தி யங் தொழில்அதிபர் மாரிச்சாமி!

>> Thursday, August 2, 2012



மாரிச்சாமி இரண்டு நாளா தொண்டையில பச்சத்தண்ணி குடிக்காம சோந்து போயி ஒக்காந்துட்டு இருக்கிறாரு! கெழவி செத்த பொறவு எல்ஏசி பணம் ரண்டு லட்சம் வந்தது பேங்கில போட்டு வச்சிருந்தாரு...! ஒரு நாள் உண்டுட்டு புள்ளா கோவில் வாசல்ல துண்ட விரிச்சு போட்டுத் தூங்கிட்டு இருந்தவரு...யாரோ ரவுசு போட்டுக்கிற மாரி சத்தம் கேட்டு முழிச்சு பார்த்தாரு ரோட்டுக்கு அவடத்தால ஒரு பெரீய பிளக்ஸ் பேனர்  வச்சிட்டு இருந்தானுக நாலைஞ்சு பசங்க...!

"என்ராது எதாவது சின்மா போஸ்ட்ரான்னாரு....!மாரிச்சாமி"

இல்லீங் கீமுக் கோழிப் பண்ணை வௌம்பரம்முங்க...பன்னாடி அப்படின்னாங்க,

என்ரா...! கீமு கோழியா....அப்படின்ட்டு அவனுக மூங்கி கம்புல மாட்டி வச்சிருந்த வௌம்பரத்தை எழுத்துக் கூட்டி படிச்சாரு..! அடங் ஒ...னோளி! கறவை வளர்த்தாக்கோட இவ்வளவு வருமாணம் வராது..! ஒடக்கா முட்டை வுடாத நம்ம காட்டுல வளர்த்தா நாலுகோழிக்கு வருசம் நாலு ஒன்னு நாலு தேறும் போல....கணக்கு போட்டது  மனசு! விதி ஆர வுட்டுது! அட்ரஸை குறிச்சிட்டு காத்தாலயே பண்ணைக்காரன் கடைக்கு முன்னாடி குந்த வெச்சு ஒக்காந்தாரு...!

காளை மாட்டுலயே பாலை கறக்கிற கீமு கோழிக்காரங்க....எச்சக்கையில காக்கா ஓட்டாத மாரிச்சாமிய எப்படியோ பேசிச் சாய்ச்சுப் புட்டாங்க...பேங்கில இருந்த ரண்டு லச்சத்தை முள்ளங்கி பந்தையாட்டம் கொண்டாந்து கொடுத்தாரு...! அப்பவே அவன் சொன்னான் மாரிச்சாமி "நீங்க நல்லா வருவீங்க...!" அப்படின்னு. ஒரு கல் ஒரு கண்ணாடி சின்மாவ பொறவுதான் பார்த்தாரு மாரிச்சாமி. அப்பவே மனசுல சம்சயம் உன்டாகி கண்ணைக் கட்ட பாதி சின்மாவுல போயி கீமுக்காரன் இருக்கானான்னு பார்த்தாரு.


கடையில உக்காந்து அக்குல சொறிஞ்சிகிட்டு கீமு கோழி மாறியே கொட்டாவி வுட்டுட்டு இருந்தான்! ஓனரு! அவனை எழுப்பி "ஏம்பா...! தீவனம் கொடுத்து நாலு மாசம் ஆச்சு...! எம் கைக்காசப் போட்டு தவுடு வாங்கி உருட்டி கொடுத்துட்டு இருக்கிறேன் ரண்டு நாளு வேண்டா வெறுப்பா தின்னுச்சு...!இப்ப அதுவும் உங்கறது இல்ல தவுட்டை கொண்டு போனாலே எம் மண்டையில கொட்டுது எம் மண்டையப் பாரு..!" அப்படின்னு உருமாவ கழட்டி காட்டுறாரு "இன்னும் செத்த இல்லை மூளையே வெளிய வந்திருக்கும்..." கோழிய புடிச்சிட்டு போங்கப்பா, செட்டை கழட்டிக்கப்பா...!எம் பணத்தைக் குடு அப்படின்னு வெரசா கேட்டாரு!

அவன் எருமை மாட்டு மேல மல பேஞ்ச மாரி "சரிங்க மாரிச்சாமி நான் ஆள் அனுப்புகிறேன் எல்லாத்தையும் எடுத்துட்டு பணத்தை கொடுக்குறேன்" அப்படின்னு அவன் சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சான், மன்சு நிம்மதியாகி வீட்டுக்கு வந்தாரு..., ஒரு மாசமாச்சு. போன் போட்டும் ஆளும் வரலை, கோழியையும் புடிக்கலை...!, பாவம் அந்த ஜீவனுக படுற பாட்டைப் பார்த்து கொடுமை தாங்காம...நேரடியா போனாரு. அங்க கடையும் இல்லை கிடையும் இல்ல, ரவையோட ரவையா பொட்டிய கட்டிட்டு ஓடிப் போயிட்டா ஓனரு......ஓனரு பொண்டாட்டியும். அங்கியே தலையில துண்டைப் போட்டு ஒக்காந்தவர்தான்.

கெழவி ஆலும்....பாலும்....ஊத்தி கொஞ்ச...கொஞ்சமா எல்ஏசி கட்டியது இப்ப ராமத்தை போட்டுட்டு போயிட்டா .....டோலி பைய இதையே திரும்ப...திரும்ப.....புலம்பிக்கிட்டு கிடக்கிறாரு! அவரு சம்சாரம் ராமதாயி "அட வுடு நம்ம தலையில கவருமெண்டு காச நாம உங்கக்கூடாதுன்னு எழுதியிருக்கு...! அதான் எல்ஏசி பணம் இப்படி போயிடுச்சு.....அப்படின்னு ஆறுதல் சொல்லி இத்துனூன்டு பலசாவது குடி..!" என்று மோரை கரைச்சு பழைய சாதத்தை அவர் முன் வக்கிது. கொஞ்சூண்டு குடிச்சிட்டு நாக்கை நனைச்சிட்டு அப்படியே கவுத்துக் கட்டில்ல சாயுறாரு...

"ஐய்யா......!ஐய்யோவ்..!"

ஆரோ எழுப்ப மாரிச்சாமி ஒறக்கம் கலஞ்சு பாக்குராரு...ரண்டு பேரு நல்ல வெள்ளை சட்டைய புல் அங்கராக்குள்ள வுட்டுட்டு, கோமணத் துணி மாதிரி கழுத்துல கட்டிக்கிட்டு, நம்ம அஞ்சா சிங்கம் செல்வின் கணக்கா நிக்குறாங்க.....ஆருப்பா நீங்க என்ன வேனும்...? என்று கேட்கிறார். அதுல ஒருத்தன் சொல்றான், ஐய்யா...!நாங்க எஸ்.கே.எப்.எஸ் பிரைவேட் லிமிட்டேட்ல இருந்து வர்ரமுங்க, நீங்க ஒரு பத்தாயிரம் கட்டினா மாசம் ஆயிரம் பத்து மாசம் தருவோம்...,கடைசியில  பத்து மாசம் கழிச்சு, உங்க பத்தாயிரத்தை அப்படியே திருப்பி கொடுத்திருவோம்..., நீங்க நம்பலைன்னா இங்க பாருங்க அப்படின்னு ஒரு போட்டாவை காட்டுறான் ஒரு செவத்த பையன் இந்த ஆளு கூட நிக்குது..! "இது ஆரப்பா எனக்கு வௌங்கலையே...." அப்படிங்கிறாரு....அவருதாம் ஐய்யா "லிலைன்ஸ்" முதளாளி கும்பானி இந்தியாவுலியே பெர்ரீய பணக்கார்ரு ஆராயிரம் கோடி போட்டிருக்காரு...! இதைப்பாருங்க இவர்தான் ஃபுருனோ சுல்தான்........அவர்கள் பேசப்....பேசப்.....ஆ.....ன்னு வாயப் பொளந்துகிட்டே அடுத்த தொழிலில் பணம் போட ஆயத்தம் ஆகிறார் தொழில்அதிபர் மாரிச்சாமி!

46 comments:

CS. Mohan Kumar 6:56:00 PM  

நிச்சயம் நீங்க கதை எழத தகுதியானவர் தான் சுரேஷ்

திண்டுக்கல் தனபாலன் 7:00:00 PM  

வானொலியிலும், தொலைக்காட்சியிலும்... இந்த விளம்பரம் தான் அதிகம்...

வித்தியாசமான் எழுத்து நடை...
(த.ம. 3)

கோவை நேரம் 7:01:00 PM  

துண்டு போட ரெடி...?

ம.தி.சுதா 7:19:00 PM  

கிமு கோழிய... அந்த பட்டை அடித்த முட்டை ாபர்தததும் ரொம்பவே பயந்துட்டேன்...

cheena (சீனா) 7:31:00 PM  

ஏமாந்தவனுங்க நெம்பப் பேரு

பாலா 8:29:00 PM  

இந்த ஈமு விளம்பரங்களை ரேடியோவில் கேட்கும் போதெல்லாம் செம கோபம் வருகிறது. மக்களை ஏமாற்ற புது புது டெக்னிக்குகள் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்காங்க.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 9:33:00 PM  

கிராமிய பாணியில்..

sathishsangkavi.blogspot.com 9:48:00 PM  

1000 கோடிக்கு மேல் முதலீடு நடந்திருக்காம்...

முத்தரசு 10:56:00 PM  

மாப்ள எப்படி இப்பூடி எல்லாம்....சான்சே இல்ல..அடுத்து ஒரு சிட்பண்ட்

rajamelaiyur 11:03:00 PM  

நல்ல சிந்தனையாளரான சத்தியராஜ் கூட இந்த விளம்பரத்துக்கு வருவது ஆச்சர்யமாக உள்ளது

Jey 11:18:00 PM  

நாமம் நல்லாத்தான்யா போடுறாய்ங்க....

Unknown 2:09:00 AM  

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல சிந்தனையாளரான சத்தியராஜ் கூட இந்த விளம்பரத்துக்கு வருவது ஆச்சர்யமாக உள்ளது//

யோவ் எங்க தானைதலைவன் சத்தியராசுவ பத்தி தப்பா பேசுனா அவ்வளவுதான் வீடு கட்டி அடிச்சிருவாரு எங்க மாம்சு.

Unknown 2:10:00 AM  

மாம்ஸ் உங்க வீட்டு பொடக்காலில ஈமு கோழி நாலஞ்சு கட்டி வச்சிருந்தீங்களே முட்டை போட்டுச்சா?

அஞ்சா சிங்கம் 2:22:00 AM  

அட பாவி மக்கா என்ன ஏன்யா அந்த காவாலி பயலுக கோஷ்டில சேர்த்து விட்டே ...............

அஞ்சா சிங்கம் 2:33:00 AM  

மாப்புள நம்ம கிட்ட ஒரு ப்ராஜக்ட் இருக்கு புனுகு பூனை வளர்ப்பு திட்டம் .
அது முட்டை எல்லாம் போடாது .. அதோட கக்கா மெடிசன் . பல லச்சம் போகும் ..
ஒரு பூனைக்குட்டி விலை 50000 தான் நீங்க ஒரு 10 குட்டி வாங்கி விடுங்க ......
அப்புறம் பாருங்க நீங்க பீ அள்ளியே பெரிய அளாயிடுவீங்க....................

MARI The Great 3:42:00 AM  

நல்ல விழிப்புணர்வு பதிவு! நகைச்சுவை பாணியில் வீடு கலக்கிவிட்டது!வாழ்த்துக்கள்!

MARI The Great 3:43:00 AM  

தலைப்பு வச்சிருக்கீங்க பாருங்க அங்கதான் தலைவா நீங்க நிக்கிறீங்க "யங் தொழிலதிபர்" ஹி ஹி ஹி!

ராம்ஜி_யாஹூ 11:13:00 AM  

சில எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள்
மழை மலை
ராவோடு ராவாக ,


ஒரே வட்டார மொழி நடையில் எழுதுங்கள்

கொங்கு வட்டாரத்தில் இருந்து நடு நடுவே சென்னை மொழிக்கு மாறுகிறது,

வவ்வால் 12:48:00 PM  

அஞ்சா ஸிங்கம் மற்றும் சுரேஷ் கவனிக்கவும் என் கிட்டே இதை விட சூப்பர் திட்டம் இருக்கு "அரிய வகை மூலிகை கடல் ஆமை" வளார்ப்பு திட்டம், ஒரு லட்சம் கொடுத்தால் போதும் ஒரு ஜோடி கடல் ஆமைக்குஞ்சு மற்றும் 100 லிட்டர் கடல் தண்ணீர் கொடுப்பேன், வளர்த்து முட்டை போட்டால் ,ஒரு முட்டை 10000 என திரும்ப வாங்கிப்பேன், வாங்க ..வாங்க எல்லாம் சேருங்க, ஒரு ஆளை சேர்த்துவிட்டா 10000 கமிஷனும் உண்டு :-))

Unknown 7:52:00 PM  

@மோகன் குமார் நன்றி மோகன்குமார்!

Unknown 7:53:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்வானொலியிலும், தொலைக்காட்சியிலும்... இந்த விளம்பரம் தான் அதிகம்...

வித்தியாசமான் எழுத்து நடை...
////////////////
நன்றிங்கண்ணே...!

Unknown 7:54:00 PM  

@கோவை நேரம்துண்டு போட ரெடி...?
///////////////
மண்டைய கொடுக்க நாங்களும் ரெடி...!மாப்ள!

Unknown 7:55:00 PM  

@♔ம.தி.சுதா♔கிமு கோழிய... அந்த பட்டை அடித்த முட்டை ாபர்தததும் ரொம்பவே பயந்துட்டேன்...
/////////////////////
பயப்படாதிங்க....இந்தியா வந்தா இரண்டு கீமு வாங்கிட்டு போங்க பாஸ்!

Unknown 7:56:00 PM  

@cheena (சீனா)ஏமாந்தவனுங்க நெம்பப் பேரு
////////////////
அஆமுங்க....அய்யா! நொம்ம நன்றிங்கய்யா!

Unknown 7:57:00 PM  

@FOOD NELLAIஏனுங்கண்ணா, கோழி முட்டை போடுமாங்கண்ணா?
///////////////////
எல்லா ஊர்லையும் கோழி முட்டைதான் போடுங்க ஆபிசர்!

Unknown 7:58:00 PM  

@FOOD NELLAIஏமாந்தவர்கள் ஏராளம். இன்னும் ஏமாறத்துடிப்பவர்கள் அதிகம். விழிப்புணர்வு வேண்டும்.
///////////////////
உண்மைதான் ஆபிசர்!

Unknown 7:59:00 PM  

@பாலாஇந்த ஈமு விளம்பரங்களை ரேடியோவில் கேட்கும் போதெல்லாம் செம கோபம் வருகிறது. மக்களை ஏமாற்ற புது புது டெக்னிக்குகள் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்காங்க.
///////////////////////
நேர்மைக்கு என்றும் காலம் கிடையாது..!பாலா சார்!

Unknown 7:59:00 PM  

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிகிராமிய பாணியில்..
/////////////////
தங்களின் வருகைக்கு நன்றி!

Unknown 8:00:00 PM  

@சங்கவி1000 கோடிக்கு மேல் முதலீடு நடந்திருக்காம்...
////////////////
அடேங்கப்பா...?சிட்பண்ட் தோத்திடும் போலஇஇஇஇ!

Unknown 8:01:00 PM  

@மனசாட்சி™Ennvo ponka
//////////////////
சொரீங்....!
மாப்ள எப்படி இப்பூடி எல்லாம்....சான்சே இல்ல..அடுத்து ஒரு சிட்பண்ட்
//////////////////////
ஆமாம்...!ஆமாம்....!

Unknown 8:03:00 PM  

@"என் ராஜபாட்டை"- ராஜாநல்ல சிந்தனையாளரான சத்தியராஜ் கூட இந்த விளம்பரத்துக்கு வருவது ஆச்சர்யமாக உள்ளது
//////////////////////
சில்லரை கெடைச்சா பெரியாரே கோக் குடிக்க சொன்னாருன்னு சொல்வாங்க..!

Unknown 8:03:00 PM  

@Jey
நாமம் நல்லாத்தான்யா போடுறாய்ங்க....
////////////////////
ஆமாம்..!பங்காளி!

Unknown 8:04:00 PM  

@இரவு வானம்"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல சிந்தனையாளரான சத்தியராஜ் கூட இந்த விளம்பரத்துக்கு வருவது ஆச்சர்யமாக உள்ளது//

யோவ் எங்க தானைதலைவன் சத்தியராசுவ பத்தி தப்பா பேசுனா அவ்வளவுதான் வீடு கட்டி அடிச்சிருவாரு எங்க மாம்சு.
//////////////////////
தம்பி..!அது இறந்த காலம்..!

Unknown 8:05:00 PM  

@இரவு வானம்மாம்ஸ் உங்க வீட்டு பொடக்காலில ஈமு கோழி நாலஞ்சு கட்டி வச்சிருந்தீங்களே முட்டை போட்டுச்சா?
//////////////////////////
புளுக்கைதான் போட்டுது!

Unknown 8:06:00 PM  

@அஞ்சா சிங்கம்அட பாவி மக்கா என்ன ஏன்யா அந்த காவாலி பயலுக கோஷ்டில சேர்த்து விட்டே ...............
////////////////////////
பொல்லாங்கு ஹீரோவா நானிருக்கையில....நீர் இருக்கக் கூடாதா..?

Unknown 8:08:00 PM  

@அஞ்சா சிங்கம்மாப்புள நம்ம கிட்ட ஒரு ப்ராஜக்ட் இருக்கு புனுகு பூனை வளர்ப்பு திட்டம் .
அது முட்டை எல்லாம் போடாது .. அதோட கக்கா மெடிசன் . பல லச்சம் போகும் ..
ஒரு பூனைக்குட்டி விலை 50000 தான் நீங்க ஒரு 10 குட்டி வாங்கி விடுங்க ......
அப்புறம் பாருங்க நீங்க பீ அள்ளியே பெரிய அளாயிடுவீங்க....................
//////////////////////////
மாப்ள உன் பிசினஸ் எனக்கு சரிப்பட்டு வராது...? நீயே பீ அள்ளி..அள்ளி..அம்பானியாகிக்க....

Unknown 8:10:00 PM  

@வரலாற்று சுவடுகள்நல்ல விழிப்புணர்வு பதிவு! நகைச்சுவை பாணியில் வீடு கலக்கிவிட்டது!வாழ்த்துக்கள்!
////////////////////
நன்றி...!வரலாற்று சுவடுகள்..!
தலைப்பு வச்சிருக்கீங்க பாருங்க அங்கதான் தலைவா நீங்க நிக்கிறீங்க "யங் தொழிலதிபர்" ஹி ஹி ஹி!
/////////////////////////
அவ்வ்வ்வ்வ்வ்வ

Unknown 8:20:00 PM  

@ராம்ஜி_யாஹூசில எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள்
மழை மலை
ராவோடு ராவாக ,


ஒரே வட்டார மொழி நடையில் எழுதுங்கள்

கொங்கு வட்டாரத்தில் இருந்து நடு நடுவே சென்னை மொழிக்கு மாறுகிறது,
/////////////////////
கொங்கு வட்டார வழக்கில் லகரம் ழகரம் தவறான உச்சரிப்பாக இருக்கும் "மல பேயிது பாரு..." அப்படிம்பாங்க..!

விட்டு என்பதின் "வி" உட்டு அல்லது வுட்டு என்று ஏரியா பொறுத்து மாறும் சார்.

திரும்பிப் பாரு...என்பதையே திலும்பி பாரு என்று அழைப்பார்கள் ஈரோடு மாவட்டத்தின் குக்கிராமங்களில்...
அதன் அடிப்படையில் தவறாக வேண்டுமென்றே எழுதியதுதான்..!

அதற்காக நான் தவறே செய்யாதவன் அல்ல எழுத்து பிழை சிறிது வரும்....முடிந்த அளவு திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் தங்கள் போன்ற பெரியவர்கள் கருத்துரையே என்னை செம்மைப் படுத்தும் மிக்க நன்றி சார்!

Unknown 8:24:00 PM  

@வவ்வால்அஞ்சா ஸிங்கம் மற்றும் சுரேஷ் கவனிக்கவும் என் கிட்டே இதை விட சூப்பர் திட்டம் இருக்கு "அரிய வகை மூலிகை கடல் ஆமை" வளார்ப்பு திட்டம், ஒரு லட்சம் கொடுத்தால் போதும் ஒரு ஜோடி கடல் ஆமைக்குஞ்சு மற்றும் 100 லிட்டர் கடல் தண்ணீர் கொடுப்பேன், வளர்த்து முட்டை போட்டால் ,ஒரு முட்டை 10000 என திரும்ப வாங்கிப்பேன், வாங்க ..வாங்க எல்லாம் சேருங்க, ஒரு ஆளை சேர்த்துவிட்டா 10000 கமிஷனும் உண்டு :-))
////////////////////////
ஆமை குஞ்சு அவிச்சு தருவீங்களா...? நானும் அஞ்சா சிங்மும் மேற்படி சமாச்சாரம் "புல்" வாங்கிட்டு வருகிறோம்........!

”தளிர் சுரேஷ்” 4:29:00 AM  

நகைச்சுவையாகஒரு விழிப்புணர்வு கதை! அருமை!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

கலாகுமரன் 4:43:00 AM  

முட்டையில இருக்கரது சைனா சின்னம்னு நெனச்சிருப்பாரு...

கலாகுமரன் 4:49:00 AM  

லேபிலில் உண்மை பெயர் கதையில் டம்மி பெயர்...

Unknown 11:33:00 PM  

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தொடரத் தான் செய்வார்கள்..

புதிய நடையில் அருமையான கதை!

அஞ்சா சிங்கம் 2:42:00 AM  
This comment has been removed by the author.
அஞ்சா சிங்கம் 2:44:00 AM  

பொல்லாங்கு ஹீரோவா நானிருக்கையில....நீர் இருக்கக் கூடாதா..?.///////////////////////////

ஓஹோ அதுக்குதான் இதுவா ..இனிமேல் உங்கள கொஞ்சம் கேர்புல்லாதான் ஹாண்டில் பண்ணனும் ........
மப்புல மாத்தி அடிச்சிட்டேன் அதான் டெலிட் பண்ணிட்டேன் ........

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP