தந்தையர் தேசம்!

>> Friday, March 9, 2012
உடல் நிலை சரியில்லாத பொழுதுகளில்..
என் மகனை தோளில் போட்டுக் கொண்டு
ஆறுதலாக நடக்கும் போது!
கண்ணீர் சொரிகின்றது
என் மகனின் மீதான
பாசத்தினால் மட்டுமல்ல...
என் தந்தையின்
நினைவுகளாலும்தான்...

53 comments:

Thava 3:45:00 AM  

அழகான தந்தையை பற்றிய கவிதை..சில வரிகள் எத்தனை ஆழம்..மிக்க நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Unknown 3:45:00 AM  

என்னை மழலை பருவத்தில் என் தந்தை
ஆறுதல் படுத்தியதை.... என் மகன் நினைவூட்டியதே
இந்த கவிதை!

Unknown 4:04:00 AM  

சகோ பிள்ளையாய் இருக்கும் போது புரியாத பல விடையங்கள், நமக்கென்ற பிள்ளை வந்த பின் தான் தெரியும்.. ஒரு அப்பா தன் அப்பாவை தன் பிள்ளையின் வடிவில் ரசிக்கின்ற பொழுதுகள் வலியோடான ஆனந்த நினைவுகள் சகோ... பல தடவை உங்கள் வீட்டுக்கு வந்தும், கமெண்ட் போட முடியவில்லை, கமெண்ட் பாக்ஸ் திறக்கும் சமையம் அதிக நேரம் எடுக்கிறது சகோ, இது என் கணினியின் குறையா என்று தெரிய வில்லை, அப்பறம் நீங்க கொடுத்த விருதுகள பாரட்டனும்ம்னு நினைச்சேன் சகோ இன்னைக்கு தான் முடிந்தது, குறிப்பிட்ட ஒரு பதிவை சுட்டிக்காட்டி நீங்க தட்டிக்கொத்ததை ரசித்தேன் சகோ...பெரும்பாலானோர் விருது கொடுத்துக்கொண்டது நட்பிற்கான, எழுத்திற்க்கான ஊக்க மருந்தாய் இருந்தாலும், இன்ன பதிவுகளுக்காய் என்று குறிப்பிட்டு சொல்லி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன், அதை நீங்கள் செய்துவிட்டீர்கள் சகோ... அதற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... காலம் தாழ்த்தி சொன்னமைக்கு மன்னிக்கவும்..........

Unknown 4:06:00 AM  

தட்டிக்கொடுத்ததை

நாய் நக்ஸ் 4:34:00 AM  

சரிப்பா....
பட்டு தெளிஞ்சிட்ட....
வாழ்த்துக்கள்....

கவிதை வீதி... // சௌந்தர் // 4:51:00 AM  

அற்புதம்....

சில பாடங்களை நமக்கு அனுபவங்கள்தான் தரும்...

rajamelaiyur 4:57:00 AM  

உண்மையான வரிகள் .. எதுவும் இருக்கும் பொது அதன் அருமை தெரியாது ..

rajamelaiyur 4:58:00 AM  

என் மகனை கொஞ்சும் போது நான் உணர்ந்ததை அப்படியே பிரதிபளித்துல்லிர்கள்

தமிழ்வாசி பிரகாஷ் 5:02:00 AM  

தந்தையின் பரிவு மகனாக இருக்கும் போதும் கிடைக்கும் என்பதை கவிதை சொல்கிறது.

Admin 5:32:00 AM  

நன்றாக இருக்கிறது தோழர்..தொடர்ந்து நற்கவிதைகளைத் தாருங்கள்..வாழ்த்துகள்.

Marc 5:38:00 AM  

முன்னும் பின்னும் மான நினைவலைகளை சொல்லும் கவிதை.அருமை வாழ்த்துகள்.

aalunga 8:01:00 AM  

அன்பு என்றால் அம்மா என்றே பல கவிதைகள் வரும். அதிலிருந்து மாறுபட்டு அப்பாவின் பாசத்தை உணர்த்திய கவிதை..

நன்றி!

அமர பாரதி 8:51:00 AM  

கவிதை ஓ.கே. ஆனால் செரிப்பதற்கு கண்ணீர் என்ன சாப்பாடா?

உணவு உலகம் 9:29:00 AM  

ஆழமான அர்த்தமுள்ள வரிகள்.

Unknown 6:05:00 PM  

@Kumaran

மிக்க நன்றி குமரன்!

Unknown 6:08:00 PM  

@ரேவா

காலம் தாழ்த்திதான் நானும் பல பதிவுகளுக்கு செல்ல முடிகிறது....இதற்கு எதற்கு மன்னிப்பு! கருத்துரைக்கு நன்றி சகோ!

Unknown 6:08:00 PM  

@NAAI-NAKKS மிக்க நன்றிங்கோ!

Unknown 6:09:00 PM  

@கவிதை வீதி... // சௌந்தர் // உண்மைதான் அனுபவமே சில பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.

Unknown 6:10:00 PM  

@"என் ராஜபாட்டை"- ராஜா ஆம் பலர் இப்படி வருந்துகிறார்கள்......

Unknown 6:11:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

Unknown 6:11:00 PM  

@மதுமதி
கண்டிப்பாக தருகிறேன்.....

Unknown 6:12:00 PM  

@DhanaSekaran .S வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Unknown 6:13:00 PM  

@ஆளுங்க (AALUNGA) பல உறவுகள் அன்புக்கு அடையாளமாக இருக்கிறது....!

Unknown 6:14:00 PM  

@அமர பாரதி

ஆஹா! கவனிக்காம விட்டுவிட்டேன்....சரி செய்து விட்டேன் நீங்க அடிக்கடி என் தளத்திக்கு வாங்க சார்! மிக்க நன்றி தோழர்!

Unknown 6:15:00 PM  

@FOOD NELLAI கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் ஆபிசர்!

மதுரை அழகு 8:36:00 PM  

தந்தைக்கு மரியாதை!

SURYAJEEVA 8:57:00 PM  

பெரும்பாலும் தந்தையை போற்றி எழுதும் கதைகளை பெண்கள் தான் செய்து உள்ளார்கள், முன்பு ஒரு முறை ரெவெரி எழுதி இருந்தார், இன்று உங்கள் படைப்பிலும் காண்கிறேன்...

மகேந்திரன் 1:47:00 AM  

ஒரு ஆண்மகன் தன்
ஒவ்வொரு நிலையிலும் தன் தந்தையை
உணர்வான்..
என்று நிரூபிக்கும்
இன்னுமொரு அழகிய படைப்பு..

அனுஷ்யா 2:42:00 AM  

ரொம்ப யதார்த்தமான கவிதை..
எளிமையின் அழகுதான் ரொம்ப ஆழமானதுன்னு புரிய வைக்கிற இன்னொரு படைப்பு இது..

அனுஷ்யா 2:44:00 AM  

தோழர் சூர்யஜீவாவின் கருத்துடன் ஒத்து போகிறேன்..
அதனாலோ என்னவோ பெண் குழந்தை கனவு இப்போதெல்லாம்..(வீட்ல பொண்ணுதான் பாக்க ஆரம்பிக்க மாட்றாங்க...:( )

முத்தரசு 7:15:00 PM  

மனசாட்சி பேசுதோ...

உண்மை அழகான கவிதை வாழ்த்துக்கள் சுரேஷ்

Unknown 10:23:00 PM  

@மதுரை அழகு கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!

Unknown 10:28:00 PM  

@suryajeeva சில/பல குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது.....நம் குழந்தையை நாம் பராமரிக்கும் போது நமது தந்தையும் இப்படித்தானே நம்மை வளர்த்திருப்பார்கள் என்று சிந்திப்போம் அல்லவா...! கருத்துக்கு மிக்க நன்றி!

Unknown 10:29:00 PM  

@மகேந்திரன்
சத்தியமான வாரத்தைகள் நன்றி சார்!

Unknown 10:30:00 PM  

@மயிலன்
வாங்க மயிலன் கருத்துகளின் வழியே! வருவது மகிழ்ச்சியளிக்கிறது..மிக்க நன்றி!

Unknown 10:32:00 PM  

@மயிலன் கவலைப்படாதிங்க அடுத்த தடவை போன் செய்யும் போது உங்க பெற்றோரிடம் கொடுங்க...மருத்துவருக்கு....ஒரு பெண் வைத்தியர் வேண்டுமாம் என்று சொல்லிருவோம்....

Unknown 10:33:00 PM  

@thirumathi bs sridhar வருகைக்கு மிக்க நன்றி!

Unknown 10:33:00 PM  

@சென்னை பித்தன் மிக்க நன்றி ஐய்யா!

Unknown 10:34:00 PM  

@மனசாட்சி இப்போது அதிகமா மனசாட்சி(நீங்க இல்லை) பேசுது...... என்னங்க பண்ணுவது?

இராஜராஜேஸ்வரி 9:34:00 PM  

என் தந்தையின்
நினைவுகளாலும்தான்

தந்தையும் தனயனும்
நெகிழ வைக்கிறார்கள்..

காட்டான் 2:04:00 AM  

வணக்கம் சுரேஷ்!
நியத்தை கவிதையாய் வடித்துள்ளீர்கள். எனக்கும் பிள்ளைகள் இருக்கும்போதுதான் அப்பாவின் வலி தெரிந்தது.!!

வாழ்த்துக்கள்..

ராஜி 3:07:00 AM  

அம்மாவின் பாசம் வெளியில் தெரிந்துவிடும். அப்பாவின் பாசம் கல்லுக்குள் ஈரம் போல வெளியில் தெரிவது கடினம். நல்லதொரு கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

Anonymous,  11:07:00 AM  

யதார்த்த கவிதை...Closer to my heart...வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் 10:21:00 PM  

இறந்து போன அப்பாவை ஞாபகப்படுத்திட்டது உங்க கவிதை

CS. Mohan Kumar 11:42:00 PM  

Small but good poem.

vimalanperali 10:29:00 AM  

நல்ல உயிரோட்டமான கவிதை. வாழ்த்துக்கள்.

பாலா 11:09:00 PM  

அய்யோ அம்மா ஆள விடுங்கப்பா...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP