போனைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி"

வாசு விழுந்து...விழுந்து சிரித்தான்...."மச்சான் உம்பட குசும்புக்கு அளவேயில்ல மச்சான்! செரீ டீ டையிம் முடிஞ்சுது நான் போறேன்" என்ற படி கம்பனிக்கு உள்ளே போனான் மச்சான் தன்னுடைய பிளாக்கை திறந்து இதை டைப்பண்ண ஆரம்பித்தார்............

11 comments:

ஜோதிஜி 9:20:00 AM  

ராத்திரி நேரம் சிரிக்க வைத்தமைக்கு நன்றி.

நாய் நக்ஸ் 10:13:00 AM  

மாம்ஸ் செம குத்து வாங்கி இருக்க போல.....உன் போன் வோடபோன் என்று தெரியும்


எப்படி மாம்ஸ் வலிக்காத மாதிரி போஸ்ட் போடுற ???????

Unknown 12:45:00 PM  

இவ்ளோ லூசா எல்லாம் ஆளுங்க இருக்காங்களா?ஹி!ஹி!!ஹீ!!!

மகேந்திரன் 1:05:00 PM  

வில்லாதி வில்லர்கள்
அவனியில் உண்டும்... ஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் 7:15:00 PM  

ஹா... ஹா... செம குசும்பு...!

aavee 7:27:00 PM  

இதை ஒரு குரும்படமாவே எடுக்கலாம் போலிருக்கே!!

ராஜி 8:27:00 PM  

பாவம் உங்க ஃப்ரெண்ட்

”தளிர் சுரேஷ்” 6:26:00 AM  

சும்மாவாகட்டும் ரவுசு பண்றவங்கள இப்படித்தான் திருத்தனும்! சூப்பர்!

Anonymous,  7:18:00 PM  

வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP