யாரும் அறியாத சுற்றுலா தளங்கள்

>> Monday, January 23, 2012நான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்

குண்டேரிப்பள்ளம் ஏரி


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்லிருந்து கொங்கர்பாளையம் செல்லும் பேருந்து ஒரு பேருந்து மட்டும் செல்கின்றது அதனால் கார் அல்லது பைக் மூலம் செல்வது சிறந்தது குண்டேரிப்பள்ளம் ஏரி இங்கு கிடைக்கும் மீன் மிகவும் சுவையுள்ளது மருத்துவகுணம் கொண்டது மாலை நேரத்தில் யானைகள் தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்


(இந்த இடத்தில்தான் நேர்மையான அதிகாரியான சிதம்பரம் ரேஞ்சரை வீரப்பன் இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்றது அவர் இறந்த போது அவரது குழந்தை இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தது) தெங்குமராட்டா


சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாரு தண்ணீர் கல்கண்டு சுவையுடையது குளிப்பது நலம் ஆனால் எச்சரிக்கை தேவை நண்ணீர் முதலைகள் இருப்பதாக தகவல் சுழல் அபாயமும் உண்டு எந்த போக்குவரத்து வசதியும் கிடையாது ஜீப் வகை வாகணத்தில் மட்டும் மட்டும் செல்ல முடியும் அட்வென்ஜர் பயணம் காட்டெருமை யானை அழகிய மான்களை காணலாம் செல்வதற்க்கு ஒருநாள் முன் சத்தியமங்கலம் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்

புளியங்கோம்பை

சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த வனத்தினில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது குளிக்கலாம் ஆனால் இரண்டு கிலோ மீட்டர் அடர்ந்த வனத்தில் நடக்க வேண்டும்

பரப்பலாறு டேம்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் சென்று அங்கிருந்து பரப்பலாறு டேம் உள்ளது அமைதியான இடம் பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் நமக்காக விட்டு சென்ற கொடை இந்த அனை முதலில் பிரச்சனை ஏதும் இல்லை இப்போது யானைகள் அதிகம் நடமாடுகிறது எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை : இந்த இடங்கள் அனைத்தும் இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும், குழந்தைகள் வயதானோர் செல்ல கடினம் காடுகளை நேசிப்பவர்கள் செல்லலாம் கண்டிப்பாக முறையான அனுமதி வேண்டும்,பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவேண்டாம்,


♥இது ஒரு மீள் பதிவு♥

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் 8:29:00 AM  

ஒரு டூர் அரேஞ்ச் பண்ணுங்க....

நாய் நக்ஸ் 9:13:00 AM  

OK...THANKS...
APPADIYE..ENGALAIUM KUUTTITTU PONAA
NALLAA IRUKKUM-LA...

IPPADIKKU..
KAIL KASU ILLAMAL
O.C-KU ALIVOR SANGAM...

Marc 8:25:00 PM  

அருமையான பதிவு.நானும் ஒரு டிரிப் போகலாம்னு நினைக்குறேன்

நிரூபன் 9:02:00 PM  
This comment has been removed by the author.
நிரூபன் 1:42:00 AM  

வணக்கம் நண்பா,
அருமையான இயற்கை காட்சிகள் நிரம்பிய இடங்களின் போட்டோக்களையும், விளக்கத்தையும், கொடுத்து தமிழகம் வரும் போது மறக்காம தரிசிக்க சொல்லியிருக்கிறீங்க.

சத்தியமங்கலம் காட்டுப் பகுதி நம்ம ஊரில வீரப்பன் கதை மூலமா ரொம்ப பேமசுங்க.

கண்டிப்பாக அங்கிருக்கும் இயற்கை காட்சிகள்,. யானைகளின் அணிவகுப்பினை பார்க்க மனம் துடிக்குது.

நன்றி நண்பா.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி 4:05:00 AM  

அருமையான சுற்றுலாத்தலத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றிகள்.

MaduraiGovindaraj 6:05:00 PM  

பார்க்காத இடத்தை பதிவு செய்ததற்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் 6:01:00 PM  

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP