விஸ்வரூபம்

>> Thursday, February 7, 2013


விஸ்வரூபம் பல சர்ச்சைகளுக்கிடையே சில ஆடியோவை  'MUTE'  செய்து, கொஞ்சம் 'சீனை'க் 'CUTE' செய்து, ஒரு வழியாக அதிகச் சேதாரமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி தன்னுடைய ரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

திருப்பூர், கோவையில் தினம் ஐந்து காட்சிகளாக அரங்கம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது,கமல் விளம்பரதாரர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை! கமல் மகிழ்ச்சியை ஒரு ஆம்பூர் பீப் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிக் கொள்ளலாம்.

பாலக்காடு டப்பா தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையில் பார்த்ததால் நிறைய வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. இன்று திருப்பூரில் பார்த்தபோதுதான் புரிந்தது இந்த படத்தில் சர்வதேச மொழிகள் அரபி, உருது, ஆங்கிலம் என்று படம் முழுவதும் வியாப்பித்துள்ளது.

பூஜாகுமாரின் 13 வருட வன வாசத்திற்கு பிறகு விஸ்வரூபத்தில் திறந்த மார்பும், அய்யங்கார் பாஷை பேசும் மூடாத வாயும் சில இடங்களில் எரிச்சலையும், எச்சிலையும் உருவாக்குகின்றது.

ஆன்டிரியா பாடகர் அனிருத் உதட்டை கவ்வி இழுத்த காட்சியை யுடுயூப்பில் பார்த்து புளங்கிதம் அடைந்த வாலிப, வயோதிக அன்பர்களே கமல் படத்தில் என்றவுடன் குதூகலமடைந்திருப்பிங்க....அப்படியே மனசை ஒரு போர்வை போட்டு மூடி வைத்துவிடுங்கள் இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.

சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆப்கன் செட்கள் வயசுக்கு வந்த அத்தை பொண்ணுக்கு கட்டிய குச்சு போல ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள். குகை செட்டில் சாக்கு துணி அப்பட்டமாக தெரிக்கின்றது. அதை தவிர்த்துப் பார்த்தால் படம் ஒரு பக்கா ஆங்கிலப்படம். ஒரு சில சினிமாட்டிக் காட்சிகள் மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா என்று நியாபகப் படுத்துகின்றது அதை பின்னால் பார்ப்போம்.

எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது. கமலின் Perfect Performance யாருக்கும் வராது நான் இந்திய அளவில் சொல்லுகின்றேன், (நீங்க ஜிம்கேரிய சொல்லுவீங்கன்னு தெரியும்) கதக் கலைஞராக நளினத்துடன் அவர் நடனம் ஆடும் போதும், சாதாரணமாக நடக்கும் போதும், அவர் பேசும் அய்யங்கார் பாஷையும் சான்சே கிடையாது. தான் பிறவிக் கலைஞன் என்பதை அடிக்கடி நிருபிக்கின்றார்.

கமல் உமரின் ஆப்கன் தீவிரவாதப்படையில் சேர்ந்ததும் ரன்வேயில் ஓடி முடித்த விமானம் ஜிவ்வென்று மேலேழும்புவதைப் போல வேகமெடுக்கின்றது. நோட்டோ படையின் தாக்குதல், பின்லேடன் வருகை, துரோகத்திற்காக தூக்கிலிடுதல். தூக்கிட்டு முடித்ததும் கால்களை தடவிப்பார்த்து திரவம் வெளியாகியு்ள்ளதா என சோதித்தல். என நுட்பமான சில காட்சிகள். நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. (தூக்கிலிடப் பட்டவர்கள் எந்த விதமான கழுத்து எழும்பு முறிவில்லாமல் மூச்சுக்குழாய் நசுங்கி இறக்கும் போதுதான் சிறிது மலம், சிறுநீர், விந்து, வெளியாகும் அப்படி திரவம் வெளியானால் மட்டுமே முறையான மரணம் என்று அர்த்தம்)

I am not child என்று ஒரு சிறுவன் ஓடுகின்றான் ஊஞ்சலில் ஆடாமல், அவனை விட மூத்தவனான அண்ணன் ஊஞ்சலில் ஆடுகின்றான். அடுத்த நாள் மனிதவெடி குண்டாக நோட்டோ படையின் வாகனத்தை சிதறடித்து மரித்துப் போகின்றான். அடிப்படைவாதிகள் குழந்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது இந்த காட்சி.

அமெரிக்க FBI இந்திய உளவாளியின் உதவியினால் நகரத்தில் நிகழக்கூடிய ஒரு குண்டு வெடிப்பை தடுக்கின்றது என்பது லாஜிக் இல்லாதது என்றாலும் சில இந்திய வழக்குகள், தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது எனும் போது சாத்தியமே என்றும் கூடக் கூறலாம்.

நிறைய நியூக்கிளியர் பாம் பற்றி பல அறிவியல் வார்த்தைகள் சராசரி ரசிகனான எனக்கு புரியாத போதும். இன்னமும் சிகப்பு டேப் சுற்றப்பட்ட டைப்பீசை பாம் என்று காட்டினால் கெக்கபிக்கே என்று சின்ன குழந்தை கூட சிரித்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது.

ஆரம்ப காட்சியில் கை கட்டி வைத்துள்ள கமல் இறந்தவனுக்காக தொழுகின்றேன் என்று கேட்டு தொழுதபின் எடுக்கும் விஸ்வரூபம்

கடைசியில் அமெரிக்க ராணுவ வீரன் கேட்கும் கேள்விக்கு நமக்காக தொழுகின்றார் என FBI அதிகாரியே கூறுவது போன்ற சில இடங்கள் சினிமாட்டிக்காக இருப்பது என்று ஒரு சில குறைகளும் உள்ளது என்றாலும் விஸ்வரூபம் நிறைய விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! நான் இஸ்லாமியன் இல்லை அதை எப்படி உணர்வது? ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கின்றது என்று கமல் இன்னோரு "பொக்ரானை"ப் போடுகின்றார் பார்க்கலாம். அது எப்படி வெடிக்கின்றது என்று…!

41 comments:

K 6:24:00 AM  

ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன். ///

மிகவும் சரியான வரிகள்!

பட விமர்சனமும் சூப்பர்!

கோகுல் 6:45:00 AM  

நிறைய கற்றுக்கொள்ள(பார்க்க ) வேண்டியிருக்கும் போல

Unknown 7:21:00 AM  

///ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன். ///

ஏனென்றால் பெரும்பான்மையான முஸ்லிம்களோ, கிறித்தவர்களோ சில இந்துக்கள் செய்யும் தவறுகளுக்கு ஓட்டு மொத்த இந்துக்களையும் தவறாக பழிப்பதில்லை, இந்து தீவிரவாதிகள் என்று சொல்வதில்லை, பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் இந்துவெறி, மதவெறி என்று இவர்கள் செய்வதை யாரும் சொல்வதில்லை.

கேரளாக்காரன் 7:54:00 AM  

இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.//

ஓப்பனிங் சாங்ல சிக்குனு கட்டிப்புடிப்பாங்களே அண்ணே. பத்தலியா உங்களுக்கு?

அடுத்த பார்ட்டுக்கு லீட் ஆக இருக்கலாம் கசக்கிப்பிழிவார் என நம்புவோமாக

கேரளாக்காரன் 7:57:00 AM  

//எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது.//

ஆணழகன் படத்தில் ப்ரசாந்தும் வரலாறு படத்தில் அல்ட்டிமேட்ஸ்டாரும் நல்லா பன்ணிருப்பாங்க

கேரளாக்காரன் 7:58:00 AM  

//தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது//

இத நீங்களுமா நம்புரீங்க?

காட்டான் 8:01:00 AM  

தம்பி எனக்கு இன்னும் டீயே வரல்ல அதற்குள் நீங்க இரண்டு தடவை பிரியாணியே சாப்பிட்டுட்டீங்க..!

தமிழ்வாசி பிரகாஷ் 8:24:00 AM  

ஆக... விமர்சனம் எழுதியாச்சு...

நன்றி.

முத்தரசு 8:33:00 AM  

மாப்ள
நான் மீண்டும் பாக்குறன் என்னால பல இடங்களில் சரியா புரிஞ்சிக்க முடியல காரணம் ரசிகர்கள்.

நா பார்த்துல கமல் மகா நடிகர் அற்புதம் மீண்டும் ெபாறுமயா பாக்கணும்

Sivakasikaran 9:32:00 AM  

உங்களுடைய ஃபினிசிங் டச் சூப்பர்ணே.. நல்ல விமர்சனம்.. :-)

Adirai khalid 7:35:00 PM  

கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

Unknown 8:29:00 PM  

@ஜோதிஜி திருப்பூர் said...

நன்றி ஜோதிஜி!

Unknown 8:30:00 PM  

@மாத்தியோசி மணி மணி said...
//////////////////////////////
நன்றி மணி...!

Unknown 8:31:00 PM  

@கோகுல் said...
/////////////////////////
நன்றி கோகுல்!

Unknown 8:37:00 PM  

@மேலூர் ராஜா ராஜா said...
///////////////////////////
இங்கே பத்திரிக்கைகளே இந்து வெறியர்கள், இந்து தீவிரவாதிகள் என்றுதான் சொல்றாங்க....இஸ்லாமியர்கள் செய்தால் குறிப்பிட்ட சமூகம் என்று குறிப்பிடுகின்றார்கள்.
நீங்க இணையத்திற்கு புதுசுன்னு நினைக்கிறேன்...
என் நடைமுறை வாழ்க்கையில் எனக்கு எந்த இஸ்லாமியர் மீதும் காழ்புணர்ச்சி கிடையாது.

இணையத்தில் சில மார்க்கபந்துகளும்,வஹாபிய தீவிரவாதிகளும் பலரை இந்துவாக மாற்றி விட்டார்கள் என்பதை உங்களுக்கு சொல்ல கடமைப் பட்டுள்ளேன்

Unknown 8:38:00 PM  

@கேரளாக்காரன் said...
இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.//

ஓப்பனிங் சாங்ல சிக்குனு கட்டிப்புடிப்பாங்களே அண்ணே. பத்தலியா உங்களுக்கு?

அடுத்த பார்ட்டுக்கு லீட் ஆக இருக்கலாம் கசக்கிப்பிழிவார் என நம்புவோமாக
////////////////////////////
வரும்.....ஆனா......வராராராராரது!

Unknown 8:40:00 PM  

@கேரளாக்காரன் said...
//எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது.//

ஆணழகன் படத்தில் ப்ரசாந்தும் வரலாறு படத்தில் அல்ட்டிமேட்ஸ்டாரும் நல்லா பன்ணிருப்பாங்க
//////////////////////////
சரிதான்....அவர்களை விட நளினம் கொஞ்சம் சிறப்பாக இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்

Unknown 8:41:00 PM  

@கேரளாக்காரன் said...
//தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது//

இத நீங்களுமா நம்புரீங்க?
/////////////////////
ஆளவந்தார் கொலை வழக்கு கேள்வி பட்டதில்லையா...?அது நான் பிறப்பதுற்கு முன்னாடி நடந்தது.

Unknown 8:42:00 PM  

@காட்டான் said...
தம்பி எனக்கு இன்னும் டீயே வரல்ல அதற்குள் நீங்க இரண்டு தடவை பிரியாணியே சாப்பிட்டுட்டீங்க..!
//////////////////////////
வீக் எண்டுல போயிருங்க.....!மாம்ஸ்!

Unknown 8:43:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆக... விமர்சனம் எழுதியாச்சு...

நன்றி.
///////////////
நன்னி...!நன்றி...!

Unknown 8:46:00 PM  

@முத்தரசு said...
மாப்ள
நான் மீண்டும் பாக்குறன் என்னால பல இடங்களில் சரியா புரிஞ்சிக்க முடியல காரணம் ரசிகர்கள்.

நா பார்த்துல கமல் மகா நடிகர் அற்புதம் மீண்டும் ெபாறுமயா பாக்கணும்
///////////////////////////
ஆமாம் மாம்ஸ் மறுபடியும் பார்க்கனும்.

Unknown 8:47:00 PM  

@Ram Kumar said...
உங்களுடைய ஃபினிசிங் டச் சூப்பர்ணே.. நல்ல விமர்சனம்.. :-)
///////////////////////
நன்றி ராம்குமார்.

Unknown 8:50:00 PM  

@Halidh Mohammed said...
///////////////////////
அமெரிக்க ஜால்ரா இல்லைன்னு சொல்லமுடியாது. சில காட்சிகள் அதை உறுதிபடுத்துகின்றது.

ஒரே கமெண்டை பல இடத்தில் போடாமல் எதிர்மறையான கருத்தாக இருந்தாலும் தெரிவிக்கலாமே நண்பரே!

Unknown 8:54:00 PM  

கலக்கீட்டீங்க......

Adirai khalid 10:52:00 PM  

ஒருபடம் சொல்லும் கருத்து ஒன்றுதான் அதை பலர் பல கோணங்களில் விமர்சனம் செய்வர் என் மனதில் பட்டதை அனைவருக்கும் பகிர்வதில் என்ன மாற்று கருத்து இருக்கப் போகின்றது

ஒரே நேரத்தில் பல எண்ணங்கள் அல்லது ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் எனக்கு தெரிந்த தமிழ் நாட்டு பிரியனிதன் பரிமாறமுடியும்., அதற்காக ஹைதரபாத், கேரளா அல்லது மட்டன் சிக்கன் காடை மீன் என்று பலவகையாக பரிமரமுடியதே சார்.

ananthu 12:42:00 AM  

நடுநிலையான விமர்சனம் . இங்கே இந்துக்களை பற்றி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் , ஏனெனில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்பதே நிதர்சனம் ...

James 3:17:00 AM  

///ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன். ///

வழி மொழிகிறேன்.

வருண் 6:32:00 AM  

****இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! ***

வாவ்!

ஆத்திக பண்டாரங்களுக்கும், நாத்திக வேடதாரிகளுக்கும் முகத்தில் அறைவது போல சொல்லியிருக்கீங்க!

கடவுளை உணரமுடியாதவன் எப்படி மதநம்பிக்கை உள்ளவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும்?

என்னால முடியாது!

இது பகுத்தறிவு வாதம்!

பகுத்தறிவு பேசும் கமலஹாசனுக்கு விளங்காதது இது!

மதுரை அழகு 8:17:00 AM  

வில்லன் பேசும் வசனங்களை இன்னும் ஷார்ப்பாக்கியிருக்கலாம். முக்குவது போல் உள்ளது!

படம் பார்க்கப் பாலக்காடு வரை போயிருக்கிங்க போல...!

sakthi 10:38:00 AM  

நண்பா, சுருக்க அலசல் நன்று !

Unknown 12:54:00 AM  

////வீடு சுரேஸ்குமார் said...
@மேலூர் ராஜா ராஜா said...
///////////////////////////
இங்கே பத்திரிக்கைகளே இந்து வெறியர்கள், இந்து தீவிரவாதிகள் என்றுதான் சொல்றாங்க....இஸ்லாமியர்கள் செய்தால் குறிப்பிட்ட சமூகம் என்று குறிப்பிடுகின்றார்கள்.
நீங்க இணையத்திற்கு புதுசுன்னு நினைக்கிறேன்...
என் நடைமுறை வாழ்க்கையில் எனக்கு எந்த இஸ்லாமியர் மீதும் காழ்புணர்ச்சி கிடையாது.

இணையத்தில் சில மார்க்கபந்துகளும்,வஹாபிய தீவிரவாதிகளும் பலரை இந்துவாக மாற்றி விட்டார்கள் என்பதை உங்களுக்கு சொல்ல கடமைப் பட்டுள்ளேன் ////

உண்மைதான் நண்பரே. சிலரது அடாவடிக்காக நமது சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதே எனது கருத்தும்.

///இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! ///

இது ஒன்றே உங்களைப் பற்றி மிகச் சரியாக சொல்லிவிடுகிறது, இதுபோலவே ஒவ்வொருத்தரும் சிந்தித்தால் சாதி, மத பிரச்சனை எதுவும் வராது. உங்களுக்கு ஒரு சல்யூட்.

Unknown 10:02:00 PM  

@சரவண பிரகாஷ் said...
/////////////////////
நன்றி தலைவரே...!

Unknown 10:04:00 PM  

@Halidh Mohammed said...
////////////////////
தினமும் பிரியாணி சாப்பிடமுடியுமா...?
ஒரு நாளைக்கு பருப்பு,சாம்பார்,இரசம்,புளிக்குழம்பு,மோர், பாயசம் சாப்பிட்டுப்பாருங்க பாய்!

Unknown 10:05:00 PM  

@ananthu said...
நடுநிலையான விமர்சனம் . இங்கே இந்துக்களை பற்றி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் , ஏனெனில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்பதே நிதர்சனம் ...
////////////////////////////////////////
எதாவது பேரிடர் வரும்போதாவது ஒற்றுமைய காட்டுறாங்களே அதுக்கு சந்தோசப்பட்டுக்கலாம்.

Unknown 10:06:00 PM  

@DiaryAtoZ.com said...
/////////////////////
நன்றி தல...!

Unknown 10:07:00 PM  

@வருண் said...
/////////////////////
நன்றி வருண்...!

Unknown 10:08:00 PM  

@மதுரை அழகு said...
/////////////////////
உண்மைதான்....ராகுல் போஸ் பேசுவது புரிவதில்லை நன்றி அழகு!

Unknown 10:08:00 PM  

@sakthi said...
/////////////////
நன்றி சக்தி!

Unknown 10:09:00 PM  

@மேலூர் ராஜா ராஜா said...
////////////////
புரிதலுக்கு நன்றி...!ஐயா!
ஆரோக்கியமான விவாதம் பல விசயங்களை கற்றுக்கொடுக்கும்!

kk 4:13:00 AM  

தரமான விமர்சனம்//ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.// ஹி ஹி சூப்பரு

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP