அஞ்சலி படம் போட்டது தப்பாய்யா?(

>> Saturday, June 16, 2012


“அஞ்சலி...அஞ்சலி.....அஞ்சலி.....
சின்ன கண்மணி..கண்மணி!
அஞ்சலி...அஞ்சலி.....அஞ்சலி.....
கண்கள் மின்மினி...மின்மினி...
அம்மம்மா..பிள்ளைக்கனி..!
அங்கம்தான் தங்கக்கனி....”இந்த குழந்தை பாட்டு பாடியது தவறா மக்கா...?

குக்கர் மூடி பறந்து வந்தது.... ஜஸ்ட் மிஸ்...அஞ்சரைக்குள்ள வண்டி விமர்சனம் எழுதுகின்றப்ப என்னா அடி....! செய்யறதே வெட்டி வேலை(நல்ல வேளை வெட்டிபிளாக்கர் குரூப் தெரியாது) இதுல ஜொள்ளு வேற....! இப்படி என்னை மாதிரி..! உங்க மாதிரி...!அடி வாங்கியும் எழுகின்ற எத்தனையோ பிளாக்கர்களே வாங்க கூடி அழுவோம்! (மூக்கைச் சிந்தி அழக்கூடாது ஆமா!)

ஆனா ஒரு அக்கா இருக்காங்க அவிங்க தெய்வம்....ஒரு பிளாக்கரின் மனைவிதான் ஸ்கைப்புல பேசும் போது மனைவி தோசை சுட்டு...சுட்டு....காரசட்னி, தேங்காய் சட்னி, அது போக குழம்பு, (முடிந்த அளவு கறிக்குழம்பு வேனும்) நல்லா பதமா இதமா தோசை சுட்டு மூனு ஐட்டத்திலும் குழைச்சு ஆ...சொல்லுங்க அப்படின்னு ஊட்டி விடுவாங்க... அண்டா மாதிரி வாயத் திறப்பாரு...!போண்டா மாதிரி உருட்டி திணிப்பாங்க..., பேசிக்கிட்டே சாப்பிடுவாரு எதிர்ல உள்ள ஆளு சில சமயம் ஜெர்க் ஆவாங்க...“அவ்ன் போல்ட் போல்ட்டுட்டான் பாழ்த்தியாவ்..” இப்படித்தான் பேசுவாரு இந்த பாஷை புரியாதவங்க கட் பண்ணினா போன்ல கூப்பிடுவாரு...இப்படித்தான் ஒரு பதிவர் போனை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டராம், அதே ஊரை சேர்ந்த பதிவரை கூப்பிட்டு அவசரம் அவரிடம் உடனே பேசனும் அவர் வீட்டுல போய் எழுப்பி போனை ஆன் பண்ணச் சொல்லு அப்படின்னு சொல்லியிருக்காரு.....!அவர் அசிங்க..அசிங்கமா திட்டவும் அடங்கிட்டாரு!

சாப்பிட்டு முடிச்சதும் சிகரட்ட வாயில வைப்பாரு பத்த வைக்கனும்...ஒரு நாள் ஸ்கைப்பு போன் என்று மாறி..மாறி பேசியதில் எத்தனை தோசையின்னு தெரியலை நாற்பத்தி ஆறு தோசை சாப்பிட்டாரு! பாவம் அவிங்க சாப்பிட மறுபடியும் கடையில போய் மாவு வாங்கிட்டு வந்து தோசை சுட்டு சாப்பிட்டாங்க....நமக்கு சிஸ்டத்தை ஆப் செய்தாத்தான் தோசைக்கல்ல அடுப்புல வைப்பாங்க...மீறியும் நாம பதிவை நோண்டிக்கிட்டு இருந்தா அன்னைக்கு சாப்பாடு கட்டு (சில சமயம் கையில மாவு கட்டு) கவித... கவித....

நாக்குல சனி! அதுனால
மாட்டினேன் மணி!
இப்படி அடிபட்டு, மிதிபட்டு இந்த பதிவு போடனுமா? என்கிற கேள்வி மனசுக்குள்ள முமைத்கான் மாதிரி நாக்குல கம்மல் குத்திட்டு ஆடினாலும், குஸ்பு மாதிரி நீ.....யெங்கே என் அன்பே....அப்படின்னு கன்றாவி புடிச்சது பாடுது, அப்புறம் சலிப்பா ஓப்பன் செய்து பதிவை போட்டா, கமெண்ட்டு வருகிறத பார்த்தா ஒரு சந்தோஷம்...முழு மொக்கை படத்துல ஒரு குத்துபாட்டுக்கு வித்யாபாலனை பார்த்த மாதிரி. இப்படியெல்லாம் போஸ்ட் போடுகிறோமே நம்மளை நெனைச்சா அழுகை...அழுகையா வருதுண்ணா...ஆனா என் சோகம் உன்னை தாக்கிருமோன்னு விடுறண்ணா!

முழு சுதந்திரம் கொடுத்திருக்கின்ற அந்த பதிவர் தினம் நாலு போஸ்ட் போடலாம் ஆனா அந்த வேலை செய்வது கிடையாது எப்ப பாரு பதிவுலக அரசியல், அவனை பார்த்தியா இவனை குத்திட்டான்...! இவனை பார்த்தியா அவனை குத்திட்டான்...!


சின்ன வயசுல நான் ரோட்டுல வரும் போது எங்கியாவது சண்டை நடந்தா நின்று வேடிக்கை பார்த்திட்டுதான் போவேன், அவிங்க சட்டைய கிழிச்சுக்கிட்டு மண்ணுல புரளுவாங்க...நமக்கு ஜாலியா இருக்கும். அப்புறம் எவ்வளவு மோசமான படமா இருந்தாலும் மூனு சண்டையாவது இருந்தா அது நல்ல படம். இப்ப நெனைச்சா பாவமா இருக்கு ரோட்டுல சண்டை போட்டு சட்டை கிழிச்சுக்கறது எவ்வளவு கேவலம்...! ஆனா இப்ப நாம எல்லாம் மாறிட்டோம் இப்ப அங்காடிதெருவ ரசிச்சு பார்க்கின்றோம்...வழக்கு எண் 18/9 படத்தை விரும்பி பார்க்கின்றோம்! அவரு மட்டும் மாறலை...! முத மாதிரி இப்ப பதிவுலகில சண்டையில்ல....நானும் சண்டைய விரும்பல...ஆனால் அவருக்கு போரடிக்குதாம்.......(என்ன கொலை வெறி).


பாட்டு பாடிட்டு இந்த படத்தைத்தான் பார்த்திட்டு இருந்தேன்...!
அது குத்தம்மா....?

33 comments:

CS. Mohan Kumar 9:21:00 PM  

WHAT is the matter?

தமிழ்வாசி பிரகாஷ் 9:26:00 PM  

போடறா உள்குத்து........

தமிழ்வாசி பிரகாஷ் 9:27:00 PM  

கடைசி படமா அஞ்சலி படம் போட்டதுக்கு கண்டனங்கள்... முதல் படமால்ல போட்டிருக்கணும்.

sakthi 9:27:00 PM  

அஞ்சரைக்குள்ள வண்டி இன்னும் இந்த படம் நீங்க மறக்கலையா

.படங்கள் படம் போடுது

தமிழ்வாசி பிரகாஷ் 9:29:00 PM  

ஆனா ஒரு அக்கா இருக்காங்க அவிங்க தெய்வம்..////

உண்மையிலே இந்த மனுசனை கட்டின அந்த அக்கா தெய்வம் தான்... ஹா... ஹா....

தமிழ்வாசி பிரகாஷ் 9:33:00 PM  

ஆ...சொல்லுங்க அப்படின்னு ஊட்டி விடுவாங்க... அண்டா மாதிரி வாயத் திறப்பாரு...!//////

அந்த அண்டாவுல அவுங்க தோசையை கொட்டோ கொட்டுன்னு கொட்டுவாங்க... ஹி..ஹி... பயபுள்ள ஊருல இல்லாதப்ப இப்படி பதிவா.... சுரேஷ்....

நாய் நக்ஸ் 9:59:00 PM  

:)
:)
:)

waiting......


Yaaaraaavathu.....
Varuvaangala.....????????????

வெளங்காதவன்™ 10:18:00 PM  

எவன்யா அது!!!
வெட்டு... குத்து!!!!

ராச்கோல்!!!!!

இன்னிக்கு கொலை வெறில இருக்கேன்!!!!

MARI The Great 11:15:00 PM  

நல்ல கற்பனை திறன்., சரளமான நகைச்சுவை எழுத்து நடை., keep rocking.!

Prem S 11:34:00 PM  

படங்கள் பலே பலே

rajamelaiyur 11:37:00 PM  

அஞ்சலி படத்தை போட்டா தப்பில்லை
....
...
.
.
.
.
.
என் ஆளு படத்தை என்னை கேட்காம போட்டாதான் தப்பு

அனுஷ்யா 2:39:00 AM  

//கவித கவித....//

ஐயோ ராமா... என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடெல்லாம் கூட்டு சேர வெக்குற...?

அனுஷ்யா 2:40:00 AM  

அங்காடிதெருவ ஏன் ரசிச்சு பாத்திங்கன்னு எனக்கு தெரியும்... பட் வழக்கு எண்? மனீஷா ???

அனுஷ்யா 2:45:00 AM  

அப்புறம் உள்க்குத்து யாருக்கு? வழக்கம் போல நக்க்ஸ்?

சென்னை பித்தன் 3:32:00 AM  

இன்ருதான் ஒரு பதிவு நண்பர் என்னிடம் கேட்டார் உள்குத்துன்ன என்ன என்று.இந்தப் பதிவைக் காட்டிற வேண்டியதுதான்!(ஆமாம் உள்குத்துன்னா என்னா??)

பன்னிக்குட்டி ராம்சாமி 4:15:00 AM  

அண்ணே உங்களுக்கு எலக்கிய பதிவு நல்லா வருதுண்ணே......... இன்னும் நாலு படம் போட்டு அப்படியே டெவலப் பண்ணுங்க.......

”தளிர் சுரேஷ்” 5:21:00 AM  

சூப்பர் மொக்கை! வெரிகுட்!

முத்தரசு 6:37:00 AM  

ம்......... இன்னும் தெளியல போல

முத்தரசு 6:39:00 AM  

//சாப்பிட்டு முடிச்சதும் சிகரட்ட வாயில வைப்பாரு பத்த வைக்கனும்//

என்னவோய் புதுசா சொல்ர

Anonymous,  6:39:00 AM  

சத்தியமா ஒன்னுமே புரியல :(

வருண் ப்ரகாஷ்

முத்தரசு 6:40:00 AM  

//எழுகின்ற எத்தனையோ பிளாக்கர்களே வாங்க கூடி அழுவோம்//

ஒக்கே சரக்கு இருக்கா

முத்தரசு 6:43:00 AM  

//சாப்பாடு கட்டு (சில சமயம் கையில மாவு கட்டு//

கய்த கய்த ச்சே கவிதா சீ கவித.....நீர் கலக்குமையா

முத்தரசு 6:44:00 AM  

பாட்டு பாடிட்டு இப்படி படம் பார்த்தா குக்கர் மூடி என்ன குக்கரே வரும் ஜாக்ரதை

முத்தரசு 6:48:00 AM  

//வெளங்காதவன்™

எவன்யா அது!!!
வெட்டு... குத்து!!!!

ராச்கோல்!!!!!

இன்னிக்கு கொலை வெறில இருக்கேன்!!!!//


ஒ...ஓகோ இன்னைக்கு சன் டேய்....யா

Gobinath 6:57:00 AM  

ஆமா எனக்கென்னவோ உங்கட அனுபவங்களைத்தான் அடுத்தவங்க பெயரில எழுதுறாப்புல இருக்கே.....

K.s.s.Rajh 7:30:00 AM  

பதிவு புரியலை பாஸ் ஆனா கடைசியில் போட்டு இருக்கும் அஞ்சலி படம் மட்டும் நல்லா இருக்கு


ஆமா அஞ்சலி ரசிகர்கள் கழகம் என்று ஒன்று வைச்சிருக்கிறீங்களே அது பற்றி ஒன்னும் தெரியவில்லை போல,

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9:48:00 AM  

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.

Unknown 8:59:00 PM  

போட்டது உள் குத்தென்று நல்லா தெரியும் ஆனாலும் உங்களுக்கு நம்ம அஞ்ஞலி மேல ஏதோ??????? ம்ம்ம்...

MANO நாஞ்சில் மனோ 1:57:00 AM  

ச்சே இப்பிடி தெரிஞ்சிருந்தா நான் ஒரு உலக்கையை பார்சல் அனுப்பி இருப்பேனே ஜஸ்ட் மிஸ் ஆகிருச்ச....!!!

கோவி 5:13:00 AM  

அதான் அதான் அதேதான்

aalunga 6:37:00 AM  

//அஞ்சலி படம் போட்டது தப்பாய்யா?//

நாங்க தீப்பு சொல்வதற்கு முன்னமே அஞ்சலியின் படத்தைப் போட்டதற்கு கண்டிக்கிறேன்!! :D

Anonymous,  11:33:00 AM  

திடீர்னு என்ன PG 13 படங்களோட...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP