சகுனி-திரை விமர்சனம்
>> Friday, June 22, 2012
சங்கர்தயாள் இயக்கத்தில் கார்த்தி, பிரணிதா, சந்தானம், மனோபாலா, சித்ராலட்சுமணன், நாசர், ரோஜா, கிரன், பிரகாஸ்ராஜ், கோட்டாசீனிவாசராவ், ஒரு சில காட்சிகளில் அனுஸ்கா அன்ட் ஆன்ட்ரியா போன்ற பல பழம் தின்று கொட்டை, புளுக்கை போட்டவர்களை வைத்து அரசியல், மற்றும் சாமியார்களை வைத்து ஆடிய சதுரங்க ஆட்டம்தான் சகுனி! போங்கு ஆட்டமில்லை சுவாரஸ்யமா இருக்கு.
காதுல பூ சுற்றிய படங்களை பார்த்திருப்பிங்க ஆனா இதுல காதுல உரம் போட்டு பூச்செடியே வளர்க்கறாங்க அவ்வளவு லாஜிக் இல்லாத காட்சிகள், முன் பகுதியில கார்த்தி பில்டப் செய்து சொல்லுகின்ற மாதிரியே படம் முழுவதையும் கொண்டு போயிருக்கிறாங்க, ஆனாலும் சந்தானம் காமடி அரசியல் உள்குத்துல ரசிகனை மயங்க வைத்து அதை மறந்துவிடுமளவு நேர்த்தியான இயக்கம், வசனங்கள் செம சார்ப் சாதரண குடிமகன் ஒரு அரசியல்வாதிகளிடம் கேட்க முடியாத கேள்விகளை கார்த்தியை வைத்து நிறைய கேட்டிருக்கிறார் அதனால் சில்வண்டுகளின் விசில் சத்தம் ஆங்காங்கே காதைப் பிளக்கின்றது. அதுவும் சந்தானம் பெயர் ரஜினி, கார்த்தி பெயர் கமல், ஹீரோயின் பெயர் ஸ்ரீதேவி என வைத்திருப்பது ஆங்காங்கே பஞ்ச் வைப்பது வித்தியாசமான காமடி.
பிரணிதா தேவையா....? என கேட்க வைக்குமளவு முன்பாதியில் கொஞ்சம், பின்பாதியில் கொஞ்சம், என தெலுங்கு லெவலில் வைத்திருக்கிறார்கள். அம்மணி மைதா, கோதுமை, கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் பன்னீர் விட்டுக் குழைத்தச் சிலையாக இருக்கிறார். தமிழன் நெஞ்சில் இடம் பிடிப்பது சிரமம்! குளோஷப் காட்சியில் அம்மணி ஆன்ட்டி மாதிரி இருக்கு. நீ..செல்லாது...செல்லாது அப்படியே ஓடிப்போயிரு.........
படத்தின் கதை ஒன்லைன்தான் இரயில்வே சப்வே கட்ட வீட்டை இடிக்கபோறாங்க...அதை தடுக்க மனு கொடுக்க சென்னை போகிறார் ஹீரோ அங்கே அரசியல் வாதிகளால் அவமாணப்படுத்தப் படுகிறார் அதே அரசியலை வைத்து அவர்கள் கண்ணைக் குத்தும் ஆதிகால தெலுங்கு பார்முலா கதை, தமிழ் ட்ரீட்மெண்ட்ல பளபளங்குது. இதுல பாருங்க லாஜிக் அப்படின்னு ஒன்னு இருக்கு என்பதை இயக்குனர் மறந்துட்டாரா தெரியலை...? ஊருக்கே சோறு போடும் இராஜபரம்பரை பொதுமக்களுக்காக வீட்டைக் கொடுக்க மாட்டாங்களா? பெட்டிகடைய இடிக்க போனாக்கூட சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் ஸ்டே வாங்குற காலத்தில மனு கொடுக்க போறாராம்...முடியலை! ஹீரோ எப்படியாவது சென்னை போகனும், “டாகுடர் விசையில் இருந்து கம்பவுண்டர் விக்ரம் வரைக்கும் பல கோணங்களில் சென்னை வந்ததால் இயக்குனருக்கு கழிப்பறையில் தோன்றிய கனநேர சிந்தனையாக இருக்கும் போல...!”
“செல்லம்....ஜ....லவ்...யூடா...செல்லம்...” என கலக்கிய மெகா, மகா வில்லன் பிரகாஸ்ராஜ், இதுல கீப்பு கிரனுடன் வருகிறார், கிரன் கைய தூக்கி துணை முதல்வர்ங்குறார்(எதையோ ஞாபகப்படுத்துகின்றது) ஸ்கோப் இல்லை, இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் வேஸ்ட் பண்ணிட்டாங்க...பக்பக் என சைலண்சர் அடைத்த பைக் மாதிரி சிரித்து வில்லத்தனம் பண்னும் கோட்டாவை ஓரளவுக்கு பயன்படுத்தியிருக்கிறாங்க.சந்தானம் ஒரு காட்சியில் கிழிஞ்ச டுயூப் வாயன் அப்படிங்கறார்...! இப்படி இவர்களுக்கு சரியான களம் இல்லாத காரணம் இடைவேளை வரை கார்த்தி ஓட்டுகின்ற ரீல்தான்னு நினைக்கிறேன், கொஞ்சம் வெட்டியிருக்கலாம்.
சந்தானம் வழக்கம் போல நக்கல் காமடியடிச்சாலும் குடிகாரர்களைப் பற்றி பிலாசபி பேசும் போதும்! (என்ன கை தட்டல்! குடிமக்கள் அதிகமாயிட்டாங்க இது நல்லதுக்கு இல்லை..) ஆட்டோகாரங்களை சும்மா நடந்து போறவனை ஆட்டோ வருமான்னு கேட்பிங்களாடா...? என ஆட்டோகாரங்களை ஓட்டும்போதும் கலக்குகிறார் மனுசன். ராதிகா தூள் சொர்ணாக்கா மாதிரி பேட்டை பைனான்ஸ் ரவுடியாக இருந்து கவுன்சிலர் ஆவது! மேயர் ஆவது! என அந்தந்த பரிணாமங்களுங்க்கு தகுந்த மாதிரி முகபாவங்களை மாற்றி அவங்க நடிப்ப பற்றி சொல்லவா வேனும்! நாசருக்கு வில்லன் வேடம் கிடையாது நித்தி மாதிரி பீடி சாமியாரா இருப்பவர், கார்த்தி ஜடியாவில ஹெவி சாமியார் ஆகிறார்...,சும்மா ஊறுகாய் மாதிரி வந்து போகிறார் என்றாலும் ஓகே!
பின்னணியிசை செமச் சொதப்பல்! “கோட்டரு....பத்தலை” பாடல் மனசுல இருக்கு அதுவும் “ஓரம்போ...ஓரம்போ...ருக்குமணி வண்டி வருது” ஸ்டைல் “ஜி.வி.பிரகாஷ்” பேரைச் சொல்லும்படியில்லை, ஆழமான காதல் பாடல்கள் கூட இப்பொழுது வரும் படங்களில் ரசிக்கும்படியாக இல்லை, இதற்கு பாடலை வைக்காமல் இருந்து விடலாம், ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கின்றது வித்தியாசமாக எதுவும் இல்லை, முதல் பாடலில் கார்த்தி ஆடும் நடனம் பதினாறுவயதினிலே கமல் விந்திகிட்டே மயிலு...மயிலு....அப்படின்னு வருவாரே அந்த மாதிரி ஆடுறாரு...புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி.
அமைதிப்படைக்கு பிறகு வந்த அரசியல் படங்கள் ஒன்றும் பெரிதாக வெற்றிபெறவில்லை, கொஞ்சம் மம்முட்டியின் மக்களாட்சி ஸ்டைல் இருந்தாலும், ரசிகர்களை இரண்டரை மணி நேரம் கட்டிப்போடும் வித்தை தெரிந்திருக்கின்றது இயக்குனருக்கு, திரும்ப ஒரு தடவை பார்க்கலாம் என்கிற மாதிரியெல்லாம் இல்ல சும்மா டைம்பாஸ்க்கு ஒரு தடவை பார்க்கலாம்.
டிஸ்கி : சகுனி படத்தில் ஹீரோ எப்படி கோல்மால் செய்யறாரோ அது போலவே இந்த பட மார்க்கெட்டிங்! திருப்பூர்ல 11தியேட்டல்ல போட்டிருக்காங்க, ஒரு நாளைக்கு நாலு காட்சி, பத்து நாள் ஓடினாலே நாற்பது காட்சிக்கு சமம், டிக்கட் விலையும் இரு மடங்கு அதிகம், முதல் மாதிரி 100நாள் ரீல் தேய ஓட்டுகின்ற பிசினஸ் கிடையாது, க்யூப் சிஸ்டம், குறைந்த நாளில் நிறைந்த லாபம், படம் நூறு நாள் இப்ப ஓடுவதில்லை எல்லாம் திருட்டு சிடி அப்படின்னு எவனாவது மேடையில பேசினா மூக்குல குத்தனும் மக்களே!
26 comments:
good review thala
happy birthday thalaiva
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி ராஜா!
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றிகள் தல...!
அது சரி அம்புட்டுதானா... ம். படத்தை விமர்சித்த விதம் மச்சி எங்கேயோ போய்டீறு.
மார்க்கெட்டிங் # இது வேறையா?
தல படம் பார்த்திட்டீங்களா? உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான், பொறந்தநாளா சொல்லவே இல்லை?
எனிவே மெனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தடே தல
//இரவு வானம்
பொறந்தநாளா சொல்லவே இல்லை?//
மாப்ளே சொன்னா கட்டிங் கேப்பிங்கலோன்னு தான் சொல்லலை.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@இரவு வானம்தல படம் பார்த்திட்டீங்களா? உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான், பொறந்தநாளா சொல்லவே இல்லை?
எனிவே மெனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தடே தல
///////////////////////
நான் கூப்பிட்டேன் நீங்க வரல.....
வாழ்த்துக்கு மிக்க நன்றி!
@மனசாட்சி™
மாப்ளே சொன்னா கட்டிங் கேப்பிங்கலோன்னு தான் சொல்லலை.
///////////////////////
இல்ல மாம்ஸ்..!இரண்டாயிரம் ரூபாய்க்கு கிப்ட் வாங்கிட்டு வருவாரு பாசக்காரப் பயபுள்ள...!
@மனசாட்சி™
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
////////////////////////////
மிக்க நன்றிகள்!மாம்ஸ்!
இன்று பிறந்தநாள் காணும் வீடு சுரேஷ் அவர்கள்....
இன்னும் பல ""அஞ்சலி""களை தன் வாழ்நாளில் ""பார்த்து""...""வீட்டில்""
சிலபல பாராட்டுகளை பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்.....
வரப்புயர!
-வெளங்காதவன்.
@NAAI-NAKKS
இன்று பிறந்தநாள் காணும் வீடு சுரேஷ் அவர்கள்....
இன்னும் பல ""அஞ்சலி""களை தன் வாழ்நாளில் ""பார்த்து""...""வீட்டில்""
சிலபல பாராட்டுகளை பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்.....
/////////////////////////////
கவிதையில் என்னை வாழ்த்திய புலவர் நக்கீரனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!
@வெளங்காதவன்™
வரப்புயர!
///////////////////////
வாய்க்கால் உயரும்.......
என்னய்யா சொல்ல வர்ர...!
ரைட்டு ..!
இன்று பிறந்தநாள் காணும் மாமா சுரேஷ் அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்த பிறந்தநாள் நல வாழ்த்துகள்
நானும் ஏதோ தல படத்தோட சவால் விடுறாங்களே என்று யோசிச்சன். இவ்ளோதானா??????!!!!!!!!!!!!!!!
Happy birthday Suresh.
Thoppai ulla padam pottutteenga:)
அம்மணி மைதா, கோகுமை, கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் பன்னீர் விட்டுக் குழைத்தச் சிலையாக இருக்கிறார்./////
காசு கொடுத்து படம் பார்த்துட்டு பயபுள்ள சொல்ற டயலாக் பாரு? படத்துல வந்துட்டு போன கொஞ்ச நேரமும் ஹீரோயினியை பார்த்து ஜொள்ளு விட்டுபுட்டு இப்படி கமென்ட் ஹையோ... ஹையோ....
மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !
உங்கள் பாணியில் விமர்சனம் அருமை ! கதை 'தூள்' படம் ஞாபகம் வருது ! நன்றி நண்பரே !
நல்லா இருக்கு விமர்சனம்
மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
சா இராமாநுசம்
ம்ம்ம் நல்லா இருக்கு சார்
என் இனிய பிறந்தா நாள் வாழ்த்துக்கள் சார்
படத்தின் நாயகிக்கும் ஆண்ரியா, அனுஷ்காவுக்கும் ஒரே சம்பளமோ தெரியாது..
நாயகியை விட இவர்கள் இருவருக்கும்தான் விசில் சத்தம் அதிகம் என்று கேள்விப்பட்டேன்....
விமர்சனம் அருமை....
Post a Comment