புத்தாண்டே...புத்தாண்டே....

>> Friday, December 30, 2011


GIF animations generator gifup.com



ஓ....புத்தாண்டே...!
ஓ....புத்தாண்டே...!
புன்னகையுடன்
உன்னை வரவேற்கின்றேன்!

துன்பங்கள் எதுவும் சூழாமல்..,
இன்பங்கள் நிறைந்து..
வளமான வாழ்வை..எம்
வலையுக நண்பர்களுக்கும்
கலையுக நண்பர்களுக்கும்..
தந்து செம்மைப் படுத்துவாய் - என
உன்னை வரவேற்கிறேன்....

பாரிய உலகில்...பழம் பெரும்
இனமாம் "தமிழினம்"
"ஈழத்தில்" இன்னல் அனுபவித்து..
துன்பத்தை மட்டும் துனையாக
கொண்டு வாழும் எம் சகோதரன்,
வாழ்வு செழிக்க...வரம் தருவாயென...
உன்னை வரவேற்கிறேன்....

முல்லைப் பெரியாறு...
கிருஷ்ணா நதி நீர்...
காவிரியென, என் தமிழன்..
யாரிடமும் கையேந்தாமல்,
முறையான காலத்தில்
மாரி கொட்டிடவே...வருவாயென..'
உன்னை வரவேற்கிறேன்.....

சென்ற ஆண்டில்
கருத்து மோதல்கள்,
வேறுபாடுகள்...
கசப்புகள் நீங்கி...
"நண்பர்கள்" நாம் யாவும்..
ஓரணியில் திரளுவோம்
நண்பர்களே
வரும் 2012ம் ஆண்டை நோக்கி.

-------------------------------------------------------------------------
மேலே உள்ள படம் GIFUP.COM வலைதளத்தில் உருவாக்கியது மிக எளிதான முறைதான் பயன் படுத்திப் பாருங்கள்

Read more...

புத்தாண்டு வாழ்த்து படம்(ANIMATION GIF IMAGE)

>> Thursday, December 29, 2011

புத்தாண்டு வாழ்த்து அசைவு (Animation GIF Image )படங்களை நாமே உருவாக்கலாம்...அதற்காக நிறைய வலைத்தளங்கள் இணையத்தில் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன....அதில் நம்முடைய புகைப்படம்,எழுத்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதில் ஒன்று பார்க்க கிளிக் செய்யவும்...
திறந்து கொண்டீர்கள் அல்லவா....இப்பொழுது எளிய முறையில் மிகச்சிரமமான அசைவு படத்தை நீங்களே உருவாக்க போகிறீர்கள்.

வலைதளத்தை திறந்ததும் வரும் படம்



படத்தின் மீது கிளிக் செய்யவும்... இங்கே அல்ல அங்கு....(லொள்ளப் பாரு எங்களுக்கு தெரியாதாய்யா.....? விக்கி)


கிளிக் செய்தவுடன் வரும் படம்


(+) பச்சைக்கலர் பட்டனை அமுக்கவும்....
இந்தமாதிரி படம் வரும்
இதுல முதலில் உள்ளதில் உங்க படத்தை இல்லையினா! எம்படத்தைக்கூட வச்சிக்குங்க!(யோவ்...நீ..பெரிய அப்பாடக்கரு...தமிழ்பேரண்ட்ஸ்)

விடுங்க...விடுங்க....Abc கிளிக் செய்து உங்களுடைய வாழ்த்து
வாசகங்களை டைப் செய்திடுங்க.....


இதோ இப்படித்தான்.....உங்க வலை தளத்து  பெயரைப் இடுங்கள்  என் தளத்து பெயரைப் போட்டு என்னை பிரபல படுத்திராதீங்கோ!
(மவனே நீ...மேல சொல்லுறியா....இல்லை ஒரு கீறல் போடட்டுமா..? மனோ.....)
சரிங்க அரசியல்ல இதெல்லாம் சகஜங்க.....
அடுத்ததா வருவது..இந்தபடம்


இதுல டேக் படத்தை கிளிக்குங்க (மஞ்சள் கலர் வட்டமிட்டது)
அடுத்ததா வரும் படம்

இதுல DRAFT கொடுங்க....விருப்பம் உள்ளவங்க HI-RES கொடுங்க என்ன பிரச்சனைன்னா வலைத்தளத்தில வைத்திங்கன்னா SLOW கனெக்சன் உள்ளவங்க சிஸ்டத்தில நுரை தள்ளிரும்....(அடிங்...எங்களுக்கு தெரியாதா....தமிழ்வாசி)

பிராஸஸ் ஆகும் அதன் பிறகு


உலக உருண்டையை கிளிக் செய்யவும் 
பிறகு வரும் படம்


நீங்களே செய்த படம் அழகா ஓடும்..! கணினியில்சேவ் செய்து பின்பு உங்கள் வலையில் வைத்துக் கொள்ளலாம்,படம் அசைவு இல்லையென்றால் URL COPY செய்து போடவும் எங்க எம்மேல இருக்கிற கான்டையெல்லாம் ஓட்டு பட்டை மேல காட்டுங்க....பார்க்கலாம் இன்னும் நிறைய அறிமுகப்படுத்துகின்றேன்.
நண்பர்ஸ் .,அன்ட் தோழிஸ் இது உதாரணம்தான் உள்ள நிறைய இருக்கு முயற்சி செய்யுங்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read more...

ஜன்னலோரஇருக்கை…

>> Sunday, December 25, 2011


_________________________________________________________________

சிறுகதை K.S.சுரேஸ்குமார்

 


நான் வேகமாக சென்றும்....அந்த பேருந்து கிளம்பி விட்டது,நான் வேகமாக வருவதை பார்த்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார்.நான் ஏறினேன் உள்ளே இடம் இருக்குமா...? நோட்டம் விட்டதில் இருக்கை இருந்தது...இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

இருக்கையில் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்...ஜன்னலோரம் இருக்கை கிடைப்பது சில நேரங்களில் அறிது! கிடைத்தாலும் புதுபொண்டாட்டியை அழைத்துக் கொண்டு வருபவர்கள், சார் பிளீஸ்.......சீட் மாறி உக்காருங்க....என்று மானகெட்ட தனமாய் கெஞ்சுவார்கள்...உரசிகிட்டே...போகனுமா...! ஜன்னலோரம் இருக்கை கற்பனை குதிரையின் இருக்கை என்றே சொல்ல்லாம்...எனக்கு நிறைய கவிதையின் கரு ஜன்னலோர இருக்கையில் கிடைக்கிறது,வீட்டு பிரச்சனையை கூட ஜன்னலோர பயணத்தில் நன்றாக சாய்ந்து உக்கார்ந்து சிந்தித்த்தால் விடிவு கிடைத்தது உண்டு.

நடத்துனர் வந்தான் டிக்கெட்டை கொடுத்து விட்டு பின்னால் சென்று அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான், அது தனியார் பேருந்து இளையராஜாவின் சோலை புஸ்பங்களே.....சோகம் சொல்லுங்களே.....கண்ணாளனை கண்டாலென்ன... பாடல் ஒலித்துக்கொண்டிருந்த்து.

ண்மூடி பாட்டில் லயித்திருந்தேன்.., இளையராஜாவின்.. பாடல்களில் உள்ள வரிகளும், இசையும் ஒரு தாயின் தாலாட்டு போல இருப்பதின் மர்மம் என்ன..? சில பாடல்களை பேருந்து பயணங்கள் ரசிப்பு தன்மையாக்கி விடுகிறது, ஜன்னலோரம் இருக்கை…,.இளையராஜாவின் பாடல் கூட்டம் குறைவு..,அமைதியான சூழ்நிலைஎல்லாம் இனைந்த சுகமான பயணம்.
இரண்டு,மூன்று நிறுத்தங்களைத் தாண்டி, ஓரிருவர் ஏறஎன் பக்கத்தில் மட்டும் காலியாக இருந்த்து...!அடுத்த நிறுத்தத்தில் வண்டி நின்றது ஒரு பெண் ஏறினாள்..! வயது இருபதை தாண்டி இருக்கும், மாநிறம்...மெல்லிய சேலையை தொப்புளுக்கு கீழே..மூன்று இஞ்ச்..இறக்கி கட்டியிருந்தாள், அவளின் நிறத்தினை ஒத்த உதட்டு சாயம் தீற்றியிருந்தாள், மெல்லிய சேலையின் ஊடே...நீலநிற ரவிக்கை, ரவிக்கையின் உள்ளேயுள்ள உள்ளாடை தெரிந்தது,உயரமான காலனி,கூந்தலை மடித்து நாகரிகமாக இருந்தாள், அவள் ஏறியதும் பேருந்தில் இருந்த அத்னை ஆண்களும் கண்களால் மேய்ந்தனர் நான் மட்டும் விதிவிலக்காயென்ன...மனிதன் மனம் குரங்கு...ஆணினத்தின் மனமோ! குரங்கை விட வேகமானது....
நேர்த்தியாய் வெட்டியிருந்த புருவத்தின் கீழேயிருந்த கண்களால் தேடினாள் இருக்கையுள்ளதா என...எந்தவித கூச்சமும் இன்றி என்னருகில் வந்து அமர்ந்தாள்.

அவள் போட்டிருந்த பவுடர், டியோரண்ட், கூந்தலில் வைத்து இருந்த மல்லிகை, ஒரு சேர பேருந்தே மணந்தது,என்னை பொறாமை பார்வை பார்த்த விடலையொருவன் அவளின் மறைவு பிரதேசத்தை...கண்டு கனவு கண்டு கொண்டிருந்தான்..ஒரு கிழடு நமுட்டு சிரிப்பு வேறு சிரித்தது,
எனக்கு ஒரு மாதிரியிருந்தது.! ஆனாலும் கிளுகிளுப்பாகவும் இருந்தது..! அதனால் ன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்தேன் என்றாலும் அவ்வப்போது அவளையும் ரசித்துக் கொண்டுருந்தேன்.
எக்ஸ்கியூஸ்மி....என்றாள் அவள் நான் மெதுவாகத் திரும்பி என்ன என்பதை போல் தலையசைத்தேன், என் கையில் இருந்த புத்தகத்தை காட்டி..கொடுங்க படிச்சிட்டு தருகிறேன் என்றாள், வரும் போது வாங்கியது படித்துவிட்டதால்..சும்மா வைத்திருந்தேன்..மறுப்பேதும் கூறாமல் அவளிடம் கொடுத்தேன்.

ஓட்டுனர் அதுவரை இளையராஜா பாட்டாக போட்டுகொண்டு வந்தவன்,இவள் ஏறியதும் பாட்டை மாற்றி விட்டான்...குத்துபாட்டு அதுவும் விரசமான பாடலாய் போட்டான் குஷி கட்டிபுடிடா....!?எப்படி..எப்படி…. சமைஞ்சது எப்படி என்று போட்டு ஒரு கிளுகிளுப்பை கூட்டிக்கொண்டு இருந்தான் விவஸ்தைகெட்டவன்.

நீங்க...எங்க இறங்கிறிங்க...என்று கேட்டாள் அந்த யுவதி...நான் கோவை காந்திபுரம்...என்றேன்.
அப்படியா? முன்னாடியின்னா ஜன்னலோரம் அமரலாமென்று நினைத்தேன்,நான் மேக்கப் போட்டிருக்கேன் வியர்த்தா ஒரு மாதிரியாயிரும் பிளீஸ் நான் ஜன்னலோரம் உக்கார்ந்துக்கலாமா...?என்று கேட்டாள் அவள்.
இல்லை முடியாது என்று கூற முடியுமா? சும்மா டப்பா பிகரு கேட்டாலே..இடம் கொடுப்போம் இவவேறு...! கவர்ச்சிக் கன்னியா இருக்கா...பலியாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு இடம் மாறினேன்.
ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தாள், இயற்கையை ரசித்தாள் சிரித்தாள்...,நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க....வினவினாள்...
நான் கம்பனியில் இருக்கிறேன் வேலை விசயமா..கோவை போயிட்டு இருக்கிறேன்.என்றேன்
ஓ...என்றவள் நான் கேட்காமலே...கூறினாள்...நான் சின்னதா பியூட்டி பார்லர் வைத்து இருக்கிறேன்.....கோவையில ஒரு திருமணம்... பொண்ணுக்கு மேக்கப் போட...போயிட்டு இருக்கிறேன்..!

ம்ம்....

உங்களுக்கு தேவைபட்டா சொல்லுங்க...நல்லா பன்னிக்கொடுப்போம் என்று ஒரு முகவரி ட்டையை எடுத்துக்கொடுத்தாள். நான் முகவரி அட்டையைப் பார்த்தேன் சுமி பியூட்டி பார்லர் என்று இருந்த்து உங்க பெயர் சுமியா?என்றேன்…

இல்லை அது என்னுடைய குழந்தை பெயர்…

ஓ…என்றேன் அவள் பெயரை கேட்க தோன்றியது, கழுத்தில் தாலியும் இல்லை,ஆள் வேறு எந்த அறிமுகமும் இல்லாமல் வாயாடுகிறாள்…வம்பு ஏன் நமக்கு?! ஒரு மாதிரியான பெண்ணாகக் கூட இருக்கலாம்!

அவளே சொன்னாள் என் பெயர் “சுமங்கலி” என்று வித்தியாசமாக இருக்கிறதே…அவளுடைய பெயர்.

நான் அவளுடன் அதற்கு மேல் பேச விரும்பவில்லை…தலையைத் திருப்பிக்கொண்டேன்,ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாளோ…என்பதினால் உண்டான பயம் வேறு…

அவளும் அதை உணர்ந்து கொண்டவள் போல் நான் கொடுத்த புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கினாள்….

சிங்காநல்லூரில் இறங்கிக்கொண்டாள் தேங்ஸ் சார் என்று புத்தகத்தை கொடுத்து விட்டு இறங்கிக்கொண்டாள்…

இந்த சம்பவத்திக்கு பின்…. இரவு நண்பர்களை சந்தித்தபோது! இதைபற்றி கூறினேன், அவர்கள் கிண்டல் செய்தனர்…. போடா…. அருமையான சான்ஸ் என்று…என்னை ஏளனம் செய்தனர்,முகவரி அட்டையை ஒருவன் வாங்கி பார்த்தான் அட! போன் நெம்பர் இருக்கு! கூப்பிட்டு கேட்கலாமா? என்று வினவினான் நான் அட ஏண்டா…நீ வேறு .என்று பல விசயங்களை பேசியதில் சுமங்கலியை மறந்துபோனோம்.
அதற்க்கு பின்னாளில் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து, ஆனால் அந்த சந்திப்புக்கு பின் அவளை நான் நினைத்ததுக்கு நேர்மாறாக இருந்தாள்.

இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து..” என்னுடைய நண்பனின் தங்கை திருமணத்திக்கு சென்றோம், அப்போது எதிர்பாராதவிதமாக பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்து கொண்டிருந்த பெண் விபத்தில் சிக்கி கொண்டார், பெண் வேறு மேக்கப் இல்லாமல் நான் வரமாட்டேன் என்று அழுதது,
பெண்ணின் அண்ணன் என் நண்பன் வந்து என்னிடம் டேய் உக்கு யாரையாவது தெரியுமா…?என்று வினவினான்…

ஏம்பா..என்னை கேட்கிற…!என்ற எனக்கு ஞாபகம் வந்தவனாய்.. என் சட்டைப் பாக்கெட்டைப் பார்த்தேன்! ஏகப்பட்ட முகவரி அட்டையில் அவள் கொடுத்த்து இருந்த்து, எடுத்து என் செல்பேசியை எடுத்து நம்பரை அழுத்தினேன்…!

அவள் வீட்டிலிருப்பதாகவும்…,வந்து என்னை கூட்டிச்செல்லுமாறும்,  கூறினாள். வீடு நகரத்தில் இருந்து தள்ளி இருப்பதால், ஆட்டோ கிடைக்காது! பேருந்தில்தான் வரமுடியும்…நேரமாகிவிடும் என்றாள்.

சரி... நான் போய் அழைத்துக்கொண்டு வருகிறேன்...என்று என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் முகவரி தேடி அவள் வீட்டை கண்டுபிடித்தேன் அது பல குடித்தனங்கள் உள்ள வீடு.

அவள் பெயரை! சொல்லி கேட்டேன்.... கடைசி வீடு... என்றார்கள், கடைசி வீட்டில் சென்று கதவை தட்டினேன், கதவை திறந்தாள், நான் வருவதற்க்குள் தன் உபகரணங்களை எடுத்து தயாராக இருந்தாள்,
வந்திட்டிங்களா வாங்க சார்...தேனீர் சாப்பிடுங்கள் என்றாள்..

வேண்டாங்க..நேரம் ஆகின்றது போகலாம் என்றேன்.. ஒரு நிமிடம் என்று உள் அறையில் இருந்த தன்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் அதிர்ந்து விட்டேன்....! வாயில் நீர் ஒழுக.....அம்மா...அம்மா...என்று குழறிய மொழியில் பேசியபடி வந்த மனநலம் குன்றிய குழந்தை அது...!

நான் விக்கித்து நின்றதைப் பார்த்த அவள்...இந்த குழந்தையை கொடுத்துட்டு என் கணவர் குடிபோதையில் வாகணம் ஓட்டி சென்று இறந்து விட்டார்..இவளுக்கு மருத்துவ செலவு அதிகமா வேற ஆகுது..நானும் வாழனுமில்லையா..?அப்ப நான் படித்த காலத்தில் விளையாட்டாய் கற்றுக்கொண்ட அழகுகலை இப்ப சோறு மட்டுமல்ல என் மகளுக்கு நல்ல மருத்துவமும் பார்க்க முடியுது...அதனாலதான் நான் யாரைப்பார்த்தாலும் என் முகவரி அட்டையை கொடுப்பேன்..என்று கூறினாள்...

குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்த அவளை என் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றேன், இப்பொழுது அவள் எனக்கு கிளுகிளுப்பாய் இல்லை....!ஒரு நல்ல தாயாகத் தெரிந்தாள்......

Read more...

2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

>> Thursday, December 22, 2011




2011 சிறந்த பட வரிசை
1.வாகை சூடவா
2.பாலை
3.உச்சிதனை முகர்ந்தால்
4.பயணம்
5.எங்கேயும் எப்போதும்
6.தெய்வதிருமகள்
6.வெண்மணி
2011 சிறந்த  குடும்ப படம்
1.முத்துக்கு முத்தாக
2011 சமூக அக்கறையுள்ள பட வரிசை
1.ஆண்மை தவறேல்
2.குள்ளநரிகூட்டம்
3.போராளி
4.ஈசன்
2011 தமிழர் வாழ்வுதனை பிரதிபலிக்கும் படங்கள்
1.ஏழாம் அறிவு
2.பொன்னர் சங்கர்
3.ஆடுகளம்
2011 பகுத்தறிவு திரைப்படங்கள்
1.நஞ்சுபுரம்
2.அழகர்சாமியின் குதிரை
2011 சிறுவர்களை கவர்ந்த திரைப்படம்
1.காஞ்சனா
2011 நல்ல பாடல்களை பெற்ற திரைப்படங்கள்
1.கோ
2.180
3.எங்கேயும் காதல்
2011நகைச்சுவை திரைப்படங்கள்
1.மங்காத்தா
2.வேலாயுதம்
3.அவன்இவன்
2011 நக்கல் நையாண்டி திரைப்படம்
1.வித்தகன்
2011 சிறந்த திரைக்கதை
1.முரன்
2.யுத்தம்செய்
2011மொழிமாற்று திரைப்படம்
1.சிறுத்தை
2.வானம்
3.காவலன்
4.சீடன்
5.வெடி
2011 சிறந்த காதல் திரைப்படம்
1.மயக்கம் என்ன
2011 டைம்பாஸ் படங்கள்
1.தூங்கா நகரம்
2.உயர்திரு 420
3.180
4.கருங்காலி
5.வெப்பம்
6.ரௌத்திரம்
7.யுவன்யுவதி
8.வந்தான் வென்றான்
9.வேலூர் மாவட்டம்
10.தம்பி வெட்டேத்தி சுந்தரம்
11.ஒஸ்தி
12.மௌனகுரு
13.மம்பட்டியான்
14.மாப்பிள்ளை

2011 வெற்றிப்படம் வசூலில்
1.வேலாயுதம்
2.மங்காத்தா
3.கோ
4.ஏழாம் அறிவு

நன்றி : விக்கிபீடியா, நம் பதிவுலக நண்பர்களின் விமர்சனம்,
                          மற்றும்
ராஜபாட்டை அவர்களின் பதிவினை தொடர்ந்து... 

வேண்டுகோள் : அட்ரா சக்க..சிபியை சிறியதொரு விமர்சனத்தோடு தொடருமாறு வேண்டுகிறேன்.

Read more...

அரசியலில் குதித்த பிரபல பதிவர் பதிவுலகமே…அதிர்ச்சி..!

>> Wednesday, December 21, 2011




ஒபாமா மற்றும் அவர் குழுவினர் வியக்கும் வண்ணம் நம் பதிவர் என்ன செய்தார்?

உயர்திரு நக்கீரன் என்பவர் சமீப காலமாக நாய்நக்ஸ் எனும் வலைப்பதிவை நடத்தி வந்தார் இவர் யார் பதிவுக்கும் சென்று ஓட்டும் போடமாட்டார், கமெண்ட் போடுவார் யாருக்கும் புரியாதவாறு ஆங்கிலத்தில் போடுவார், நம் பதிவு பிரபலமாகவில்லை என்கிற கவலை அவரை அரித்தது(சோரியாசிஸ் அல்ல) மனதை அரித்தது.

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் டிக்கட் வாங்காமல் புகைவண்டியில் வந்து கலந்துகொண்டார்,முட்டை பனியாரத்தை உண்டுகொண்டு சிந்தித்ததில்,நல்ல சிந்தனை அவர் மனதில் உதிர்ந்தது அது என்னவென்றால் பதிவர்களை மிரட்டி தன்னை பற்றி புகழ்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார்,எழுதவில்லை எனில் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தையால் திட்டி எழுதுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார் பயந்த வீடு சுரேஸ்குமார்தோத்தவன்டாசெந்தில்,தமிழ்வாசி பிரகாஸ்,தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்,சிபி செந்தில்குமார்,மெட்ராஸ்பவன் சிவக்குமார், ஆகியோர்'  மற்றும் போனிலும்! மிரட்டல் விட்டதால் எப்பொழுதும் அருவா! சகிதம் இருக்கும் நாஞ்சில் மனோவே பயந்து பதிவிட்டிருந்தார் விக்கியுலகத்தை மிரட்டியதாக தெரிகிறது அவர் தனக்கு இராணுவத்தில் கொடுத்த ரிவால்வர் இருப்பதாக கூறியதும்,சார் அமைதியாகிவிட்டார்.

அனைத்து பதிவர்களும் அவரை பற்றிய செய்தியை வெளியிட்டதும் உளவு துறை நமது முதல்வரிடம் தெரிவித்த்து, ச்சிகலாவை வெளியேற்றி விட்டதால் நமது முதல்வர் மன அமைதிக்கு, ஒரு விகடகவி வேண்டும் என்கின்ற காரணத்தினால் நமது மாண்புமிகு நாயாரை(நாய்நக்ஸ்)இனி இப்படித்தான் அழைக்கவேண்டுமாம்,அழைத்து மேல் சபை உறுப்பினராக பதவி கொடுத்து புதிதாக பதிவர் துறை ஏற்படுத்தி அவரை அமைச்சராக்கினார்.
அம்மாவை சந்தித்த போது எடுத்தபடம்

 உடனே அடுத்த நாளே தமிழ் பதிவர்களுக்கு கூகுள் விளம்பரம் தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார் நமது தானை தலைவர்
போராட்டகளத்தில் நம் பதிவர்
மேலும் தனக்கு ஒரு கார் வேண்டும் என்று சிபியை அழைத்துக்கொண்டு பென்ஸ் கார் விற்பனை கூடத்திக்கு சென்றார் நம்ம தலைக்கு சைக்கிள் கூட ஓட்டதெரியாததால் சிபியை அழைத்துக் கொண்டு போனார்.
கார் வாங்கிய போது எடுத்த படம்
மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்ப்ப்பட்டு சிபியை இயக்குனராக போட்டு ஆத்தா நான் அதுல பாசாயிட்டேன்.என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார், நமிதா கதாநாயகியாக நடித்தார்.
படத்தின் டிரைலரில் இருந்து
ஒரு படத்தில் நடித்தவுடன் நடிகர் சங்க தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார் நமது பதிவர்
நடிகர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தபோது
படம் நன்றாக ஓடியது தேசிய விருதும் பெற்றது அந்தப்படம்
தேசிய விருது பெற்றதுக்கு பாராட்டு விழா நடந்தபோது


இவர் செய்யும் கூத்துக்களால் நமது முதல்வர் மனமுருகி விலைவாசியை குறைத்துக்கொண்டார்

அதனால் நம் பதிவுலகில் இருந்து சென்ற ஒருவர் இவ்வளவு சாதனை செய்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வணங்குவோம்
நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க வாழ்க வாழ்கவே.......
சிதம்பரத்தில் இருந்து நமது செய்தியாளர்.....


Read more...

நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு...

>> Sunday, December 18, 2011


வாங்க...வாங்க....என்று வரவேற்று மரியாதை தருவதிலும் வரும் விருந்தினரை வயிறார உணவளிப்பதிலும் பெயர் பெற்ற பகுத்தறிவு ஊட்டிய "பெரியாரின்" எங்கள் மண் ஈரோட்டில்' பதிவர்சந்திப்பு...

பள்ளிக்கு' முதன் முதலாக செல்லும் பிள்ளைகள் போல்தான் சென்றோம், நானும் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும்,தயங்கி..தயங்கி.. சென்ற எங்களை வாங்க..வாங்க...என்று அன்பொழுக அழைத்தார் தமோதரன் அய்யா... அவர்கள்....

உணவருந்திவிட்டு வாருங்கள் என்றார் ஈரோடு கதிர் அவர்கள்
உள்ளே நுளைந்தோம் எங்களை வரவேற்றது தமிழ்வாசி பிரகாஸ் அவர்கள்


உணவறையில் தமிழர் உணவு இட்லி பறந்துவிடுமோ என பயங்கொள்ளும் வகையில் இருந்தது குஸ்பு இட்லியோ....(யோவ் எதுக்கியா இந்த தமிழ்நடை அஞ்சாப்பு கட்டுரை மாதிரி சம்பத் என்னை குட்டினார்....சரி இனி நம்ம நடை..)

நாங்க இட்லி சட்னி சாம்பார் குழைச்சு அடிச்சமுங்க..பூரி உருளைகிழங்கு முட்டைதோசை அடஅடஅட நாக்கில...எச்சி ஊறுதுயா......சாப்பிட்டு வெளியவந்தா...மெட்ராஸ்பவன் சிவக்குமார் மனுசன் செமசெமசெம..
ஜாலி டைப்....பதிவர்கள் கமெண்ட் போடுவதை பற்றி அடிச்சாருங்க பாருங்க கமெண்ட்டு வயித்துவலியே வந்திடுச்சு.... ஆனா அத பதிவுல போட மாட்டேன் சென்சார்...சென்சார்....



ஜாக்கிசேகர் இருந்தார்ஆருர்மூனா செந்தில் அறிமுகமானார் ஜாலியான
டைப்த்தான் ஏனோ?ரிசர்வா இருந்தார்...

அடுத்தது வந்தாரு பாருங்க ஒருத்தர் அய்யய்யயயோ.....நாய்நக்ஸ் பேரு நக்கீரன் சீரியசான ஆளுன்னா நினைச்சிங்கன்னா அத அழிச்சிருங்க....பிரபல பதிவர் ஆவது எப்படியின்னு பாடம் எடுத்தாரு பாருங்க....நக்கல்னாநக்கல் செம..நக்கல் பிரபல பதிவர்கள் கேட்டாங்கன்னா பிராப்பள பதிவர் ஆயிருவாங்க...மைக்ல நாஞ்சில்மனோ பேசுகிறார்..பராக்...பராக்... என்றார் அருவா...அருவா....என்று கத்தினோம் அப்புறம் வேற மனோ...பல்பு டியூப்லைட் எல்லாம் ஆனார்....இதை பதிவா போடப்போறோம் சொன்னேன்.. அப்படியா போடு..போடு...ஆனா மவனே என் பிளாக் லிங்க்க தரலையின்னா...பிண்ணூட்டத்தில வந்து வாந்தி வாந்தியா எடுத்து வச்சிருவேன்னு எல்லாரையும் மிரட்டுறாருங்க அது அதகளம்...




அவர் இதுல பதிவர் சந்திப்ப பற்றி 365 பதிவு போடப் போறாருங்களாங்க...அது முடியும் போது அடுத்த பதிவர் சந்திப்பு வந்திருமாம் மக்களே ஓட்டை போட்டிருங்க....

சங்கவி எங்களோடு இணைந்து போட்டா எடுத்துக்கிட்டார்,கோமாளி செல்வாகிட்ட நானே அறிமுகம் செய்து கொண்டேன் பதிவுல ஜாலியா எழுதறவங்க ஏனோ அமைதியா இருந்தாங்க டெரர்கும்மி மக்கள்.



முகநூல் தோழி தென்காசிபைங்கிளியா அருள்மொழி?பொதிகையில் செய்திவாசிப்பாளராம்...அவர்கவிதையைப்போல் அவரும் அழகு, அவரின் குரலும் இனிமை,நன்றிகள் அவருக்கு,தொகுத்து வழங்கினார் மைக்தான் அடிக்கடி மக்கர் செய்தது.

பதிவுலக சூப்பர்ஸ்டார் சிபி செந்தில்குமார் வந்தார்,மக்கள் கரகோசங்களை எழுப்பினார்கள் படம் எடுத்தால் கண்ணாடிய மாட்டின பின்னாடி தான் எடுக்கனும்... என்கிற கண்டிசனோடு போட்டோ எடுத்தார் மனுசன் பதிவு எப்படி சுறுசுறுப்பா எழுதுகிறாறோ அதுபோலத்தான் ஒரு இடத்தில உக்காரல....



முனைவர் அய்யாவை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி,தன்னுடைய சந்தேகங்களை சம்பத்திடம் கேட்டுகொண்டு இருந்தார், அவரை ஒரு சில நிமிடங்கள் மேடையில் பேச விட்டிருக்கலாம் தமிழ்ச்சுவை பருகியிருக்கலாம்......


சிபி போங்க...போங்க...சாப்பிடுங்க என்றார் என்னிடம் நான் யாருன்னு தெரியுமா?என்றேன் நேம் பேட்ஜை பார்த்து விட்டு அட வீடுவா...கைய புடிச்சு கொண்டு போய் பந்தியில உக்கார வைத்து சாப்பிடுங்க....சாப்பிடுங்க....என்று போட்டா எடுத்துக்கிட்டார் அய்யா கந்தசாமி அவர்கள் வந்திருந்தார் சங்கம் ஆரம்பிப்பதை அவர் ஆதரிக்கவில்லை என அவர் உரையில் தெளிவாக குறிப்பிட்டு விட்டார்,



கே ஆர் பி செந்தில் பதிவின் கனம் அவரிடம் இல்லை! எளிமையான மனிதர்! பரிசுக்கு தகுதியானவர்,ஆனால் பேச முடியவில்லை இந்த பதிவின் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,மற்றும்
உண்மைத்தமிழன் சரவணன்
ஜாக்கிசேகர்
ஐயப்பன் ஜீப்ஸ்
அதிஷா
தேனம்மை இலட்சுமணன்
வெயிலான் இரமேஷ்
வலைச்சரம் சீனா ஐயா
சுரேஷ்பாபு
லக்கிலுக் யுவகிருஷ்ணா
இரவிக்குமார்
யெஸ்.பாலபாரதி
இளங்கோவன்
மகேந்திரன்
ஓவியர் ஜீவா
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.

சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் குனசேகரன் அய்யா அவர்களின் உரையில் வலைபதிவர்கள் செய்தியை கொண்டு சொல்லும் விதத்தை அழகாக கூறினார்,நீங்களும் ஒரு பத்திரிக்கையாளர்தான் என அனைவருக்கும் மகுடம் சூட்டினார்,கதிர் அவர்கள் வலைபதிவர் குழுமதினை எவ்வாறு உருவாகியது என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.

பாராட்டு பரிசளிப்பு முடிந்ததும் ஏற்புரைக்கு பின் மதிய உணவு சைவம்,அசைவம்,சிந்தாமனி, மட்டன் குழம்பு, தலைக்கறி வருவல்,ஜீரணத்திக்கு தக்காளி ரசம் முட்டை பனியாரம்,கம்பு பாயாசமா அது தெரியலை? ஆனா சுவையா இருந்தது,செவிக்கு உணவு பிறகு வயிற்றுக்கு உணவு,

நாம் கல்லூரி,பள்ளி இறுதி நேரத்தில் நண்பர்களை பிரிவை தாளாமல் அழுதிருப்போம்,கண்ணீர் விட்டிருப்போம்,பால்ய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் போது மகிழ்ச்சியும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஆரத்தழுவியிருப்போம்,மீண்டும் பால்ய நண்பர்களை சந்தித்ததைப்போல........இருக்கிறது இந்தசந்திப்பு சந்திப்பை ஏற்படுத்திதந்த கதிர் அவர்களுக்கும் வலைக்குழும நண்பர்களுக்கும்,எங்களை இந்த தகவலை தெரியவைத்தது, அழைப்பு விடுத்த சங்கவி'க்கும் நன்றி...நன்றி....நன்றி.


பதிவர் சந்திப்பில் இனைபிரியா இனைய நண்பர்கள் ஆனோர்

தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்
தமிழ்வாசி பிரகாஷ்
முனைவர் குணசீலன்
நாய்நக்ஸ் நக்கீரன்
சிபி செந்தில்குமார்
மெடராஸ்பவன் சிவக்குமார்
பிலாசபி பிரபாகரன்
கோமாளி செல்வா
தோத்தவன்டா செந்தில்
TNTCதாளவாடி கிளையில் உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் அவர் பெயரை கூறவில்லை அவர் இப்பொழுது பதிவிடுவது இல்லை,ஆர்வத்துடன் வந்திருந்தார்,

சந்திக்க நினைக்கும் நண்பர்கள்
விக்கி,நிரூபன்,மனோ,
மற்றும் வராத நண்பர்கள் அனைவரையும்....


Read more...

காதல் கதைகள் 1954 இறுதி பாகம்

>> Thursday, December 15, 2011


‘‘டமார்..”
பெருத்த ஓசையாக துப்பாக்கி வெடித்தது..
ஆ...அம்மா..”என்று கத்தினாள் மாது!

துப்பாக்கியிருந்து பாய்ந்த அலுமினிய குண்டு அவர்களுக்கு பின்னால் மேய்ந்து கொண்டிருந்த ஒரு முயலின் உடலை துளைத்து சென்றது.

வீச்......என்று கத்திய அந்த சீவன் அங்கேயே உயிரை விட்டது.

துப்பாக்கியை கீழே தரையில் ஊன்றியபடி நடந்த துரை அவர்கள் பக்கத்தில் வந்தார்.
யேய்...நீ..ராசய்யன் மவ தானே?உங்கப்பன் உன்னை படிக்க வைத்தது இப்படி காட்டுக்குள்ள படுக்கறதுக்கா ஏலே...என்று பிடறியில் ஒன்று வைத்தார்.
ஒழுக்கமா வீட்டுக்கு ஓடிப்போயிறு என்று கர்ச்சித்தார் துரை. மௌனமாக வீட்டுக்கு போனாள் மாது.

ஏண்டா..!நாயே உனக்கு பொம்பளை கேட்குதா....என்று அடிக்க கையை ஓங்கினார்.செல்வம் துரையின் கையை பிடித்து கொண்டார்.
சித்தப்பா...வேண்டாம் சும்மாயிரு...என செல்வம் சீறினான்.
எதுவும் பேசாமல் சிறிது நேரம் முறைத்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
சரி...தோட்டத்துக்கு போகலாம் வா...என்ற துரை செல்வத்தின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். சிறிது நேர சிந்தனைக்குப்பின் செத்து கிடந்த முயலை எடுத்துக்கொண்டு அவரின் பின்னே நடந்தான் செல்வம்.

தோட்டத்தில் இருவரும் எதிர்ரெதிராக அமர்ந்தனர் துப்பாக்கியை சுவற்றில் மாட்டிவிட்டு மன் பானைக்குள் இருந்த சாராய பாட்டிலை எடுத்து வந்து
முன் வைத்தார் கண்ணாடி ரோட்டாவில் ஊற்றி செல்வத்திடம் நீட்டினார் துரை.வேண்டாம் சித்தப்பா..”என்றான் செல்வம்.

நீ...என்ன நீனைக்கிறேன்னு எனக்கு தெரியும் செல்வம் உங்கப்பன் கிட்ட சொல்லுவன்தானே? உங்கப்பன் கிட்ட சொன்னா என்ன பன்னுவான் தெரியுமா?
மாதுவ பாவானி வாய்க்கால்ல பொணமாக போட்டிருவான்.

சித்தப்பா...நான் மாதுவ உயிருக்குஉயிரா நேசிக்கிறேன்.

உயிருக்குஉயிரா நேசிக்கிறவன் கிணற்றுக்கு பின்னாடி ஏண்டா பேறீங்க......உன்னைச் சொல்லி குற்றமில்லை வயசுக்கோளாறு..செல்வம் நீ..நினைக்கிறமாதிரியில்லைஇப்ப இந்த நாட்டை ஆளுறது வெள்ளைக்காரன் இல்லை!நியாயம் தர்மம் எல்லாம் பெரிய மனிதர்களின் கைளில் இருக்கு....

நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்குவ...

போடா...முட்டாள் நீ...என்ன சாதி அவ என்ன சாதி...வீணா ஒரு பொம்பளைய கொன்ன பாவம் வேண்டான்டா செல்வம்.நம்ம குலத்தில ஏற்கணவே...ஒரு பெம்பளைய கொன்ன பாவத்திக்கு நம்ம பரம்பரைக்கே பெண் குழந்தைகள் பிறப்பது இல்லை.

இல்லை சித்தப்பா...என்னால அவ இல்லாம வாழமுடியாது என்று அழுதான் செல்வம்

சரி...சரி...அழுகாதே எதாவது செய்கின்றேன் நீ...சாராயத்தை குடி..ஆமா அவ நெருப்பு மாதிரியாச்சே...எப்படி உன் வலையில விழுந்தா..?

செங்கரட்டுக்கு சுள்ளி பொருக்கப்போன இடத்தில காட்டுநாய் அவளை சுத்திருச்சு.நான்தான் காப்பாற்றினேன் அதிலிருந்து பழக்கமாயிருச்சு.....பள்ளிகூடத்தில படிக்கும் போதே பின்னால சுத்திட்டு இருந்தேன்..அப்ப அவ கண்டுக்கல எட்டாவது வரைக்கும் அவ படிச்சா....நான் ஏழாவதோட மண்டையில ஏறல நின்னுட்டேன். ஆனா நல்லா படிச்ச அவள மேல அவிங்கப்பன் படிக்க வைக்கல......காட்டுல,மேட்டுல பார்க்கும் போது பழகி....இப்ப அவ இல்லாம என்னால வாழமுடியாது சித்தப்பா..

இந்தா குடி...அப்புறம் நான் சொல்லுறத கேளு...என்று சித்தப்பா துரை ஊற்றி கொடுக்க...சாராயத்தினை மாற்றி,மாற்றி குடித்து அப்படியே படுத்து தூங்கிபோயினர்.

காலையில் சூரியனின் வரவுக்கு முன் மக்கள் ஓரிடத்தில் கூடினார்கள்,ஏரிதண்ணீரின் வடிகாலின் ஓரத்தில் அரைநிர்வாணமாக மாதுவின் உடல் கிடந்தது.காலனி மக்கள்

அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கு விரைந்தார்கள்.தகவல் தெரிந்து சென்ற துரையும் செல்வமும் அதிர்ந்து போனார்கள் உடலெங்கும் முள் கீறிய தடங்கள்,இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்பது புரிந்தது,ஆனாலும் அவசரஅவசரமாய் காரியங்கள் செய்து பிணத்தை எரித்துவிட்டார்கள்.

செல்வம் அதன் பிறகு பித்துபிடித்தவன் போல் சுற்றித் திரிந்தான்...கிலுவை இலையில் பீப்பி செய்து ஊதிக்கொண்டு சாராயத்தை குடித்து விட்டு பெரும்பாலும் தோட்டத்தில் கிடந்தான் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் அண்ணா தலைமையில் கொழுந்து விட்டு எரிந்தது,திமுக உறுப்பினர்களை கைது செய்து  சிறையில் அடைத்து கொண்டு இருந்தது மத்திய அரசு.

துரையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோவை சிறையில் அடைத்துவிட்டனர்,ஒரு வாரங்களுக்கு மேல் சிறையில் இருந்த துரையை பார்க்க பண்ணையத்து ஆள் ‘‘சின்னையன்” வந்திருந்தான் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு கெஞ்சி கூத்தாடி சிறையில் சந்தித்தான் சின்னையன்,அவன் கொண்டு வந்த தகவலில் அதிர்ச்சியில் அப்படியே உக்கார்ந்து விட்டார் துரை,அவன் கூறியது
அய்யா.....நம்ம சின்னபண்ணாடி இப்படி பன்னிட்டாருங்கய்யா.....பெரிய பண்ணாடி வந்து அடிச்சு இழுத்திட்டு போயி,வீட்டுக்குகொண்டு போய் புத்தி சொல்லி வைத்திருந்தாங்கய்யா.....சினிமாகொட்டாயிக்காரரு புள்ளைய கல்யாணம் பன்னி வைக்க ஏற்பாடு பன்னினாருங்கய்யா...யாரும் இல்லாதப்ப..தோட்டக்கு வந்து அரளி விதையை சாப்பிட்டு செத்து பொயிட்டாருங்கய்யா....உங்களுக்கு தகவல் கூட தராம எரிச்சிட்டாங்கய்யா.....அழுதான்.

செல்வம்....செல்வம்.....அழுதார் கண்ணுல இருந்து கண்ணீரு ஆறாக கொட்டியது. திடீரென்று எழுந்தவர் முகத்தை துடைத்தார்,நான் அழமாட்டன்டா சின்னய்யா

நீ...தூக்கநாயக்கன்பாளையம் காங்கிரஸ் தலைவர் பெரியண்ணன் கிட்ட போய் சொல்லு, நான் வெளிய வரனும், சின்னயைன் சரிங்கய்யா நான் புறப்படுறனுங்க எனக்கு காலையில தானுங்க கோபால்டு காரு நான் ரோட்டு ஓரமா படுத்து தூங்கிட்டு காலையில கிளம்பி ரெண்டு நாள்ள தகவல்
சொல்றனுங்க என்று கிளம்பினான் சின்னனையன்.

சில நாட்களில் பெரியண்ணன் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியதும்,சிறையில் இருந்து உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெற்று துரையை விடுவித்தனர்,நேராக ஆத்திரத்தில் ஊர் வந்ததும் தோட்டத்திக்கு போனவுடன் தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேகமாக ஊருக்குள் இருந்த அண்ணணின் வீட்டிக்கு போனார்,இவர் போன வேகத்தை பார்ததவர்கள் கூட்டமாக பின் தொடர்ந்தனர் ஏதோ நடக்கப்போகுது என்று வேடிக்கை பார்க்க....சிலர் சமாதானமும் கூறிக்கொண்டே வந்தனர்...எதையும் காதில்
வாங்காமல் வீட்டுக்கு முன் நின்றார் வானத்தைப்பார்த்து சுட்டார்,துரையின் அன்னி ஓடிவந்து காலைக்கட்டிகொண்டார்கள், வயதான இருவரின் ஆத்தா....எம் பேரனை கொன்னிட்டியே..கொலைகாரா நீ நாசமா..போவே என்று சாபம் விட்டது.மன்னை தூற்றியது! துப்பாக்கிய கீழே போட்ட துரை,

கிளவி மனசாட்சிய தொட்டு சொல்லு? உன் பேரனை கொன்னது நானா?நீ..என்னை வயத்தில இருக்கும் போதே கலைச்சிருக்கலாம் கிளவீ, பெரிய மகனைதாங்கிதாங்கியே இன்னும் எத்தனை பேர கொல்லப்போறான்னு தெரியலையே?என்று அழுதார் சொந்தம்பந்தம் எல்லாம் வந்து துரையை நன்றாக பிடித்துகொண்டனர்,

டேய் பொன்னம்பலம் உன்னை மன்னோடு மன்னா ஆக்குலை நான் ஒரு அப்பனுக்கு பிறக்கலை விடுங்கய்யா என்று உதறிவிட்டு தோட்டம் சென்று விட்டார்,


சில நாட்கள் கழித்து...

தமிழகம் 1957 ல் ஒரு சட்டமன்ற தேர்நதலை சந்தித்து,ஊர்தலைவராக இருந்த பொன்னம்பலம் அந்த தேர்ந்தலில் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் நிற்க மனு செய்திருந்தார்,இதை கேள்வி பட்ட துரை திமுக சார்பில் மனு கொடுத்தார் தீவிர பிரச்சாரமும் நலிந்த,தாழ்த்தப்பட்ட மக்கள்,துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர்

பெரும்பான்மையாக வெற்றி பெறவில்லையென்றாலும்,முதன் முதலில் அன்னபோஸ்ட்டாக இருந்த பொன்னம்பலத்தை, காங்கிரஸ் தலைவரை வீழ்த்தியது இந்த வெற்றி.

112 தொகுதியில் போட்டியிட்ட இடத்தில் திமுக பதினைந்து தொகுதியில் வெற்றி பெற்றது அதில் துரையும் ஒருவர்.பெரியாரே திமுகவிற்க்கு எதிராக பிரச்சாரம் செய்தும் வெற்றிபெற்றார்கள் திமுகவினர்,துரை அதற்க்கு பிறகு எம்.ஜி.ஆரின் தீவிரரசிகர் என்பதால் அவர் திமுகவை விட்டு பிரியும்பொழுது அதிமுகவில் ஐக்கியமானார் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டார்,
அவரின் மறைவுக்கு பின் பிளவு பட்ட அதிமுகவில் ஜானகி அம்மையாரின் அணியில் இருந்தார்,பிறகு ஒன்று பட்டபோது ஓரம் கட்டப்பட்டார்,கட்சியில் இருந்து முழுவதும் விலகினார்,பிறகு சமீபமாக என்பது வயதுக்கு மேல் மூச்சு குழாயில் ஏற்ப்பட்ட நோயினால் மரணமடைந்தார்,அவருக்கு மாலை மரியாதை செய்ய சென்றபோது அறிஞர் அண்ணாவின் உருவமும் அதிமுக கொடியும் வலது கையில் பச்சை குத்தியிருந்தது கண்டபோது மனது வலித்து,இவர்களை போன்றவர்களின் இரத்தத்தால்தானே இரு
கட்சிகளும் உருவாகியுள்ளது இவரை உதாசினப்படுத்தியவர்களுக்கு வாடையடிக்கவில்லையா? ஊழல் நாற்றத்தில் இந்த நாற்றம் தெரியவில்லையோ?பல கேள்விகள் மனதில் எழுகின்றன........



டிஸ்கி : பொன்னம்பலம் இருபதுவருடம் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்தபடுக்கையாக இருந்து மலம்,ஜலம் போகக்கூடமுடியாத நிலமையில் பெரும் துன்பத்தை அனுபவித்து நான் சிறியவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார்.

இந்தக் கதையில் உள்ள பெயர்கள் கற்பனையானது,சம்பவங்கள் 
உண்மையானது,





1954 முதல் பாகம்


1954 இரண்டாம் பாகம்

Read more...

காதல்கதைகள் 3 (1956) தொடர்ச்சி

>> Wednesday, December 14, 2011




செல்வம் பள்ளி முடிந்து வரும்போது...  ஊருக்கு செல்லும் குறுக்கு வழியில் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் உக்கார்ந்து கொண்டான்,மாது கடைசியாக மெதுவாக வந்து கொண்டு இருந்தாள், இவனை தூரமாகவே பார்த்து விட்டாள்....எதற்காக நிற்கிறான் நம்மை மேலும் அவமானப் படுத்துவானோ என்கிற ஐயமும் கொண்டாள்,திரும்பிச்சென்று விடலாமா? எனவும் சிந்தித்தாள்! சரி..! என்னதான் நடந்துவிடப்போகிறது பார்த்துவிடலாம் என ஒரு தைரியத்தில் மெதுவாக வந்தாள்.

பக்கத்தில் வந்ததும் இவனை கண்டுகொள்ளாமல் சென்றாள்,
ஏய்..புள்ள நில்லு என்றான்.., மாது நிறுத்தவில்லை அவள் சென்றுகொண்டுஇருந்தாள் சைக்கிளை எடுத்துகொண்டு வேகமாக மிதித்து முந்தி சென்று குறுக்கே நிறுத்தினான்..., ஏலே...மாது காது கேட்குமா இல்லையா?நீ...பாட்டுக்கு போய்ட்டே இருக்க.....என்றான் செல்வம்

சைக்கிளை காலை ஊன்றி நின்ற மாது,நீங்க... கூப்பிட்டா நிக்கனும்கிறது அவசியம் இல்லை....உங்களுக்கும்..எனக்கும் என்ன சம்மதம் நீங்க கூப்பிட்டா நிக்கிறதுக்கு என்றாள் காட்டமாக.

செல்வத்திற்க்கு கோபமும் ஆச்சர்யமாகவும் இருந்தது, மாது இவ்வளவு கோபத்தினை காட்டுகிறாளே...!ஊரே நம்மை கண்டுபயப்படும் போது இவள் இப்படியிருக்கிறாளே!

உன்னை கட்டிக்க "சம்மந்தமா" பேசப்போறேன்......பள்ளியில தண்ணீரை மேல ஊற்றிவிட்டேன் தெரியாமல் நடந்திருச்சு...மன்னிச்சிடு....என்றான் செல்வம்,

மன்னிப்பா?ஆச்சர்யந்தான்..! என்று மனதில் நினைத்தாலும் வார்த்தைகளில் வெளியிடவில்லை மாது! நான் அப்பவே மறந்துவிட்டேன் இனிமேல் என்னிடம் பேசாதிங்க! யாரவது தவறா நினைப்பாங்க! எங்கப்பன் காதுக்கு போனதுன்னா என்னை வெட்டி போட்டிரும் !என்று பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டாள் மாது.......!!
-----------------------------------------------------------------------------------------------------------

செல்வம் உக்கார்ந்து இருந்த இடத்தில் துளிர் விட்டிருந்த கிலுவை மரத்தின் பசும் இலையை பறித்து சிந்தனையில் இருந்த பொழுதில் ஒரு பீப்பி 
செய்திருந்தான் வாயில் வைத்து மெதுவாக ஊதிப்பார்ததான் சத்தம் வந்தது கிலுவை பீப்பியை(இலையை வைத்து விசில்) ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு அருகில் கேட்ட கொலுசு சத்தம் கேட்டு நிமிர்நதான், மாது நின்று கொண்டு இருந்தாள்.

என்ன ஜயா செய்து கொண்டு இருக்கிங்க என்றவள் செல்வத்தின் கையை பார்த்தவள் பீப்பி ஊதுகின்ற வயதோ....?உங்களுக்கு...என்றாள் கேலியாக

நமக்கு குழந்தை பிறந்தா ஊதுவதற்கு வேண்டாமா அம்மணி என்றான்

ஆ...அது வேறா அப்படியொரு ஆசை உங்களுக்கு இருக்கா? என்றவள் யாராவது பார்த்துடுவாங்க வாங்க இருட்டுக்குள்ள போயிடலாம் என்றாள்,
சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இருட்டாக இருந்த தோட்டத்துக் கிணற்றின் மதில் சுவர்க்கு பின்னால் உக்கார்ந்து கொண்டார்கள்.

மாதுவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான் செல்வம் ஏ..பொண்டாட்டி இவ்வளவு நேரம் என்றான் செல்லமாக..!

இன்னிக்கு ஊர்ல மொம்மலாட்டம் நடக்குது, எல்லாம் பார்த்திட்டு இருக்காங்க....,யார் கண்ணிலையும் தட்டுபடாம வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது புருசா....!என்று அவன் தலையை கோதினாள்.

அப்படியே அவள் மடியில் தலைவைத்து படுத்தான் செல்வம்...,
ஒன்னு கொடுக்கிறது என்று கண்ணத்தை காட்டினான் தன் விரலால்....,
அதல்லாம் முடியாது! கண்ணத்துல முத்தம் கேட்பாய், பிறகு வேறு கேட்பாய்,என்னால் முடியாது சாமி ஆள விடு.....!

அட இவளைப் பாருய்யா! நான் உன்னை தொடும்போது வேண்டாம் என்று சொல்வதுதானே?

கோபம் வந்தது மாதுக்கு... !ஆம்பளை நீ.....ஆசைய அடக்கமுடியாது, நான் பொம்பளை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும் ஆசையை அடக்கி வைக்கனும், இல்லையினா இவ அனுபவசாலின்னு முடிவு செய்திடுவிங்க....,உங்க ஆம்பிளைப் புத்தி! அப்படியென்றாள் மாது,

ஆமா....ஆமா நீ...அனுபவசாலிதான்.....என்றான்....

தன் பட்டு கைகளால் செல்வத்தின் மூக்கை பிடித்து ஆட்டியவள், என்னை இந்தமாதிரியாக்கியதே நீதானே......திருடா என்றாள்....,செல்வம் அவளை இருக
அனைத்து அவளின் அதரங்களை பற்றினான், தன் உயிர் முழுவதும் ஆவியாக அவள் உடலினுள் பாய்வதாக உணர்ந்தான்......

விடு...!விடு....!என்று திமிறி விடுபட்டு எழுந்தாள் மாது.

ஏன்? என்ன ஆச்சு என்றான் செல்வம்?

இன்றைக்கு முடியாது, நான் தூரமாக இருக்கிறேன்.....!தொடாதே தீட்டு.....!சும்மா உன்னைப் பார்க்கனும் போல இருந்தது அதான் வந்தேன் என்றாள்...

சரி...!சரி...!விடு.. விடு..உன்னை வீட்டுகிட்ட விட்டுட்டு நான் போகிறேன் என்று ஒரு எட்டு வைத்திருப்பார்கள், அதிர்ந்து போனார்கள் இருவரும்,
சித்தப்பா "துரை" கண்கள் சிவக்க டபுள் பேரல் துப்பாக்கியை நீட்டியபடி நின்றுகொண்டுருந்தார்..........

முந்தைய காதல் கதைகள் படிக்க

1956 இதன் முந்தைய பாகம்

--------------------------------------------------------------------------------
வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...


தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

Read more...

காதல்கதைகள் 3 (1956)

>> Sunday, December 11, 2011


காதல்கதைகள் 3

1956


(முதன் முதலில் திமுகவின் அரசியல் பிரவேசம் நடந்த ஆண்டுதான் கதையின் தலைப்பு, திருச்சியில் மாநாடு நடத்தி ஓட்டெடுப்பு நடத்தி அரசியலில் இறங்கி தேர்தலை சந்தித்தார் அறிஞர் அண்ணா இதையே இந்த கதையின் தலைப்பாக வைப்பதின் காரணம்? மறைக்கப்பட்ட சில உண்மைகள் இந்த கதையில் உள்ளது மட்டுமின்றி திமுக வின் அஸ்திவாரமாக இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை,உயிருடன் இருந்த போது இப்போதைய எச்சிலைவாதிகள்
யாரும் சீந்தவும் இல்லை!இறந்த பிறகும் இறுதிமரியாதையும் தரவில்லை அப்படிப்பட்ட ஒருவரின் மரன வாக்குமூலம்தான் இந்தகதை, அப்போதைய காலகட்டத்தில் நடந்தவை சில சம்பவங்கள் தனிக்கை செய்யப்பட்டு)

இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போகும் படகு போல, நிலா வானத்தில சென்று கொன்டு இருந்தது,செல்வம் தன் சைக்கிளை மிதித்தான், பழக்க பட்ட
சாலை என்பதால் அந்த இருட்டிலும் குண்டும்,குழியும்,பார்த்து ஓட்டினான்,அரசமரத்தின் அடியில் சைக்கிளை நிறுத்தினான், ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தான், சுவர்கோழி கத்திகொண்டிருந்தது காதை என்னவோ செய்தது.

மாதுவை எங்கே காணவில்லை!! இன்றைக்கு வரமாட்டாளா? இல்லையே வருகிறேன்! என்றல்லவா கூறினாள்! மாதுவை நினைக்கும் போது ஏனோ மனம் புது மின்சாரம் பாய்வது போல் அல்லவா இருக்கிறது! அவளுடைய அழகும்,உடல் கவர்ச்சியும் என்னை ஏன்?இவ்வளவு பைத்தியமாக செய்துவிட்டது,அப்படியென்றும் அழகியில்லையென்று.' விட்டு விடமுடியாது!நல்ல சிகப்பு நிறம்,சிகப்பு நிறமுடையவர்களுக்கு உடல் கட்டமைப்பாக இருக்காது,கருப்பான பெண்களுக்கு இருக்கும் உடலின் கட்டமைப்பு சிறப்பான ஓவியத்தை போல் இருக்கும், இது ஆண்களுக்கும் பொருந்தும்,ஆனால்! மாதுவுக்கு நிறமும்சிகப்பு! உடலும் கட்டுடல்!! சிலருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்,அதற்கேற்ற ரோஸ் நிற உதடுகளும், பெரிய கண்களும்,அனைத்து ஆண்களையும் சுன்டிஇழுக்கும்.

சின்னவயதிலிருந்து மாதுவைத் தெரியும் செல்வத்தின் அப்பாதான் அன்ன போஸ்ட்டு பிரசிடன்ட்,அன்னபோஸ்ட் என்பது சாதாரணவிசயம் கிடையாது
அனைத்து சாதியினரும் வாழும் கிராமத்தில் ஒற்றுமையாய் அனைவரும் பேசி தீர்த்து இவர்தான் பிரசிடன்ட் என முடிவு செய்து போட்டி வேட்பாளர் இல்லாமல் ஜெயிப்பது,பாரம்பரியமாய் ஊர் தலைவராய் இருந்த குடும்பம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது கொடுத்த பூமிகளை ஆண்டு அனுபவித்து, ஊரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசு செல்வம்.

அறிஞர் அண்ணாவின் திமுக கட்சி மெதுவாக கிராமத்தில் எட்டி பார்தத நேரம்,பெரிய பண்ணைகளும்,நிலசுவான்களும்,காங்கிரஸில் இருந்தனர்,
அவர்களை பிடிக்காதவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் திமுகவை நம்பியிருந்தனர்,அண்ணாவின் பேச்சாற்றல் சமானியமக்களை சிந்திக்கவைத்துக்கொண்டு இருந்தது திமுகவில் இணைந்தவர்களுக்கு நீர்,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது,அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டது,பெரும்பான்மையோர் பெரும்புள்ளிகளான காங்கிரஸ்காரர்களை எதிர்க்க பயம் கொண்டு வாழ்ந்து வந்தனர்,செல்வத்தின் பாட்டனார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர், தன்னுடைய ஆயிரம் ஏக்கர் நிலத்தை வினோபாஜி அவர்களின் தலைமையில் நிலம் இல்லா ஏழைகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தினால் பிடுங்குவதற்கு முன்னரே வழங்கினார்,ஆனால் படிக்காத ஏழை மக்களிடம் தாம் ஒரு "தர்மபிரபு" மாதிரி காட்டிக்கொள்வார், தாழ்ந்த இனத்தைசேர்ந்த மக்கள் தங்கள் குலசாமி போல் வேண்டுவது வேடிக்கையானது! ஒன்றுதான்,அப்படிப்பட்ட பாட்டனாருக்கு பிறந்த மகன் பொன்னம்பலம்தான் செல்வத்தின் அப்பா,அவரும் தன் சாதி வெறியை கைவிடாமல் அந்த கிராமத்தை ஆட்சி செய்து வந்தார்.

ஆனால் செல்வமோ மாறுபட்ட குணத்தை கொண்டிருந்தான் காரணம் அவனுடைய சித்தப்பா துரை,திருமணம் ஆகாதவர் திமுகவின் தீவிர விசுவாசி கொஞ்சம் படித்தவர்,அண்ணாவின் பேச்சோ!கலைஞரின் பேச்சோ கோபி,சத்தி,எங்கு நடந்தாலும் தன்னுடைய ஒற்றை குதிரை வண்டியில்,சில சமயம் தனியாக குதிரையில் செல்வார் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகர்,எங்கு எம்.ஜி.ஆர் படம் போட்டாலும் செல்வத்தை அழைத்துக்கொண்டு பொய்விடுவார்,வீட்டிலுள்ள பணத்தை திருடி திமுக கொடி கட்டவும்,மது வாங்கி தரவும் தாராளமாய் செலவு செய்வார்,

அதனால் வீட்டினுள் விடமாட்டார்கள் தறுதலை என்று திட்டுவார்கள்,சின்னசின்னதாய் சண்டை பெரிதாக,வீட்டை விட்டு தோட்டத்தில் போய் தங்கி கொண்டார், மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தோட்டம் என்பதால் அப்பொழுது அனைவரும் துப்பாக்கி வைத்து இருந்தனர்,டபுள்பேரல் துப்பாக்கி இவரிடம் மட்டும் உண்டு,மான்,மந்தி,கேழையாடு,எதுவாக இருந்தாலும் ஒரே அடிதான்,கறியை தின்றது போக உப்புகண்டம் வேறு போட்டுவைப்பார்கள்.

எதுவும் கிடைக்காத பொழுதில் சாராயத்திக்கு தொட்டுக்க பயன்படுத்துவார்கள்,குதிரைவண்டி ஓட்டுவதில் கோவை ஜில்லாவில் இவரை விட்டா ஆள் கிடையாது,சேலம்,ஈரோடு,பொள்ளாச்சி,எங்கு போனாலும் இவர்தான் வெற்றிபெறுவார்,ஆனால் வெற்றிப் பணம் வீடுவந்து சேராது அங்கேயே முடிந்துவிடும்,சாராயம்,பொம்பளை,என எல்லா முடிச்சிட்டுத்தான் வீடு வந்து சேருவார்,
-------------------------------------------------------------------------------------------------------------
''தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம், என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்"
-------------------------------------------------------------------------------------------------------------

"வண்ணார்" சமுதாயத்தை சேர்ந்த தங்கவேலன்,இவருடைய சின்ன வயது நண்பர்,இவர் என்ன சொன்னாலும் கேட்பார்,இவர் திமுகவில் சேர்ந்தபோது அவரும் சேர்ந்தார் ஊர் கட்டுபாடு போட்டு,துணி யாரும் கொடுக்கவில்லை, இவரிடம் வந்து அழுதார்,டேய் தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம்! என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்,அதனால் ஊர்ல உள்ள "உயர்ஜாதி"யினர் இவரை மதிக்க மாட்டார்கள்,ஆனால் "கலைஞரே" அந்தப்பகுதி பிரச்சாரத்திக்கு வரும் போது துரை எங்கப்பா? என்பார் அந்த அளவு கட்சியில் செல்வாக்கு பெற்றவர் செல்வம் துரையோடு சுற்றுவதாக தெரிந்த பொன்னம்பலம் ஆரம்பத்தில் கண்டித்துப்பார்ததார் பிறகு ஒருத்தன்தான் நம்ப குடும்பத்துல தறுதலையின்னு நினைச்சேன் இப்ப இரண்டு ஆயிடுச்சு என்று விட்டுவிட்டார்,
எதைஎதையோ நினைத்து,மாதுவை மறந்து விட்டோமே......என செல்வம் மனதிலேயே தன்னை கடிந்து கொண்டான், எட்டாவது படிக்கும் போது என்று நினைக்கின்றேன்...



சாப்பிட்டுவிட்டு தூக்கிலிருந்த தண்ணீரை சன்னலில் ஊற்ற சரியாக அந்தப்பக்கம் வந்த மாதுவின் மீது சாப்பாடும் தண்ணீருமாய் ஊற்ற அவமானத்தில் கூசி போனாள் மாது, தாழ்ந்தகுலத்தில் பிறந்த அவள் பள்ளியில் ஏற்கனவே சக மாணவர்களின் ஏளனத்திலும்,புறங்கணிப்பிலும் இருந்தவள்,மேலும் அவமானப்படுத்த பட்டதாக உணர்ந்து அழுதாள்,செல்வத்திக்கு மனம் ஏனோ வேதனைப்பட்டது ஒரு மன்னிப்பு கூட கேட்கமுடியாத சூழ்நிலை அப்பொழுது ஆண் மாணவர்கள் பெண் மாணவியிடம் பேசக் கூடாது!அதுவும் தாழ்ந்தகுல பெண்ணிடம் பேசினான் என்றால் ஆசிரியர்கள் முதுகுதோலை உரித்துவிடுவார்கள்,ஆனாலும் எப்பாடு பட்டாவது மாதுவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என தீர்மானமிட்டான் செல்வம், மன்னிப்பு கேட்டானா செல்வம்? அடுத்தபதிவில் பார்க்கலாம்...........

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP