புத்தாண்டு வாழ்த்து படம்(ANIMATION GIF IMAGE)
>> Thursday, December 29, 2011
புத்தாண்டு வாழ்த்து அசைவு (Animation GIF Image )படங்களை நாமே உருவாக்கலாம்...அதற்காக நிறைய வலைத்தளங்கள் இணையத்தில் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன....அதில் நம்முடைய புகைப்படம்,எழுத்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதில் ஒன்று பார்க்க கிளிக் செய்யவும்...திறந்து கொண்டீர்கள் அல்லவா....இப்பொழுது எளிய முறையில் மிகச்சிரமமான அசைவு படத்தை நீங்களே உருவாக்க போகிறீர்கள்.
வலைதளத்தை திறந்ததும் வரும் படம்
கிளிக் செய்தவுடன் வரும் படம்
(+) பச்சைக்கலர் பட்டனை அமுக்கவும்....
இந்தமாதிரி படம் வரும்
இதுல முதலில் உள்ளதில் உங்க படத்தை இல்லையினா! எம்படத்தைக்கூட வச்சிக்குங்க!(யோவ்...நீ..பெரிய அப்பாடக்கரு...தமிழ்பேரண்ட்ஸ்)
விடுங்க...விடுங்க....Abc கிளிக் செய்து உங்களுடைய வாழ்த்து
வாசகங்களை டைப் செய்திடுங்க.....
இதோ இப்படித்தான்.....உங்க வலை தளத்து பெயரைப் இடுங்கள் என் தளத்து பெயரைப் போட்டு என்னை பிரபல படுத்திராதீங்கோ!
(மவனே நீ...மேல சொல்லுறியா....இல்லை ஒரு கீறல் போடட்டுமா..? மனோ.....)
சரிங்க அரசியல்ல இதெல்லாம் சகஜங்க.....
அடுத்ததா வருவது..இந்தபடம்
இதுல டேக் படத்தை கிளிக்குங்க (மஞ்சள் கலர் வட்டமிட்டது)
அடுத்ததா வரும் படம்
இதுல DRAFT கொடுங்க....விருப்பம் உள்ளவங்க HI-RES கொடுங்க என்ன பிரச்சனைன்னா வலைத்தளத்தில வைத்திங்கன்னா SLOW கனெக்சன் உள்ளவங்க சிஸ்டத்தில நுரை தள்ளிரும்....(அடிங்...எங்களுக்கு தெரியாதா....தமிழ்வாசி)
பிராஸஸ் ஆகும் அதன் பிறகு
பிறகு வரும் படம்
நண்பர்ஸ் .,அன்ட் தோழிஸ் இது உதாரணம்தான் உள்ள நிறைய இருக்கு முயற்சி செய்யுங்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.








