கோவை பதிவர் சந்திப்பு - இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல்!
>> Tuesday, June 12, 2012
காலையில வீட்டம்மா போட்ட நாலு இட்லிய சாப்பிட்டு பஸ் ஏறி உக்காந்த பின்னாடி, போன் சம்பத்திடம் இருந்து வந்தது 'என்னய்யா வந்திட்டியா?' என கேட்க “இதோ வந்திட்டே இருக்கிறேன்.... ” என்றேன், “சீக்கிரம் வாய்யா...”என்றார்! இரவுவானம் சுரேஷ் கம்பனியில் ஏதோ ஆடிட்டு இருக்காம்! இவரு போய் ஆணியடிக்கனும்! அப்பத்தான் ஆடாம இருக்கும் என்ற மெயில்,எஸ்.எம்.எஸ், போன், அன்னப்பறவை, புறா என பல கோணங்களில் மெயில் அனுப்பினார்! எனக்கு வருத்தம்தான்! இருந்தாலும் திருப்பூர் சூழ்நிலை எனக்கு தெரியும் இல்லைன்னா நம்மளை தேவையில்லாத ஆணி அப்படின்னு புடிங்கி எறிஞ்சுருவாங்க...
எல்லாரும் வௌங்கிருச்சு...அறிவாளி அப்படின்னு காட்டிக்குவாங்க..!ஆனா நம்ம பங்காளி “வௌங்காதவன்” அப்படின்னு பேரு வச்சிட்டு! “மாட்டு மேல காக்கா உக்காந்தா மாட்டுக்கு நல்லதா...காக்காய்க்கு நல்லாதான்னு” ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானி. எனக்கு போன் போட்டாரு...மாடு எதுவரைக்கும் வந்திருக்கு? அப்படின்னு பார்த்திங்களா...பார்த்திங்களா....எம் பங்கு விஞ்ஞானி...நான் மாட்டு வண்டிமாதிரி ஒரு தனியார் வண்டியில வருகிறேன் அப்படின்னு அங்கிருந்தே கண்டுபிடிச்சிட்டாரு. 456 ஸ்டாப் நிறுத்தி நிறுத்தி எல்லா மக்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு வழியா கோவை கொண்டு போய்ச் சேர்ந்தது.
காந்திபுரத்தில இருந்து நடந்து போயிட்டு இருக்கிறேன், மாப்ள ஜீவா..கோவைநேரம் போன் போட்டாரு மாம்ஸ் நிறைய சேட்டு பொண்ணுக துப்பட்டா போடமா வரும் பார்த்திட்டே மருதமலை போயிறாதிங்க... ஹோட்டல் லால்குடிதான் சென்னை சில்க் எதிரில் என்றார். சரிங் மாப்பு! என்றபடி போனா ஒரு செக்யூரிட்டு பெரிய வணக்கம் போட்டார்! புளங்கிதம்,புளியங்கொம்பு எல்லாம் அடைந்தது மனசு அப்புறம்தான் தெரியுது பயப்புள்ள ஹோட்டலுக்கு வர்ர எல்லாத்துக்கும் வணக்கம் போட வைத்திருக்கின்ற ஆள் என்று!
உள்ள போனா பேஸ்புக் நண்பர்கள் மாப்பு சசிமோகன்குமார், பதிவர்கள் சங்கவி, தமிழ்பேரண்ட்ஸ்சம்பத், கோவைநேரம்ஜீவா, உலகசினிமாரசிகன் பாஸ்கரன் அண்ணன் எல்லாரும் இருந்தார்கள், கோவை சக்தி மெதுவாக உள்ளே வர அவரிடம் மொய்நோட்டு கொடுக்கப்பட்டது, அடுத்து குழுமத்தின் கவிதாயிணி கோவை மு சரளா வந்தார்கள், அடுத்து ஐயா பழனிகந்தசாமி அவர்கள் மற்றும் கலாகுமரன் அவர்கள் வந்தார்கள் அனைவரின் தகவல்கள் நிரப்ப ஒரு படிவம் கொடுக்கப்பட்டது இரத்தவகை, பிறந்ததேதி, வலைதளத்தின் பெயர், முகவரி அதில் அனைவரும் தகவல்களை நிரப்பினார்கள், மிகவும் நல்ல முயற்சி.
உலகசினிமாரசிகன் பாஸ்கரன் அவர்களின் முயற்சியில் The Kid with Pike என்கிற பிரெஞ்சு மொழி திரைப்படம் திரையிடப்பட்டது, குழந்தைகளின் மனதை அலசும் விதமான திரைப்படமாக இருந்தது, மிகச்சிறந்த திரைப்படம் பல விருதுகளை பெற்றது, அதை பாதியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்ப்பட்டது வருத்தம்தான், ஒலிபெருக்கியில் வெறும் காத்துதான் வந்தது...ஹோட்டல் நிர்வாகம் கையை விரிக்க...வெளியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கும் கிடைக்கவில்லை கடைசியில் சிரமப்பட்டு ஓர் இடத்தில் இருந்து வந்தது... அதற்கு உண்டான ஜீவாவின் முயற்சிக்கு நன்றி!
இயற்கை காக்கும் போராளி யோகநாதன் வருகை தந்தார், அவர்சில நிமிடங்கள் சுருக்கமாக மரங்களை வெட்டுவதை பற்றிக் கூறினார், ஈரம்மகி அவர்கள் வந்திருந்தார் ஈரநெஞ்சம் என்கிற அமைப்பை அறிமுகப்படுத்தினார், சகோதரி விஜிராம் அவர்கள் நேசம் சார்பாக நூறு மரக்கன்றுகளை யோகநாதன் மற்றும் ஈரம் மகி இருவருக்கும் வழங்கினார்,ஈரம்மகியை பற்றி கூறவேண்டும் என்றால் மரம் வளர்ப்பதைப்போல் இவர் மனிதம் வளர்க்கிறார், இவரின் சேவை பாராட்டக்கூடியது மட்டுமல்ல பின்பற்றக் கூடியது, அவரின் கரங்கள் பல ஆதரவற்றோரை காக்க படைக்கப்பட்டிருப்பதாய் நினைக்கிறேன். “உங்களுக்கு எங்களால் இயன்ற உதவியை கண்டிப்பாக செய்வோம்” மகி! கோவில் உண்டியலில் பணத்தைக் கொட்டும் அன்பர்கள் மகியின் மூலம் எதாவது செய்தீர்கள் என்றால் அதுவே உண்மையான ஆன்மீகம். மகி அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கணினி பயிற்சி அளிக்கலாம் எனவும் ஆனந்த் அவர்கள் மலைக் கிராம குழந்தைகளுக்கு கணினி பயிற்சி அளிக்கவும் வலைப்பதிவர்களை கேட்டுக் கொண்டுள்ளார் முயற்சி செய்யலாம் நல்ல விசயம்!
மரம் வளர்ப்பில் மற்றுமொரு அங்கமான காளிதாசன் என்பவர் பல நல்ல திட்டங்களைப் பற்றி கூறினார் விவசாயிகளுக்கு பணப்பயிரான தேக்கு,சந்தனம், போன்ற அறியவகை நாற்றுகளை இலவசமாக கொடுத்து தனியார் நிலங்களில் காடு வளர்க்கும் உன்னத திட்டம், நல்ல முயற்சி நண்பரின் செயல் வெற்றிபெற வாழ்த்துகள். பல பத்திரிக்கையில் பணியாற்றிய ஆனந்த் என்பவர் மரம் வெட்டுவதை தடுப்பவர்களுக்கு சில கருத்துகளைக் கூறினார் அதில் அட்டப்பாடி பகுதியில் திருட்டுத்தனமாக வெட்டப்படும் மரத்தை தடுக்க வேண்டும் எனவும்...மானாவாரி நெல் பயிர் புளுதிநெல் வகையைப்பற்றி கூறினார், இதற்கு வழக்கமாக பயன்படுத்தும் அளவு தண்ணீர் தேவையில்லை பெண்ணாகரம், ஒகனேக்கல் பகுதியில் இந்த வகை பயிரிடப்படுகின்றது, பதிவர்களின் பதிவுகளில் இருந்து சில கருத்துகளை,கட்டுரைகளை பிரபல பத்திரிக்கைகள் பல பயன்படுத்தி வருவது நல்ல முன்னேற்றம் வலைபதிவர்களுக்கு எனவும் கூறினார்.
பதிவர் வின்சென்ட் அண்ணன், இவர் யோகநாதன் அவர்களை பற்றி முதன்முதலாக பதிவில் எழுதியவர், அவர் சில அறிய மூலிகைகளைப்பற்றி விளக்கினார், அறுவை சிகிச்சையில்லாமல் பைல்ஸ் எனப்படும் மூலத்தை நான்கே நாளில் குணப்படுத்தும் அற்புத மூலிகை பற்றி கூறினார். என்.கணேசன் என்கிற வலைப்பதிவை எழுதுகின்ற கணேசன் அவர்கள் பல பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதியவர், ஒவ்வொரு பின்னூட்டமும் தன்னை ஊக்கப்படுத்தும் என்றும் இவர் எழுதிய பதிவை படித்த ஒருவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்க்கு வந்திருக்கிறார். இவரை போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறார், அவர்களை போன்றவர்களின் தூண்டுதலால் பதவிஉயர்வு மற்றும் மாற்றல் கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமல்... வலைப்பதிவை எழுதி வருகிறார். நான் கிளர்க்காகவே மனநிம்மதியுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியது நெகிழ்வான தருனம்.
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க செயலாளர் அவர்கள் வருகை புரிந்திருந்திருந்தார் தான் எழுதிய கையெழுத்து பிரதிகளைப் பற்றி கூறியிருந்தார். வருகை புரிந்த அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
முகப்புத்தக நண்பர் ஒருவர் தமக்கு இது போன்ற நட்புகளே என் கவலை மறக்கச் செய்கின்றன... என்று நாதழுவ கூறிய போது சிலருக்கு கண்கலங்கியது, முகப்புத்தகம் மூலமாக பல ஆதரவற்றோரை பெற்றோரிடம் சேர்க்கும் நல்ல செயலை மகி செய்து வருவதை குறிப்பிட்ட அவர் அதே முகப்புத்தகத்தில் அசிங்கமாகவும், கேவலமாகவும் அநாகரிக வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது. என்றும் கூறினார்.
நான் இந்த இரை தேடலில் நடந்தவைகளை சிந்தித்த போது நாம் எங்கோ பிறந்தோம்...எங்கோ வளர்ந்தோம்....நீங்கள் யாரோ? நான் யாரோ? ஆனால் நம்மை இணைத்தது இந்த எழுத்து! அப்பொழுது இந்த எழுத்துக்கு சக்தியிருக்கின்றது...நம் (பேனா)மவுஸ் முனைக்கு வாளின் கூர்மையிருக்கின்றது...இதன் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்கலாம்....தீய சமுதாயத்தையும் உருவாக்கலாம்........ என்பதை உணர்ந்து கொண்டோம்.
60 comments:
வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
இந்த குழுவில் கோவை ஜீவா எங்கே?..சொல்லுங்கப்பு.
வேட்டி,சட்டை, முரட்டு கிருதா, சரத்குமார் தம்பி போல இருக்காரே ..அவர்தான் ஜீவாவா? எசகு பெசகா அவர் ப்ளாக்ல கமன்ட் போட்டா நம்மள சக்கையா பிழிஞ்சிருவாறு போல மனுஷன்..!! ண்ணா..ஜீவாண்ணா..அது நான் இல்லீங்.
விழாக் குழுவினருக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி
Tha.ma 6
vaazhthukkal
வெளங்காதவன்....போட்டோ எங்கயா...????
சும்மா ஜல்லி அடிக்காதீரும்.....
வாழ்த்துக்கள்....
Detailed report. You can add names of bloggers in the photos. I also want to see Jeeva (Kovai neram)
எழுத்து எல்லைகள் தாண்டி நமக்கென்று ஒரு அங்கீகாரத்தை, நமக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்குகிறது என்பது மட்டும் நிதர்சனமான நிஜம்.!
சந்திப்பில் ஏற்பட்ட தித்தித்த அனுபவம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி..!
@சிவகுமார் ! said...
வேட்டி,சட்டை, முரட்டு கிருதா, சரத்குமார் தம்பி போல இருக்காரே ..அவர்தான் ஜீவாவா? எசகு பெசகா அவர் ப்ளாக்ல கமன்ட் போட்டா நம்மள சக்கையா பிழிஞ்சிருவாறு போல மனுஷன்..!! ண்ணா..ஜீவாண்ணா..அது நான் இல்லீங்.
/////////////////////
@மோகன் குமார் said...
Detailed report. You can add names of bloggers in the photos. I also want to see Jeeva (Kovai neram)
////////////////////
படம் வருவதை நண்பர்கள் விரும்பவில்லை....இருந்தாலும் வேஸ்டி கட்டிய அரசியல்வாதி அவர்தான்.....
உறவுகளின் நல் சந்திப்பு
இனிதாய் அரங்க்ரியத்தில் மகிழ்ச்சி
நட்பின் கூடலும் அன்பின் முகங்களும் அழகு தோழரே
எழுத்தால் பெற்ற உறவுகள் அல்லவா... அருமை
வாழ்த்துகள்..............
என்ன ஒரு பாகத்தோட முடிச்சிட்டீங்க?
மச்சி, என்ன அவ்வளவு தானா???????????????????
அருமையான பதிவு!
வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
மொத ஆணியே எனக்குதானா தல? இரண்டாவது ஆணி யாருக்குன்னுதான் தெரியல :-)
அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்..
இதுபோன்ற சந்திப்புகள் எனக்கு வாய்க்காது
தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது...
வாய்ப்பு வரும்போது நிச்சயம் கலந்து கொள்வேன்..
நான் இந்த இரை தேடலில் நடந்தவைகளை சிந்தித்த போது நாம் எங்கோ பிறந்தோம்...எங்கோ வளர்ந்தோம்....நீங்கள் யாரோ? நான் யாரோ? ஆனால் நம்மை இணைத்தது இந்த எழுத்து! அப்பொழுது இந்த எழுத்துக்கு சக்தியிருக்கின்றது...நம் (பேனா)மவுஸ் முனைக்கு வாளின் கூர்மையிருக்கின்றது...இதன் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்கலாம்....தீய சமுதாயத்தையும் உருவாக்கலாம்........ அரும்மையான வரிகள் வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
யோவ் என்ன ஸ்டேஜ்ல இருக்குறவிங்க படம் மட்டும் போட்டுட்டு விட்டுட்டீங்க...?நம்ம நக்ஸ் பாண்டி எங்கே...?
எல்லாருக்கும் என் இனிய வாழ்த்துகள்....
விழா பல நண்பர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.. விழாவினை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அடுத்த வருடம் இன்னமும் சிறப்பாக நடக்கட்டும்
maapla.. vaazththukkal.. aduththa baagam enke? contact cps...
அழகாக விவரித்துள்ளீர்கள்..... அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்..
சூப்பர் மாம்ஸ்...என்னை பத்தி கூட எழுதி இருக்கீங்க...என்னை விசாரித்த ஹோட்டல் உரிமையாளர் அப்புறம் நண்பர் மோகன் அவர்களுக்கு நன்றி..
///நான் இந்த இரை தேடலில் நடந்தவைகளை சிந்தித்த போது நாம் எங்கோ பிறந்தோம்...எங்கோ வளர்ந்தோம்....நீங்கள் யாரோ? நான் யாரோ? ஆனால் நம்மை இணைத்தது இந்த எழுத்து! அப்பொழுது இந்த எழுத்துக்கு சக்தியிருக்கின்றது...நம் (பேனா)மவுஸ் முனைக்கு வாளின் கூர்மையிருக்கின்றது...இதன் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்கலாம்....தீய சமுதாயத்தையும் உருவாக்கலாம்........ என்பதை உணர்ந்து கொண்டோம். ///
final touching super makkaa
வாழ்த்துக்கள்..
#ngoyaale, இதுல நான் எங்க இருந்து வந்தேன்?
@விக்கியுலகம்
நன்றிகள் மாம்ஸ்!
@! சிவகுமார் !! சிவகுமார் ! said...
இந்த குழுவில் கோவை ஜீவா எங்கே?..சொல்லுங்கப்பு.
////////////////////
வெள்ளை சட்டை..வெள்ளை வேஸ்டி விசயகாந்த் மாதிரி இருக்காரே அவரேதான்
--------------------------------
வேட்டி,சட்டை, முரட்டு கிருதா, சரத்குமார் தம்பி போல இருக்காரே ..அவர்தான் ஜீவாவா? எசகு பெசகா அவர் ப்ளாக்ல கமன்ட் போட்டா நம்மள சக்கையா பிழிஞ்சிருவாறு போல மனுஷன்..!! ண்ணா..ஜீவாண்ணா..அது நான் இல்லீங்.
////////////////////////////////////////
அது பல்க்கா இருக்கிற குழந்தை பயப்படாதிங்க.....
@Ramaniவிழாக் குழுவினருக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி
/////////////////////
நன்றிகள் சார்!
@தமிழ்வாசி பிரகாஷ்vaazhthukkal
/////////////////////////
நன்றிகள் பிரகாஷ்!
@NAAI-NAKKSவெளங்காதவன்....போட்டோ எங்கயா...????
சும்மா ஜல்லி அடிக்காதீரும்.....
வாழ்த்துக்கள்....
////////////////////////
அஜித்குமார் படத்தை டவுன்லோடு பண்ணி நல்லா உத்து பாருய்யா அதுதான் வௌங்காதவன்..............
@வரலாற்று சுவடுகள்எழுத்து எல்லைகள் தாண்டி நமக்கென்று ஒரு அங்கீகாரத்தை, நமக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்குகிறது என்பது மட்டும் நிதர்சனமான நிஜம்.!
சந்திப்பில் ஏற்பட்ட தித்தித்த அனுபவம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி..!
////////////////////
ஆம்! ஒரே அலைவரிசை நண்பர்கள் இனையும் போது அதைவிட சிறந்தது என்ன? நன்றி சார்!
@FOOD NELLAIநல்ல முயற்சி. அதிலும் இரத்தவகை விபரங்களும் வாங்கி வைப்பது பல சந்தர்ப்பங்களில் துணைபுரியும். வாழ்த்துக்கள்.
////////////////////////////
ஆமாம்! சில சமயங்களில் ஒரு உயிரை காக்க பயன்படும்.....
நன்றி சார்!
@செய்தாலிஉறவுகளின் நல் சந்திப்பு
இனிதாய் அரங்க்ரியத்தில் மகிழ்ச்சி
நட்பின் கூடலும் அன்பின் முகங்களும் அழகு தோழரே
////////////////////
மிக்க நன்றி சார்...!
@எஸ்தர் சபிஎழுத்தால் பெற்ற உறவுகள் அல்லவா... அருமை
வாழ்த்துகள்..............
/////////////////////
ஆமாம் எழுத்தால் பெற்ற உறவுகளே...!நன்றி சகோதரி!
@பன்னிக்குட்டி ராம்சாமிஎன்ன ஒரு பாகத்தோட முடிச்சிட்டீங்க?
//////////////////////
போதுங்க....போரச்சிரும்...ஹிஹி!
@மனசாட்சி™
மச்சி, என்ன அவ்வளவு தானா???????????????????
/////////////////////////////
சாரி! மச்சி நீங்க போன்ல கூப்பிட்டதை மறந்துவிட்டேன்........
@J.P Josephine Babaஅருமையான பதிவு!
///////////////////
மிக்க நன்றி ஜோஸபின் அவர்களுக்கு!
@Avargal Unmaigalவாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
////////////////
நன்றிகள் சார்! உங்கள் வாழ்த்துகள் எங்களை வளப்படுத்தும்!
@இரவு வானம்மொத ஆணியே எனக்குதானா தல? இரண்டாவது ஆணி யாருக்குன்னுதான் தெரியல :-)
////////////////
விடுங்க....விடுங்க.....இரண்டும் உங்களுக்கே!
@மகேந்திரன்
அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்..
இதுபோன்ற சந்திப்புகள் எனக்கு வாய்க்காது
தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது...
வாய்ப்பு வரும்போது நிச்சயம் கலந்து கொள்வேன்..
////////////////////////
கண்டிப்பாக அடுத்த சந்திப்பில் நீங்கள் இருப்பீர்கள் என நம்புகின்றேன்!
@வா.கோவிந்தராஜ்,நான் இந்த இரை தேடலில் நடந்தவைகளை சிந்தித்த போது நாம் எங்கோ பிறந்தோம்...எங்கோ வளர்ந்தோம்....நீங்கள் யாரோ? நான் யாரோ? ஆனால் நம்மை இணைத்தது இந்த எழுத்து! அப்பொழுது இந்த எழுத்துக்கு சக்தியிருக்கின்றது...நம் (பேனா)மவுஸ் முனைக்கு வாளின் கூர்மையிருக்கின்றது...இதன் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்கலாம்....தீய சமுதாயத்தையும் உருவாக்கலாம்........ அரும்மையான வரிகள் வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
///////////////////////////////
நன்றி தல...!போனில் வாழ்த்து தெரிவித்ததுக்கும் நன்றி!
@MANO நாஞ்சில் மனோயோவ் என்ன ஸ்டேஜ்ல இருக்குறவிங்க படம் மட்டும் போட்டுட்டு விட்டுட்டீங்க...?நம்ம நக்ஸ் பாண்டி எங்கே...?
/////////////////////////////
மனோ...!இது கோவை பதிவர்களுக்கான சந்திப்பு மட்டுமே...! நக்ஸ்க்கு இங்க வேலையில்லை அடுத்த பதிவர் சந்திப்பில் தலைவர் வருவார்!
@MANO நாஞ்சில் மனோஎல்லாருக்கும் என் இனிய வாழ்த்துகள்....
////////////////////////////////////////
நன்றிகள் மனோ!
@விச்சுவிழா பல நண்பர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.. விழாவினை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
//////////////////////////
மிக்க நன்றிகள் விச்சு!
@ஜோதிஜி திருப்பூர்அடுத்த வருடம் இன்னமும் சிறப்பாக நடக்கட்டும்
//////////////////////////
கண்டிப்பாக உங்கள் ஆதரவுடன் நடக்கும்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!maapla.. vaazththukkal.. aduththa baagam enke? contact cps...
///////////////
போதும் மாம்ஸ்! குழும தளத்தில் விரிவாக போடறாங்க.....
@திண்டுக்கல் தனபாலன்அழகாக விவரித்துள்ளீர்கள்..... அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்..
///////////////////////////
உங்கள் வாழத்துகளுக்கு நன்றி சார்!
@கோவை நேரம்சூப்பர் மாம்ஸ்...என்னை பத்தி கூட எழுதி இருக்கீங்க...என்னை விசாரித்த ஹோட்டல் உரிமையாளர் அப்புறம் நண்பர் மோகன் அவர்களுக்கு நன்றி..
/////////////////////////
மாப்ளய பத்தி எழுதாம விட்டா எனக்கு போஜனம் கிடைக்காது...........
@சம்பத்குமார்///நான் இந்த இரை தேடலில் நடந்தவைகளை சிந்தித்த போது நாம் எங்கோ பிறந்தோம்...எங்கோ வளர்ந்தோம்....நீங்கள் யாரோ? நான் யாரோ? ஆனால் நம்மை இணைத்தது இந்த எழுத்து! அப்பொழுது இந்த எழுத்துக்கு சக்தியிருக்கின்றது...நம் (பேனா)மவுஸ் முனைக்கு வாளின் கூர்மையிருக்கின்றது...இதன் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்கலாம்....தீய சமுதாயத்தையும் உருவாக்கலாம்........ என்பதை உணர்ந்து கொண்டோம். ///
final touching super makkaa
///////////////////////////////
நன்றி....சம்பத்...
@வெளங்காதவன்™வாழ்த்துக்கள்..
#ngoyaale, இதுல நான் எங்க இருந்து வந்தேன்?
//////////////////////
பொள்ளாச்சியில இருந்து வந்தீங்க பங்கு! அது கூட மறந்திருச்சா...!
எழுத்துகளில் எதார்த்தங்கள் மிகுந்து இருக்கிறது சுரேஷை போலவே .................நல்ல வருவீங்க ........உங்களின் பங்களிப்பு இதில் அதிகம் தான் ............வாழ்த்துக்கள்
இந்த மாதிரி கோர்வையா அழகா எழுதனும்...இன்னும் சொல்லுங்க அப்படிங்கர ஏக்கத்தை எற்படுத்துது. நன்றி.
விரிவான விளக்கம் நேரில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வு!
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
சிறப்பான விழா நிகழ்வின் விரிவான வர்ணனைக்கு நன்றி.வாழ்த்துகளும்.
நேரடி வர்ணனை அழகு
நன்றி சுரேஷ் சார்
கலக்கலான பதிவர் சந்திப்பு.கோவை நேரம் ஜீவாவை பார்த்தாச்சு...இதுல மனசாட்சி எங்கே?
நல்ல பதிவு...
பகிர்விற்கு நன்றி!!
Post a Comment