நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு...
>> Sunday, December 18, 2011
வாங்க...வாங்க....என்று வரவேற்று மரியாதை தருவதிலும் வரும் விருந்தினரை வயிறார உணவளிப்பதிலும் பெயர் பெற்ற பகுத்தறிவு ஊட்டிய "பெரியாரின்" எங்கள் மண் ஈரோட்டில்' பதிவர்சந்திப்பு...
பள்ளிக்கு' முதன் முதலாக செல்லும் பிள்ளைகள் போல்தான் சென்றோம், நானும் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும்,தயங்கி..தயங்கி.. சென்ற எங்களை வாங்க..வாங்க...என்று அன்பொழுக அழைத்தார் தமோதரன் அய்யா... அவர்கள்....
உணவருந்திவிட்டு வாருங்கள் என்றார் ஈரோடு கதிர் அவர்கள்
உள்ளே நுளைந்தோம் எங்களை வரவேற்றது தமிழ்வாசி பிரகாஸ் அவர்கள்
உணவறையில் தமிழர் உணவு இட்லி பறந்துவிடுமோ என பயங்கொள்ளும் வகையில் இருந்தது குஸ்பு இட்லியோ....(யோவ் எதுக்கியா இந்த தமிழ்நடை அஞ்சாப்பு கட்டுரை மாதிரி சம்பத் என்னை குட்டினார்....சரி இனி நம்ம நடை..)
நாங்க இட்லி சட்னி சாம்பார் குழைச்சு அடிச்சமுங்க..பூரி உருளைகிழங்கு முட்டைதோசை அடஅடஅட நாக்கில...எச்சி ஊறுதுயா......சாப்பிட்டு வெளியவந்தா...மெட்ராஸ்பவன் சிவக்குமார் மனுசன் செமசெமசெம..
ஜாலி டைப்....பதிவர்கள் கமெண்ட் போடுவதை பற்றி அடிச்சாருங்க பாருங்க கமெண்ட்டு வயித்துவலியே வந்திடுச்சு.... ஆனா அத பதிவுல போட மாட்டேன் சென்சார்...சென்சார்....
ஜாக்கிசேகர் இருந்தார்ஆருர்மூனா செந்தில் அறிமுகமானார் ஜாலியான
டைப்த்தான் ஏனோ?ரிசர்வா இருந்தார்...
அடுத்தது வந்தாரு பாருங்க ஒருத்தர் அய்யய்யயயோ.....நாய்நக்ஸ் பேரு நக்கீரன் சீரியசான ஆளுன்னா நினைச்சிங்கன்னா அத அழிச்சிருங்க....பிரபல பதிவர் ஆவது எப்படியின்னு பாடம் எடுத்தாரு பாருங்க....நக்கல்னாநக்கல் செம..நக்கல் பிரபல பதிவர்கள் கேட்டாங்கன்னா பிராப்பள பதிவர் ஆயிருவாங்க...மைக்ல நாஞ்சில்மனோ பேசுகிறார்..பராக்...பராக்... என்றார் அருவா...அருவா....என்று கத்தினோம் அப்புறம் வேற மனோ...பல்பு டியூப்லைட் எல்லாம் ஆனார்....இதை பதிவா போடப்போறோம் சொன்னேன்.. அப்படியா போடு..போடு...ஆனா மவனே என் பிளாக் லிங்க்க தரலையின்னா...பிண்ணூட்டத்தில வந்து வாந்தி வாந்தியா எடுத்து வச்சிருவேன்னு எல்லாரையும் மிரட்டுறாருங்க அது அதகளம்...
அவர் இதுல பதிவர் சந்திப்ப பற்றி 365 பதிவு போடப் போறாருங்களாங்க...அது முடியும் போது அடுத்த பதிவர் சந்திப்பு வந்திருமாம் மக்களே ஓட்டை போட்டிருங்க....
சங்கவி எங்களோடு இணைந்து போட்டா எடுத்துக்கிட்டார்,கோமாளி செல்வாகிட்ட நானே அறிமுகம் செய்து கொண்டேன் பதிவுல ஜாலியா எழுதறவங்க ஏனோ அமைதியா இருந்தாங்க டெரர்கும்மி மக்கள்.
முகநூல் தோழி தென்காசிபைங்கிளியா அருள்மொழி?பொதிகையில் செய்திவாசிப்பாளராம்...அவர்கவிதையைப்போல் அவரும் அழகு, அவரின் குரலும் இனிமை,நன்றிகள் அவருக்கு,தொகுத்து வழங்கினார் மைக்தான் அடிக்கடி மக்கர் செய்தது.
பதிவுலக சூப்பர்ஸ்டார் சிபி செந்தில்குமார் வந்தார்,மக்கள் கரகோசங்களை எழுப்பினார்கள் படம் எடுத்தால் கண்ணாடிய மாட்டின பின்னாடி தான் எடுக்கனும்... என்கிற கண்டிசனோடு போட்டோ எடுத்தார் மனுசன் பதிவு எப்படி சுறுசுறுப்பா எழுதுகிறாறோ அதுபோலத்தான் ஒரு இடத்தில உக்காரல....
முனைவர் அய்யாவை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி,தன்னுடைய சந்தேகங்களை சம்பத்திடம் கேட்டுகொண்டு இருந்தார், அவரை ஒரு சில நிமிடங்கள் மேடையில் பேச விட்டிருக்கலாம் தமிழ்ச்சுவை பருகியிருக்கலாம்......
சிபி போங்க...போங்க...சாப்பிடுங்க என்றார் என்னிடம் நான் யாருன்னு தெரியுமா?என்றேன் நேம் பேட்ஜை பார்த்து விட்டு அட வீடுவா...கைய புடிச்சு கொண்டு போய் பந்தியில உக்கார வைத்து சாப்பிடுங்க....சாப்பிடுங்க....என்று போட்டா எடுத்துக்கிட்டார் அய்யா கந்தசாமி அவர்கள் வந்திருந்தார் சங்கம் ஆரம்பிப்பதை அவர் ஆதரிக்கவில்லை என அவர் உரையில் தெளிவாக குறிப்பிட்டு விட்டார்,
கே ஆர் பி செந்தில் பதிவின் கனம் அவரிடம் இல்லை! எளிமையான மனிதர்! பரிசுக்கு தகுதியானவர்,ஆனால் பேச முடியவில்லை இந்த பதிவின் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,மற்றும்
உண்மைத்தமிழன் சரவணன்
ஜாக்கிசேகர்
ஐயப்பன் ஜீப்ஸ்
அதிஷா
தேனம்மை இலட்சுமணன்
வெயிலான் இரமேஷ்
வலைச்சரம் சீனா ஐயா
சுரேஷ்பாபு
லக்கிலுக் யுவகிருஷ்ணா
இரவிக்குமார்
யெஸ்.பாலபாரதி
இளங்கோவன்
மகேந்திரன்
ஓவியர் ஜீவா
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் குனசேகரன் அய்யா அவர்களின் உரையில் வலைபதிவர்கள் செய்தியை கொண்டு சொல்லும் விதத்தை அழகாக கூறினார்,நீங்களும் ஒரு பத்திரிக்கையாளர்தான் என அனைவருக்கும் மகுடம் சூட்டினார்,கதிர் அவர்கள் வலைபதிவர் குழுமதினை எவ்வாறு உருவாகியது என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.
பாராட்டு பரிசளிப்பு முடிந்ததும் ஏற்புரைக்கு பின் மதிய உணவு சைவம்,அசைவம்,சிந்தாமனி, மட்டன் குழம்பு, தலைக்கறி வருவல்,ஜீரணத்திக்கு தக்காளி ரசம் முட்டை பனியாரம்,கம்பு பாயாசமா அது தெரியலை? ஆனா சுவையா இருந்தது,செவிக்கு உணவு பிறகு வயிற்றுக்கு உணவு,
நாம் கல்லூரி,பள்ளி இறுதி நேரத்தில் நண்பர்களை பிரிவை தாளாமல் அழுதிருப்போம்,கண்ணீர் விட்டிருப்போம்,பால்ய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் போது மகிழ்ச்சியும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஆரத்தழுவியிருப்போம்,மீண்டும் பால்ய நண்பர்களை சந்தித்ததைப்போல........இருக்கிறது இந்தசந்திப்பு சந்திப்பை ஏற்படுத்திதந்த கதிர் அவர்களுக்கும் வலைக்குழும நண்பர்களுக்கும்,எங்களை இந்த தகவலை தெரியவைத்தது, அழைப்பு விடுத்த சங்கவி'க்கும் நன்றி...நன்றி....நன்றி.
பதிவர் சந்திப்பில் இனைபிரியா இனைய நண்பர்கள் ஆனோர்
தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்
தமிழ்வாசி பிரகாஷ்
முனைவர் குணசீலன்
நாய்நக்ஸ் நக்கீரன்
சிபி செந்தில்குமார்
மெடராஸ்பவன் சிவக்குமார்
பிலாசபி பிரபாகரன்
கோமாளி செல்வா
தோத்தவன்டா செந்தில்
TNTCதாளவாடி கிளையில் உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் அவர் பெயரை கூறவில்லை அவர் இப்பொழுது பதிவிடுவது இல்லை,ஆர்வத்துடன் வந்திருந்தார்,
சந்திக்க நினைக்கும் நண்பர்கள்
விக்கி,நிரூபன்,மனோ,
மற்றும் வராத நண்பர்கள் அனைவரையும்....
மற்றும் வராத நண்பர்கள் அனைவரையும்....
59 comments:
அருமை நிகழ்வுகள்...மிஸ் பண்ணிட்டமோ....
Virundhombalkku erode famous ah? Idhuvarai ketkaadha thagaval
செம அனுபவம் போல,
மெட்ராஸ் பவன் சிவக்குமார் மிஷ்கினுக்கு அசிஸ்டெண்டா ஆகிட்டாரா?
இணை பிரியா நட்பு தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.. நட்பு தொடரட்டும்
கமெண்ட்ஸ் சூப்பர்,
மாப்ள கலக்கிட்டீங்க போல ஹஹா!
சுரேஸ் உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நான் தான் உங்கள் பெயரைப்பார்த்ததும் வந்து சுய அறிமுகம் செய்து கொண்டேன். நீங்கள் அடக்கத்துடன் கையை மட்டும் கொடுத்தீர்கள். அங்கு நிறைய செந்தில்கள் இருந்ததால் என்னை உங்களுக்கு நினைவில்லையோ என்று தான் அறிமுகத்துடன் நிறுத்தி விட்டேன். பரவாயில்லை விடுங்கள். ஜனவரியில் இளம் பதிவர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் நடக்க ஏற்பாடுகளை துவக்கியுள்ளோம். அங்கு சந்திப்போம். கண்டிப்பாக நிறைய அளவளாவுவோம். நன்றி.
தோ பாருயா, பதிவு போடபோறோம்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை? இங்க படிச்சு பார்த்தா செம நக்கல்ஸ் வுட்டிருகிறாரே.... அதென்ன படத்துக்கு படம் பேக்கிரௌண்ட் வாய்ஸ், ஓவர் குசும்புயா உமக்கு...
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
//பள்ளிக்கு' முதன் முதலாக செல்லும் பிள்ளைகள் போல்தான் சென்றோம், நானும் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும்,தயங்கி..தயங்கி.. சென்ற எங்களை வாங்க..வாங்க...என்று அன்பொழுக அழைத்தார் தமோதரன் அய்யா... அவர்கள்....//
உண்மைதான் இணைபிரியா இணைய நட்புகளை ஏற்படுத்தித் தந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அப்புறம் நக்கீரர் உங்கள தேடிட்டிருக்கார்.அவரோட லின்க் கொடுக்கலன்னு அருவாளோட..
ஹி..ஹி..ஹி..
@ ஆரூர் முனா செந்திலு..
//ஜனவரியில் இளம் பதிவர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் நடக்க ஏற்பாடுகளை துவக்கியுள்ளோம். அங்கு சந்திப்போம். கண்டிப்பாக நிறைய அளவளாவுவோம். நன்றி.//
வணக்கம் செந்தில் அண்ணா..
ம் சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க இந்த சந்திப்ப தவற விட்ட உள்ளங்கள் கலந்துகொள்ள வாய்ப்பாயிருக்கும்
@கோவை நேரம்
நாங்களும் உங்களை மிஸ் பண்ணிட்டோம் வருகைக்கு நன்றி....
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
நீங்க எப்படி சொல்றிங்கன்னு புரியலை!என்னை பொருத்தவரைக்கும் எங்க ஊர்க்காரங்க அப்படித்தான்...இருக்காங்க
@கோகுல்
கோகுல் சென்னையில் சந்திப்போம்...இதவிட செமையா பண்ணிருவோம்...
@கோகுல் கண்ணாடி உபயம் சிபி ஹஹஹ
@கோகுல்
உங்களையும் சந்திக்கனும்....கோகுல்
@மதுரன் நன்றி மதுரன்... மிக்க நன்றி...
:-)
@ஆரூர் முனா செந்திலு
நன்றி மக்கள் அடிச்ச காமெடியில சிரிச்சு சிரிச்சு யாரிடமும் பேச முடியாமல் போயிருச்சு சாரி செந்தில் சென்னையில கலக்கிருவோம்......
@தமிழ்வாசி பிரகாஷ் சாரி...மக்கா..சாட்ல வராதவங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இருந்தேன்....குசும்பா...ஹஹஹ
@சம்பத் குமார் வரட்டும் நடிகை ஜல்சாஸ்ரீ பிளாக்குக்கு லிங்க் தர்றன்னா...சமாதாணம் ஆயிடுவாறு..
நீங்கள் வந்து இந்நிகழ்ச்சியை சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி...
வணக்கம் மச்சி,
சௌக்கியமா..
உங்க போட்டோவை பார்த்து நண்பா என்று சொல்வதை விட அண்ணா என்று சொல்லத் தான் தோணுது.
ஹி....ஹி...
ரொம்ப பிசியாகிட்டேன். இப்போது தான் டைம் கிடைச்சிருக்கு! நன்றி பாஸ்.
பாஸ்..ரொம்ப சூப்பராக எழுதியிருக்கிறீங்க்.
நேரடியாகப் பதிவர் சந்திப்பினைத் தரிசித்த பாக்கியம் உங்கள் பதிவினூடாக கிடைத்திருக்கிறது.
அடுத்த சந்திப்பிற்கு நானும் வந்திடுறேன்.
ஜமாய்க்கலாம்!
சந்திக்க விரும்பும் நபர்கள்..
ஹி.....ஹி...
நட்புகள் தொடரட்டும்..
தலைவரே,மண்ணிக்கவும் மேடையில் அமரவைத்துவிட்டதால் அனைவரையும் சந்திக்க இயலவில்லை, அடுத்தமுறை விரிவாக பேசுவோம்..
மிக்க நன்றி!...
சூப்பர் கலாய்ப்பு கமெண்ட்ஸ் ஃபார் ஃபோட்டோ
ஹா ஹா ஹா ஹா போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர் மக்கா...!!!
கண்டிப்பாக அடுத்து லீவில் வரும்போது உங்களை சந்திக்கிறேன் நண்பா...!!!
அருமையான சந்திப்பு அனுபவம் சூப்பர், மனதுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது வராத எங்களுக்கே, அப்போ உங்களுக்கு....
பதிவர் சந்திப்பு அனுபவங்களை சிறப்பாக தொகுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் பாஸ்
தங்களின் சந்திப்பு அனுபவத்தை அருமையாகவும், வித்தியாசமாகவும் தொகுத்துள்ளீர்கள்... நண்பா...
வாழ்த்துக்கள் நண்பரே...
எங்கையா என் லிங்க் ..??????
பாரேன இப்ப வாந்தி வந்தியா
எடுக்க போறேன்....
ஹி....ஹி...
தங்களது பதிவு நகைச்சுவையாகவும் அருமையாகவும் இருந்தது,.நன்றி நண்பரே
@வெளங்காதவன்
வருகைக்கு நன்றி...
@சங்கவி
உங்கள் உபசரிப்புக்கு மிக்க நன்றிங்க...சங்கவி
@நிரூபன் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்க...நிரூபன்..
@நிரூபன்வாங்க கலக்கிருவோம்....
@மதுமதி
நீங்க வரவில்லை பதிவிட்டிருந்திங்க..
ஈரோடு வந்தால் தகவல் கொடுங்க நண்பரே....சந்திப்போம்
@கே.ஆர்.பி.செந்தில் கண்டிப்பாக விரைவில் சந்திப்போம் தோழர்
@சி.பி.செந்தில்குமார்
சார் உங்களைத்தான்..ஓவரா..காலாய்ச்சிட்டேன்..நண்பர்களைதானே கலாய்க்கமுடியும்...ஹஹஹ
@MANO நாஞ்சில் மனோ நன்றிங்க மனோ...இனி நான் போட்டோ எடுத்தா எல்லா..ஓடிருவாங்களாம் சொல்றாங்க...
@MANO நாஞ்சில் மனோ கண்டிப்பாக சந்திப்போம்..தலை
@MANO நாஞ்சில் மனோ நக்கீரன்தான் கூட்டத்திலேயே ஹீரோ...உங்களை வச்சு காமடியனும் ஆய்ட்டாரு ஹஹஹ
@K.s.s.Rajh நன்றி பாஸ்....
@ராஜா MVSவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க நண்பா...
@மயிலன் நன்றிகள் மயிலன்...
@NAAI-NAKKS எடுங்க..எடுங்க....மச்சி நீங்கதான் பிரபல பதிவர் ஆயிட்டிங்க..எதுக்கு லிங்க...
@எனக்கு பிடித்தவை நன்றிங்க...நிறைய எழுதுங்க...அதுவே நீங்க பலரை சந்தித்தமாதிரி வாழ்த்துக்கள்
@தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தோழி அருள்மொழிக்கு நன்றிகள்..மன்னிச்சுக்குங்க தென்காசி தமிழ் பைங்கிளி...
பதிவர் சந்திப்பை மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி பாஸ்.
@N.H.பிரசாத்கருத்துரைக்கு மிக்க நன்றி....
அருமையான தொகுப்பு நண்பா...
நிழற்படங்களும் அதற்கான தங்கள் மறுமொழிகளும் மேலும் அழகு.
தங்களைச் சந்தித்த அனுபவத்தை மறக்கவே முடியாது..
அடுத்த பதிவர் சந்திப்புக்கும் ரெடியா. ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.
வாங்க வாழ்த்துங்க
செல்லக் குட்டி பிறந்தநாள்
Post a Comment