விவேகானந்தரும்....தக்காளி விக்கியும்.....

>> Thursday, December 1, 2011

கூடிய விரைவில் ஒருத்தர் இப்படி ஒல்லியாகப்பேறாருங்க....

வணக்கம் நண்பர்களே...எப்படியிருக்கிங்க...பிரபல!! "வீடியோ" பதிவர் நேற்றைக்கு ஒரு பதிவு போட்டிருந்தார் நீங்களும் குடிச்....சீ...சீ படிச்சிருப்பிங்க...மது குடிப்பதை பற்றியது, மது குடிப்பவர்கள் அதை நிறுத்துவது நல்லது என்றாலும்! உடனே நிறுத்துவது ஆபத்தானது! என்பது மருத்துவ உண்மை...,பிறகு என்ன செய்வது சிறிது....சிறிதாக...நிறுத்தவேண்டும் அல்லது "ஆல்கஹால்" இல்லாத மது அருந்தலாம்... ஆல்கஹால் இல்லாத மதுவா? இந்தாளு நைட்டு....ஏத்திக்கிட்டு பதிவை டைப் பண்ணியிருப்பானோ...என்று யோசிக்காதிங்க...(non alcoholic wine) எல்லா மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு லிட்டர் 450ரூபாய் வரை வரும் அதுவும் ஆஸ்திரேலியா ஆப்பிள் ஒயின் சுவையானது மட்டுமில்லாது இரவு நன்றாக தூக்கம் வரும், பேரிச்சை ஒயின்,அமெரிக்கன் ஒயின் கிடைக்கின்றது, வெளிநாட்டு நண்பர்கள் மூலம் பெற்று அருந்தலாம், இந்தியாவிலும் கிடைக்கின்றது, குழந்தைகளும் அருந்தலாம்.. நான் சொல்வது வரையறுக்கப்பட்ட எடையை விட குறைவாக எடையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்...எடை கூடும், பசியுன்டாகும்... குண்டான குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.


சரி!இப்ப என்ன விசயம்? என்றால்...மாப்பிளை நான் குடிக்கிறதை நிறுத்திவிட்டேன்...அதை பற்றி மக்களுக்கு தெரிய வேண்டாமா ஒரு பதிவு போட்டுட்டா....நல்லாயிருக்கும்...நானும் நிறுத்தின மாதிரி இருக்குன்னு சொன்னார்...மிகமிக மகிழ்ச்சி மாம்ஸ்.. நல்ல விசயம்தானே....!ஆனா? நான் கூறுகின்ற கதையை கேளுங்க....பிறகு பதிவுடுங்கன்னு சொன்னேன் அத...நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா......







விவேகானந்தர் ஆசிரமத்திற்கு... ஒரு அம்மையார் தன் மகனை அழைத்துக்கொண்டு வந்தார்,என்னுடைய மகன் அதிகளவில் சர்க்கரை (சீனி) உண்கின்றான் எவ்வளவு கூறினாலும் திருந்தவில்லை... நீங்கள் அறிவுரை கூறுங்கள்.. என்றார், விவேகானந்தர் இப்பொழுது நான் அறிவுரை கூற முடியாது! சனிக்கிழமை வாருங்கள் என்றார்.....

சனிக்கிழமையும் வந்தது! மறுபடியும் அம்மையார் மகனை அழைத்துக்கொண்டு வந்தார்....!விவேகானந்தர் இப்பொழுதும் முடியாது..அடுத்த சனிக்கிழமை வாருங்கள் என்றார்...அடுத்த சனிக்கிழமை வந்தார்கள் அப்பொழுதுதான் சர்க்கரை உண்டால் என்ன..என்ன கேடு வரும் என விரிவாக...அந்த சிறுவனுக்கு அறிவுரை கூறினார் விவேகானந்தர்,


அந்த அம்மையார் விவேகானந்தரிடம் ஏன் இதை நாங்கள் வந்த போதே கூறியிருக்கலாம் அல்லவா சுவாமி? என்று கேட்டார்... விவேகானந்தர்...எனக்கும் சர்க்கரை உண்ணும் பழக்கமுள்ளது, அதை முதலில் நான் நிறுத்திவிட்டால் தானே எனக்கு உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதி வரும் என்று கூறினார் 


அவர் நிறுத்திவிட்டு பதிவு போட்டுவிட்டார் இனி குடிக்கமாட்டார் என்று நம்புவோம் நீங்களும் எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் நிறுத்திவிட்டு பதிவு போடுங்க....அப்பொழுதுதான் நாம் ஒருவரை விமர்சிக்கின்ற தகுதி பெறுவோம் நன்றி!

சத்தியமா இது உள்குத்து பதிவு அல்ல....அப்படின்னு நான் போட்டாலும் நம்பவா போறீங்க.....

31 comments:

ராஜி 9:09:00 AM  

நம்பிட்டோம்.

சம்பத்குமார் 9:26:00 AM  

///எல்லா மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு லிட்டர் 450ரூபாய் வரை வரும் அதுவும் ஆஸ்திரேலியா ஆப்பிள் ஒயின் சுவையானது மட்டுமில்லாது இரவு நன்றாக தூக்கம் வரும்,
.//

தகவலுக்கு நன்றி நண்பரே..


விவேகானந்தர் கதை நல்லா இருக்கு..

//அடுத்தவங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி நாம் திருந்தனும் //

சரியான வார்த்தை

Unknown 4:09:00 PM  

கதை ஜூப்பரு....அடுத்தவங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி, நமக்கு அதை சொல்லும் அருகதை வேணும்யா..புரிந்துணர்வுக்கு நன்றி!

Unknown 5:48:00 PM  

@ராஜி

நீங்க ஒருத்தராவது நம்பினிங்களே....
வருகைக்கு நன்றி...

Unknown 5:49:00 PM  

@சம்பத் குமார்
வணக்கம் சம்பத் அவர்களுக்கு வருகைக்கு நன்றி...

Unknown 5:53:00 PM  

@விக்கியுலகம் மாம்ஸ் புரிந்துணர்வுக்கு நன்றி....வருகைக்கு நன்றி....

விச்சு 7:10:00 PM  

அவங்களாத்தான் திருந்தணும்.

SURYAJEEVA 7:50:00 PM  

எப்படி எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்து விட்டேன்... ஆகையால் இப்படி தான் வாழ வேண்டும் என்று கூற எனக்கு அருகதை இருக்கிறது என்று கண்ணதாசன் சொன்னதும் நினைவுக்கு வந்தது...
பதிவு ஒன்னாங் க்ளாஸ்

Unknown 7:54:00 PM  

@விச்சு
வருகைக்கு நன்றி....திருந்திட்டாருங்க...

Unknown 7:56:00 PM  

@suryajeeva
நானும் படிச்சிருக்கேன்....பதிவா போடலாம் சில விசயங்களை ஆனா...+18 போடனும் அதா பார்க்கின்றேன்

சி.பி.செந்தில்குமார் 9:25:00 PM  

சரி சரி விடுவிடு....

அம்பாளடியாள் 10:17:00 PM  

எடை குறைந்த பிள்ளைகளுக்கு இப்படி ஒரு பானமா!...நல்ல தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

MANO நாஞ்சில் மனோ 12:33:00 AM  

என்னாது தக்காளி அதை விட்டுட்டானா சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் நம்பவே மாட்டேன்...!!!

---நிறுத்தினால் நல்லதே---

MANO நாஞ்சில் மனோ 12:37:00 AM  

தக்காளிக்கும் கன்னியாகுமரி கடல்ல சிலை வச்சிற வேண்டியதுதான்...!!!

rajamelaiyur 1:42:00 AM  

//சத்தியமா இது உள்குத்து பதிவு அல்ல....அப்படின்னு நான் போட்டாலும் நம்பவா போறீங்க.....

//

ஹா ஹா ஹா ஹா

rajamelaiyur 1:42:00 AM  

விக்கி வாழ்க

Unknown 2:16:00 AM  

@சி.பி.செந்தில்குமார்
உங்க மேல சத்தியம் பன்னிருக்காருங்க...விட்டுட்டாருங்க..

Unknown 2:17:00 AM  

@அம்பாளடியாள்
வருகைக்கு நன்றி சகோ...

Unknown 2:17:00 AM  

@ரசிகன்
வருகைக்கு நன்றி ரசிகன் சார்...

Unknown 2:19:00 AM  

@MANO நாஞ்சில் மனோ
வைங்க...வைங்க...குழந்தைகளுக்கு அதோ பாரு விக்கி தாத்தான்னு காட்டலாம்....ஹிஹிஹி

Unknown 2:20:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜா
நிசமாதானுங்க....நம்புங்க....

ராஜா MVS 2:48:00 AM  

விவேகானந்தர் கதை அருமை...

தமிழ்வாசி பிரகாஷ் 3:43:00 AM  

விக்கி என்னமோ சொல்லிப்புட்டார். அதுக்காக ஒரு கதையை சொல்லி விளக்கனுமா? தண்ணி நல்லதுக்கு இல்லையின்னு சொல்லலாம்ல.



வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

நிரூபன் 7:08:00 PM  

வணக்கம் பொஸ், நீங்க செம கில்லாடி, ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.
விக்கி அண்ணருக்கும் லேசா ஒரு சின்னக் கடி, அதோட அல்ஹகோல் இல்லா வைன் பற்றியும் அருமையான விளக்கப் பதிவு!

ரசித்தேன் பாஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி 10:11:00 PM  

என்னது தக்காளி தண்ணியடிக்கறத நிறுத்திட்டாரா? யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தாரு..... ஏன் இப்படி ஆகிட்டாரு.....?

கூடல் பாலா 3:52:00 AM  

பொறுத்திருந்து பாப்போம் ....

பட்டிகாட்டான் Jey 4:45:00 AM  

ஆரஞ்சு சூசு குடிக்கும் விக்கி வாழ்க.

காட்டான் 4:48:00 AM  

நம்பீட்டேங்க இது ஒன்னும் உள்குத்தில்லைன்னு.!

Unknown 6:55:00 AM  

மாம்ஸ் இதன்மூலம் தாங்கள் சொல்ல வருவது?

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP