Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

குழந்தை தொழிலாளி

>> Thursday, November 10, 2011


[சில குழந்தை தொழிலாளிகளை தொண்டுநிறுவனம் மீட்கசென்றபோது சில
சிறுவர்களின் நிலைமை கொடுமையானது அவர்களின் வருமானத்தில்தான்
குடும்பமே மூன்று வேளை உண்கிறார்கள் தந்தையிழந்த நோய்வாய்ப்பட்ட
தாயிக்கு பதிலாக பணிக்கு வந்த குழந்தைகள் என மனதை உருக்குவதாய்
இருந்தது]


thank you google



சிறுவர் தொழிலாளியை
ஒழிப்போம் என்பதைவிட
அவர்களுக்கு பனிநேரம்
முடிந்தபின் பாடம் கற்பிப்போம்
ஆசிரியரை அந்த முதலாளியை
அமர்த்தச்செய்வோம்

அவனுக்கு புதிய தொழில்
முறைகளை புரிய வைப்போம்
கருத்திற்கு "காரல்மார்க்ஸையும்"
அகிம்சைக்கு "காந்தியடிகளையும்"
வீரத்திற்கு "பகத்சிங்கயும்"
புரியவைப்போம்
புன்னகைக்கும் கள்ளமில்லா
சிரிப்பில் "ஜாதியில்லா"
கல்வி கற்க வைப்போம்

புத்தன்,ஏசுவும்,முகமதுநபியும்
அன்பையே போதித்தார்கள்
மதவேற்றுமை வேண்டாமென
பிஞ்சு நெஞ்சில் பதியவைப்போம்
அவன் சமூகத்தில் மனிதனாய்
போற்றப்படவேண்டும்
சமூகவிரோதியாய்
தூற்றப்படக்கூடாது
இவர்கள் நம் நாட்டின்
வருங்காலத்தூன்கள்
அவை மன்னால் அல்ல
எஃகால் அமைக்கப்படவேண்டும்...

[இன்று குழந்தை தொழிலார்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது
நான் சொல்வது திருப்பூரில்,இந்த கவிதை முதலாளிகளுக்கு ஆதரவாக 
இருப்பதாக தோழர்கள் கூறினார்கள்]

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP