Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

இது இந்தியா!

>> Sunday, April 8, 2012



ஒரு திருவிழாக் கூட்டத்தில்
குரங்கு பொம்மை வேண்டும் என்று 
அடம் பிடித்த குழந்தைக்கு 
பேரம் பேசி வாங்கிக் கொடுத்த 
ஏழைப் பெற்றோர்கள் 
விழா முடிந்து திரும்பிய போது
தூங்கிய குழந்தையின் கைகளில் இருந்து
தவறிவிழுந்த பொம்மையின் மீது 
பல வாகணங்கள் ஏறி நசுக்கிச் சென்றன...


குப்பையில் வீசியெறிந்த ஆரஞ்சுத் தோல்களைக்
கிளறி ஒட்டியிருக்கும் சில துண்டுகளைத்
தேடித் தின்றபடி சில சிறுவர்கள்...


நூறு ரூபாய் பணத்திக்காக பதினாறு
கிலோமீட்டர் சுமந்து வந்து
நகர தேனீர் கடைகளில் விறகு
விற்கும் மலைவாழ் மக்கள்...


நெரிசலான சாலையின் நடுவே இடைஞ்சலாய்
மேடைபோட்டு ஆளும்கட்சி 
அரசியல்வாதியொருவன்
குரைத்துக் கொண்டு இருந்தான்
இந்தியாவை ஒளிரச் செய்வோம் என்று.....

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP