Showing posts with label கவலை. Show all posts
Showing posts with label கவலை. Show all posts

நூலகமும் என் நினைவுகளும்...

>> Saturday, November 19, 2011


"நூலகம் இல்லாத ஊரில் இருப்பது நரகத்தில் இருப்பது போன்றதாகும்”
ஏதோ அறிஞர் கூறியது நான் நூலகமே இல்லாத ஊரில்தான் பிறந்தேன், ஆனால்! படிப்பு ஆர்வம் எப்படி எனக்கு வந்தது, சிந்தித்து பார்க்கையில்
வியப்பாகத்தான் உள்ளது, 


நான் வாழ்ந்த சூழ்நிலை, படிப்பாளிகள் நிறைந்த சூழ்நிலை, நிலச்சுவானான என் தாத்தாவின் நண்பர் முதுகலை வரலாறு படித்தவர் அட வரலாறுதானே..! என எள்ளிநகையாடாதிர்கள் அவர் படித்தது "பிரிட்டீஸ்" அரசாண்டகாலத்தில், இப்போதைய ஈரோடு மாவட்டம், அப்போதைய கோவை ஜில்லா, ஆட்சியாளர்களால் பவானியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள், அங்கு ஊராட்சிகோட்டையிலுள்ள ஒரு கோட்டையில் வரிவசூல்  செய்யப்பட்டது, பவானி நகரத்தின் அதிகாரியாக இவரை நியமனம் செய்தது வெள்ளைஅரசு, அவரது தந்தையான பெரியகவுண்டருக்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பண்ணையம், நூறு ஆட்களுக்கு மேல் பண்ணையாட்கள், எம் மவன் படிச்சது பண்ண கணக்க பார்க்க வெள்ளைக்காரனுக்கு சலாம் போடுகின்றதுக்கில்லை.. என்று மிரட்டியதில் நியமன படிவத்தை கொண்டு வந்த தலையாரி ஓடியேவிட்டான், அவர்தான் எனக்கும் என் அண்ணனுக்கும் படிக்க கற்றுக்கொடுத்தவர் அவர் பெயர் யாருக்கும் தெரியாது சின்னவர் என்றால் தெரியும்.


கிராமத்து வயாதானவர்கள் சுவாரஸ்யமானவர்கள், எனக்கு பள்ளிபடிப்பில் துளிகூடவிருப்பம் இல்லை, ஓவியம் வரைவது, நாடகம் போடுவது,என்று சுற்றிக்கொண்டு இருப்பேன், என் தாயும்,தந்தையும் ஆசிரியர்கள் என்றால் நம்பமாட்டிர்கள்! ஆங்கிலம் என்றால் எட்டிகசப்பான எனக்கு தமிழ் பிடிக்கும் ஆனாலும் எழுத்துபிழையென்பது என்னால் திருத்தமுடியாது, 

சின்னவருக்கு ஒரு குணமுண்டு புத்தகம்,பத்திரிக்கை எதுவென்றாலும் யாராவது சின்ன பயல்களை படிக்க கூறி..! கண்மூடி வானொலி கேட்பது போல் கேட்பது அவருக்கு பிடிக்கும், அப்படி எனக்கு அறிமுகமானதுதான் தினதந்தி,தினமலர்,குமுதம்,ஆனந்தவிகடன்,மாலைமதி,ராணி,கிரைம்நாவல்,பாக்கட்நாவல் அதிலும் கல்கண்டு சுவையான பல செய்திகளைக் கொண்டது
ஆனந்தவிகடனில் வரும் அட்டைபட ஜோக், அதன்வண்ண ஓவியம் புத்தகத்தின் வாசனை மனசு சிலிர்க்கும் நினைவுகள் அவை..

கிரைம் நாவல்களிலும்,ஒரு சில இதழ்களிலும் வரைந்து கொண்டிருந்த அரஸ் ஓவியங்கள் என்னை மிக கவர்ந்தது எனக்கூறலாம், மாருதியின் பெண் ஓவியம் பெரும்பாலும் பெரிய கண்களும்! அழகானவையாக இருக்கும்,ஜெயராஜ் அவர்களின் கோட்டோவியம் "செக்ஸியாக" இருக்கும்,
மனியம்செல்வத்தின் வாட்டர்கலர் ஓவியம் கதை பேசும், சில்பியின் கோயில் ஓவியங்கள் நுணுக்கமானவை, ஆனந்தவிகடன் மதன் கார்டூன் வரைவதில் திறமையானவர் சரி சொல்லவந்தது என்ன அதைவிட்டுட்டு எங்கங்கோ போகிறோமே...

நான் படிக்கும் பள்ளிக்கு கிட்டதட்ட ஒரு ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம்தான் என் தாயின் மறைவுக்குபிறகு எங்களுடைய அம்மாவின் அப்பா தாத்தா வீட்டுக்கு வந்தோம், அங்குதான் படித்தோம், அது ஒரு அழகியகிராமம் உண்மையில் நகரம் படித்தவர்களை உருவாக்குகின்றது, கிராமம் கலைஞனை உருவாக்குகின்றது என்பது உண்மை, ஏரிகளும்,மீன்கள் துள்ளும் ஆறுகளும், வெள்ளந்தியான மனிதர்களின் சிலேடை பேச்சுகளும் பல கதைகள் சொல்லும், கெட்டவார்த்தைகளை சாதரணமாக பேசும் கிராமத்துமக்களின் நேர்மை! நாகரிகமாக பேசும் நகரத்தில் உள்ள ஒரு சிலருக்கு இல்லை...

பள்ளிவிட்டு வரும் வழியில் ஒரு நூலகம் இருக்கின்றது, எனக்கு தெரிந்து அன்பாக பேசுனதை பார்த்திராத ஒருவர்தான் நூலகர், அதுவும் அவருக்கு பள்ளி மாணவர்கள் என்றால் எரிந்தெரிந்து விழுவார், ஏன்? என்று கேட்டபோது...!அப்பொழுது கேட்கமுடியாது! நான் பெரியவன் ஆனதும் ஒருமுறை கேட்டேன்
அவர் கூறியதை கேட்டதும் அதிர்ந்து விட்டேன், இந்த பசங்க அறியபுத்தகத்தை படிக்க கொடுத்தா அதுல உள்ள படங்களுக்காகவும்,முக்கிய குறிப்புகளுக்காகவும் சில பக்கங்களை கிழித்து எடுத்துவிடுவார்களாம், பின்னால் படிப்பவருக்கு பயன் இல்லாமல் செய்துவிடும் என்றார்

உறுப்பினராக சேருவதற்கு 15 ரூபாய் கட்டணத்தை நான் ஒவ்வோரு பைசாவாக சேர்த்து மூன்று மாதம் கழித்து உறுப்பினராக சேர்ந்தேன், கலைஞரின் பொன்னர்சங்கர்,சாண்டில்யனின் சரித்திரநாவல்கள், பாலகுமாரனின் தண்ணீர்த்துறை,இனிது...!இனிது...!காதல்...!இனிது.! இலக்ஷ்மி அம்மாளின் குடும்பகதைகள் நம்மை கதைகளத்திக்கு அழைத்துச்செல்லும்.

 ஜீனியர் விகடனில் தொடராக வந்த சுஜாதாவின்மீண்டும் ஜீனோ...,"ஜீனோ" நாய் கேரக்டர் எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது, கமலை வைத்து சங்கர் ரோபோ எடுப்பதாக செய்திகள் வந்த போது கண்டிப்பாக ஜீனோ கேரக்டர் வரும் "விஷுவலில்" பார்க்கலாம் என்று இருந்தேன் படம் டிராப் ஆகிவிட்டது! 
ரஜினி நடித்த எந்திரன் மீண்டும் ஜீனோவோடு ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை...சுஜாதாவின் கதையை அப்படியே எடுத்திருந்தால் படம் முடிந்திருக்காது என நினைக்கிறேன்... அதற்க்கு ஜேம்ஸ் கேமரூனால் மட்டும் முடியும் இந்திய அளவுக்கு ஓகே...

தினமும் சைக்கிளை எடுத்துக்கொண்டு நூலகம் சென்று படித்துவிட்டு வந்தால்தான் மனம் நிம்மதியாக இருக்கும், சிறிது நாட்களில் எங்க ஊருக்கு
நூலகம் வந்தது ஆனால் நான் அங்கு இல்லை, திருப்பூர் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன்.

நூலகம் என்பது தாயின் மடிபோன்றது, அமைதியான சூழல் விரும்புகின்ற புத்தகத்ததை படிக்கும் வசதி, இன்றைய தலைமுறைக்கு நூலகத்தின் அருமை தெரியவாய்ப்பில்லை ஒரு சிலர் மட்டும் படிக்கின்றார்கள்,இனையத்தில் தேடினால் எதுவும் கிடைக்கின்றது, அம்மையார் அவர்கள் நூலகத்தை மாற்றியமைக்கு இன்றைய தலைமுறையிடம் பெரிய எதிர்ப்பு எழவில்லை! இதுவே 80 க்கு முன் என்றால்...ஒரு மாபெரும் எதிர்ப்பு அலை ஓங்கியிருக்கும்! என்ன கூறுகிறீர்கள் என் வயதையொத்த நண்பர்களே எனக்கு 35 வயதாகிறது.

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP