"கோடிஸ்வரன் நிகழ்ச்சிக்குப் போன பூபாலு!?"

>> Tuesday, March 6, 2012


வணக்கம் மக்களே! இன்னிக்கு நான் கதை சொல்லப்போறேன் பூபாலு கதை, ரொம்ம நல்ல பைய அவன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவன் வாழ்க்கைய புரட்டி சப்பாத்தி, பூரி, ஆம்லெட், ஆப்பாயில், எல்லாம் போட்டிருச்சு.....கதையக் கேளுங்க.......

ங்க ஊர்ல பூபாலு..பூபாலுன்னு ஒர்த்தன் இருந்தான் (ஒரே ஆளுதான்)அவன் வடிகட்டிய முட்டாளைவிட... வடிகட்டிய நாயர் கடை டீ மாதிரி! அவன் படிச்சது பெரிய படிப்பு என்ன தெரியுமா...? ஒன்னாம் வகுப்புல ஒருவருசம், இரண்டாம் வகுப்புல இரண்டு வருசம், மூனாவதுல மூனு வருசம், நாலாவதுல நாலு வருசம்,அஞ்சாவதுல அஞ்சு வருசம் அஞ்சாம் வகுப்பு முடிக்கறதுக்குள்ள பையனுக்கு 19 வயசாயிடுச்சு...! பயலுக்கு அரும்பு மீசையே வந்திடுச்சு...! இதுக்கு மேல படிச்சா ஸ்கூலுக்கு அவமாணம்ன்ட்டு வாத்தியார்களெல்லாம் சேந்து கழுத்த பிடிச்சு தள்ளிய மாதிரி பாஸ் பண்ணிவுட்டுட்டாங்க....


பயபுள்ள ஆறாவது போச்சு...பெரிய பையன் அப்படிங்கிறதால பசங்களுக்கு அவன் மேல ஒரு பயம்! ஆனா அவன் இல்லாதப்ப கிண்டல் செய்து சிரிச்சுக்குவாங்க...! இதுல பயபுள்ளைக்கு லவ்வேற அதுவும் பத்தாவது படிக்குற அருக்காணி மேல லவ்! லவ் லட்டர் கொடுத்தார் நம்ம ஆளு எப்படி தெரியுமா? கவித...கவித...

அண்பு அறுக்கானி 
உம் மேல எணாக்கு கதல் 
உணாக்கும் கதல் இறுக்கா...
இறுந்தா செல்லு
காட்டிக்கூவோம்..
இப்பாடிக்கு
பூபாலு....

அந்த புள்ள அவிங்க அப்பன் கிட்ட கொடுத்திருச்சு! அவன் ஒரு வண்டிக்காரன் கையில சாட்டையோடதான் திரிவான். கோவக்காரன்வேற, நேரா தேரடியில விளையாடிட்டு இருந்த பயப்புள்ளை தலைமுடிய கொத்தா புடிச்சு காலுக்கிடையில் அமுக்கி புடிச்சு, சாட்டையில வெளுவெளுன்னு வெளுத்து புட்டான் வண்டிக்காரன். நம்ம பூபாலு முதுகு வரிக்குதிரை கணக்கா போச்சு. அது போக பூபாலு அப்பனும் நாலு வெச்சு படிப்ப நிறுத்திவிட்டு காட்டு வேலைக்கு அனுப்பிட்டாரு....அப்படியே ஊருக்குள்ள நூல் மில் வரவும் அங்க வேலைக்கு போக ஆரம்பிச்சு குழாய் டவுசரு, முழுக்கைச் சட்டை எனப் போட்டிட்டு பந்தாவா திரிஞ்சாலும் பயப்புள்ளைக்கு கணக்கு வராது...

கணக்கு புள்ளை மில்லுக்கு இன்னிக்கு எத்தனை பேர் வந்திருக்காங்க கணக்கு போட்டு சொல்லு எனக்கேட்டால் இவனை விட்டுட்டு எண்ணி கணக்கு சொல்லுவான்...அப்புறம் உன்னை சேர்த்தியாடா எனக் கேட்டால் திருதிருன்னு முழிப்பான். அந்த அளவு அறிவாளி! கொஞ்சம் கொஞ்சமா காசு சேரவும் பயப்புள்ள ஒரு செல்போன் வாங்குச்சு...அங்க வந்தது வினை!

கலைஞர் தாத்தா கொடுத்த தொலைக்காட்சியை வீட்டுல பார்த்திட்டு இருந்தான் பூபாலு! அதுல ஒரு சேனல்ல கோடிஸ்வரன் நிகழ்ச்சி விளம்பரத்தை பார்த்திட்டு இருந்த பூபாலு மனசுல நம்மளை எல்லாரும் முட்டாளுங்கறாங்க...இதுல கலந்துட்டா நம்ம தலைவர் "பூர்யாவை பார்த்த மாதிரியும் ஆச்சு!" நாம அறிவாளியின்னு நிருபிச்ச மாதிரியும் ஆச்சு...மாமன் புள்ள "கவிதாவை இத வெச்சே கண்ணாலம் கட்டிய மாதிரியும் ஆச்சு!" என அவனோட களிமன் செம்மண் கலந்த மூளை அதிசயமா(?!) வேலை செய்தது.

ஒரு மெசேஜ் அனுப்பிட்டான் எப்படியோ....எழுத்துப்பிழையோட..... அதுவும் போயிருச்சு....இவனை பெரிய அறிவாளி மாதிரி நெனைச்சு அவிங்களும் செலக்ட் பண்ணிட்டாங்க...அப்படியே அலேக்கா இவனை தூக்கிட்டு போயிட்டாங்க..இதை கேள்விபட்டு நாலு பேர் தூக்குமாட்டிக்கிட்டாங்க ஒரு வழியா எல்லாரையும் காப்பாத்திவிட்டாங்க.....உசிருக்கு சேதமில்ல...

இந்த நிகழ்ச்சி வெளிவந்தா இன்னும் எத்தனை உசிரு சாகுமோன்னு ஊரே பயந்து கிடந்தது.ஊரே தொலைக்காட்சி முன்னாடி உக்காந்திருந்தது கிரிகெட் மேட்ச்க்கு கூட இவ்வளவு டெம்ப் இருக்காது....



நிகழ்ச்சி ஆரம்பிச்சது நம்ம பூபாலு பையனும் சோக்கா கோட்டு சூட்டு போட்டிட்டு திருதிருன்னு முழிச்சிட்டு வந்து நடிகர் பூரியா முன்னாடி உக்கார்ந்தான்....இனி நிகழ்ச்சிய பார்க்கலாம்..

பூபாலு வாங்க பூபாலு எப்படி பீல் பண்றிங்க...?

கோட்டை துவைச்சிங்களா இல்லையா? உள்ள பூரான் ஊர்ற மாதிரி இருக்கு....

ஹஹஹஹ....நல்லா நகைச்சுவையா பேசிறீங்க....

யோவ்! என் நமைச்சல் உனக்கு நகைச்சுவையா....என்று கேட்டபடி கோட்டுக்குள் கையைவிட்டு சொரிந்தான் உள்ளே வைத்திருந்த மைக்கில் அரங்கம் முழுவதும் டர்ர்ர்ர்ர்....டர்ர்ர்ர்ர்....என்று டிடிஎஸ் சவுண்டில் அனைவரையும் பயமுறுத்தியது.

பூர்யாவே கொஞ்சம் பயந்துதான் போனார்...! மைக்க ஆப் செய்து சொரிந்து முடிக்கும் வரை காத்திருந்தார்

சரி..சரி சொரி சூடா இருக்கா.... அடச்சீ... சீட்டு சூடா இருக்கா என்று கேட்டு சமாளித்தார்...!

உங்க கேண்டின்ல போடுற பஜ்ஜியே சூடா இல்லை, சீட் மட்டும் சூடா இருக்குமா? எனக் கேட்ட நம்ம அறிவாளியை பரிதாபமாக பார்த்தார் பூர்யா!

சரி!சரி! கேள்விய ஆரம்பிக்கலாமா....?

ஓ....நான் ரெடி!

நமது நாட்டின் பெயர் என்ன?
a)இந்தியா b)பூந்தியா c) ராதிகாd) ஹன்சிகா எங்க பதிலை அமுக்குங்க...


இதெல்லாம் ஒரு கேள்வியா....என்ற நம்ம ஆள் a) அமுக்கினார்

சரியான பதில்....சரியான பதில் பத்தாயிரம் வென்று விட்டீர்கள்,

சரி...சரி...அடுத்த கேள்வி...

நீங்க வெறும் தாஸா லாடு லபக்குதாஸா? என்று திரைப்படத்தில் கேட்டது?
a)வடிவேல் b)விவேக் c) குமரிமுத்து d)மு.க.முத்து

b) என்று கேள்விமுடியும் முன்னே அமுக்கினான் பூபாலு

காண்பிடென்ட் பூர்யா கேட்டார்....!

ம்ம் என்று பூம்பூம் மாடுமாதிரி தலையாட்டினான் பூபாலு!

சரியான பதில்! சரியான பதில்! இருபதாயிரம் வென்றுவிட்டீர்கள் பூபால் இதை நீங்க எப்படி பீல் பண்றிங்க.....

நான் ஒரு வெங்காயமும் பீல் பண்ணலை அடுத்த கேள்வி!

மாடு விரும்பிக் குடிப்பது...
a)வெந்நீர் b)பன்னீர் c) கழுநீர் d)தேனீர்

இது கொஞ்சம் சிரமமான கேள்வி வேனுன்னா நல்லா படுத்துட்டு கூட யோசிங்க...

யோவ்! விட்டா தலைகீழா நின்னுட்டு யோசிங்கன்னு சொல்லுவ போல பிளடி ராஸ்கோல்! பதில் சொல்லுறன் கேளுங்க "C" கிளிக்

முப்பதாயிரம் போச்சா....! ஓகே அடுத்த கேள்வி!

சித்தப்பாவின் மனைவி உங்களுக்கு என்ன உறவு?
a)அத்தை b)அக்கா c) தங்கை d)சித்தி

யோசிச்சான் நம்ம ஆளு!

என்ன பதில் தெரியலையா? ஹெல்ப் லைன் ஒன்னு இருக்கு யாருக்காவது போன் போடலாம்....யாருக்கு போன் போடிறீங்க?

சார்! நடிகர் கிரத்குமாருக்கு போடனும்....

யோவ்! உனக்கு தெரிஞ்சவங்களுக்குதான் போன் போடனும்...

ஹலோ கிரத்குமார் எனக்கு புலன்விசாரனை படத்தில இருந்து தெரியும் யாருகிட்ட...

தொம்பி! அவருக்கு உன்னைத் தெரியுமா?

தெரியாது என்னைய அவருக்கு எப்படி தெரியும்...சரி சரி எங்க சித்தப்பனுக்கு போடு....

நெம்பரை வாங்கி டயல் செய்கிறார் ரிங் போகிறது!

ஹலோ...சித்தப்பா நான் பூபாலு பேசறன் உம் பொண்டாட்டி எனக்கு என்ன ஆவுது!

சரக்கடிச்சிட்டு இருந்த சித்தப்பு டென்சன் ஆகிறார்.... @$$#%$% சித்தியாகுதுடா நாறப்பயலே! என திட்ட போன் கட் ஆகிறது!

சித்தப்பா திட்டுறியா @#$% வந்து இருக்குது உனக்கு...!
 பதில் "D" என்று கிளிக்கினான்.

பூர்யாவின் காதில் இருந்து ரத்தம் வந்தது!
தம்பி பூபாலு ஜஜினியில வில்லன் அடிச்ச அடியில கூட இப்படி ரத்தம் வந்ததில்லைப்பான்னு தேம்பி தேம்பி அழுவறத பார்க்க பாவமா இருந்தது!

இப்படியாக கூத்து செய்தபடி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுகிறான் பூபாலு கடைசியாக கேட்ட கேள்விக்கும் பதில் சரியாக சொல்லி ஒரு கோடி பரிசு வாங்கிட்டான் பூபாலு இதை பார்த்திட்டு இருந்தவங்கள்ள இரண்டு பேர் ஸ்டுடியோவிலேயே மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க....ஊர்ல டிவியில இதைப்பார்த்திட்டு இருந்த ராமாயி கிழவி ஆ....ன்னு வாயப்பிளந்த மாதிரியே மண்டைய போட்டிருச்சு...



ஊருக்கு வந்தவனை மேளம் தாளத்தோட வரவேற்றாங்க மக்கள், ஊர்தலைவர் மாலை போட்டிட்டு எலேய் பூபாலு ரண்டும்...ரண்டும்...எவ்வளவுன்னா ஏழும்பே...நீ எப்படிடா இப்பூட்டு காச சம்பாரிச்சே! அந்த உண்மைய சொல்லனும்....என்றார் தெரியாத்தனமாக....

அதுவா தலைவரே! நான் எப்பமே ஒன் மார்க் கொஸ்டின்ல ஒன்னுக்கு ஒன்னு, ரண்டுக்கு ரண்டு, மூனுக்கு மூனு, நாளுக்கு நாளு,ஐஞ்சுக்கு ஒன்னு இப்படித்தான் பதில் எழுதுவேன்...அது தெரியாத இந்த டிவி பசங்க கேள்வி பதிலை இந்த மாதிரி ரெடி பண்ணிட்டாக...நான் கிளிக் செஞ்சது சரியா போச்சி!

காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை மாதிரி அப்படி்த்தானே....கர்ர்ர்ர்ர்த்தூ... எனதுப்பிவிட்டு போனவர்தான் அதுக்கப்பறம் தலைவரை பார்க்க முடியலை இந்த கையாலதான் அவனுக்கு மாலை போட்டேன் என்று கையை ரோடுரோலர் சக்கரத்தினுள் கையை விட்டு நசுக்கிக் கொண்டதாய் செய்தி!

இதெல்லாம் பெரிய பிரச்சனையில்லைங்க....ஒரு கோடி பணத்தை வாங்கி வந்த பூபாலு இன்னிக்கு வரைக்கு எண்ணிக்கிட்டே இருக்கானாம் ஒரு தடவை நூறு ரூபாய் சேர்த்தி வருதாம் ஒரு தடவை எண்ணினா நூறு ரூபாய் குறைவா வருதாம்...பாவம் காடு மேடுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த பயலை இப்படியாக்கிட்டாங்களே இது நியாயமா?

35 comments:

வெளங்காதவன்™ 4:05:00 AM  

மொதோ வெட்டு...

வெளங்காதவன்™ 4:06:00 AM  

"எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை காலு?" போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற கேள்விகள் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

Unknown 4:09:00 AM  

@வெளங்காதவன் said...
மொதோ வெட்டு...///

மேமேமேமேமேமேமேமேமேமேமே.....

Unknown 4:11:00 AM  

@வெளங்காதவன் said...
"எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை காலு?" போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற கேள்விகள் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்..///

எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்ன்னு எனக்கு தெரியாதுங்க...ஆறு கால்தானே..!

நாய் நக்ஸ் 4:16:00 AM  

அண்பு அறுக்கானி
உம் மேல எணாக்கு கதல்
உணாக்கும் கதல் இறுக்கா...
இறுந்தா செல்லு
காட்டிக்கூவோம்..
இப்பாடிக்கு
பூபாலு....////

இது அவர் ஸ்டைல்-ல ...????

நாய் நக்ஸ் 4:18:00 AM  

அந்த பூபாலு....
நீங்க தானே...

போதும்யா தூங்கினது....
எந்திரியா......

நாய் நக்ஸ் 4:19:00 AM  

அவள் வருவாளா...சீ..அவன் வருவானா...????

Unknown 4:19:00 AM  

இப்பதிவுக்கு உதவியாக (மைண்ட்வாய்ஸாக!) இருந்த மெட்ராஸ் பவன் சிவா தம்பிக்கு நன்றி ஹெஹெ!

Unknown 4:25:00 AM  

@NAAI-NAKKS said...
அண்பு அறுக்கானி
உம் மேல எணாக்கு கதல்
உணாக்கும் கதல் இறுக்கா...
இறுந்தா செல்லு
காட்டிக்கூவோம்..
இப்பாடிக்கு
பூபாலு....////

இது அவர் ஸ்டைல்-ல ...????////

ஏய்யா...இந்த கொலை வெறி!

Unknown 4:26:00 AM  

@விக்கியுலகம் said...
இப்பதிவுக்கு உதவியாக (மைண்ட்வாய்ஸாக!) இருந்த மெட்ராஸ் பவன் சிவா தம்பிக்கு நன்றி ஹெஹெ!///

எப்படி மாம் உண்மைய கண்டுபிடிச்சீங்க....

Unknown 4:28:00 AM  

Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...

@விக்கியுலகம் said...
இப்பதிவுக்கு உதவியாக (மைண்ட்வாய்ஸாக!) இருந்த மெட்ராஸ் பவன் சிவா தம்பிக்கு நன்றி ஹெஹெ!///

எப்படி மாம் உண்மைய கண்டுபிடிச்சீங்க....

>>>>

மாப்ள நாங்கல்லாம் அப்பவே அப்பிடி...அப்போ இப்போ ஹிஹி!

சம்பத்குமார் 5:43:00 AM  

இந்த பதிவை தொகுத்து வழங்கிய கோடி வீடூ சாரி மாடி வீடு ஓ அப்பா ஆர்ட் வீடு சுரேஷ்க்கு வாழ்த்துக்கள்..


///அண்பு அறுக்கானி
உம் மேல எணாக்கு கதல்
உணாக்கும் கதல் இறுக்கா...
இறுந்தா செல்லு
காட்டிக்கூவோம்..
இப்பாடிக்கு
பூபாலு....////

சூப்பர் கவிதைங்கோ

தமிழ்வாசி பிரகாஷ் 5:49:00 AM  

இப்படியாக கூத்து செய்தபடி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுகிறான் பூபாலு கடைசியாக கேட்ட கேள்விக்கும் பதில் சரியாக சொல்லி ஒரு கோடி பரிசு வாங்கிட்டான் பூபாலு இதை பார்த்திட்டு இருந்தவங்கள்ள இரண்டு பேர் ஸ்டுடியோவிலேயே மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க..///

இப்படி நடந்தா ரெண்டு பேரு இல்ல, நிறைய பேரு மயக்கம் போடுவாங்க.

rajamelaiyur 6:13:00 AM  

நடிகர் விஜய்யிடம் சூர்யா :
" நீங்கள் நடித்ததில் சிறந்த படம் எது ?"

விஜய் : option குடுங்க சார் ..

சூர்யா : மவனே அத்தான் எங்க டீமே தேடுது

rajamelaiyur 6:14:00 AM  

நல்ல நகைசுவை பதிவு ( template கமெண்ட் போடலன தூக்கம் வரமாட்டுது )

Unknown 6:31:00 AM  

@சம்பத்குமார் said...
இந்த பதிவை தொகுத்து வழங்கிய கோடி வீடூ சாரி மாடி வீடு ஓ அப்பா ஆர்ட் வீடு சுரேஷ்க்கு வாழ்த்துக்கள்..


///அண்பு அறுக்கானி
உம் மேல எணாக்கு கதல்
உணாக்கும் கதல் இறுக்கா...
இறுந்தா செல்லு
காட்டிக்கூவோம்..
இப்பாடிக்கு
பூபாலு....////

சூப்பர் கவிதைங்கோ////

ரொம்ம நன்றிங்கோ! யோவ்! ஓட்டு வீட்ட ஓட்டை வீடாக்கிருவ போல

Admin 6:36:00 AM  

நல்லா இருந்தது தோழர்..கற்பனை சிறப்பு.என்ன செய்வது பூபாலிடம் கேட்கும் கேள்விகளைத்தான் நிகழ்ச்சியில் கேட்கிறார்கள்.கோபமாகத்தான் இருக்கிறது.உங்கள் கோபத்தை பதிவின் மூலம் வெளிப்படுத்திவிட்டீர்கள்..சபாஷ்.

விடியலை நோக்கி.... 7:16:00 AM  

உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் ஏன்? சிலரின் பின்னால் போகிறீர்கள்.......இது பதிவுலக சாபக்கேடு!

பால கணேஷ் 7:27:00 AM  

ஹா... ஹா.... இந்த மாதிரி ‘அருமை’யான டிவி நிகழ்ச்சிகளை பகடி செய்து எழுத வேண்டுமென்று நான் நினைச்சதுண்டு. நீங்கள் நடத்திட்டீங்க.... அதுவும் சூப்பரா!

aalunga 8:18:00 AM  

எல்லா கேள்வியையும் இங்க போட்டிருந்தா நாங்களும் என்ன பதில் என்று தெரிஞ்சுக்குவோம்ல...

நல்லா இருந்தது.. நன்றி!!

Anonymous,  2:18:00 PM  

//ஒரு தடவை நூறு ரூபாய் சேர்த்தி வருதாம் ஒரு தடவை என்னினா நூறு ரூபாய் குறைவா வருதாம்.//

ஹா..ஹா..சூப்பர் அப்பு. அரசியல்வாதி கிட்ட தந்து எண்ண சொல்லுங்க. எட்டே நிமிஷத்ல எண்ணிடுவாங்க.

Thava 5:53:00 PM  

ஏதோ ஒரு மூடுல வந்த என்னை, இந்த பதிவு சிரிக்கவைத்துவிட்டது..அவ்வளவு திறமையாக ஒவ்வொரு எழுத்துக்கள்..அருமை..அருமை..நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

சேக்காளி 12:05:00 AM  
This comment has been removed by the author.
சேக்காளி 12:06:00 AM  

ஏம்ப்பா ஒரு கோடி ரூவாயையும் நூறு ரூவா தாளா வா குடுத்தாங்க?

Unknown 6:40:00 PM  

@தமிழ்வாசி

ஆமாங்க...மக்கா..!

Unknown 6:41:00 PM  

@"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல நகைசுவை பதிவு ( template கமெண்ட் போடலன தூக்கம் வரமாட்டுது )////

தாரளமா போட்டுக்கலாம்....

Unknown 6:43:00 PM  

@மதுமதி said...
நல்லா இருந்தது தோழர்..கற்பனை சிறப்பு.என்ன செய்வது பூபாலிடம் கேட்கும் கேள்விகளைத்தான் நிகழ்ச்சியில் கேட்கிறார்கள்.கோபமாகத்தான் இருக்கிறது.உங்கள் கோபத்தை பதிவின் மூலம் வெளிப்படுத்திவிட்டீர்கள்..சபாஷ்.////

வருகைக்கு நன்றி! உண்மைதான் முட்டாள்தனமான கேள்வி கேட்பதற்கு ஒரு நிகழ்ச்சி!

Unknown 6:44:00 PM  

கணேஷ் said...
ஹா... ஹா.... இந்த மாதிரி ‘அருமை’யான டிவி நிகழ்ச்சிகளை பகடி செய்து எழுத வேண்டுமென்று நான் நினைச்சதுண்டு. நீங்கள் நடத்திட்டீங்க.... அதுவும் சூப்பரா!///

மிக்க நன்றி கணேஸ் அவர்களுக்கு!

Unknown 6:45:00 PM  

@ஆளுங்க (AALUNGA) said...
எல்லா கேள்வியையும் இங்க போட்டிருந்தா நாங்களும் என்ன பதில் என்று தெரிஞ்சுக்குவோம்ல...

நல்லா இருந்தது.. நன்றி!////

படிக்க போரடிக்கும் என்று போடலை....!

Unknown 6:46:00 PM  

! சிவகுமார் ! said...
//ஒரு தடவை நூறு ரூபாய் சேர்த்தி வருதாம் ஒரு தடவை என்னினா நூறு ரூபாய் குறைவா வருதாம்.//

ஹா..ஹா..சூப்பர் அப்பு. அரசியல்வாதி கிட்ட தந்து எண்ண சொல்லுங்க. எட்டே நிமிஷத்ல எண்ணிடுவாங்க.//////

எண்ணிருவாங்க பணம் திரும்ப கிடைக்காதே...!

Unknown 6:47:00 PM  

@ Kumaran said...
ஏதோ ஒரு மூடுல வந்த என்னை, இந்த பதிவு சிரிக்கவைத்துவிட்டது..அவ்வளவு திறமையாக ஒவ்வொரு எழுத்துக்கள்..அருமை..அருமை..நன்றி.////

நன்றி குமரன்! நன்றி!

Unknown 6:48:00 PM  

சேக்காளி said...
ஏம்ப்பா ஒரு கோடி ரூவாயையும் நூறு ரூவா தாளா வா குடுத்தாங்க?/////

1000ரூபாயா கொடுத்தாங்க...!ஆனா நூறு ரூபாய் குறையுது...ஹிஹி

Unknown 6:49:00 PM  

@FOOD NELLAI said...
/விக்கியுலகம் said...
இப்பதிவுக்கு உதவியாக (மைண்ட்வாய்ஸாக!) இருந்த மெட்ராஸ் பவன் சிவா தம்பிக்கு நன்றி ஹெஹெ!//
பாவம் பச்சப்புள்ளைங்க அது!/////

பாருங்க ஆபிசர் நீங்க பெல்ட்ட எடுத்தாத்தா...ஆவும் போல....

Unknown 6:50:00 PM  

FOOD NELLAI said...
எதிர்பார்ட்டி கலாய்க்கறதுக்கு நல்லா ஐடியா கொடுத்திருக்கீங்க.////

வருகைக்கு நன்றிங்க ஆபிசர்!

சி.பி.செந்தில்குமார் 7:06:00 PM  

ஹா ஹா ஹா செம செம . நல்ல வேளை விஜய் தொகுக்கலை.. இன்னும் நக்கல் அடிச்சிருப்பீங்க..)

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP