சுருட்டை முடிக்காரி.....
>> Saturday, June 2, 2012
என் காதலை உன்னிடம் கூறினேன்
நீ...கண்களில் கண்ணீர் முட்ட
என்னை கட்டியணைத்துக் கொண்டாய்...
கடற்கரையில்... படகின் மறைவில்
உன் மடியில் நான் இருந்த பொழுதுகளில்
திருட்டுத்தனமாய் என் இதழில்...
ஒரு ஈர முத்தம் தந்தாய்...
உன் குடும்பமும்! என் குடும்பமும்!
நம் காதலை ஏற்றுக் கொள்ள
நல்ல நாளில் இனிதே நடந்தது
நம் திருமணம்...
முதல் வருடத்தில் என்னைப் போல்
ஒரு ஆண் குழந்தையும்...
அடுத்த வருடத்தில் உன்னைப் போல்
ஒரு அழகிய பெண் குழந்தையும்...
பெற்றெடுத்தோம்.
இனிய வாழ்வில்
ஊடல் நிறைந்திருந்த காலத்தில்
மாலைநேரத்தில் நான் வாங்கி வந்த
மல்லிகையும்,அல்வாவும்...
ஊடல் தீர்த்து உன்னை
இறுக்கியணைத்துக் கொள்ள
உதவின...........
கனவு கலைந்தது...!
இறங்க வேண்டிய இடம்
வந்தும் இறங்காத என் உறக்கம்
கலைத்த நடத்துனரின் அர்ச்சனையுடன்
இறங்கினேன்....
ஒரு மணி நேர கனவு தந்த
முன் சீட்டில் அமர்ந்திருந்த
சுருட்டை முடிக்காரிக்கு நன்றி!
43 comments:
இந்த பதிவு உங்க வீட்டுகாரஅம்மாவுக்கு
பார்சல்.......!!????!??!??!??!??!??!?
கனவு மாதிரி தெரியலய...நேரடி ஒளிபரப்பு மாதிரி இருக்கே...
கடைசியா எந்த ஊருக்கு போனீங்க?
ஊருக்கு திரும்பி வரும் போதுன்னா அந்த பொண்ண மறுபடியும் பாப்பீங்க
வருண்
@NAAI-NAKKSஇந்த பதிவு உங்க வீட்டுகாரஅம்மாவுக்கு
பார்சல்.......!!????!??!??!??!??!??!?
///////////////////////////
யோவ்! போய்யா இது நமக்கு புதுசா!
@FOOD NELLAIBoth Mano and Suresh in dreams.
iruvarukkum adikkadi kanavu varuthaa?
/////////////////////////////////
இல்லைங்க சார்! இது கல்யாணத்துக்கு முன்னாடி இப்ப பேய்க் கனவுதான் வருது....?!
@உலக சினிமா ரசிகன்கனவு மாதிரி தெரியலய...நேரடி ஒளிபரப்பு மாதிரி இருக்கே...
//////////////////////////////
என்ன சார்! இப்படி மாட்டிவிடுறீங்க....
@Anonymous
கடைசியா எந்த ஊருக்கு போனீங்க?
ஊருக்கு திரும்பி வரும் போதுன்னா அந்த பொண்ண மறுபடியும் பாப்பீங்க
வருண்
/////////////////
வருண் மறுபடியும் கனவு தொடரும்! ஹிஹி!
ஏற்கனவே நம்ம நாட்டுல ஜனத்தொகை கட்டுக்கடங்காம போய்க்கிட்டு இருக்கு இதுல நீங்க ஒரு மணி நேரத்துல ஒரு பொண்ணுகூட குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தையும் பெத்துருக்கீங்களே தலைவா .., இந்த ரேன்ஞ்சில போனா இந்தியாவோட ஜனத்தொகை என்னவாகும் ... :D
ஆனாலும் கவிதை பயங்கரமாத்தான் இருக்கு ஹி ஹி ஹி ரசிக்கும் படியா இருக்குன்னு சொல்ல வந்தேன் :D
@வரலாற்று சுவடுகள்ஏற்கனவே நம்ம நாட்டுல ஜனத்தொகை கட்டுக்கடங்காம போய்க்கிட்டு இருக்கு இதுல நீங்க ஒரு மணி நேரத்துல ஒரு பொண்ணுகூட குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தையும் பெத்துருக்கீங்களே தலைவா .., இந்த ரேன்ஞ்சில போனா இந்தியாவோட ஜனத்தொகை என்னவாகும் ... :D
/////////////////////////////////
கனவுலகில்தானே சார்! ஜனத்தொகை அதிகமாகட்டும்......
@வரலாற்று சுவடுகள்ஆனாலும் கவிதை பயங்கரமாத்தான் இருக்கு ஹி ஹி ஹி ரசிக்கும் படியா இருக்குன்னு சொல்ல வந்தேன் :D
/////////////////////////////
பயங்கரமா? நல்லாயிருக்கா? சார்......!அப்ப அதிபயங்கரமா எழுதனுமா?
கனவுல குடும்பமே
நடத்திட்டீங்களே!!!!
யோவ்... ஆர்கசம் வந்தப்பவே கனவு கலைஞ்சிருக்கணுமே...
@மகேந்திரன்கனவுல குடும்பமே
நடத்திட்டீங்களே!!!!
//////////////////////////////
நிறைய கனவுதான் சார் சில படைப்புகள்!
@Philosophy Prabhakaran
யோவ்... ஆர்கசம் வந்தப்பவே கனவு கலைஞ்சிருக்கணுமே...
////////////////////////////////////////
யோவ்! இருக்கியணைச்சதும் நடத்துனர் கனவுலமண்ணை அள்ளி போட்டுட்டான்! கொட்டாவிதான் வந்தது!
hmmm villangam akama iruntha sari than... nalla iruku sir unga duty....
//வீடு சுரேஸ்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]
@NAAI-NAKKSஇந்த பதிவு உங்க வீட்டுகாரஅம்மாவுக்கு
பார்சல்.......!!????!??!??!??!??!??!?
///////////////////////////
யோவ்! போய்யா இது நமக்கு புதுசா!
//
அதானே !!! தினமும் புரிகட்டை உடையுறது ஊருக்கே தெரியுமே ..
இப்பிடியும் கனவு வருதா???அருமைம
சுருட்டை முடியில் பேன் இருந்துச்சா?
ஹி..ஹி.. பார்த்தாராம்... கனவு வந்துச்சாம்?
ஆனாலும் கவிதை நல்லா இருக்குயா
நல்ல கவிதை .கனவு கலைந்தமைக்கு கவலைகொள்ளும் வேளையில் சுருட்டைமுடிக்காரிக்கு நன்றி சொல்லவும் மறக்காத மனது.
@Philosophy Prabhakaran
இது என்னையா கூத்து?
அப்படியா நடக்குது?
ஒரு மணி நேர கனவு தந்த
முன் சீட்டில் அமர்ந்திருந்த
சுருட்டை முடிக்காரிக்கு நன்றி//
கனவைக் கலைத்த நடத்துனருக்கு
கண்டனம். கவிதைக்குப் பாராட்டு!
த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்
அடங்கொய்யால!
கவிதை சூப்பரா இருக்கு சுரேஸ் அண்ணா..
சரி அதற்கு நித்தியா மேனனின் படத்தை விட தப்சியின் படம் பொருந்தும் போல.....
ரசனைமிக்க
சுவாரசியத்தின்
இருப்பிடம்
உங்கள் கவிதை .....
சொல்லிய விதத்திற்கு ஒரு பாராட்டு ....
உடனடியாக சேலம் வைத்தியரைப் பார்க்கவும்!
@சதீஷ் மாஸ்hmmm villangam akama iruntha sari than... nalla iruku sir unga duty....
//////////////////////
எது...?டூட்டியா? அது சரிங்கோ!
@"என் ராஜபாட்டை"- ராஜா//வீடு சுரேஸ்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]
@NAAI-NAKKSஇந்த பதிவு உங்க வீட்டுகாரஅம்மாவுக்கு
பார்சல்.......!!????!??!??!??!??!??!?
///////////////////////////
யோவ்! போய்யா இது நமக்கு புதுசா!
//
அதானே !!! தினமும் புரிகட்டை உடையுறது ஊருக்கே தெரியுமே ..
////////////////////////////////
ஆமா.....!வாங்குறவிங்களுக்குதானே வலி தெரியும்..!?
@"என் ராஜபாட்டை"- ராஜாஇன்று
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...
/////////////////////////////
நான் நாலாப்பு எழுதியிருக்கேன் ரிசல்ட் வருமா?
@Athisayaஇப்பிடியும் கனவு வருதா???அருமைம
//////////////////////////////////
இப்படித்தான் கனவே வருதுங்க...!
@தமிழ்வாசி பிரகாஷ்சுருட்டை முடியில் பேன் இருந்துச்சா?
/////////////////////////
ஏன்? பார்க்க போறீங்களா?
ஹி..ஹி.. பார்த்தாராம்... கனவு வந்துச்சாம்?
///////////////////////////
நம்புயா? பெரிய மனுசா...!
ஆனாலும் கவிதை நல்லா இருக்குயா
////////////////////////////////
டேங்ஸ்.....அப்பு!
@விமலன்
நல்ல கவிதை .கனவு கலைந்தமைக்கு கவலைகொள்ளும் வேளையில் சுருட்டைமுடிக்காரிக்கு நன்றி சொல்லவும் மறக்காத மனது.
///////////////////////////////
ஆமா சார் காசே இல்லாத சினிமா ஹீரோ நாம நன்றி சொல்லனுமில்ல....ஹிஹி!
@மயிலன்@Philosophy Prabhakaran
இது என்னையா கூத்து?
அப்படியா நடக்குது?
///////////////////////////
உன்னைத்தான்யா தேடிகிட்டு இருக்காப்ல....
@புலவர் சா இராமாநுசம்ஒரு மணி நேர கனவு தந்த
முன் சீட்டில் அமர்ந்திருந்த
சுருட்டை முடிக்காரிக்கு நன்றி//
கனவைக் கலைத்த நடத்துனருக்கு
கண்டனம். கவிதைக்குப் பாராட்டு!
///////////////////////////////////////
நன்றி ஐயா! உங்கள் பின்னூட்டத்திக்கு....
@விக்கியுலகம்
அடங்கொய்யால!
////////////////////////
நடத்துனரை திட்டாதிங்க மாம்ஸ்!
@எஸ்தர் சபிகவிதை சூப்பரா இருக்கு சுரேஸ் அண்ணா..
சரி அதற்கு நித்தியா மேனனின் படத்தை விட தப்சியின் படம் பொருந்தும் போல.....
////////////////////////////
நித்தியாவுக்கும் சுருட்டை முடிதான்......டப்சிய பார்த்தா எனக்கு நிரோசா ஞாபகம் வருது!
@கோவை மு.சரளாரசனைமிக்க
சுவாரசியத்தின்
இருப்பிடம்
உங்கள் கவிதை .....
சொல்லிய விதத்திற்கு ஒரு பாராட்டு ....
/////////////////////////////////////////////////
மிக்க நன்றிங்க......!
@பன்னிக்குட்டி ராம்சாமிஉடனடியாக சேலம் வைத்தியரைப் பார்க்கவும்!
/////////////////////////////
ந்ணா! நாமக்கல் வைத்தியரை பார்த்தா ஆகாதுங்களா?
அசத்தல் !
கனவு காணுங்கள்னு அப்துல் கலாம்கூட சொல்லிருக்கருல?
சுவாரசியமான ரசிக்கும் கனவு!
"சுருட்டை முடிக்கே சுருண்ட (வீடு) சுரேஷ்" அப்படின்னு தலைப்பு வைத்திருக்கலாம்!!
:)
Post a Comment