புத்தக கண்காட்சி(திருப்பூர்)

>> Thursday, January 26, 2012




ணக்கம் நண்பர்களே, நேற்றைக்கு புத்தககண்காட்சி திருப்பூரில் நடைபெற்றது, கடுமையான பனிப் பொழிவு (மார்கழி மாதம் போல் இருக்கிறது) காரணமாக கொஞ்சம் உடல்நிலை வேறு சரியில்லை, இருந்தாலும்! என்னால் போகாமல் இருக்க முடியவில்லை.விழா ஆரம்பித்த பின்தான் சென்றேன், கார்கள் வெளியே நிறுத்தியிருந்தார்கள், கார்கள் வீதியை அடைத்துக் கொண்டு நின்றது, பெரிய தலைகளின் கார்கள் ஒற்றை சிகப்பு கொம்புடன் நின்று கொண்டு இருந்தது, (நீ பெரிய கொம்பனா இதனால்தான் கேட்கிறார்களோ?) மேடையில் ஒரு பேச்சாளர் மைக்கை கடித்து குதறிக்கொண்டு இருந்தார், அவர் பேசியது எனக்கு தொண்டை வலித்தது, என்னால் அங்க உக்கார முடியலை மொக்கை என்றால் இதுதான்! புத்தகத்தைப் படிப்பது, புத்தகத்தை படிப்பது, என்று ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பார்,கொஞ்சம் சுவையாக பேசுறவங்க கிடைக்கலைங்களா?

எழுந்து புத்தகம் இருக்கும் அரங்கினில் நுளைந்தேன்,ஒரளவுக்கு பதிப்பகங்கள் இருந்தாலும், போன முறைக்கு முந்திய காலங்களில், டவுன்ஹாலில் இருந்ததை விட குறைவுதான். திருப்பூரின் பொருளாதார நிலைமையா, இல்லை! வாசிப்பவர்கள் குறைந்து விட்டார்களா தெரியவில்லை.சும்மா ஒரு சுற்று சென்றதில், புகைப்பட கண்காட்சி சிறப்பு, பிரமிக்க வைத்த படங்கள், மேடை பேச்சு கொலையில் இருந்ததுக்கு இங்கே முன்பே வந்திருக்கலாம், அந்த புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

ஓரிரு இலக்கிய எழுத்தாளர்கள் உலாவிக்கொண்டு இருந்தார்கள்,விகடனில் தொடராக வந்த கதாவிலாசம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்,விகடன் பிரசுரம் ஸ்டாலை கண்டுபிடிக்கும் முன், ஓரிரு ஸ்டால்கள் ஏதோ பேன்சி ஸ்டோர்க்குள் நுழைந்த மாதிரி உள்ளது, பல வகையாக பயன்படுத்தும் ஒரு மேஜை விற்றுக்கொண்டு இருந்தார்கள், அதில் படுத்துக்கொள்ளலாம், எழுதலாம், கால்களுக்கு தலையனை போல் வைத்து கொள்ளலாம்,இந்த புத்தகத்தை படிக்க இந்த மேஜை தேவையா? இருந்தாலும் ஆர்வகுடுக்கை அய்யாசாமியாச்சே! நாம என்ன விலை என்று கேட்டேன், கோத்ரேஜ் டுபுள்காட் விலை சொன்னாங்க...யப்பா...! நாங்க ஏழையப்பா,மீ எஸ்கேப். ஒரு இரும்பு வலையினை பிரிக்க சொன்னார்கள், மூளைக்கு வேலை என்றார்கள், நம்முடன் வந்த மலையாள(பதிவர்), கன நேரத்தில் பிரித்து கடைக்காரனை பல்பாக்கினார், மலையாள புத்தகம் ஒன்று கூட இல்லை, அதனால் அவரும் பல்பு ஆனார், வந்ததுக்கு என்று போட்டா சாப் பற்றிய (தமிழ்ல)சிடி வாங்கினார், சென்னை மாதிரி நம்ம ஆளுக கோஷம் போடுவாங்க என்று, போடலைன்னு நினைக்கிறேன் என்றேன், விடுய்யா கோவை ஹிக்கிம் பாதம்ஸ்ல வாங்கிக்கிறேன் என்றார்.

விகடன் பிரசுரத்தின் கடையில் தேடியதில் கிடைத்தது, அழகாக பைன்ட் செய்து கயிறு எல்லாம் வைத்து நீண்ட நாள் வைத்து படிக்கும் வகையில் இருந்தது,எஸ்.ராமகிருஷ்ணன் அனைத்து சிறுகதை பிதாமகர்களை அலசியிருந்தார் பாரதியார் உடபட அதில் அவர் கூறிய சில சம்பவங்கள் வியப்பாக இருந்தது காசியில் பாரதியார் வீட்டை தேடியது அதை இடித்து விட்டு வேறு கட்டிடம் கட்டிவிட்டார்களாம், ஏன் அந்த வீட்டை ஞாபகமாக அரசுடமையாக்கவில்லை என்கிற கேள்வி என் மனதில் எழுகிறது அதற்கான விடை தெரியவில்லை! 

"அவர் உயிருடன் இருந்த போது அக்ரஹாரத்தை விட்டு தள்ளி வைத்துள்ளார்கள்,ஆனாலும் அவர் மக்களை கிண்டல் நையாண்டி செய்துள்ளார் ஒரு முறை தண்டோரா போடுற ஒருத்தனை வரச் சொல்லி,சாகமால் இருப்பது எப்படினு தான் பேசப் போறதா,தெருத்தெருவா தமுக்குஅடிக்கச் சொன்னாரு. சாயங்காலம் தெருவே கூடி வழியுது. பாரதியார் வீட்டுத் திண்ணையில் ஏறி நின்னுக்கிட்டு,‘சாகாம இருக்கிறதுக்கு வழி தெரியணுமா? அதுக்கு முதல்ல நீங்க உயிரோட இருக்கணும். அடுத்தவங்களுக்கு எந்த உதவியும் செய்யாமலும், எப்பப் பார்த்தாலும் வீண் வம்பு பேசிட்டும் இருக்கிற நீங்க எல்லாம் ஏற்கனவே பிரேதம்தான்! என்று சொல்லி சிரிச்சார் எல்லாருக்கும் கோவம் பொத்துகிட்டு வந்திருச்சு.அவரை பைத்தியம்,பைத்தியம்னு சொல்லிகிட்டே போனாங்க." இந்த சம்மவம் எனக்கு நினைவு படுத்துவது, நாம் பதிவுலகில் அடிக்கடி பல்பு கொடுக்கிறோமே, இதிலேயே தெரிகிறது அந்த அக்ரஹார பகுத்தறிவு கவிஞனின் பேரப் பிள்ளைகள் நாம் என்று.

அவர் யானைகளை மிகவும் நேசித்துள்ளார், தும்பிக்கையை பல்லால் கடித்து விளையாடுவாராம்,யானை பாகன் பலமுறை கண்டித்தும் அவர் விளையாட்டாக செய்ய வினையாகி விட்டது என்றே நினைக்கிறேன். என பல விசயங்கள் பாரதியாரைப்பற்றி இந்த புத்தகத்தில் கூறியுள்ளார் எழுத்தாளர்.

ஜெயகாந்தனின் மௌனம் ஒரு பாஷை கதையின் களம் வயதான தன் தாய் கர்ப்பமாகிறாள்,அதை குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது இந்த சம்பவத்தில் பெண்தான் அதிகம் கேலிக்கு உள்ளாகிறாள், இந்த கதையின் களத்தை இவர் விளக்குவது கதையை அனுபவித்து படித்திருப்பார் போல், "ஜெயகாந்தனின் எழுத்துகள் அடிநிலை மக்களின் வாழ்க்கைபாடுகள் குறித்தும்,பெண்களின் மீது சுமத்தப்படும் கலாசார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தன் எழுத்தின் வழியே தீவிர எதிர்வினைகள் தந்தவர்" உண்மையான வாசகங்கள் இவை. 
1. மௌனி,
2. ஆ.மாதவன்
3.மு.சுயம்புலிங்கம்
4.தி.ஜானகிராமன்
5.ஆதவன்
6.அசோகமித்திரன்
7.ந.முத்துசாமி
8.திலீப்குமார்
9.கோபிகிருஷ்ணன்
10.பூமணி
11.பி.எஸ்.ராமையா
12.வண்ணதாசன்
13.எம்.வி.வெங்கட்ராம்
14.கி.ராஜநாராயணன்
15.பா.செயப்பிரகாசம்
16.கு.அழகிரிசாமி
17.புதுமைபித்தன்
18.வண்ணநிலவன்
19.நகுலன்
20.ஜி.நாகராஜன்
21.பாவண்ணன்
22.மா.அரங்கநாதன்
23.ச.தமிழ்செல்வன்
24.நாஞ்சில்நாடன்
25.இந்திராபார்த்தசாரதி
26.கந்தர்வன்
27.லா.ச.ராமாமிர்தம்
28.கு.ப.ரா.
29.சா.கந்தசாமி
30.எஸ்.சம்பத்
31.சுஜாதா
32.கிருஷ்ணன் நம்பி
33.கரிச்சான் குஞ்சு
34.கோணங்கி
35.தமயந்தி
36.பிரபஞ்சன்
37.பிரபஞ்சன்
38.நீல.பத்மநாபன்
39.தஞ்சை பிரகாஷ்
40.அம்பை
41.ந.பிச்சமுர்த்தி
42.சுந்தரராமசாமி
43.அ.முத்துலிங்கம்
44.ஜெயமோகன்
45.சூடாமணி
46.வேல.ராமமூர்த்தி
47.ராஜேந்திரசோழன்
48.கௌரிசங்கர்
49.ஜெயகாந்தன்
50.பாரதியார்
நாற்பத்தி ஒன்பது, இலக்கிய எழுத்தாளர்களுடன், பாரதியார் அவர்களையும் இணைத்து, வெகு நுட்பமான விமர்சனம் மாதிரி இல்லாமல் ஒரு வாசகனைப்போல் விளக்கியுள்ளார், சில கதைகள் நான் படித்தவைகளாக இருக்கின்றது. படிக்காதவைகளை தேடி வாங்க வேண்டும், தேடல் என்பதுதானே வாழ்க்கை, ரசனைககான தேடல் என்பது நமது மூளையை துருப்பிடிக்காமல் வைக்கும், நாளைக்கான தேடல் இன்னும் நான் முடிவு செய்யவில்லை,பூக்களை வண்ணத்து பூச்சிகள் தேர்ந்தெடுத்து தேடுவதில்லையே.

16 comments:

நிரூபன் 9:03:00 AM  

வணக்கம் மச்சி.
சொல்லியிருந்தா நானும் கொஞ்ச புக் விபரமும், பணமும் அனுப்பியிருப்பேனே..
யாருக்கும் சொல்லாம நைஸா போயி கண்காட்சியை பார்த்திட்டு தலைவரு வந்திருக்காரு.
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் 9:13:00 AM  

புத்தகத்தோடு மேசையையும் வித்திடலாம் என்று களமிறங்கியிருக்காங்களோ!

நிரூபன் 9:26:00 AM  

புக்கு எல்லாம் ஆறுதலா உடல் நிலை சீரனதும் வாங்கிக்கலாம்.

மொதல்ல பனிக்குள் நனையாம உடம்பை பார்த்துக்குங்க

நிரூபன் 9:38:00 AM  

பிரேதம் பற்றிய செய்தியும், அதனைச் சம கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டிருப்பதும் அருமை.

நிரூபன் 9:53:00 AM  

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என நல்லதோர் அனுபவ பகிர்வினை கொடுத்திருக்கிறீங்க.

அனுஷ்யா 12:23:00 PM  

தஞ்சாவூரிலும் இன்று முதல் கண்காட்சின்னு போஸ்டர் பாத்தேன்...போகணும்..
வாங்க வேண்டிய லிஸ்ட் பெருசுன்னாலும் நமக்கு ஆசிரியர்கள் வட்டம் ரொம்ப சிறியது...

அனுஷ்யா 12:25:00 PM  

பாரதியார் பற்றிய குறிப்புகள் கொஞ்சமாய் சொன்னாலும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கீங்க..
கெடச்சா விகடன் கடையில நானும் வாங்கி படிக்குறேன்..

பால கணேஷ் 4:08:00 PM  

பூக்களை வண்ணத்துப் பூச்சிகள் தேர்ந்தெடுத்து தேடுவதில்லையே - வரிகள்லயே அசத்திட்டய்யா! அடுத்த வேட்டையிலயும் இந்த வண்ணத்துப் பூச்சிக்கு நல்ல தேன் கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன்!

சி.பி.செந்தில்குமார் 11:38:00 PM  

நல்ல இலக்கியங்கள் வாசிப்பது என்றுமே அலுப்பதில்லை. இலக்கிய தாகமும் தீர்வதேயில்லை....

தமிழ்வாசி பிரகாஷ் 7:28:00 AM  

சந்தையை சுத்தாமல் புத்தகம் வாங்கிடிங்க....

விச்சு 7:01:00 PM  

கதாவிலாசம் பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம்.

Anonymous,  10:31:00 PM  

பணம், தெர்மக்கோல் தேவதைகள் வாங்க வேண்டாம். என்னிடம் உள்ளது. கூரியர் செய்கிறேன்.

MaduraiGovindaraj 8:40:00 AM  

உடல் நலனை பார்க்கவும் ,சிலர் மைக் மோகன் இருக்கிறார்கள் ,
இலக்கிய தேடல் தொடரட்டும் நன்றி

மனோ சாமிநாதன் 2:08:00 AM  

அன்புள்ள சகோதரர் சுரேஷ்குமார்!!

இன்று என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் அன்பார்ந்த நன்றிகள்!!

Anonymous,  7:20:00 AM  

நமக்கு இந்த புத்தக கண்காட்சி பார்க்க கொடுப்பினை இல்லை...படித்து அறிவை வளர்த்தோமோ இல்லையோ...புது புத்தக வாசனைக்கு நிகர் வேறேது...

BTW,என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததுக்கு நன்றி நண்பரே...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP