அரசியலில் குதித்த பிரபல பதிவர் பதிவுலகமே…அதிர்ச்சி..!

>> Wednesday, December 21, 2011
ஒபாமா மற்றும் அவர் குழுவினர் வியக்கும் வண்ணம் நம் பதிவர் என்ன செய்தார்?

உயர்திரு நக்கீரன் என்பவர் சமீப காலமாக நாய்நக்ஸ் எனும் வலைப்பதிவை நடத்தி வந்தார் இவர் யார் பதிவுக்கும் சென்று ஓட்டும் போடமாட்டார், கமெண்ட் போடுவார் யாருக்கும் புரியாதவாறு ஆங்கிலத்தில் போடுவார், நம் பதிவு பிரபலமாகவில்லை என்கிற கவலை அவரை அரித்தது(சோரியாசிஸ் அல்ல) மனதை அரித்தது.

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் டிக்கட் வாங்காமல் புகைவண்டியில் வந்து கலந்துகொண்டார்,முட்டை பனியாரத்தை உண்டுகொண்டு சிந்தித்ததில்,நல்ல சிந்தனை அவர் மனதில் உதிர்ந்தது அது என்னவென்றால் பதிவர்களை மிரட்டி தன்னை பற்றி புகழ்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார்,எழுதவில்லை எனில் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தையால் திட்டி எழுதுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார் பயந்த வீடு சுரேஸ்குமார்தோத்தவன்டாசெந்தில்,தமிழ்வாசி பிரகாஸ்,தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்,சிபி செந்தில்குமார்,மெட்ராஸ்பவன் சிவக்குமார், ஆகியோர்'  மற்றும் போனிலும்! மிரட்டல் விட்டதால் எப்பொழுதும் அருவா! சகிதம் இருக்கும் நாஞ்சில் மனோவே பயந்து பதிவிட்டிருந்தார் விக்கியுலகத்தை மிரட்டியதாக தெரிகிறது அவர் தனக்கு இராணுவத்தில் கொடுத்த ரிவால்வர் இருப்பதாக கூறியதும்,சார் அமைதியாகிவிட்டார்.

அனைத்து பதிவர்களும் அவரை பற்றிய செய்தியை வெளியிட்டதும் உளவு துறை நமது முதல்வரிடம் தெரிவித்த்து, ச்சிகலாவை வெளியேற்றி விட்டதால் நமது முதல்வர் மன அமைதிக்கு, ஒரு விகடகவி வேண்டும் என்கின்ற காரணத்தினால் நமது மாண்புமிகு நாயாரை(நாய்நக்ஸ்)இனி இப்படித்தான் அழைக்கவேண்டுமாம்,அழைத்து மேல் சபை உறுப்பினராக பதவி கொடுத்து புதிதாக பதிவர் துறை ஏற்படுத்தி அவரை அமைச்சராக்கினார்.
அம்மாவை சந்தித்த போது எடுத்தபடம்

 உடனே அடுத்த நாளே தமிழ் பதிவர்களுக்கு கூகுள் விளம்பரம் தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார் நமது தானை தலைவர்
போராட்டகளத்தில் நம் பதிவர்
மேலும் தனக்கு ஒரு கார் வேண்டும் என்று சிபியை அழைத்துக்கொண்டு பென்ஸ் கார் விற்பனை கூடத்திக்கு சென்றார் நம்ம தலைக்கு சைக்கிள் கூட ஓட்டதெரியாததால் சிபியை அழைத்துக் கொண்டு போனார்.
கார் வாங்கிய போது எடுத்த படம்
மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்ப்ப்பட்டு சிபியை இயக்குனராக போட்டு ஆத்தா நான் அதுல பாசாயிட்டேன்.என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார், நமிதா கதாநாயகியாக நடித்தார்.
படத்தின் டிரைலரில் இருந்து
ஒரு படத்தில் நடித்தவுடன் நடிகர் சங்க தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார் நமது பதிவர்
நடிகர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தபோது
படம் நன்றாக ஓடியது தேசிய விருதும் பெற்றது அந்தப்படம்
தேசிய விருது பெற்றதுக்கு பாராட்டு விழா நடந்தபோது


இவர் செய்யும் கூத்துக்களால் நமது முதல்வர் மனமுருகி விலைவாசியை குறைத்துக்கொண்டார்

அதனால் நம் பதிவுலகில் இருந்து சென்ற ஒருவர் இவ்வளவு சாதனை செய்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வணங்குவோம்
நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க வாழ்க வாழ்கவே.......
சிதம்பரத்தில் இருந்து நமது செய்தியாளர்.....


33 comments:

Unknown 12:39:00 PM  

என்ன கொடும சுரேஷ் இது...பய புள்ள இம்புட்டு பேமஸ் ஆயிருச்சே ஹிஹி!

Admin 3:27:00 PM  

ம்..நல்லாத்தான் இருக்கு..கற்பனையும் வேலைப்பாடும் பிரமாதம்..இன்னும் கற்பனை பெருக வாழ்த்துகள்..

இறப்பதை எதிர்பார்க்கிறோம்

Unknown 5:51:00 PM  

அட்ரா அட்ரா, தானே அமர்ந்த தானைத் தலைவர், எங்களது அகில உலக கில்மா ஸ்டார் ஆருயிர் அண்ணன் அவர்களை பற்றி எழுதப்பட்ட இந்த கட்டுரையை பாராட்டி ஈரோடு மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர் திரு. வீடு சுரேஷ் குமார் அவர்களுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட கில்மா ஸ்டார் ரசிகர்கள் முன்பாக படகோட்டி படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா வழங்கப்படும் என்பதனை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown 6:59:00 PM  

@விக்கியுலகம்
//என்ன கொடும சுரேஷ் இது...பய புள்ள இம்புட்டு பேமஸ் ஆயிருச்சே ஹிஹி!//
அந்த கொடுமை எங்க போய்ச் சொல்ல...

Unknown 7:00:00 PM  

@மதுமதி
//ம்..நல்லாத்தான் இருக்கு..கற்பனையும் வேலைப்பாடும் பிரமாதம்..இன்னும் கற்பனை பெருக வாழ்த்துகள்..//
கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க மதுமதி

Unknown 7:03:00 PM  

@ஆரூர் முனா செந்திலு
//அட்ரா அட்ரா, தானே அமர்ந்த தானைத் தலைவர், எங்களது அகில உலக கில்மா ஸ்டார் ஆருயிர் அண்ணன் அவர்களை பற்றி எழுதப்பட்ட இந்த கட்டுரையை பாராட்டி ஈரோடு மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர் திரு. வீடு சுரேஷ் குமார் அவர்களுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட கில்மா ஸ்டார் ரசிகர்கள் முன்பாக படகோட்டி படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா வழங்கப்படும் என்பதனை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

செந்தில் நான் சின்ன பையன் எதாவது நமிதா,அஞ்சலி குளிச்ச சோப்பு ட்ப்பா குடுங்க...

சி.பி.செந்தில்குமார் 7:41:00 PM  

அடங்கொய்யால, இருய்யா உன்னை மனோவை விட்டு தூக்க வைக்கறேன்

CS. Mohan Kumar 7:41:00 PM  

ஒரு வாரமா ஈரோடு பதிவுகளை விட இவரை பத்திய பதிவுகள் தான் நிறைய ஓடுது போல...

சி.பி.செந்தில்குமார் 7:43:00 PM  

நக்கீரன் திடீர் பிரபலம் ஆக்கிட்டேரே

வெளங்காதவன்™ 9:25:00 PM  

யோவ் நாய்நக்ஸ்....

அப்பாலீக்க வூட்டாண்ட வந்து பாரு!!!!

உனிக்கோசரம் எல்லாம் ரெடியாக்கிம்...

#வீடு சார்...
:-)

கோகுல் 10:22:00 PM  

ஓவர் நைட் ஒபாமா நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க!

தமிழ்வாசி பிரகாஷ் 10:48:00 PM  

இம்புட்டு பிரபலத்தை நக்ஸ் எதிர்பார்த்திருக்க மாட்டாரு... அவர வச்சு பதிவு எழுதிய அனைவருக்கும் நன்கொடையாக சில கோடிகளை வழங்க நக்கீரர் முன் வர வேண்டும்...வாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

Mathuran 10:56:00 PM  

ஹா ஹா நல்லாத்தான் கடிக்கிறீங்கண்ணே

Unknown 1:28:00 AM  

நம்ம ஆஸ்தான பலி ஆடு நக்கீரன் அண்ணன் ஆளையே காணும்?

Unknown 1:32:00 AM  

@சி.பி.செந்தில்குமார்
பார்ததுங்க பெரிய ஆளாயிட்டாரு...வில்லங்கமாயிறப்போகுது

Unknown 1:33:00 AM  

@மோகன் குமார்

வருகைக்கும்...கருத்துரைக்கும்..நன்றிங்க...

Unknown 1:34:00 AM  

@சி.பி.செந்தில்குமார்
அதாபாருங்க தொபுக்கடீர்ன்னு அரசியல்ல குதிச்சிட்டார்....

Unknown 1:35:00 AM  

@வெளங்காதவன் அதே...அருவா தீட்டிவெச்சிருக்கேன் வரட்டும் வரட்டும்..ஹிஹி

Unknown 1:35:00 AM  

@கோகுல் ஆமாங்க...ஆமாங்க....

Unknown 1:37:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
நல்லாத்தா இருக்கே..ஆனா அந்த ஆளு கஞ்சபிசினாரியாச்சே...30ரூபாய்கே இன்னும் தூங்கலையாம்...ஹிஹி

Unknown 1:38:00 AM  

@மதுரன் எல்லாம் நாய்நக்ஸ் உபயம்...

Unknown 1:43:00 AM  

@! சிவகுமார் ! மொபைல்ல பார்த்துட்டு மிஸ்டுகால் விட்டாரு தலைவர்...நான் கூப்பிட்டேன் தம்பி.. இன்னும் நல்லா உயர்த்தி எழுது...அப்படியே மன்மோகன் கூப்பிட்டாக...ஆப்பிரிக்கா அதிபர் கூப்பிடாக....ன்னு எழுதுன்னு..சொன்னாரு....

rajamelaiyur 4:55:00 AM  

கலக்கிடிங்க பாஸ்

rajamelaiyur 4:56:00 AM  

அண்ணன் ஆளுதான் டெறேர்.. குரல் குழந்தை

இருதயம் 5:07:00 AM  

ஹி.....ஹி. .......இவர் கொஞ்சம் சீமான் போல இருக்கிறார் , செந்தமிழன் போல (?) தமிழுக்கு ஏதும் போராட்டம் செய்வாரா ?ஹி ...ஹி

நாய் நக்ஸ் 6:09:00 AM  

முடிஞ்சிடுச்சா ...
இன்னும் உலக அளவுல பேசுன எப்படி ???

யூனிவேர்ஸ் லேவலுல கொண்டு போங்க ....

Unknown 6:46:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜா தொட்டில்கட்டி விளையாடுவமா...ஹிஹி

Unknown 6:47:00 AM  

@இருதயம் ஆஹா...பிரியாணிக்கு வேனா..போராட்டம் செய்வார்...ஹஹ

Unknown 6:50:00 AM  

@NAAI-NAKKS இதுக்கு மேல முடியலை....ஸ்..பா....எப்படியோ..ஹிட்ஸ் வாங்கிட்டீரு...ஒழுக்கமா பேசுன பணத்தை அக்கவுண்ட்ல போடுங்க சார் சீக்கிரம்....

முத்தரசு 7:18:00 PM  

பார்ரா....இவ்வளவு சீக்கிரமா முன்னுக்கு வந்துட்டாரே

நிரூபன் 7:27:00 PM  

நண்பா,
ஹே....ஹே..

நக்கீரன் அண்ணரை வைச்சு கிராபிக்ஸ், போட்டோசொப் உத்தியுடன் ஒரு கொல வெறிப் பதிவு..
படங்கள் தான் பதிவிற்கு இன்னும் மெருகூட்டுகிறது.
அப்புறம் விலைவாசி குறைச்ச மேட்டர் ரொம்ப காமெடி பாஸ்.

சக்தி கல்வி மையம் 2:26:00 AM  

நக்கீரர் கலக்குறார்..

இந்த போட்டோக்களில் உங்கள் உழைப்பு தெரிகிறது..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP