மதுரை ஹோட்டல் போகலாம் வாங்க.......!
>> Sunday, August 5, 2012
சரி....! என் பின்னாடியே வாங்க....! உங்களை நான் சமையல் செய்யும் இடத்துக்கு கூட்டிட்டுப் போகிறேன், இந்த ஹோட்டல் டைனிங் ஹாலுக்கு பின்னாடிதான் இருக்கு வாங்க அப்படி ஓரமா நின்னுட்டு நடப்பதை பார்க்கலாம்!
இப்ப மணி மூனாச்சு..! புரோட்டாவுக்கு மாவு பிசையிற நேரம்...! ஆங் அதோ வந்திட்டார் பாருங்க...! அவருதான் புரோட்டா மாஸ்டர், பாருங்க அவர் குளிச்சு ஒரு மாதம் ஆச்சு...! வெறும் உடம்பு, ஒரு அழுக்கு லுங்கி, நைந்து போன ஒரு சிகப்புத் துண்டு, இதுதான் அவர் யூனிபார்ம்..! சரி மாவு மூடைய தூக்கி தோள்ல போட்டுட்டு வெளிய போகிறார், வாங்க..! நாமளும் வெளிய அவர் பின்னாடியே போவோம்....!
எப்பவும் புரோட்டாப் போடுற இடம், கடைக்கு வெளியதான் இருக்கும்! இரவு ஊர் சுத்தும் தெருநாய்கள் இந்த புரோட்டா கல்லு மேல படுத்துதான் தூங்கும்...!அதுல படுத்திருந்த நாய்களை விரட்டிவிட்டு லைட்டா தண்ணீரை தெளிச்சு ஒரு கழுவு...! கழுவி விடுறாரு!
மாவை அதுல கொட்டி, நடுவுல குழி பறிச்சு, தண்ணீர் அழுக்கு டிரம்ல இருந்து கொஞ்சம் ஊற்றி, எண்ணெய், டால்டா, முட்டை, எல்லாம் உடைத்து ஊற்றி பிசையறார்! நல்ல பக்குவமா மாவு வருது.....இடையில் மண்டைய வேறச் சொறிஞ்சுக்கறார். அப்பப்ப கொசுவையும் அடிப்பார்.
மாஸ்டருக்கு வாய் நமநமங்க.. அண்டர்வேர் பாக்கட்ல இருக்கின்ற பான்பராக் பாக்கெட்டை எடுத்து கையில கொட்டி, தூ...ன்னு ஊதி வாயில போட்டுக்கிறார். கைய சும்மா அப்படி..இப்படின்னு தட்டிட்டு மறுபடியும் மாவை பிசையிறாரு..!
ஓனர் பக்கத்துல வருகிறார் என்ன சொல்றாருன்னு கவனமா கேளுங்க மக்கா..!
“ஏம்பா இன்னிக்கு எத்தனை கிலோப் போட்டிருக்கே....”
“ஐஞ்ழ்சு கிழ்லோ முதழ்லாளி”
“எலேய் அந்த கருமத்தை துப்பிட்டுத்தான் வேலை செய்யுல....”
முதலாளி பான்பராக் எச்சில் மாவுல தெரிச்சதைப் பார்த்தாரு ஆனா கண்டுக்கலை...! மாவை மறுபடியும் பிசைஞ்சான், அடுத்தது அவன் செய்வதை நல்லாப் பாருங்க...! மாவை அப்படியே உருட்டி விக்கிரமாதித்தன் வேதாளத்தை தூக்கிட்டு போகிற மாதிரி தோள்ல போட்டுட்டு உள்ள போகிறான்....! என்ன... மக்கா இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி!? வாங்க உள்ள அவன் பின்னாடி போவோம்.
அங்க கிடந்த ஒரு அழுக்குத் துணிய எடுத்துப் நனைச்சுப் புழிஞ்சு புரோட்டா மாவுக்கு முக்காடு போட்டுட்டுப் போயிட்டான், இன்னும் ஒரு மணி...நேரம் இல்ல இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து மாவை உருட்டி புரோட்டாப் போடுவான். அதுல இடையில் பீடி குடிப்பான்! பான்பராக போடுவான்!, சிறுநீர் கழிக்கப் போவான்! ஆனால் நல்ல மனுசன் கை மட்டும் கழுவமாட்டான்!?
அடுத்தது நான் உங்களுக்கு காட்டப் போவது இட்லி சுடும் இடம்! வாங்க..! அதோ இட்லி பாத்திரத்துக்கிட்ட....கரண்டி தேடிட்டு இருக்காரு...பாருங்க அவர்தாம் இட்லி மாஸ்டர்..! “அண்ணே! இதுக்கெல்லாம் கைதட்டக் கூடாது சைலண்டா வாங்கண்ணே! நாம பாக்கறமுன்னு தெரிஞ்சா நம்மளை கைமா பண்ணிருவானுக!”
அதே சேம்! புரோட்டா மாஸ்டர் யூனிபார்ம் இவருக்கும், அவரு மண்டைய சொரிஞ்சாரு இவரு அக்குள்ளச் சொரியறாரு...! எங்க கரண்டிய காணம் அப்படின்னு தேடுறாரு கிடைக்கல....தன் கையே தனக்குதவி அப்படிங்கிற மாதிரி கையில மாவ எடுத்து இட்லி தட்டு குழியில அழகா விடறாரு பாருங்கண்ணே! மாவ ஊத்தி முடிச்சதும் பக்கத்துல இருந்த பக்கெட் தண்ணியில கைகழுவுறாரு...! இட்லி வெந்ததும் அதே தண்ணீரை தெளிச்சு இட்லிய பூப்போல எடுக்கிறாரு. பூப்போலதான் எடுக்கிறாரு ஆனால் இட்லி ஓங்கியடிச்சா ஒன்ரை டன் வெயிட்டு!
ஆங்...!அங்க பாருண்ணே...!இட்லிக்கு சாம்பார் எப்படி ரெடி பண்றாங்க பாருண்ணே! பூசணிக்காயச் சீவி கிரைண்டல்ல அரைச்சுப் பருப்புக்கு பதிலா போடுறாங்க, சாம்பார் கெட்டியா புளிப்பும் இனிப்பும் சுவையா இருக்கும்!
இங்க பாருண்ணே இங்க தேங்காய் துருவற அழக...! காலை V மாதிரி வச்சுக்கிட்டு..!காலுக்கு நடுவுல தேங்காய் துருவி....துருவி...போட்டிருக்காண்ணே தேங்காய் துருவலை அவன் கால்ல அணைக் கட்டி வச்சிருக்காண்ணே!
அங்க பாருண்ணே டீ வடிக்கிறதுக்கு ஒரு வேட்டியப் பயன் படுத்துவாங்க..அது பாதையில கிடக்கு, எல்லாரும் அதை மிதிச்சிட்டு போறாங்க.., அதையே எடுத்து ஒரு பெரிய அண்டாவுல டீ வடிக்கிறாங்க...!
புரோட்டா குருமாவுல கார எசன்சஸ ஊத்தி, பச்சை கடலை எண்ணெய கலந்து வச்சிறாங்க....நாம பார்சல் வாங்கி வந்தா எண்ணையா நிற்குமே! அதுதான் காரணம்! இது அல்சர்ல கொண்டு போய் விட்டிடும்!
சரி...!போதும் வெளிய போலாம் வாங்க குமட்டிக்கிட்டே நிக்கிறீங்க....!முதலாளி பார்த்திருவான் வாந்தி கீந்தி எடுத்து வச்சிறாதிங்க....நம்மளையே முதலாளி பார்க்கிறான் வாங்க மெதுவா வாங்க.....“என்ன அண்ணாச்சி சாப்பிடலையா...?” (பயபுள்ள முதலாளி..! சாப்பிடாம போறவங்களை எப்படித்தான் கண்டுபிடிக்கிறானோ!)
“இதோ வருகிறோம் அண்ணாச்சி! வெளிய ஒருத்தரு இருக்கிறாரு... காணம் கூட்டிட்டு வருகிறோம்...”
“சீக்கிரம் கூட்டிட்டு வாங்கண்ணாச்சி! புரோட்டா சூடா போட்டிட்டு இருக்கம்ல.....”
“என்னாது புரோட்டாவா...?”
“அட ப்புரோட்டா வேணாமா...? இட்லி சூடா இருக்கு..! வாங்க...!”
“எது இட்லியா.......!”
”அட இட்லி சாப்பிட்டு டீ குடிங்க நல்லாயிருக்கும்....”
“டீ......யா..? சரி இதோ இந்தப் பதிவ படிச்சிட்டு இருக்காரே அவருக்கு கொடுங்க.....!”
நன்றி : (ஒரு ஹோட்டலை துப்பறிந்து நமக்கு சொன்ன) தமிழ்வாசி! பிரகாஷ்
படம் : கூகுள் தேடல்!
படம் : கூகுள் தேடல்!

