அடுத்(த)து திரை விமர்சனம்
>> Friday, April 20, 2012
நாளையமனிதன்,அதிசயமனிதன், போன்ற பல திகில்,திரில்லர் படங்களை எடுத்த தக்காளிசீனிவாசன் நீண்டநாட்களுக்குப் பிறகு இயக்கிய ஒரு வித்தியாசமான திரில்லர் திரைப்படம்தான் அடுத்(த)து. இந்த படத்தில் ஸ்ரீமன், இளவரசு, வையாபுரி, ஆர்த்தி, மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில்
சிவாஜிசந்தானம்அண்ணன் நடித்துள்ளார். அது போக நாலு பிகருக இருக்கு....
பத்துக்கு பத்து என்கிற ஒரு டிவி நிகழ்ச்சியில் ஆள்யாருமற்ற தீவில் இருக்கும் பயங்கர பங்களாவில் தங்க வேண்டும், பயப்படுபவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், அவர்கள் நடவடிக்கையை சேட்லைட் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது, போட்டியில் கலந்து கொண்டவர்களில் பத்து நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அங்கு சென்றதும் இரண்டு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள், திகிலடைந்து டிவி நிலையத்தை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள், அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுகிறது, பிறகு தான் தெரிகிறது அவர்களை அனுப்பியது டிவி நிகழ்ச்சி நடத்துபவர்கள் இல்லை இவர்களை கொலை செய்ய யாரோ திட்டமிட்டு சதி செய்து அனுப்பியுள்ளார்கள் என்று! இவர்களை கொலை செய்பவன் பத்து பேரில் ஒருவன் என்றும் தெரிகிறது, இதற்கெல்லாம் சூத்தரதாரியான வயதான நீதிபதியான நாசர் சட்டத்தின் முன் தவறு செய்து பண பலத்தால் தப்பித்தவர்களை, டிவி நிகழ்ச்சி என்கிற பெயரில் வரவழைத்து ரமணா பாணியில் ஒவ்வெரு நபர்களாக கொலை செய்கிறார்.
ஆரம்ப காட்சிகளில் ஒரு தெளிவில்லாத காட்சிகள், செதப்பலான நடிப்பு, என்று ஒரு நாடக தன்மையோடு படம் துவங்குகிறது, திகில் காட்சிகளுக்கு திரில்லர் படங்களுக்கு உரிய காட்சியமைப்பும் இசையும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய குறை, சுவாரஸ்யம் இல்லாமல் செல்லும் படம் இடைவேளைக்கு பிறகு டிவி நிகழ்ச்சியனாரால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் இவர்கள் இல்லை என்று தெரிய வரும்போது நிமிர்ந்து உக்கார வைக்கின்றது, நாசர் வந்தபிறகு ஒரு சில திருப்பங்களுடன் படம் வேகம் எடுக்கின்றது.
திகில் படமாகவும் சமூக கொடுமையினைக் களையும் ஒரு புரட்சி படமாகவும், நல்ல திரைக்கதையை வடிவமைத்தவர்கள், நடிகர், நடிகை தேர்வு செய்வது எடிட்டிங் பின்னணியிசை போன்றவற்றை சொதப்பலாக்கியது, படத்தினை சுவாரஸ்யமில்லாத தன்மையை உண்டாக்கிவிட்டது.
பசங்க பட அம்மா கேரக்டர் ஆண்ட்டி இதுல பியூட்டி |
கொட்டு
12வயது சிறுமி கற்பழிக்கப்படுவது போன்ற காட்சி உறுத்தலாக உள்ளது, அதை ஒரு பெண் ஆப்பிள் கடித்தபடி ரசிப்பது வக்கிரமாக உள்ளது.
ஷொட்டு
படத்தை இழுக்காமல் சிறிதாக எடுத்தது.
ரிசல்ட்
அடுத்தது திரில்லர் படத்துக்குறிய திகிலும் இல்லை...கிளுகிளுப்பும் இல்லை சும்மா போரடிச்சா பார்க்கலாம்.....
20 comments:
நாலு "பிகருங்க' இருக்கு - திரை விமர்சனம்.
நல்ல விமர்சனம்...தமிழிலும் இந்த கதையமைப்புகள் கொண்ட படங்கள் வர ஆரம்பிச்சிருச்சா..வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே பார்ப்பேன்.மிக்க நன்றி.
லோ பட்ஜெட் படங்களை வாழ வக்கிறதுல சிபிக்கு போட்டியா வருவீங்க போல இருக்கே?
கதையை பார்த்தா நல்லா தான் இருக்கு. படம் எடுக்கும் போது சொதப்பிட்டாங்களா?
குட் விமர்சனம்
பகிர்வுக்கு நன்றி சார்
த ம 2
ப்ளாக்கர் : பதிவின் பின்புலத்தில் மேகங்கள் மிதக்க
Mm...mmm....
Figuer-galai parkka
padam...pona..mathiri....
Theriuthu......??????
விமர்சனம் நல்லா இருக்குது நண்பரே..
விமர்சனமெல்லாம் சரி, படத்தோட பேரு அடுத்தா அடுத்ததா?
சே ... நல்ல கதையா இருக்கு. ஆனா நீங்க முதல்ல போட்ட போட்டோ மட்டும் பார்த்திருக்காட்டி படத்தப் பார்த்திருக்கலாம். கடைசி போட்டோ மட்டும் ரசிக்கலாம்.
இந்தப் படம் புளிக்கும் போல. வேணாம்.
அடப்பாவி...இது கிரைம் நாவல்களின் அரசி அகதா கிறிஸ்டி எழுதிய " And then they were none!" கதையாச்சே.. இப்பிடி எல்லாமா திருடுவார்கள்? கதையை எடுத்து கொஞ்சம் கவர்ச்சி, ஒரு கற்பழிப்பு சேர்த்தால் அது இன்ஸ்பிரேஷன் ஆகி விடுமா? இந்த கதை " Ten little niggers" என்ற பெயரிலும் நாவலாக வெளியாகியது.
விமர்சனம் அருமை
mmmmmmmmmm இந்தப் படம் எப்போது வந்தது கேள்விப் படவே இல்லையே டிவிடி கிடைக்குமா???? சுரேஸ் அண்ணா
Mr.முன்பனிக் காலம்! அகதா கிறிஸ்டியோட மாஸ்டர் த்ரில்லர் And Then There Were None நான் படிச்சிருக்கேன். அந்த ஸ்டோரி செம சூப்பரா இருக்கும். இந்த ஸ்டோரி சுரேஷ் ஸார் சொல்றப்பவே கேவலமா இருக்கு. 12 வயதுப் பெண் கற்பழிப்பு? யப்பா.. எனக்கு இந்தப் படம் வேண்டாம்ப்பா...
@நிரஞ்சனா
கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாமல் பயந்து பயந்து படித்த த்ரில்லர் நாவல். பத்து பேரை ஆள் இல்லாத தீவுக்கு பொய்க்காரணம் சொல்லி அழைத்து வருவது, அந்த பத்து பேரில் ஒருவன் தான் கொலைகாரன். அந்த கதையில் ( அதே வயதான ) கொலைகாரன் கொலை செய்வது யாராலுமே கண்டுபிடிக்காத கொலையாளியாக வேண்டும் என்ற த்ரில் இற்காக. அதற்கு குற்றவாளிகளை தண்டிப்பது என்ற இந்தியன், ரமணா ப்ளேவர் சேர்த்தால் இந்த கதை வரும். பிறகு, படத்தின் தலைப்பைக் கூடவா கொப்பி அடிப்பது? ('அடுத்து'- 'Then ')
@முன்பனிக்காலம்
@நிரஞ்சனா
பதிவு எழுத வந்த புதிதில் நந்தலாலா படத்தை ரொம்ம பாராட்டி எழுதிவிட்டேன்...அங்க வந்த இரண்டு நண்பர்கள் கமெண்ட்ல எந்த படத்தில இருந்து சுட்டது என்று விவாதித்தார்கள்...அதே மிஸ்கின் இந்த வார ஆனந்த விகடன்ல என்ன சொல்லியிருக்கார்ன்னு பாருங்க....பிளாக்கருக்கும் பயப்படுறாங்கய்யா மக்கா இயக்குனர்கள்...!விடுங்க பாவம் பொழைச்சு போகட்டும்....
வீடு சுரேஸ்குமார் said...
சித்தப்பு...! வெட்டிடுவேன் இருக்கிறதே ஒன்னுதான் வசனம் இங்க சென்சார் கட்..ஈரோட்டுல மட்டும் எப்படி.....?///இத்தப் பார்றா!!!!அதான் ஏழு பேரோட பாத்தேன்னு சொல்லுறாரில்ல????
ஹிட்ச்காக் பாணியில் எடுத்திருக்கக்கூடிய படம்,சொதப்பி விட்டார்கள் என்று சொல்கிறீர்கள்!ஓகே
Boss pasanga padam amma illa avanga.... Aadukalam padathula varra pettaikkaaran wife name meenaal
நல்ல விமர்சனம்...
//பசங்க பட அம்மா கேரக்டர் ஆண்ட்டி இதுல பியூட்டி...//
பதிவுல பிடித்ததே இந்த பொது அறிவுத்தகவலும், ஆண்டியோட அம்சமான படமும்தான்... :))
Post a Comment