இதப்படிங்க முதல்ல

>> Monday, October 31, 2011


முரன்பாடு


பெண்ணின் பெருமைகளை
எடுத்துக்கூறிய சிறந்ததிரைப்படம்
விருதை பெற இயக்குனர்
இரண்டாம் மனைவியுடன்
வந்திருந்தார்...


ஒழுக்கம்


உன் வாழ்க்கை! 
ஒரு கண்ணாடி
முகம் பார்க்கும்
அனைவரும் புன்னகைக்க
வேண்டும்...
கை கொட்டி
சிரிக்கக்கூடாது!


அன்னை


நீ...
கீழே விழும்போது
உனக்கு வலியிருக்கின்றதோ
இல்லையோ...
உன் அன்னைக்கு
வலிக்கும்


உலகஅழகி


புற அழகின்
பெருமையை விட
அக அழகின்
பெருமை
சிறந்தது
அன்னை தெரசா...


சிந்திப்பாய்...


மின்சாரம் நின்றவுடன்
திட்டுகின்றாயே...
மின்சார ஊழியருக்கும்
குடும்பம் உண்டு
அறிவாயா..?


அருமை


நிழலின் அருமை
வெயிலில் வாடுபவனுக்கு
தெரியும்...
மழையின் அருமை
உழவனுக்கு
தெரியும்...
ஒருவரை இழந்தபின்தான்
அவரின் அருமை
தெரியும்...

10 comments:

சம்பத் குமார் 10:35:00 PM  

உலக அழகி அன்னை தெரஸா அருமை..

பகிர்விற்க்கு நன்றி நண்பரே

suryajeeva 10:48:00 PM  

மின்சாரம் நின்றவுடன்
திட்டுகின்றாயே...
மின்சார ஊழியருக்கும்
குடும்பம் உண்டு
அறிவாயா..?

அவனும் மனிதன் தானே

விச்சு 11:28:00 PM  

முரன்பாடு அருமை... ஊருக்குத்தான் உபதேசம்.

நம்பிக்கைபாண்டியன் 11:58:00 PM  

எல்லாம் நல்லா இருக்கு!

நிரூபன் 12:27:00 AM  

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

தீபாவளி கொண்டாட்டங்கள் எப்பூடி?

ஓட்டுப் பட்டைகளை ஒவ்வோர் பதிவின் கீழும் வருமாறு செய்யலாமே?

http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

நிரூபன் 12:29:00 AM  

நறுக்குகள் ஒவ்வொன்றும் கலக்கல் நண்பா.

veedu 3:00:00 AM  

சிபி அவர்களுக்கு நன்றி
சம்பத்குமார் அவர்களுக்கு நன்றி
சூர்யஜீவா அவர்களுக்கு நன்றி
விச்சு அவர்களுக்கு நன்றி
ந.பாண்டியன் அவர்களுக்கு நன்றி

நிரூபன் உங்களின் உடல் நிலை சரியாகிவிட்டதா?தீபாவளி கொண்டாத்தை வருணபகவான் அனுமதிக்கவில்லை
பகிர்வுக்கு நன்றி

விக்கியுலகம் 4:32:00 AM  

நச்சின்னு இருக்கு... பகிர்வுக்கு நன்றி மாப்ள!

DrPKandaswamyPhD 4:13:00 PM  

நல்ல கருத்துக்கள் நண்பரே.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP